காதல் தீவிரவாதம் (லவ் ஜிகாத்)


சமீபத்தில் தமிழகத்தின் வெகுஜன வாரப் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வந்து அதிர்வை ஏற்படுத்தியது.அதாவது இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதத்தைச் சார்ந்த இளைஞர்களிடம் ஹிந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றும்படி மூளைச் சலவை செய்வதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நம்மிடம் இப்படி யாரும் சொல்லவில்லையோ! ஒருவேளை நாம இளைஞர் இல்லையோ என்ற பலத்த சந்தேகம் என் மனதில் எழுந்த அதே நேரத்தில் நான் மணமானவன் என்ற உண்மையும் உறைத்தது.

சரி நம்மதான் கல்யாணமான ஆளு.அதுனால நம்மகிட்ட சொல்லாம விட்டிருக்கலாம். கல்யாணம் ஆகாத பசங்க யாருக்காவது இப்படி தகவல் வந்ததான்னு கேப்போம்னு எனக்குத் தெரிஞ்ச முஸ்லீம் பசங்க ஒருத்தன் பாக்கி இல்லாம கேட்டேன்.ஒரு பயலும் அப்படி யாரும் சொல்லலையேண்ணேன்னு சொல்லிட்டானுங்க.எனக்கோ குழப்பம்.இல்லாமலா இப்படி பத்திரிக்கையில எழுதுறானுங்கன்னு.

அதற்கு விடை இன்னைக்கிதான் தெரிஞ்சது.அப்படி கீழே குடுத்துருக்குற மூணு படத்தையும் நல்லா உத்துப் பாருங்க.










                                           
   

மேலே உள்ள படங்கள் ஆர்குட்டில் உள்ள சில ஜாதி அமைப்புகளின் ஃபோரம். அதில் வேறு ஜாதி இளைஞர்கள் தங்கள் இனப் பெண்களைக் குறி வைத்து கிளம்பி இருப்பதாக செய்தி பறிமாறிக் கொள்கின்றனர்.


ஆக இது இஸ்லாமியர்களை குறி வைத்து மட்டுமல்ல பிற சாதிகளையும், அதாவது ஒரு சாதி தனக்குப் பிடிக்காத பிற சாதிகளின் மேல் திட்டமிட்டுப் பரப்பும் அவதூறு என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

எனது மிக நெருங்கிய உறவுப்பெண் ஃபரிதா கோவையில் உள்ள சத்ரியகுல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திரு.சிவா அவர்களைக் காதல் திருமணம் செய்து இருக்கிறார். நான் அவரிடம் இப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு “உங்களிடம் உங்கள் மத அமைப்பைச் சேர்ந்த யாரேனும் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து அவமானப்படுத்து என்று மூளைச் சலவை செய்தார்களா?” என்று கேட்டேன். மனுஷன் பதறிவிட்டார்.”எனக்குப் பிடித்திருந்தது.அவளுக்கும் பிடித்திருந்தது திருமணம் செய்தோம், இதைத் தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை” என்றார். 

நம்முடைய பதிவர் கேபிள் சங்கரின் மைத்துனி ஒரு இஸ்லாமியரைக் காதலித்து மணம் செய்து இருக்கின்றார்.இருவரும் தற்போது ஈரோட்டில் இருக்கின்றனர்.அந்த அண்ணனிடமும்  இதே கேள்வியைக் கேட்டேன்.நல்லவேளை ஃபோனில் கேட்டேன்.இல்லாவிட்டால் அவர் துப்பிய எச்சில் என் முகத்தில் தெறித்து இருக்கும்.

ஆக எந்த ஜாதி,மத அமைப்பும் தங்கள் இளைஞர்களை பிற சமூகப் பெண்களைத் திருமணம் செய்து அவமதிக்கச் சொல்லிக் குடுக்கவில்லை.அது அவரவர் மனப்போக்கில் இயல்பாக நடக்கின்றது.

