புத்தகங்களுடனான அந்தச் சிறுவனின் உறவு தினப்பத்திரிக்கையில்தான் துவங்கியது. வீட்டிற்கு தவறாமல் வரும் தினத்தந்தியில் எழுத்துக்கூட்டிப் படிக்கத் துவங்கிய பருவத்தில் கன்னிதீவின் வழியாக அவனது பால்ய கற்பனைகள் தனக்கான பாதைகளைக் கண்டடைந்தது. இப்போது தினத்தந்தியில் கன்னிதீவு மட்டும்தான் வருகிறது. முன்பெல்லாம் இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும், மூன்றாம் பக்கத்தில் மற்றொரு படக்கதையும் வரும். மூன்றாம் பக்கத்தில் வரும் படக்கதை சரியாக 100 வது நாள் அன்று நிறைவடைந்துவிடும்.பின்னர் புதுக்கதை துவங்கும். ஜேம்ஸ்பாண்ட், துப்பறியும் சங்கர்லால் எனப் பலரும் அவனுக்கு நண்பர்களாக அறிமுகமானது தந்தியின் மூன்றாம் பக்கத்தில்தான். அறிமுகமான சில நாட்களுக்குத்தான் மூன்றாம் மனிதர்களாய்,நண்பர்களாய் இருப்பார்கள்,பின் வரும் நாட்களில் நான்தான் ஜேம்ஸ்பாண்ட் என்ற சுய உணர்விற்கு வந்துவிடுவான். ஜேம்ஸ்பாண்ட் உடம்பில் சட்டையில்லாமல் அரைக்கால் டிராயரோடு புதுக்கோட்டையின் தெருக்களில் சாகசம் புரிந்துகொண்டு இருப்பார்.
ஜேம்ஸ்பாண்ட் வளரத்துவங்கிய பருவத்தில் தினத்தந்தியின் அன்றைய கருப்பு வெள்ளை ஞாயிறுமலரில் ரமணி சந்திரனோ, லக்ஷ்மியோ அல்லது அனுராதா ரமணனோ கதை எழுதிக்கொண்டு இருப்பார்கள். மெல்ல ஜேம்ஸ்பாண்ட் தனது சாகசங்களைக் குறைத்துக்கொண்டு சமூக விரும்பியாக மாறிவிட்டார். பெண்களின் வேதனைகளும்,கொடுமைகளும் தீர ஒரே தீர்வு ரமணி சந்திரனை அல்லது அனுராதா ரமணனை முதல்வராக்குவதுதான், இதுதான் ஒரே வழி என்று தீர்க்கமாக முடிவெடுத்து இதுகுறித்து தனது தலைவர் கலைஞர் அவர்களுடன் கருத்துரையாடுவது என்ற முடிவிலும் இருந்தார். துரதிஷ்டவசமாக அன்றைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைப் பக்கம் வராமல் இருந்ததால் சந்திக்க இயலாமல் போனது. பின்னர் சந்திக்கும் வாய்ப்பு வந்த காலத்தில் சமூகவிரும்பி நிலையில் இருந்து அரசியல் ஆர்வலர் நிலைக்கு உயர்ந்துவிட்டதால் கருத்துரையாடும் திட்டத்தைக் கைவிட்டார்.
அரசியல் ஆர்வலர் என்ற நிலைக்கு உயர்ந்ததும் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்த கதையாக அவருக்கு தினத்தந்தி பிடிக்காமல் போனது. எல்லாக் கட்சி செய்தியோடும் அவன் கட்சி செய்தியையும் வெளியிடும் தினத்தந்தியைவிட திராவிட இனத்தின் போர்வாளாம் முரசொலிதான் மந்திரமாக மாறிப்போனது. அன்றைய கலைஞருக்கு கட்சிமேல் ராஜீவ் கொலைப்பழி, கோபால்சாமியின் துரோகம், செல்வி.ஜெயலலிதாவின் ஹிட்லர் காலப்பேயாட்டம் இப்படியெல்லாம் நெருக்குதல் இருந்தாலும் இவற்றுக்கும் மத்தியில் தான் படித்த நல்ல இலக்கிய நூல்களை, பெரியார்,அண்ணா எழுதிய இன உணர்வு நூல்களை தன் கொஞ்சு தமிழில் ஒவ்வோரு வாரமும் அறிமுகம் செய்வார். அதைப் படித்ததும் உள்ளூர் நூலகம் சென்று அவற்றை அன்றே படித்து தீர்ப்பது அவனது வாடிக்கையானது. கலைஞரின் அறிமுக நூல்களுக்காக நூலகம் சென்றதில் வேறு நல்ல புத்தகங்களும் கண்ணில்பட அவனது பள்ளி இறுதி மற்றும் கல்லூரிக்கால ஓய்வு நேரம் முழுவதும் நூலகங்களிலேயே சென்றது. சற்றே திரும்பிப் பார்த்தபோது தங்கள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழியில்செலவழித்த அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது.
