யுடான்ஸ் நட்சத்திரம்





ஒரு சிறு இடைவெளி.. அதிகம் இல்லை ஜென்டில்மேன் ஜஸ்ட் ஒரு வருஷம்தான் ஆகுது கடைசியா இடுகையிட்டு. வலைப்பூக்களில் தீவிரமாக இயங்கிய காலத்திலேயே தொடர்ச்சியாக இடைவெளியின்றி எழுதியவனல்ல. இருப்பினும் எழுதாமலேயே இருந்தவனும் அல்ல. ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் ஒன்றும் எழுதவுமில்லை, தோனவுமில்லை. இந்த விசயத்தில் நான் மட்டுமல்ல என் போல பலரையும் கெடுத்தது கூகிள் பஸ். அரசியல் சார்ந்தவன், பெரும் பொறுப்பில் இருப்பவன் இப்படியெல்லாம் இருந்தாலும் எந்த இமேஜ் கவலைகளுமின்றி பின்னூட்டப் பெட்டிகளில் கும்மி அடிக்க ஒருபோதும் கவலைகொண்டதில்லை.பலரும் உலகம் முழுவதிலிருந்தும் பார்க்கும் பொதுவெளியிலேயே இப்படியென்றால் சில நூறு பேர்களுக்குள் இயங்கும் கூகிள் பஸ்சில்.. அதுவும் ஒத்த அலைவரிசை நண்பர்கள் மட்டும் கூடும் கூகுள் பஸ்சில்.. கேட்கவா வேண்டும்?!?!?  ஆசைதீர ஆடித்தீர்த்தோம். வலைப்பூக்கள் பக்கம் வர எண்ணமேயின்றி முழுநேரமும் அங்கேயே பொழுதைத் தொலைத்தோம். இப்பொதும் இங்கே மீண்டு(ம்) வரக் காரணம் வெகு விரைவில் எங்கள் தொல்லை தாங்காமல் பஸ்சை கூகிள் மூடுவதுதான்.இனி நான் மட்டுமல்ல.நண்பர்கள் குசும்பன்,வித்யா,கேவியார்,விஜியக்கா,வெண்பூ எனப் பலரையும் இனி இங்கே முன்போல் தொடர்ச்சியாகக் காணலாம்.



சாதாரணமாக நான் ஒரு இடுகையிட்டால் சுமார் ஆயிரத்திற்கும் மேல் ஹிட்ஸ்களும் 50 க்கும் மேல் பின்னூட்டமும் வரும். ஆனால் இந்த இடைவெளியில் இது மீண்டும் சாத்தியமா என்று தெரியவில்லை. வலைப்பூ நண்பர்கள் பலரையும் விட்டு விலகிவிட்டது இப்போதுதான் சிறு வருத்தத்தோடு உணரமுடிகிறது. எனது இரண்டாம் இன்னிங்சை யுடான்ஸ் திரட்டியின் நட்சத்திரமாக்கி மீண்டும் துவக்கி வைத்த நண்பர் கேபிள் சங்கருக்கு என் அன்பு. மீண்டும் இன்றே சந்திப்போம்.

34 Responses
  1. வாழ்த்துகள்:)!



  2. மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்


  3. Rathnavel Says:

    வாழ்த்துகள்.


  4. அண்ணா நமக்கெல்லாம் ஆனாக்கா அந்த மடம் ஆகாட்டி சொந்த மடம் மாதிரி இந்த ப்லாக்...வந்தமைக்கு வாழ்த்துக்கள் வாங்கோன்னா..


  5. This comment has been removed by the author.

  6. Very good. Pl. do write.

    Thanks Cable. Athisayamaa oru uruppadiyaana velai senjurukkeenga. :))


  7. ப‌ஸ்ஸீல் இருந்து வ‌ந்தீங்க‌ ச‌ரி. அதுக்காக‌ அள‌வு கூட‌ இவ்வ‌ள‌வு சின்ன‌தாவா?? ப‌திவு மாதிரி எழுதுண்ணே.. ப‌ஸ்ஸா நினைக்காதீங்க‌ :))


  8. // ப‌ஸ்ஸீல் இருந்து வ‌ந்தீங்க‌ ச‌ரி. அதுக்காக‌ அள‌வு கூட‌ இவ்வ‌ள‌வு சின்ன‌தாவா??

    //


    ஸ்டார்டிங்க் டிரபிள் :))


  9. வாழ்த்துகள், தம்பியண்ணா ;))


  10. விஜி Says:

    நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன், ஒரு கதை கூட எழுதிட்டேன் (!?) நோ அலுவாச்சி. வேற வழியில்லை :)))


  11. விஜி Says:

    அடப்பாவி அப்து அண்ணே உடான்ஸ் நட்சத்திரமா? அதை பார்க்கவே இல்லை..
    வெல்கம்மு :))


  12. Ŝ₤Ω..™ Says:

    வாண்ணே... வாண்ணே.. இதை தான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்தோம்...