பண்டைய சமூகத்தில் நிலம்,கால்நடைகள்,பெண்கள் ஆகியவை உடமைகள்.அதைக் கவர்தல் என்பது பறி கொடுத்தவனுக்கு இழுக்கு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண் என்பவள் பொருள் அல்ல சக உயிர் என்ற நிலைக்கு மாறி இருக்கின்றது.காலத்தால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பினும் அதன் எச்சம் இன்னும் இருந்துகொண்டுதான் இருகிறது.மறையத் துவங்கும் பழம்சித்தாந்தங்களை மீண்டும் பயன்படுத்திப் புரளி கிளப்பி தங்கள் மதத்தை அல்லது ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் ஜாதிய மற்றும் மதவெறியை வளர்ப்பது என்பது கொடுமை. 

மதத் தீவிரவாதத்தை வளர்க்கும் அமைப்புகள் பத்திரிக்கைத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதால் இஸ்லாமியர்களைப் பற்றிய அந்தப் புரளி பத்திரிக்கையில் வந்தது. பிற உயர் சாதியினரிடையே பத்திரிக்கை இல்லாததால் ஃபோரம் மூலம் இந்த வெறி வளர்க்கப்படுகின்றது. அதிலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பு படித்தவர்களே?!?!?......பெரும் கொடுமை.

தேவர்மகன் படத்தின் இறுதிக் காட்சியில் திரு.கமலஹாசன் “இனிமே அடுச்சுக்காதிங்கடா,போய் புள்ள குட்டிங்களைப் படிக்கவைங்க என்பார். இப்போது அந்தப் படத்தை அவர் ரீமேக் செய்தால் “டேய் அடுச்சுக்காதிங்கடா, போய் புள்ள குட்டிங்களை ஸ்கூல்லேந்து கூட்டிவந்து வீட்டுலயே வச்சுக்கங்க” என்று மாற்ற வேண்டி இருக்கும்.

                                                                                                                                                                                             

பதிவர் பட்டறை வகுப்பில் அரசியல் தலைவர்கள்

(கோபாலபுரத்தில் தன் தம்பிமார்கள் புடைசூழ அமர்திருக்கின்றார் கலைஞர்)

கலைஞர் : யோவ் ஆற்காடு, அது என்னாதுய்யா புதுசா ஏதோ பிளாக்குங்குறாங்க??

ஆற்காட்டார் : எது தலைவரே?? நந்தனம் டவர் பிளாக்கா? அண்ணாநகர் ஃபர்ஸ்ட் பிளாக்கா??

கலைஞர் : ஒங்கிட்ட கேட்டேன் பாரு. யோவ் பொன்முடி உனக்குத் தெரியுமாய்யா??

பொன்முடி : நல்லாத் தெரியும் தெரியும் தலைவரே. அது நம்ம இணையத்துல இருக்குற வலைப்பூ.டைரி மாதிரி. எல்லாம் எழுதலாம் தலைவரே.

கலைஞர் : அப்ப இனிமே உடன்பிறப்பு கடிதத்தை அங்க எழுதிற வேண்டியதுதான்.

(இந்த தகவல் எப்படியோ கசிந்து லக்கிலுக்கும்,அப்துல்லாவும் அங்கே ஆஜர்)

லக்கிலுக் : தலைவரே வாங்க தலைவரே,சீக்கிரம் வாங்க தலைவரே உடனே வாங்க தலைவரே.இணைய உலகத்துக்கு ஓடி வாங்க தலைவரே.

(துரைமுருகன் மனதுக்குள்.. யார்டா இவன்! நரம்பு மாதிரி இருந்துகிட்டு இரும்பு மாதிரி சவுண்டுவுடுறான்.கண்டிப்பா அப்ப நம்ம கட்சிக்காரனாத்தான் இருப்பான்)

கலைஞர் : தம்பி, தமிழ் தும்பி.. யாரப்பா நீ??