மேற்படிப்பிற்காக சென்னை வந்த இடத்தில் அவனைப்போலவே ஒரு புத்தக்கிறுக்கன் அறிமுகமானான். அவன்பெயர் நா.முத்துக்குமார். ஒருநாள் முத்துக்குமார் அவனை அழைத்து தன்னுடைய ஓட்டை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து மூச்சுவாங்க டபுள்ஸ் அடித்து அழைத்துச்சென்ற இடம் சென்னையில் வருடம்தோறும் நடக்கும் புத்தகச்சந்தை. அப்போது காகிதேமில்லத் கல்லூரியில்தான் புத்தகச்சந்தை நடந்துவந்தது. இப்போதுபோல அத்தனை பிரம்மாண்டம் இல்லை. ஆனால் அவன் சென்று வந்த நூலகங்களைவிட மிகப்பெரியது. அன்றைக்கு பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கும் அளவிற்கு வசதியில்லாததால் அவன் ஏக்கப் பெருமூச்சின் சூட்டில் அங்கிருந்த புத்தகங்களின் பக்கங்கள் மேலும் மொடமொடப்பானது.
அதிகம் உழைக்க வேண்டும்,மேலும் மேலும் உழைக்க வேண்டும், அதிதீவிரமாக உழைக்க வேண்டும். பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற அவனது ஏக்கக் கனவுதான் அவனது இன்றைய வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது என்பதால் புத்தச்சந்தைமேல் அவனுக்கு இன்றும்,என்றும் நன்றியுணர்ச்சி உண்டு. எல்லாவற்றிற்கும்போல் வாழ்க்கைக்கென்றும் ஒரு வாசம் இருக்கிறதா? புதுபுத்தகங்களை வாசிக்கப் பிரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது.


2004 ஜனவரியில் புத்தக கண்காட்சிக்குப் போனது. அதுக்கு அப்பறம் இதுவரைக்கும் போகவே முடியல.
ரொம்ப மிஸ் பண்றேன்.
சரி எனக்கும் சேர்த்து புக் வாங்கி வைய்யிங்க. நான் ஊருக்கு வர்றப்ப எடுத்துக்குறேன்.
super na..
//அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது. //
ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஃபீலிங் :))
பதிவில் ஊடாடும் அதே ஏக்கத்தோடு திண்டுக்கல்லில் மாட்டிக்கொண்டிருக்கும்...
அடடே! எனக்கு புத்தகங்கள் மீதான காதல் எப்போதும் உண்டு. சமீபத்தில் படித்து பிரம்மித்த நூல் நீங்க முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் எல்லோருக்கும் அன்பளிப்பாக கொடுத்த சாதத் ஹசன் மாண்ட்டோவின் படைப்புகள் (தமிழில் மொழியாக்கம் ராமானுஜம். ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க இந்த பதிவை.
வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
:)///
கலைஞர் வாழ்க!
தளபதி வாழ்க!
அப்துல்லா வாழ்க!
அப்துல்லா எழுதாத புத்தகங்கள் வாழ்க!
அப்பாடா நானும் தலையனை பொஸ்தகம் படிச்சுட்டேன் என சொல்லி எலக்கியவாதி பில்டப்பு கொடுத்தாச்சு. அதிலே இருந்து கேள்வி எதும் கேட்கமாட்டீங்கன்னு தைரியத்திலே சொல்லிட்டேன்.
ஐ லவ் யூ மச்சான்!
