நினைத்தேன் எழுதுகிறேன்.
18:20
குஜராத்தில் மோடி அரசு கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்ற புதிய
சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உலகெங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள்
வலுத்து வரும் இந்நிலையில் மோடியின் இந்த செய்கை நிச்சயம் விவாதத்திற்குறியதே. அரசின்
அனுமதியின் தயாரிக்கப்படும் மது கள்ள சாராயம். அனுமதி இருந்தால் நல்ல சாராயம்.
கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்றால் நல்ல சாராயம் காய்ச்சும் அரசுக்கு?
நீண்ட நாட்களாக பொதுவாழ்வில் இருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், மரண தண்டனை
தருவதால் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை நிறுத்தவே முடியாது. தற்போது கள்ளச் சாராயம்
காய்ச்சுவது பிடிக்கப்பட்டாலோ அல்லது கள்ளச்சாராயத்தால் மரணம் சம்பவித்தாலோ அந்த
சர்க்கிளுக்கு உட்பட்ட எஸ்.ஐ சில நாட்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார். பிறகு துறை
ரீதியான விசாரணை அது இதுவென அவர்மீதான குற்றச்சாட்டில் இருந்து வெளியே
வந்துவிடுவார். அதற்கு பதிலாக அந்த மாவட்ட எஸ்.பி, அந்த பகுதியின் டி.எஸ்.பி அந்த
சர்கிள் ஸ்டேசனில் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் துவங்கி கடைநிலை காவலர் வரை அத்தனை
பேரும் எந்தக் கேள்வி கேட்பாடுமின்றி டிஸ்மிஸ் என அறிவித்தால் நிச்சயம்
கள்ளச்சாராயம் ஒழியும்.மாறாக மரண தண்டனை என்று அறிவிப்பதன் மூலம் தூக்கின் வாயிலாக
சில உயிர்களையும், சாராயம் வாயிலாக பல உயிர்களையும் பறிக்க மட்டுமே இது உதவும்.
இராம.கோபாலன் என்று ஒரு அதி பயங்கர அறிவாளி. முல்லைபெரியாறு அணைப் பிரச்சனையை
கேரளாவில் கிருஸ்துவ இயக்கங்கள்தான் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை
தடுப்பதற்காக பெரிதாக்குவதாக திருவாய் மலர்திருக்கிறார். தண்ணிப் பிரச்சனை ஏற்கனவே
மாநிலப் பிரச்சனையாயிருச்சு. இனி இந்தாள் புண்ணியத்துல மதப்பிரச்சனை வேற! ஏன் சார்
கேரளாவெல்லாம் போறீங்க. அங்க யாருக்கும் உங்களைத் தெரியாது. உங்களை நல்லாத்
தெரிஞ்ச்ச தமிழ்நாட்டுலயே நீங்க இதை மதப் பிரச்சனையாக்கலாம். எப்படின்னு
கேக்குறீங்களா?கிருஸ்துவரான ஜான் பென்னி குயிக் கட்டிய அணையில் தேங்கிவரும் நீரை
தமிழக இந்துக்கள் பயன்படுத்தக்கூடாதுனு ஒரே ஒரு அறிக்கை விட்டுப் பாருங்களேன்
இராம.கோபாலன் சார்!!
அண்ணன் வடிவேலு சிலகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தற்போது திரு.பிரசாந்த்
அவர்களின் பட்த்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்
அரசியல் முகம் காட்டிய நேரத்தில் நண்பர் கேபிள் சங்கரிடம் பேசும்போது இந்த முடிவு அவருக்கும்,திரை
உலகிற்கும் பெரும் இழப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். அப்பிடின்னா திமுக
தோத்துரும்னு முன்னாடியே தெரியுமான்னு கேக்காதிங்க! நான் சொன்ன காரணம் அரசியலுக்கு
அடிப்படைத் தேவை நிதானம்.ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கின்
மனநிலை. ஆனால் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்ததே நிதானத்தில் அல்ல
கோபமான ஒரு மனநிலையில். தனக்கு அரசியல் சரிவரும்!வராது! என்று நிதானித்து
முடிவெடுத்து இருந்தால் இந்நிலை வந்திருக்காது. மகாகலைஞன். சத்தியம்.. நாம் வாழும்
காலத்தில் நாம் பார்க்க்க் குடுத்து வைத்த ஒரு மகா கலைஞன் வடிவேலு. நியாயமாக
திரைத்துறை அவரது அரசியலையும், நடிப்பயையும் முடிச்சிட்டு அவரை இத்தனை காலம்
ஒதுக்கியிருக்க்க்கூடாது. என்ன செய்வது, உலகில் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம்
மிகக் குறைந்த இடம் சினிமாவும்,அரசியலும். அவை இரண்டில் மட்டுமே வடிவேலு அண்ணன்
இருந்துவிட்ட்து அந்த நகைச்சுவைக் கலைஞனின் பெரும் சோகம்.