லக்கிலுக் : தலைவரே நான் தான் தலைவரே இணைய சூப்பர் ஸ்டார் லக்கிலுக்

(அப்துல்லா மனசுக்குள் .. அது போன மாசம்)

கலைஞர் ; மாசற்ற மருவே,கழகத்தின் மாணிக்கமே உன்னைச் சந்தித்ததில் மட்டட்ற மகிழ்ச்சி. எனக்கு வலைப்பூ பற்றி கொஞ்சம் வகுப்பு எடேன்.

அப்துல்லா : தலைவரே இவர்கூட சேர்ந்திங்கன்னா வலைப்பூ எழுதுவீங்களோ இல்லையோ, உங்க பழைய தலைமுறை பற்றி கட்டுரை எழுத போயிருவீங்க.இந்தாள் சரியா வரமாட்டான்.பதிவர் பயிற்சிப் பட்டறை நடக்கப்போகுது.அங்க எம் பங்காளி குசும்பன்னு ஒருத்தன் வகுப்பெடுக்கப் போறான்.அவனோட வகுப்புல உங்களை சேர்த்து விடுறேன்.

( "தலைவருக்கு வகுப்பெடுத்து பிக்கப்பண்னி எம்.பி ஆயிறலாம்னு பார்த்தேன்.கெடுத்துண்டான்டா இந்த அப்துல்லா. உடன்பிறப்புக்கு உடன்பிறப்பேதான் முதல் எதிரி" என்று முணங்கியபடி செல்கிறார் லக்கிலுக். கலைஞர் தம்பிமார்களோடு குசும்பனின் வகுப்புக்கு கிளம்புகின்றார்)

-------------------------------------------------------------------------------------------------------




(போயஸ்கார்டன்.. வழக்கம்போல சசிகலாவோடு மட்டும் அமர்ந்திருக்கின்றார் ஜெ)

ஜெ: ஏன் சசி ஏதோ பிளாக்குங்குறாங்களே??

சசி : எங்கக்கா இருக்கு அது?? சொல்லுங்க உடனே வளைச்சுருவோம்.

ஜெ:நீ ஒருத்தி... நீ நினைக்கிற இடம் இல்லடி அது.அது இணையத்துல இருக்குற இடம்ங்குறாங்க.

சசிகலா: எங்க இருந்தா என்னக்கா, இடம்தானே,வளைச்சுருவோம்.

ஜெ: நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா... நம்ம கட்சிலேயே நாலு விஷயம் தெரிஞ்ச ஆளு முத்துசாமிதான் அவரைக் கூப்பிடு.

சசி: அவரு கட்சியவிட்டு போய்ட்டாருக்கா.

ஜெ: அப்ப ரகுபதியை கூப்பிடு

சசி:அவரும் இல்லக்கா.

ஜெ: பழைய கல்வி அமைச்சர் பொன்னுசாமி இருந்தாரே அவரும் விஷயமானவர்தான் அவரைக் கூப்பிடு கேப்போம்
சசி: அவரும் இப்ப நம்மகிட்ட இல்லக்கா.

ஜெ: இவனுங்கள்லாம் துரோகிங்க. எப்பவும் என் மேல விசுவாசமா இருக்குறது செல்வகணபதிதான்.அவரும் டில்லில படிச்சவரு.கண்டிப்பா அவருக்குத் தெரிஞ்சுருக்கும்.அவரைக் கூப்பிடு.

சசி:அவரும் போய்ட்டாருக்கா.
(இனி யாரைக் கேப்பது என்று நொந்துபோய் ஜெ விரக்த்தியாய் அமர்ந்திருக்கின்றார்.அப்போது பவ்யமாக செங்கோட்டையன் வருகின்றார்)

செங்ஸ்; அம்மா, என்னம்மா கவலையா அமர்ந்திருக்கீங்க.