நானும் தான் மச்சானை லவ் பண்றேன்!
கலைஞரின் அறிமுக நூல்களுக்காக நூலகம் சென்றதில் வேறு நல்ல புத்தகங்களும் கண்ணில்பட அவனது பள்ளி இறுதி மற்றும் கல்லூரிக்கால ஓய்வு நேரம் முழுவதும் நூலகங்களிலேயே சென்றது. //
அப்படியே உளியின் ஓசை படமெல்லாம் விமர்சனம் எழுதுவீங்களா தோழர்?
போங்கடீ இவளுங்களா! அவரோட மொதோ லவ்வர் நான் தான். திருவள்ளுவர் எனக்கு புரப்போஸ் செஞ்சாரு, கம்பரு புரப்போஸ் செஞ்சாரு, இளங்கோ எனக்கு புரப்போஸ் செஞ்சாரு. ஆனா நான் அப்து மச்சானை மட்டும் தான் லவ்வுவேன்னு சொல்லிட்டேன்.
என் மாமன்தான் எனக்கு மட்டும்தான்.
அய்யய்யோ நான் அப்துல்லாவுக்கு நூல் விடலை! இது அபாண்டம்!
ஏம்ப்பா நான் மறந்தாலும் என்னைய மறக்க மாட்டீங்கிறியே?
நல்லாயிருக்கியாண்ணே?
இங்கே விளையாடுவது மூன்று டர்ட்டி பாய்ஸ் தான். ஜோசப்பால்ராஜ், வரவனையான், அபிஅப்பா.... நிச்சயம் மணிஜி இல்லை. மணிஜியையும் இந்த வரம்புக்குள் கொண்டு வந்து இதை வலிமையாக்கும் வரை விஜய்காந்து வீட்டிலே போய் தண்ணி அடிக்கும் போராட்டம் வலுக்கு.
பட்டு வேட்டி போர்த்தியதுபோல பதிவு பளபளவென்று இருக்கிறது.
ஆகா இந்த 3 பேரும் தான் டர்ட்டிபாஸ்சா?
குழந்தைக் கவிஞர் வாழ்க!
தம்பி! என் பேப்பரை படிச்சு தமிழ் கத்துகிட்டியே ஃபீஸ் குடுத்தியா எனக்கு?
புதுபுத்தகங்களை வாசிக்கப் பிரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது.
//
மோப்பம் புடிக்கிறதுக்கே இம்புட்டு பில்டப்பா?
என் பேப்பரை படிச்சு என்ன கத்துகீட்டிங்க தம்பி!
ம்ம்ம்ம்ம்ம்... ஆய் போனா துடைப்பது எப்படின்னு கத்துகிட்டாராம்!
ஹேண்ட்ல ஹார்ட்டுக்கு ஜஸ்டிஸு
மைண்ட்ல கலைஞர்
நெனப்பு புல்லா திராவிடம்
பப்பாப்ப பா பப்பாப ப பாப்ப பா பப்பப்பா
இப்படி ஒரே அனானி ஆட்டம் போடுறதாலதான் எங்க தம்பியண்ணன் பதிவே போடமாட்டேங்குறார். போங்கய்யா எங்கிட்டாச்சும்.
தம்பியண்ணன் அப்துல்லாவை வெறியன் என சொல்வதை கண்டிக்கிறேன்!
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...லா ல லா..
அப்துலு இப்படியெல்லாம் அனானிகளை விட்டு லவ் லெட்டர் எழுத வைச்சதுக்கு நேராவே வந்து சொல்லியிருக்கலாம்ல. போய்யா நீயி
- ஒளவையார்
:)))
super comments
அபி அப்பா லொள்ளு :))))
என் ப்ரதர் அபிஅப்பாவின் கமெண்ட் எது என்பதைக் கூட அறியாத சிறுவர்களை மன்னியும் பிதாவே><
என்னலே நடக்கிங்க..
என்னையும் அறிமுகம் செஞ்சதுக்கு நன்றிண்ணே.
உங்கள் பதிவு என்னை உலுக்கிவிட்டது
என்னைய ஒருத்தர் வாங்கித் தரச்சொல்லி கேட்டாரே ஞாபகமிருக்காண்ணே!