    ஒரு வருஷமா பஸ்ஸில்யே போயிட்டு இருந்தேன்.. அதனால ஸ்டார்டிங் டிரபிள் அப்படின்னெல்லாம் சொல்லப்படாது... சும்மா ஜ்ஜிவ்வ்வ்வ்ன்னு கிளம்பனும்..


  13. வாழ்த்துகள்:)


  14. வாழ்த்துகள் தம்பியண்ணன் !!!


  15. அடிச்சி ஆடலாம் தான், பழைய குரூப் நபர்கள் யாரையும் இப்பல்லாம் காணோம் ...


  16. வாழ்த்துகள் அண்ணே.

    \\சாதாரணமாக நான் ஒரு இடுகையிட்டால் சுமார் ஆயிரத்திற்கும் மேல் ஹிட்ஸ்களும் 50 க்கும் மேல் பின்னூட்டமும் வரும். \\

    அது எவனாவது கமெண்ட் போட்டிருக்கானான்னு நீங்களே ஒரு 49,999 தடவை ஓப்பன் பண்ணி பார்ப்பீங்க. அப்புறம் வாழ்த்துகள்ன்னு ஒரு கமெண்ட் வந்தா அதுக்கு நன்றி சொல்லி நாலு கமெண்ட் போடுவீங்க. இதுக்கு இம்புட்டு பில்டப்பு:)


  17. அண்ணே வாழ்த்துக்கள்.

    கலக்கி எடுங்க.

    இரண்டாம் இன்னிங்ஸ்ல லட்சுமண் போல் பேரெடுங்க



  18. வாழ்த்துகள்:)!


  19. வாழ்த்துகள்.

    welcome back ;))


    அன்புடன்
    சிங்கை நாதன்




  20. KSGOA Says:

    வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்.


  21. உடான்ஸ் மூலம் விளைந்த நன்மைகள் என்னவென்று இனி யாரேனும் பதிவர்கள் கூட்டத்தில் கேட்டால் , எனது ஆட்காட்டி விரல் உங்களை நோக்கி நீளலாம் !

    ம் எழுதுங்கள்!


  22. வாழ்த்தி வரவேக்கிறேன்


  23. நல்லவேளை ட்விட்டர்ல இருந்து வரல, 4 வரியில பதிவ முடிச்சுருப்பிங்க.

    வாழ்த்துக்கள்.


  24. ஹலோ பாடகரே பதிவரே அன்புத்தம்பியே நலமா எங்களையெல்லாம் நினைவிருக்கா?:) வாழ்த்துகள்! புத்தாண்டில் மேலும் பொலிய வாழ்த்துகள்!


  25. க ரா Says:

    ஒரு மாமங்கம் ஆச்சா எழுதி. இதுக்கப்புறம் எப்ப எழுதுவீங்கண்ணே...


  26. @ ராமலெஷ்மி அக்கா
    மிலன் அண்ணன்
    இல்யாஸ் அண்ணன்
    ரத்தினவேல் அண்ணன்
    தமிழரசி அக்கா
    மோகன்குமார் அண்ணன்
    தம்பி கார்க்கி
    தஞ்ச்சாவூரான் அண்ணன்
    விஜியக்கா
    சென்
    பாலாண்ணன்
    ரவியண்னன்
    மாப்ளை ஜமால்
    தங்கை வித்யா
    முரளிண்னன்
    சகோதரி ஹூசைனம்மா
    ஜெய்சங்க்கர் அண்ணன்


    அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!


  27. @ அண்ணங்கள்

    சிங்கைநாதன்
    சினேகிதன் அக்பர்
    கேஎஸ்ஜிஓஏ
    சர்புதீன்
    அக்பர்தின்
    ஜோசப்
    க ரா

    ஷைலஜா அக்கா - மறப்பேனா!! :)

    வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.


  28. பூங்கொத்துப்பா!!



  29. காணமபோனவங்க லிஸ்டு பெருசா இருக்கேன்னு நினைச்சேன். இதுதான் காரணமா. பஸ் இறக்கிவிட்டதும் கரெக்டா இறங்கி சரியான இடத்துக்கு வந்திட்டீங்க. வாழ்த்துக்கள். (வந்தவங்க வரபோறவங்க எல்லோருக்கும் வாழ்த்தை சொல்லிக்கிடறேன்)


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']