ஜெ : இண்டெர்நெட்ல பிளாக்குன்னு ஏதோ இருக்காம்.அதைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னா நம்ம கட்சில யாருமே இல்ல.அதான் கவலையா உக்காந்துருக்கேன்.

செங்ஸ் : அம்மா எனக்கு ஒரு யோசனை. பேசாம நீங்க படிச்ச சர்ச்பார்க் பிரின்சிபால்கிட்ட போன் போட்டு கேட்டுருங்க.இப்பதைக்கு அதைத் தவிர வேறு வழியில்லை.
(ஜெ முகம் மலர்ந்து சர்ச்பார்க் பிரின்சிக்கு போன் அடிக்கிறார்)

பிரின்சி : ஹலோ, ஜெ மேடமா?? ஓ பிளாக் பத்தி தெரியணுமா?? ஒகே நான் சொல்ற அட்ரஸ்சைக் குறிச்சுக்கங்க.அங்க பதிவர் பட்டறை நடக்குது.பிரபல பதிவர்களெல்லாம் கிளாஸ் எடுப்பாங்க.அங்க புதுகைதென்றல்னு ஒருத்தங்க, ஹைதராபாத்காரங்க, உங்களை மாதிரியே ஹைதராபாத்ல திராட்ச்சை தோட்டமெல்லாம் வச்சிருக்காங்க, உங்களை மாதிரியே தைரியசாலி.அவர் கிளாஸ் அட்டெண் செய்ங்க.உங்களுக்கு வேவ்லென்த் செட்டாகும் ஓ.கே.

(மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெ வகுப்புக்கு கிளம்புகின்றார். 100 கார்கள் பின் தொடர ஜெ இருக்கும் ஹெலிக்காப்ட்டர் மேலே செல்கின்றது)


------------------------------

(தாயகம் அலுவலகத்தில் இருக்கிறார் கோபால்சாமி.அடுத்த நாள் மீட்டிங் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசி ஒத்திகை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.)

வை.கோ : தியாக நெருப்பில் பூத்ததுதான் இந்த இயக்கம்.தீக்குளித்து மாண்ட எம் தோழர்களின் சுடுகாட்டு மண்மீது சத்தியம் செய்து துவங்கிய இயக்கம் இந்த இயக்கம்
(அப்போது நாஞ்சில் சம்பத் நுழைகின்றார்)

நாஞ்சில் சம்பத் (மனதுக்குள்); சுடுகாட்டுல கட்சி ஆரமிச்சாரு.கட்சி பத்திரிக்கை பேரு சங்கொலின்னு வச்சாரு.கட்சியையும் இப்ப சாகடிச்சிட்டாரு.இவரு தலைவரா வந்ததுக்கு வெட்டியானா போயிருக்கலாம்.

வை.கோ: வா சம்பத்..வா.கேட்டாயா என் எழுச்சி உரையை??

நா.ச: (மனதுக்குள்..அதைக் கேட்டுதான நாசமாப்போனேன்) ; அண்ணே சூப்பர்ணே.

வை.கோ: நீதான் சூப்பர்ங்குற ஆனா இப்பல்லாம் மீட்ங்க்கு ஒரு பயலும் வர மாட்டேங்குறான்.சில நேரம் மைக்காரன மட்டும் பார்த்து பேச வேண்டி இருக்கு. ஒத்தையில நிக்கவும் பயமா இருக்கு.

