ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது. என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?
ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.
அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cட்ம அப்படின்னு ரெண்டு வழில இயங்குது. இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற அதிர்வெண்ல இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.
1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.
சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?
ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம். ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.
அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.
சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க.
நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.
ராம்ஜிண்ணே, எந்த விசயத்திலும் நக்கல் அடிக்கலாம். உலகில் நக்கல் அடிக்க முடியாத விசயம் என்று எதுவும் கிடையாது. நான் சொன்னதில் லாஜிக் இருக்கா இல்லையா அதை மட்டும் பாருங்க :)
அண்ணே,
அப்ப ராசா மாத்திரம் தனியா உக்கார்ந்து ஏலம் வேண்டாம், விலை நிர்ணயம் நம்மளே பண்ணிக்கலாம்னு முடிவெடுக்க சட்டம் இடம் குடுக்குதாண்ணே, இல்லை இந்த விலை நிர்ணயத்துக்குன்னு ஒரு தனி நிபுணர் குழு இருக்குதா.... ஏன்னா, தனியா ஒரு மனிதனோட முடிவுன்னா அது எந்தளவுக்கு சரியா இருக்கும்னு தெரியல....
மேலும் ஏலம் வேண்டாங்கற முடிவுக்கே நிறைய பேரு ஒப்புதல் குடுக்கணுமோ...
கொஞ்சம் தெளிவு படுத்துங்கண்ணே....
Good Post Abdula Anne..
உள்ளேன் அய்யா
நல்ல சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க. :-))))
//இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது.//
காதுல பூந்தோட்டம். 20 வருடம் முன்பு தகர டப்பா கணிணியே 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரைக்கும் விற்குது, இன்னிக்கு தேதிக்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்திற்கு நல்ல கணிணி வாங்க முடியும், 2500 ரூபாய்க்கு இந்திய தயாரிப்பில் டேப்ளெட் பிசி கிடைக்கிறது, இதற்குக்காரணம் உற்பத்திப் பெருக்கமும், தொழில் நுட்பமும் தான், ராசா கொள்ளை அடிக்காமல் விட்டிருந்தால் (நான் சொல்லவில்லை சிபிஐ குற்றச்சாட்டு) ஐம்பது பைசாவிற்கு பேசும் அலைபேசி ஐஞ்சு பைசாவிற்குக் கூட கிடைத்திருக்கலாம்.
அண்ணே சிங்கப்பூர் வந்த புதுசுல நாங்க சிங்கையில் இருந்து மாதம் 300 வெள்ளிக்கு போன் பேசுவோம், இன்னிக்கு அதே அழைப்புகளை வெறும் 10 வெள்ளிகளில் முடித்துக் கொள்ள முடிகிறது. இராசா சாதிச்சாருன்னு நீங்க சாதிப்பது பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அரசியல்
வந்ததுமே இப்பிடி படார்னு என் கண்ண தொறந்துட்டீக சாமீ....
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சேமிப்பு இருக்கா நாட்டுக்கு....
நான் கூட என்ன ஏதுன்னு வெளங்காம திரிஞ்சேன் நண்பா...
நல்லா புரிய வச்சதுக்கு நன்றி...
அப்புடியே இத ஜட்ஜுகளுக்கும் ஒரு காப்பி அனுப்புங்கண்ணே.... பாரத ரத்னா குடுத்து வெளில் வுட்ருவாக
இன்று டிசம்பர் 6, நீயாவது எதுனா எழுதியிருக்கலாம்,
எத்தனையோ பழக்கங்கள் இங்கே இருந்தும், யாரும் எழுதியதாக தெரியவில்லை ( நான் பார்த்தவரை )
// பாரத ரத்னா குடுத்து வெளில் வுட்ருவாக
//
ஆ.ராசாவே அதைதான் சொல்றாரு. "நான் செய்த தொழில்நுட்பப் பரவலுக்கு நியாயமாக அரசு என்னை கவுரவிக்க வேண்டும்."
இன்று டிசம்பர் 6, நீயாவது எதுனா எழுதியிருக்கலாம்,
எத்தனையோ பழக்கங்கள் இங்கே இருந்தும், யாரும் எழுதியதாக தெரியவில்லை ( நான் பார்த்தவரை )
//
நம்ம சொல்றதைவிட சொல்றவங்க சொல்றதுதான் சிறப்பு. அதான் சொல்லலை.