ராமகோபாலந்-:))))))))
மூணும் முத்து.
ரைட்டு :)))
// அரசின் அனுமதியின் தயாரிக்கப்படும் மது கள்ள சாராயம் //
அனுமதியின்றி என்று இருக்க வேண்டுமோ?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
இது கள்ள சாரயத்திற்கும் பொருந்தும்.
அருமை.. மூணே மூணு கருத்துன்னாலும் நச்னு பொட்டில அடிச்ச மாதிரி...
என்னங்க இத்தன வருசம் பொதுவாழ்வு தந்த பொது அறிவா? அதாவது கள்ளச் சாராயம் கேஸ் பிடித்தால் பிடித்தவருக்கு தண்டனையா? செம காமெடியில! நீங்க சொல்வது போல சட்டம் கொண்டுவந்தால் யாரும் கேச பிடிக்க மாட்டாங்க சாரே. குஜராத்தில் மோடி இந்து என்ற காரத்திற்காக அவர் என்ன செஞ்சாலும் எதிர்கிறதா?
மரண தண்டனை வேண்டாம்னா முதல அரபு நாடுகள்ல உள்ள தண்டனையை பற்றி எழுதுங்க சாரே
பழைய பதிவர்கள் பலரையும் தரதரவென்று இழுத்துவந்து எதையாவது எழுது என்று எழுதவைத்த பெருமை பதிவுலக பிதாமகன் கேபிள் சாரையே சேரும்...
மூன்றுமே முத்தான கருத்துக்கள்.. குறைவாக எழுதினாலும் குறையில்லாமல் எழுதியிருக்கிறீர்கள்.
//அண்ணன் வடிவேலு சிலகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தற்போது திரு.பிரசாந்த் அவர்களின் பட்த்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.//
மலையூர் மம்பட்டியான் ரீமேக் வெளிவர இருக்கிறது, அதில் தான் வடிவேலு நடித்திருக்கிறார். ஒப்பந்தம் போட்டு இனிமேல் தான் நடிக்கப் போவது போன்ற புரிதலைத் தருகிறது நீங்கள் எழுதி இருப்பவை.
//இராம.கோபாலன் என்று ஒரு அதி பயங்கர அறிவாளி. முல்லைபெரியாறு அணைப் பிரச்சனையை கேரளாவில் கிருஸ்துவ இயக்கங்கள்தான் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை தடுப்பதற்காக பெரிதாக்குவதாக திருவாய் மலர்திருக்கிறார்.//
இராம.கோபாலன்....? அவன் ஒரு.... வேணாம் வாயில நல்லா வருது :)
சுவாரஸ்யமாக எழுதுறீங்க! ஏன் 1வருடமா எழுதல? இனிமேலாவது தொடர்ந்து எழுதுங்க.
முத்துக்கள் மூன்றுன்னு தலைப்பு வச்சிக்கூட நீங்க எழுதலாம்னே
தம்பியண்ணா, நினைத்தேன் எழுதுகிறேன் என் வலைப்பூவின் பழைய பெயர். உங்கள் மேல் கேஸ் போடலாமான்னு யோச்சிச்சிங் ;))
மூன்றும் அருமை... தொடர்ந்து முத்துக்களையாவது உதிருங்கள், முத்துமாலைக்கு நேரமில்லாவிட்டாலும் ;))
// அதாவது கள்ளச் சாராயம் கேஸ் பிடித்தால் பிடித்தவருக்கு தண்டனையா?