நா.ச : அண்ணே இது டெக்னாலஜி காலம்ணே. இண்டர்நெட்ல பிளாக்னு ஒன்னு இருக்கு.அதுல எழுதுனீங்கன்னா சீக்கிரமே பிரபலமாகி ஆட்சியைப் பிடிச்சிடலாம்.
(அப்ப இதுவரைக்கும் நம்ம பிரபலம் இல்லையான்னு டரியல் ஆகும் வைகோ வலைப்பூ துவங்க முடிவு செய்கின்றார்.)
வைகோ : சம்பத் அந்த பிளாக் எப்படி ஆரமிக்கிறது சம்பத்??
நா.ச: அண்ணே அதெல்லாம் நான் விசாரிச்சுட்டேன்ணே.எப்படி பிளாக் ஆரமிக்கிறதுன்னு சொல்லிக் குடுக்க பதிவர் பட்டறை ஒன்னு நடக்குதாம்.அங்க ”துக்ளக்” மகேஷ்னு ஒருத்தர் கிளாஸ் எடுக்கப் போறாராம். அவரு கிளாஸ்ல சேர்ந்துடுவேம்..

வைகோ: ஓ..ரொம்ப பெரிய ஆளோ! கூட்டம் அதிகமாக இருக்குமோ??

நா.சத்: உங்களை மாதிரியே ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தும் ஆளு, கூட்டம் இல்லை,கூட்டம் இல்லைன்னு அழுது புலம்பும் ஆளு.நமக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்.

(உடனே வகுப்பில் சேர நடைபயணம் துவங்குகிறார் கோபால்சாமி.)


----------------------------------------------------

தைலாபுர‌ம் தோட்ட‌த்தில் ஆழ்ந்த‌ சிந்த‌னையில் இருக்கிறார் ராம‌தாஸ். சுற்றிலும் அடிப்பொடிக‌ள்.
ராம‌தாஸ்: என்ன‌ செய்யுற‌துன்னு தெரிய‌லையே..

அன்பும‌ணி: அப்பா, ப்ளாக்..
(காடுவெட்டி குரு விருட்டென‌ எழுந்து வெளியே செல்கிறார்)

ராம‌தாஸ்: ஏம்பா குரு, ஏன் எந்திரிச்சி போற‌?

குரு: பின்ன‌ என்ன‌ங்க‌ய்யா, நான் க‌ருப்பா இருக்கேன்னு த‌ம்பி என்னை ப்ளாக்குன்னு சொல்லுது
அன்பும‌ணி: அட‌, நான் சொன்ன‌து க‌ருப்பு க‌ல‌ர் இல்லை, இப்ப‌தான் க‌ம்ப்யூட்ட‌ர்ல‌ ப்ளாக் அப்ப‌டின்ற‌ பேர்ல‌ எதோ வ‌ந்திருக்காமே அதைப்ப‌த்தி..
(குரு சமாதானமாகி வ‌ந்து அம‌ர்கிறார்)

ராமதாஸ்: அதுக்கென்ன‌ அன்பு?


ஜி.கே ம‌ணி: அதில்ல‌ங்க‌ய்யா.. நாம‌ளும் அதுல‌ ப்ளாக் ஆர‌ம்பிச்சி ந‌ம்ம‌ க‌ட்சியோட‌ கொள்கைகளைப் ப‌த்தி எழுத‌லாமேன்னு நாந்தான் த‌ம்பிகிட்ட‌ சொல்லிட்டு இருந்தேன்.

அன்பும‌ணி: அப்ப‌டி எழுதினா ராஜ்ய‌ச‌பா சீட்டு கிடைச்சிடுமாண்ணே?

ஜி.கே.ம‌ணி (ம‌ன‌துக்குள்): அந்த‌ நென‌ப்புல‌யே இரு (ச‌த்த‌மாக‌) இருக்கு த‌ம்பி.. அப்ப‌டியே ப்ளாக் ஆர‌ம்பிச்சி ந‌ம்ம‌ க‌ட்சிக்கார‌ங்க‌ எல்லாரையும் ஃபாலோய‌ர் ஆக்கி ஒரு மொக்கை ப‌திவை போட்டு அதுக்கு எல்லாரையும் பின்னூட்ட‌ம் போட‌ சொல்லி பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர் ஆகி அப்ப‌டியே அந்த‌ செல்வாக்கை வெச்சி சீட்டு வாங்கிட‌ வேண்டிய‌துதான் (ம‌ன‌துக்குள்) சொல்லி முடிக்கிற‌துக்குள்ள‌யே மூச்சு வாங்குதே....

