எனக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான்.உங்களைப் பார்க்கையில் ரொம்பவே பொறாமையா இருக்கு...நம்பளும் இருக்கோமே ஒரு எளவும் சாதிக்காமன்னு.அதே நேரத்துல பெருமையாவும் இருக்கு...நானே சாதிச்ச மாதிரி.உங்களோட பெரிய பலமே நீங்க ஒவ்வொருமுறை சாதிக்கும்போதும் தானே சாதித்ததுபோல ஒவ்வொருவரும் நினைப்பதும்தான்.வாழ்த்துகள் சச்சின்.உங்களை எப்பத் தெரியுமா எனக்கு ரொம்பப்புடுச்சது?மும்பை இந்தியர்களுச் சொந்தம்னு சொன்னீங்கள்ல...கிரிக்கெட்டர் சச்சினைவிட இந்தியன் சச்சின் எனக்கு ரொம்பவே கிரேட்.
*******************************************************
இன்றைக்கு டுவிட்டரில் கார்க்கி “உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்ன்னு தோழியிடம் சொன்னது தப்பாபோச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்” என்று ஒரு மெசேஜ் போட்டு இருந்தான். நான் அதற்குப் பதிலாக “நீ மட்டும்தான் லூசுன்னு நினைச்சேன்” என்று டுவிட்டினேன். அதற்கு அந்தக் கழுதை “நாங்கள் காதல் பைத்தியங்கள்.உங்களிடம் காதல் மட்டும் மிஸ்சிங்” என்று பதில் போட்டு இருக்கின்றான். நான் ங்ஏஏஏஏஏஏ ஆகிட்டேன் :))
********************************************************
சென்னை மாநகரக் காவல் துறையின் இணைக் கமிஷ்னர் திரு.சக்திவேல்.ஐ.பி.எஸ்., அவர்களை அலுவல் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றேன். அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் பலரும் அவருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். தனக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் உதவிகோரி வந்தால் ஒருவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி இருந்தது அவருடைய நடவடிக்கை.கனிவும்,கடுமையும் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக இருந்தார்.மக்கள் பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சரியான உதாரணம் அவர்.ஹேட்ஸ் ஆஃப் சார்.
இன்றைக்கு செய்திகளில் பெரிதும் ஆக்கிரமிக்கும் பிரச்சனை நக்சல்களைப் பற்றியது.மத்திய,மாநில அரசுகள் உரிய முறையில் மக்களைக் கவனித்துக்கொண்டால் பின்னர் மக்கள் நக்ஸல்களைக் கவனித்துக் கொள்வார்கள்.ஒருவன் இருட்டான இடத்தில் தன் பொருளைத் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்கும் இடத்தில் போய் தேடினானாம்.அந்தக் கதைதான் நினைவிற்கு வருகின்றது.
நான் போகிறேன் மேலே..மேலே
பூலோகமே காலின் கீழே.
சமீபகாலமாக இந்தப் பாடல் என்னைச் சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. அன்றாடப் பணிகளின் மீது செலுத்தும் கவனத்தைக்கூட சிதறடிக்கின்றது.முக்கிய காரணம் என் ஆசான் எஸ்.பி.பி. 25 வயது இளைஞனுக்குப் பாடியிருக்கும் அந்த 65 வயது மனிதரின் குரலைக் கேட்டீர்களா??
சரி இப்ப என்னோட சேர்ந்து பாடுங்க.
நான் போகிறேன் மேலே..மேலே
பூலோகமே காலின் கீழே...
விண்மீன்களின் கூட்டம் என்மேலே
ஒ.கேவா. அப்படியே இப்ப நான் பாடுற இந்தப் பாட்டையும் சேர்ந்து பாடுங்க.
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்..ஆ..ஆ..ஆ..
இப்படித்தான் நாங்க ஊரை ஏமாத்துவோம் :)))
********************************************************
பதிவர் அண்ணன் ஜீவ்ஸ் அவர்கள் மெயிலில் சில ஜோக்குகளை அனுப்பி இருந்தார்.அதில் என்னை மிகவும் கவர்ந்த ஜோக்ஸ் :)))
அப்பாவி நோயாளி
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீன்,
கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
படித்ததில் பிடித்தது
போக்கு
வந்து விழுகிற
எல்லாக் கற்களும்
விழுந்த இடத்தில்
மூழ்கிக் கிடக்க
தன் போக்கில்
போய்க்கொண்டிருக்கின்றது நதி.
&&&&&&&&&
முரண்
நிஜமாயிருக்கிறேன்
முரணானவள் என்று
முகம் சுழிக்கின்றார்கள்.
- கவிஞர்.இளம்பிறை
********************************************************
அறிஞரின் தத்துவம்
கண்ணா! என்னதான் நம்ப மிட்நைட் மசாலா பார்த்து மகிழ்ச்சியா இருந்தாலும் எடுக்குற டைரக்டருக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