வாய்தா மேல் வாய்தா வாங்கி வெளியே வர யாரை பார்க்க வேண்டும் எப்படி பார்க்க வேண்டும், அப்படி தம்மை வெளியே விட்டு விட்டால் அவருக்கு எப்படிப்பட்ட காணிக்கை கொடுக்க வேண்டும் வெளிப்படையாக கமிஷன் கொடுக்க முடியாவிட்டால் எப்படியாவது ஒரு ஒன்மேன் கமிஷனுக்கு தலைவராக போடலாம் பிற்காலத்தில் என்றெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் யோசித்து கொண்டு ஆட்சி நிர்வாகத்தை கோட்டை விட்டு கொண்டு இருக்கும் போது கிட்ட தட்ட ஒரு வருடத்தை சிறையில் கழித்து விட்டு இன்னமும் ஜாமீன் கோராமல், தினமும் வழக்கை கூர்ந்து கவனித்து சில நேரங்களில் தானே வாதாடியும் தன் வாதத்தின் போது ஆணித்தரமாக "நான் செய்த செல்போன் பரவலாக்கும் நிகழ்வால் எனக்கு இந்த அரசாங்கம் விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்" என விசாரணை நீதிமன்றத்தில் முழங்கிய நம் தகதகத்தாய சூரியன் அண்ணன் ஆ.ராசா அவர்கள் பெயரும், ஸ்பெக்ட்ரம் என்னும் பெயரும் தான் கடந்த ஒரு வருடமாக ஆண்டவன் பெயரை விட அதிகபட்சமாக உச்சரிக்கப்பட்டது என்று தொடங்கிய இந்த கட்டுரை.... ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? 1 ஜி , 2 ஜி என்றால் என்ன என்பதில் தொடங்கி அதை அழகாய் விளக்கி பின்னர் அழகிய சின்ன உதாரணம் கொண்டு அண்ணன் ராசா அவர்களால் நம் நாட்டுக்கு மிச்சம் ஆகியிருக்கும் அன்னிய செலவானி முதல் நம் சாதாரண மக்கள் அடைந்து வரும் பலாபலன்கள் வரை மிக நேர்தியாய் இந்த கட்டுரையில் சுட்டி காட்டி இருக்கும் தம்பி புதுகை எம் எம் அப்துல்லாவை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
இது ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தம்பி அப்துல்லா சொல்லியிருக்கும் இந்த கோணம் ஊடகங்களுக்கு தெரியாதா? தெரியும்.. ஆனால் அதை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனனில் அவர்கள் முன்முடிவெடுத்து விட்டவர்கள். யாரோ ஆட்டுவிக்க ஆடுபவர்கள்.ஆனால் தம்பி அப்துல்லா மிக அழகாக தன் எளிய நடையில் இந்த கட்டுரையில் தெளிவாக்கி இருக்கின்றார்.
இந்த கட்டுரையை எழுதியிருக்கும் அப்துல்லா பலரின் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாவார் என்பதில் எனகு கிஞ்சித்தும் ஐயமில்லை. எதிர்த்து வாதம் செய்ய முடியாதவர்கள் இந்த கட்டுரையை நேரிடை கேலியாகவோ, வஞ்சபுகழ்சியாகவோ பந்தாடுவார்கள் என்பதை அப்துல்லாவும் நன்கறிவார். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி இதை படிக்கும் ஆயிரம் பேரில் ஐந்து பேராவது "அட ஆமாம்யா... அப்துல்லா சொல்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்குதே" என சிந்தித்தால் அதுவே இக்கட்டுரையின் மாபெரும் வெற்றியாகும். நிச்சயம் அந்த வெற்றி அப்துல்லாவுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்!
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்று எங்களுக்கு கற்று தந்தற்கு நன்றி!!!
இது வித்தியாசமான கோணம். புரிபவர்களுக்கு புரியும். புரியாதது போல் நடிப்பவர்களுக்கு புரியாதுதான். இன்னுமொரு விஷயம், இது பி.ஜே.பி காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்ட நடைமுறை.காலம் வரும். கருத்துகள் ஏற்க்கப்படும்.