ராமதாஸ் :காலந்தான் எவ்வளவு மாறிடுச்சு?? முன்னாடியெல்லாம் பென்சில்ல எழுதுவோம்.அப்புறம் பேனால எழுதுனோம்.இப்ப நெட்டுல எழுதுறாங்களாம்.
( அப்போது "காலம் எவ்வளவு மாறுனாலும் உங்க சாதி வெறி மட்டும் மாறவே மாட்டேங்குதே" என்ற குரல் கேட்டு சுற்றிமுற்றி பார்க்கிறார் மருத்துவர் அய்யா.பின்னர்தான் தெரிகிறது அது அவர் மனசாட்சி)

காடுவெட்டி குரு : அய்யா! ஒரு முக்கியமான விஷயம்.பிளாக் எழுதுறதுல வன்னியர் எத்தனை சதவீதம்னு கணக்கெடுக்கனும்ங்கய்யா.

ராம்தாஸ் : அப்படியெல்லாம் பகிரங்கமா சொல்லக்கூடாது.அதுல எத்தனை சதவிகிதம் மிகவும் பிற்பட்டோர்னு சொல்லணும் புரியுதா??

காடுவெட்டிகுரு : அய்யான்னா அய்யாதான்!

ராம்தாஸ்: அதெல்லாம் இருக்கட்டும் இந்த பிளாக்கைப் பத்தி கத்துக்கணுமே...எவ்வளவு நாளைக்குதான் பேப்பர்ல அறிக்கைவிட்டு மரத்தை வெட்டுறது?? இனிமே இணையத்துல எழுதி ஆப்டிகல் ஃபைபர் கேபிள்லாம் புடுங்கணும்.உலகமே அதிரணும்.
("ங்கொய்யால இதுக்குதான் டெக்னாலஜி கத்துகவும் ஆசைப்படுறியா நீயி" என்ற குரல் கேட்டு சுற்றிமுற்றி பார்க்கிறார் மருத்துவர் அய்யா, வழக்கம்போல் மனசாட்சி)

அன்பும‌ணி: அப்ப‌ உட‌னே ஆர‌ம்பிச்சிட‌லாம். ஆனா அந்த‌ ப்ளாக் என்ன‌ க‌ல‌ர்ல‌ வெக்குற‌து, என்ன‌ மேட்ட‌ர் எழுதுற‌து, எப்ப‌டி எழுதுற‌து ஒண்ணுமே புரிய‌லையே

ராம‌தாஸ்: சைடுவாக்குல‌ ரெண்டு ஆர‌ம்பிச்சி வையி, ஒண்ணு ம‌ஞ்ச‌ க‌ல‌ர்ல‌ இருக்க‌ட்டும், இன்னொண்ணு ப‌ச்சை க‌ல‌ர்ல‌ இருக்க‌ட்டும்.

ஜி,கே.ம‌ணி: அய்யா, நடக்கப்போற பதிவர் பட்டறையில இந்த‌ ப்ளாக் ச‌ம்ப‌ந்த‌மா ஆதின்னு ஒருத்த‌ரு க்ளாஸ் எடுக்குறாராம். விசாரிச்சேன், அவ‌ரும் ந‌ம்ம‌ள‌ மாதிரிதானாம். முத‌ல்ல‌ தாமிரான்ற‌ பேர்ல‌ எழுதிட்டு இருந்தாராம், அப்புற‌மா ஆதின்னு பேர் மாத்திகிட்டாராம். அப்புற‌ம் எதோ ட்விட்ட‌ராம்ல‌, அதுல‌ ம‌றுப‌டியும் தாமிரான்னே பேர் வெச்சிகிட்டாராம். இவ‌ரை விட‌ யாருங்க‌ய்யா ந‌ம‌க்கு பொருத்த‌மான‌ ஆளு..