//
அண்ணா,கொஞ்சம் கண்ணுல விளக்கென்னையை ஊத்திகிட்டு இன்னொருக்கா நான் என்ன எழுதியிருக்கேன்னு படிங்கண்ணா. நான் மோடிங்குற பேரைப் பார்த்து அவர் இந்து என்பதற்காகக் கருத்து சொல்லலை. நீங்கதான் அப்துல்லாங்குற பேரைப் பார்த்து அவசர அவசரமா முன்முடிவோடு கருத்து சொல்றீங்க :))))
பிடிச்சவங்களுக்கு மரண தண்டனைனு நான் எங்க எழுதியிருக்கேன்? கள்ளச்சாராயத்தை பிடிக்காதவங்களை அவர்கள் பதவியில் இருந்து ஒட்டுமொத்த டிஸ்மிஸ் செய்யனும்னுதானே எழுதியிருக்கேன்!! கொஞ்சம் நல்லாப் படிங்கபாஸ் :)
அதேபோல மோடி என்பதற்காக எதிர்க்கவில்லை. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து எழுதி வருகிறேன். அப்ப சோனியா கிருஸ்துவர் என்பதால் எதிர்த்து எழுதுகிறேனா? அரபு நாடுகளில் அளிக்கும் மரண தண்டனையையும் எதிர்த்து கூகிள் பஸ்சில் தொடர்ந்து எதிர் கருத்து எழுதியிருக்கிறேன். இவ்வளவு ஏன் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு மரணை தண்டனை விதித்தாலும் எதிர்ப்பேன். என் நிலைப்பாடு மதம் சார்ந்தது அல்ல.. போதுமா? :)
good. nalla solli irukeenga.
vadivelu niraiya kasum, pukalum vanthal konjam head wait varum. ippadi konja naal iruntha sariya poidum.
ஹலோ,
நட்சத்திரமாயிட்டா வெறும் அரசியல், ஸ்பெக்ட்ரம்னு விவகாரமாத்தான் எழுதணுமா, மொக்கைக்கு வாங்கப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்,
///அரபு நாடுகளில் அளிக்கும் மரண தண்டனையையும் எதிர்த்து கூகிள் பஸ்சில் தொடர்ந்து எதிர் கருத்து எழுதியிருக்கிறேன். இவ்வளவு ஏன் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு மரணை தண்டனை விதித்தாலும் எதிர்ப்பேன். என் நிலைப்பாடு மதம் சார்ந்தது அல்ல..///
ரொம்ப தவறான நிலைபாடு. தவறானவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை எதிர்ப்பேன் என்பது வேறு, மரண தண்டனையே எதிர்ப்பேன் என்பது வேறு.
ஒரு முஸ்லிம் மார்க்கம் சார்ந்து தான் எதையும் பார்க்க முடியும். இதுக்கு ஒரு நிலை, அதற்கு ஒரு நிலை என்பது முஸ்லிம்களுக்கு கிடையாது.
ஒருவர் திருடினால், திருடப்பட்டவர் மன்னித்துவிட்டால் பிரச்சனை முடிந்தது. இஸ்லாமிய அரசாங்கமும் இதனை பெரிதுபடுத்தாமல் விட்டு விட வேண்டும். ஏனென்றால் இறைவன் தன் வேதத்தில், மன்னிப்பது என்பது மிகப்பெரிய பண்பு என்று கூறுகின்றான். அதே நேரம் திருடப்பட்டவர் மன்னிக்கவில்லை என்றால், திருடியவருக்கு நிச்சயம் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் தண்டனை கொடுக்கும். பாதிக்கப்பட்டவரின் நிலையிலிருந்து பார்க்க சொல்வது தான் இஸ்லாம்.
இதே விதிமுறை தான் மரண தண்டனைக்கும். சமீபத்தில் கூட ஒரு இரானிய சகோதரி தன் மீது ஆசிட் ஊத்திய ஒரு முட்டாளை மன்னித்துவிட்டதாக கூறியதால் அந்த தண்டனை அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
நபிகள் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தான் விபச்சாரம் செய்துவிட்டதாக கூறியபோது, நாயகம் (ஸல்) தன் முகத்தை திருப்பிக்கொண்டார்கள். திரும்ப அவர் தான் விபச்சாரம் செய்ததாக கூறியபோது, அவரை அழைத்து சென்று தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நான் கூற வருவது இதுதான். இஸ்லாமிய ஷரியத்படி வாழ நினைக்கும் ஒரு முஸ்லிம் மரணதண்டனையை எதிர்க்க முடியாது. பாதிக்கப்பட்டவரின் நிலையிலிருந்து பிராடிகலாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோமே ஒழிய, ஒரு இடத்தில் இருந்துக்கொண்டு மரண தண்டனையை எதிர்க்கின்றேன் என்று நாம் ஒரு முஸ்லிமாக கூற முடியாது.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஸலாம் சகோ.அப்துல்லா...
நீங்க என்ன சொல்ல வருகிறீங்க என்று சுத்தமா எனக்கு புரியலை. விளக்கம் தேவை சகோ.