மிக அருமையான முறையில் விளக்கமாக 2 ஜி பற்றி தகவல் அளித்தமைக்கு அப்துல்லா அண்ணன் அவர்களுக்கு நன்றி. இதையே சிறு தொகுப்பாக அச்சிட்டு வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும்
மிகச்சரியான ஒப்பிடு, சகோ. அப்துல்லாஹ்! உத்தேச இழப்பு 1 .76 கோடி எனில், உத்தேச லாபத்தையும் கணக்கிடுவது சரியானதே! உத்தேச லாபம் கோடி கோடியை தாண்டும்.
அபி அப்பாவின் பின்னூட்டம் அருமை.
அப்புறம் எது ராசாக்கு ஒண்ணுமே இல்லாத கட்டுமான கம்பெனிக்கு அலைகற்றையை விற்கணும்? நேரடியா செல்போன் கம்பெனிக்கே விற்க வேண்டியதுதானே?
arsaangatthukku izhappu endru solgiraargale,thavira maakal payan adaigiraargal enbadhai solla yaarukkum manam illai, yelam vittirundhaal adhiga vilai poyirukkum, aanaal cellphone kattanam kuraindhirukkaadhu.ingu idharku edhiraaga pesubavargal ellaame avargala veettu vezhaikaaranin kaiyil cell iruppadhai paarkindra veruppildhaane thavira veerondrumillai.
//இன்று டிசம்பர் 6, நீயாவது எதுனா எழுதியிருக்கலாம்,
எத்தனையோ பழக்கங்கள் இங்கே இருந்தும், யாரும் எழுதியதாக தெரியவில்லை ( நான் பார்த்தவரை )//
கோயம்பத்தூர் குண்டு வெடிப்பிற்கும் யாராவது தேதி நினைவு வச்சு எழுதினால் படிப்பிங்களா ?
:)
//வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
:)//
நல்ல வரிகள். திட்டுரவனைக் கூட நம்பலாம் அண்ணே, கூட இருந்து பஜனை பாடுகிரவனையும், பம்முரவனையும் நம்ப முடியாது அண்ணே :) உசாரா இருக்கீங்க
*//ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார்//*
//நான் சொன்னதில் லாஜிக் இருக்கா இல்லையா அதை மட்டும் பாருங்க//
லாஜிக் இல்லாமலேயே மாஜிக் செய்ய உபி உங்களால் மட்டுமே முடியும்!தலீவர் மாதிரியே, ராசாவை எவ்வளவு சுலபமா வந்தனம் சொல்லிக் கை கழுவி விட்டீர்கள்!!
அப்ப "நா வாய் தொறந்தா பல பேரு உள்ள வரனும்"னு ராசா சொன்னத்துக்கு அர்த்தம் என்னங்க!
இப்பேர்ப்பட்ட ராசா மீது வழக்குத் தொடுத்த சிபிஐ யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
கனிமொழிக்காக வாதாடிய வக்கீல் என்ன கூறினார் என்றும் எழுதியிருக்கலாம்.
நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போகவேண்டியிருக்கும் என்ற ராசாவின் கருத்தையும் எழுதியிருக்கலாம்.
கருணாநிதி என்ற நபரைப்போல் யோக்கியன் இந்த பூமியில் யாரும் இல்லை என்று ஒற்றைவரியில் சொன்னால் எங்களுக்குப் புரியாதா?
அப்துல்லா, நலமா? யுடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள்.
அண்ணே.. 'நகைச்சுவை' என்ற பிரிவை (tag) இணைக்க மறந்து விட்டீர்கள்..
நல்லா சொன்னீங்கண்ணே..
நீதிபதி: ஏம்மா...உன் மாமியார் கையை வெட்டினாயா..?
மருமகள்: இல்லைங்கய்யா அவங்கதான் என்னை அடிக்க வந்தாங்க..நான் அருவாளில் தடுத்தேன்.
(எதையும் சொல்ற மாதிரி சொல்லனும். அப்துல்லா அண்ணன் ராசாவப்பத்தி சொன்னாப்ல..)