காடுவெட்டி: அய்யா.. நீங்க‌ ம்ன்னு சொல்லுங்க‌, அந்த‌ ப‌ய‌லை க‌ட்டி கொண்டாந்துட‌றேன்

ராம‌தாஸ்: இவ‌ன் ஒருத்த‌ன், எப்ப‌ பாத்தாலும் க‌ட்டுறேன் வெட்டுறேன்ட்டு..கொஞ்ச நேரம் கம்முனு இரு.

கா.கு : சின்ன அய்யா அந்த அடிக்கடி பேர் மாத்துற அந்த பய நம்ம சாதிக்கார பயலா??

அன்புமணி : விசாரிச்சவரைக்கும் அப்படி தெரியலை.

மருத்துவர்: ரொம்ப நல்லது.அப்ப நமக்கு நல்லா சொல்லித் தருவான்.ஏன்னா எந்தக் காலத்துல நம்ம ஆளுங்க நம்மளை முழுசா ஆதரிச்சாங்க. நம்மதான் அப்படி சொல்லி உதார்விட்டுக்கிட்டு இருக்கோம். சரி வாங்க எல்லாருமே பதிவர் பட்டறைக்கு கிளம்புவோம்.

-----------------------------------------------------

ஆண்டாள் அழகர் மண்டபம். மைத்துனர் சுதீஷ்,மனைவி பிரேமலதாவோடு அமர்ந்திருக்கின்றார் விசயகாந்த்)

பிரேமலதா : ஏங்க இன்னைக்கி தேதிக்கு யூத் அதிகமா இருக்குற கட்சி நம்ம கட்சிதான்

விஜயகாந்த் ; அய்யய்யோ...சத்தியமா நான் அதுக்கு ஒன்னும் பண்ணலை.

சுதீஷ் ; ஏ மச்சான் பதறுறீங்க?? கொஞ்சம் அக்காவை பேச விடுங்க.


பிரேமலதா ; உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களைப் பத்தி தெரியாமலேயே வந்துட்டாங்கன்னே வச்சுக்குவோம். வந்தவங்களைத் தக்க வைக்கணும்ல??

விஜயகாந்த்: அதுக்கு நான் என்ன செய்யணுங்குற??

பிரேமலதா: நீங்களும் கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு டெக்னாலஜி சேவி ஆகணும்.

விஜயகாந்த் : என்னது கம்ப்யூட்டரா??அது எனக்கு இங்லீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை.ஏன்னா அதெல்லாம் படத்துல தீவிரவாதிங்க யூஸ் பண்றது.

பிரேமலதா : நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது.கட்சியை இனி காப்பாத்தணும்னா நீங்க டெக்னாலஜி கத்துகிட்டாதான் முடியும்.இனிமே பேப்பர்ல அறிக்கைவிட்டு பிரயோஜனம் இல்லை.பிளாக்ல எழுதுங்க.

(ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு வழக்கம்போல மனைவியின் முடிவு சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு வருகின்றார் கேப்டன்)

விஜயகாந்த்: சரி,கத்துக்குறேன்.எங்க போய் கத்துக்கணும்??

சுதீஷ் : மச்சான், பிளாக் ஆரமிச்சு எழுதக் கத்துக்குடுக்க பதிவர் பட்டறைன்னு ஒன்னு நடக்குது.அங்க வால்பையன்னு ஒருத்தர் கிளாஸ் எடுக்க போறார்.அவர்கிட்ட சேர்ந்திடுவோம்.ஏன்னா நீங்க கிளாசுக்கு கிளாஸோட போவீங்க.அவரும் கிளாசுக்கு கிளாஸோடதான் வருவாரு.ரொம்ப பொருத்தமா இருக்கும்.