தம்பீஈஈஈஈஈ நீங்க எங்கயோ போயிடிங்க ....நீங்க நல்லா வருவிங்க தம்பீஈஈஈஈஈ, நல்லா வருவிங்க...
கிளிக்கு ரெக்க மொளச்சிடுத்து கன்னித்தீவ விட்டே பறந்து போயிடுத்து
கிளம்புங்கையா காத்து வரட்டும்
நேக்கு இத படிச்சதலிருந்து.. என்ன சொல்றதுனே தெரில்லே மாப்பிளே..
ஆளவந்தாண்ணே நீயி
கேபிள் சங்கரின் தெர்மாக்கோல் தேவதைகள் வாங்கிவிட்டீர்களா?
தோத்துட்டோம்ணே.
நீங்க மார்பிள் கம்பெனி ஓனரா?
வெறும் காத்துதாங்க வருது
நம்ம கடைப்பக்கம் வாங்க அண்ணாச்சி
கண்காட்சிக்கு போரோம், பதிப்பாளைரையும், எழுதுனவங்களையும் தாக்கறோம் , புத்தகங்களை தூக்கறோம்
பதிவு ரொம்ப நல்லா இருக்கு.
நம்ம புக்ஸ் நிறைய இருக்கே, அதையும் கொஞ்சம் பார்க்கறது...?
//// புதுகை அப்துல்லா said...
கிளம்புங்கையா காத்து வரட்டும்/////
ஜெலூசில் குடிங்கண்ணே நல்லா வரும்......
இதெல்லாம் நல்லாவா இருக்கு?
புதுகை வேங்கை எழுதின பதிவு மிக அருமை.
பின்னுட்டங்கள் சூப்பர் :)
இந்த வருஷத்துக் கணக்குக்கு இன்னும் ரெண்டு இடுகை மட்டுமே பாக்கி.. ரெண்டே ரெண்டு தான்.. எழுதிடலாம், விடுங்கண்ணே..
அப்துண்ணே சூப்பர்..
2012 கோட்டா ஓவரு :))
//அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது. //
திசை திருப்புனதாலதான் திசை தவறாம இருக்கோம் :))
பின்னூட்டத்துல இவ்ளோ ஃபிகருங்க வராங்க, நெம்ப பொறாமையா இருக்கு தம்பியண்ணா :)))
வணக்கம் திரு அப்துல்லா. உங்கள் படிப்பு அனுபவம் சிறப்பாக இருந்தது. வாருகை தாருங்கள் பெட்னா தமிழர் விழாவிற்கு. நீங்கள் தமிழ்ச்சங்கத் தலைவர் பாலகன் அய்யாவுக்குச் செய்த உதவிகளுக்கு நன்றி.
கிழக்கு பதிப்பகத்தின் தமிழாக்கமான ஒரு அயோக்கியத்தனம். முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.
அன்புடன்
நாஞ்சில்
கிழக்கு பதிப்பகத்தின் தமிழாக்கமான Breaking India ஒரு அயோக்கியத்தனம். முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.
அண்ணே நெஞ்சுக்கு நீதி மிஸிங்
தோழர் லக்கிலுக் அவர்களே
// அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது //
இது என்ன வாசம்,வனவாசமா....
after a long time some awesome other name comments
Rocking.
I also want to join
:-000)
ம்ம்ம் எப்பவோ எழுதினாலும் கமென்ட் 60க்கு மேல வருதே! ரொம்ப பாப்புலர் ஆகிட்டீங்க!!!
//காகிதேமில்லத்//
இம்புட்டு புத்தக ஆர்வமா!! :-)))))
ஓ..நீங்களும் அப்பவே அப்படியா?
தூள் கிளப்புங்கண்ணே!!
அப்து,
என்னோட போட்டாவ மட்டும் போட்டுட்டு புஜ்ஜி போட்டாவ ஏன் போடல?
உன் பேச்சி கா.
விடு டோராக்கா அதான் அவரு போட்டோ இருக்கில்ல.
//
இப்போது தினத்தந்தியில் கன்னிதீவு மட்டும்தான் வருகிறது
//
:))
//
தங்கள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழியில்செலவழித்த அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது
//
atra sakka....