கள்ளச்சாராயத்தை பிடிப்பது போலிஸ்தானே..? அப்படி அவங்க பிடிக்கலைன்னா...
//அந்த மாவட்ட எஸ்.பி, அந்த பகுதியின் டி.எஸ்.பி அந்த சர்கிள் ஸ்டேசனில் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் துவங்கி கடைநிலை காவலர் வரை அத்தனை பேரும் எந்தக் கேள்வி கேட்பாடுமின்றி டிஸ்மிஸ் என அறிவித்தால் நிச்சயம் கள்ளச்சாராயம் ஒழியும்.//---என்று எழுதி இருக்கீங்களே...?!?!?
இப்போ, எனக்கு என்னா டவுட்டுன்னா...
அந்த கள்ளச்சாராயத்தை கையும் கள்ளச்சாராயமாய் பிடித்துவர்கள்...
"இதை போலிஸ் பிடிக்கலை பாத்தீங்களா... நாங்கதானே பிடிச்சோம்... அப்துல்லா அண்ணன் சொன்ன நடவடிக்கையை கள்ளச்சாராயத்தை பிடிக்காம கண்டுக்காம இருந்த இவங்க மேலே எடுங்க"..ன்னு சொல்லப்போவது யாருங்க சகோ..?
அது புதுசா ஒரு டிபார்ட்மென்ட் போட போறீங்களா..? அப்போ அவங்க பிடிக்கலைனா...? இன்னொன்னா...?
விளக்கம் தேவை சகோ.
///கிருஸ்துவரான ஜான் பென்னி குயிக் கட்டிய அணையில் தேங்கிவரும் நீரை தமிழக இந்துக்கள் பயன்படுத்தக்கூடாதுனு ஒரே ஒரு அறிக்கை விட்டுப் பாருங்களேன் இராம.கோபாலன் சார்!! ///---அப்படி போடுங்க.. சகோ..! செமை காட்டு காட்டி இருக்கீங்க..! சூப்பர்..!
//நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்க்க் குடுத்து வைத்த ஒரு மகா கலைஞன் வடிவேலு.//---ஹா..ஹா..ஹா.. மகா காமடி..!
//ஜெயேந்திரருக்கு மரணை தண்டனை விதித்தாலும் எதிர்ப்பேன்.//--ஓஹோ அப்படியா..?
அஜ்மல் கசாப்புக்கு...?
ஏதும் வார்த்தை விட்டிராதீக..! அப்புறம் உங்களையும் பயங்கரவாதின்னு சொல்லிபுடுவாங்க..!
நடுநிலை வாதி பட்டத்தை தக்க வச்சுக்கங்க சகோ..!
கொலையால் பாதிக்கப்பட்டவனின் நிலையில் இருந்து பார்த்தால் நீதியின் கோணம் மாறுபடும்.
ஆனால், இறைவனின் சட்டத்தை தவிர வேறு எவருமே அப்படி பார்ப்பதில்லை என்பதே இங்கே வருந்ததக்கது.
// அது புதுசா ஒரு டிபார்ட்மென்ட் போட போறீங்களா..? அப்போ அவங்க பிடிக்கலைனா...? இன்னொன்னா...?
//
சகோதரர் முகஹமது ஆசிக், கள்ளச்சாரயம் காய்ச்சாமல் தடுப்பது சட்டம்,ஒழுங்கு காவலர்களின் வேலை. காய்ச்சுவது தெரிய வந்தால் அதைப் பிடிக்க கள்ளச்சாராய தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு இன்றும் உள்ளது. இந்தப் பிரிவு மாவட்ட காவல் நிர்வாகத்தின் கீழ் வராது.
அஜ்மல் கசாப்புக்கு...?
ஏதும் வார்த்தை விட்டிராதீக..! அப்புறம் உங்களையும் பயங்கரவாதின்னு சொல்லிபுடுவாங்க..!
நடுநிலை வாதி பட்டத்தை தக்க வச்சுக்கங்க சகோ..!
//
அஜ்மல் கசாப்பிற்கும் அதே நிலைப்பாடுதான்.
//// அரசின் அனுமதியின் தயாரிக்கப்படும் மது கள்ள சாராயம் //
அனுமதியின்றி என்று இருக்க வேண்டுமோ?
//
அண்ணே பல இடங்களில் அனுமதியோடு கள்ளச் சாராயம் காய்ச்சுறத அண்ணன் அப்படி டீசெண்டா குத்தி காட்டுறாரு..:))