யேய்.. எடு வேனை ஆங்.. என்று சவுண்டு விட்டபடி வகுப்புக்கு கிளம்புகின்றார் கேப்டன்)

-----------------------------------------------------

(அரசியல் தலைவர்கள் அனைவரும் பட்டறை நடக்கும் இடத்தில் ஆஜர்.அப்போது பட்டறை ஒருங்கிணைப்பாளர் பாலபாரதி மைக்கோடு வருகின்றார்.)

பாலபாரதி ; ஒரு முக்கியமான அறிவிப்பு.வகுப்பெடுக்க வர வேண்டிய குசும்பன்,புதுகைதென்றல்,துக்ளக் மகேஷ் இவங்கள்லாம் விமானத்தை தவற விட்டுட்டதால உரிய நேரத்தில் இங்கே வர இயலவில்லை.அதேபோல இந்த வகுப்பெடுக்க கடைசி நேரத்தில் ஆதிக்கு அவர் தங்கமணி போகக்கூடாதுன்னு அனுமதி மறுத்ததால் அவரும் வர இயலவில்லை.வால்பையன் ஈரோட்டில் கிளம்பும்போதே சரக்கடித்து மட்டையாகிவிட்டதால் அவரும் வரவில்லை. ஆகவே மாற்று ஏற்பாடாக நமது பிரபல பதிவர் அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களை வகுப்பெடுக்கச் சொல்லி இருக்கின்றோம்.

(”என்னது உண்மைத்தமிழன் வகுப்பெடுக்கிறாரா?!?!?” என்று அலறியபடி வீல் சேரைவிட்டு எழுந்து ஓடத் துவங்குகின்றார் கலைஞர்.அவரைத் தொடந்து அனைவரும் ஆளுக்கொரு திசையில் தலை தெறித்து ஓடத் துவங்குகின்றனர்.விஜயகாந்த் மட்டும் ஓடாமல் தைரியமாக உண்மைத் தமிழன் அருகில் வருகின்றார்.)

உண்மைத்தமிழன் : நீந்தாய்யா மனுஷன்.நான் கிளாஸ் எடுக்குறேன்னவுடனே எல்லாப் பயலும் ஓடிப்போய்ட்டான்.தைரியமா நீங்க மட்டும் இருந்தீங்க பாருங்க..கேப்டன்ங்குற பட்டத்துக்கு உண்மையிலேயே நீங்க பொருத்தமான ஆளுய்யா. சரி வாங்க வகுப்பெடுக்குறேன்.

கேப்டன்: தம்பி உண்மைத்தமிழன்,அதுக்கு முன்னாடி நான் சொல்ற ஒன்னைக் கேளு.

உ.த : ஏங்க நீங்களே இன்னைக்கிதான் புதுசா கத்துக்க வந்துருக்கீங்க! என்ன சொல்லப்போறீங்க??

கேப்டன் : ய்யேய்ய்...புதுசா இருந்தா என்ன? நான் பாக்கிஸ்தான் தீவிரவாதிக்கே தமிழ்ல்ல அட்வைஸ் பண்ணுனவன் தெரியுமா உனக்கு?? முதல்ல தமிழ்ல எத்தனை வலைப்பூ இருக்குன்னு தெரியுமா உனக்கு??

உ.த :(மிரண்டு போய்) சொல்லுங்க கேப்டன்

கேப்டன் ; தமிழ்ல இருக்குற மொத்த வலைப்பூ எண்ணிக்கை பத்தாயிரத்தி முன்னூத்தி இருவத்தி நாலு.அதுல தமிழ் மணத்துல இணைச்சது ஐயாயிரத்தி ஏழுநூத்தி பன்னென்டு. இதுல தொடர்ந்து எழுதுறவங்க மூவாயிரத்தி முன்னுத்தி நாப்பத்தி ஏழு....

(கேப்டன் தொடர்ந்து புள்ளிவிவரங்களை அடுக்க உண்மைத்தமிழனே ஓடத் துவங்குகின்றார்)