தனியார் பள்ளிகள் தனி அரசா??


வாழ்வில் எத்தனையோ தருணங்கள் நம்மிடையே வந்துபோகும்.அதில் நாம் பள்ளிக்குச் செல்லும் முதல்நாளும்,நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முதல்நாளும் என்றுமே சம்திங் ஸ்பெசல்.அழுதுகொண்டே செல்லும் நம்மை அரவணைத்து அமரவைத்து இன்னோரு தாயாக,தந்தையாக ஆசிரியர்களை நாம் ஏற்றுக்கொள்ளும் ரசாயன மாற்றம் எந்த சோதனைச்சாலையிலும் கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளும்,அரசு உதவி பெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளும் மட்டுமே இருந்தது.கல்வி இலவசமாக இருந்ததால் அதைத் தரும் ஆசிரியர்கள் மீது அளவுகடந்த மரியாதை மாணவர்களுக்கும் இருந்தது,பெற்றோர்களுக்கும் இருந்தது. அண்ணன் வெட்டிகாடு இரவிச்சந்திரனின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்ற இந்த தொடரைப் படியுங்கள்.பள்ளிக்கும்,மாணவனுக்கும் இருந்த அந்த உறவை வெகு அழகாக சொல்லி வருகின்றார்.ஆனால் இன்றைய நிலையில் தனியார் பள்ளிகள் பெருகிவிட்ட சூழலில் இந்த நிலை பெரிதும் மாறியிருப்பது உண்மை.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.வருகின்ற மாணவர்களை எதிர்கால சமூகமாக நினைக்கும் மனநிலைமாறி நிகழ்கால காசாகவே பார்க்கும் நிலை இருப்பது உண்மை.மாணவர்களும் மாதா,பிதாவுக்குப் பின்னர் ஆசிரியரை வைத்த நிலைமாறி நாம் குடுக்கும் காசுக்கு நமக்கு வேலை செய்யும் வேலைக்காரன் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது உண்மை.தனியார் பள்ளிகளின் பணவெறி எந்த அளவிற்கு உட்சத்தில் உள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

அடுத்த கல்வியாண்டின் சேர்க்கைக்காக தற்போதே பெரும்பாலான ஆங்கிலப்பள்ளிகள் சேர்க்கையைத் துவங்கிவிட்டனர்.ஒரு மாணவன் முதல் வகுப்பில் சேர வேண்டும் என்றால் 5 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.அதற்கு அரசு எந்த தேதிக்குள் பிறந்து இருக்க வேண்டும் என்று தேதி நிர்ணயம் செய்துள்ளது.மாநில அரசின்கீழ் வரும் பள்ளிகளில்(ஸ்டேட் போர்ட்,மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன்) சேர வேண்டும் எனில் ஜூலை 31 ம் தேதிக்குள்ளும்,மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிகளில் ஆகஸ்ட்டு 31 ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். அதாவது வரும் 2011 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் ஒரு மாணவன் சேர வேண்டுமெனில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 31 க்குள்ளும், ஆகஸ்ட்டு 31 க்குள்ளும் பிறந்திருந்தால் போதும்.அதுமட்டுமின்றி மேற்குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மாதம் பின்னர் பிறந்திருந்தால் டி.இ.ஓவிடம் விலக்கு பெற்று அந்த மாணவனையும் முதல் ஆண்டில் சேர்க்கலாம்.இதுதான் அரசு சொல்லும்விதி.

ஆனால் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளும்  அரசு சொல்லும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் 31க்குள் பிறந்திருக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தங்கள் விண்ணப்பங்களிலேயே தெரிவிக்கின்றனர்.அதாவது இவர்கள் கூற்றுப்படி 2011 ஆம் ஆண்டில் முதல் வகுப்பு சேர 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் பிறந்திருக்க வேண்டும்.இதன் பிண்ணனி என்னவென்று புரிகிறதா?? 

சாதாரணமாக 2 ஆம் வகுப்பு படிக்கும் அளவிற்கு வயதும்,மூளை வளர்ச்சியும்  உடைய மாணவனுக்கு ஒன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தினால் அவனால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். நீண்ட நாள் திட்டத்தில் பொதுத்தேர்வில் அவனால் பள்ளி செண்டம் ரிசல்ட் வாங்கும்.வாங்கி?? மேலும் மேலும் பீஸை உயர்த்தலாம்.தட்ஸ் ஆல்.

ஆனால் இவர்களின் பணவெறியால் ஒரு மாணவன் இழப்பது தன் வாழ்வில் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம்.கூடவே வேலை,திருமணம் போன்றவை இதனால் ஒரு வருடம் தள்ளிப்போகும் என்பதும் கொடுமை.அரசுபள்ளிகள் இன்றும் அரசின்விதிப்படி ஜூலை 31க்குள் பிறந்தவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கின்றது.ஆனால் தனியார் பள்ளிகள் பகிரங்கமாகவே தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதை மீறுகின்றனர்.எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இந்த தைரியம்??? தனியார் பள்ளிகள் என்ன தனி அரசா???


49 Responses
  1. மிகச்சிறந்த பதிவு அண்ணே..

    //பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.//

    ம்ம்.. :(


  2. Venky Says:

    கேள்விகள் அருமை .... இதற்கான விடைகள் என்ன ???


  3. நல்ல பதிவுண்ணா, ஆனா நாம பேசி ஒண்ணும் ஆகப்போவதில்லையே. :-(


  4. என்னான்னவோ பண்ணிகினுரானுங்கோ.. நீ இத்தப் போயி பெருசா கூவிகினுருக்கியேண்ணே.. அடப்போயி வேலையப் பாரு.


  5. அவசியம் தேவையான பதிவு அப்துல்லா.. நல்ல தலைப்பு..


  6. மரா Says:

    ஏதோ ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது........தனியார் பள்ளிகள் விசயத்துல நிறைய அரசியல் இருக்கு.. உங்களுக்கு தெரியாம இல்ல :( ரொம்ப சின்ன பதிவு.இன்னும் உங்ககிட்ட இருந்து நிறையா உண்மைகளை எதிர்பாக்குறோம். ஸ்பெக்ட்ரம் பத்தில்லாம் எளிமையா எழுதினா படிப்போம்.


  7. Chitra Says:

    சில விஷயங்களை, முதன் முதலாக இந்த பதிவில் தான் வாசிக்கிறேன். என்னவெல்லாம் நடக்கிறது.........தட்டி கேட்கத்தான் ஆளில்லை.


  8. //மாணவன் இழப்பது தன் வாழ்வில் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம்.//

    ஆங்ங்ங் இப்படிதான் அண்ணாத்தே என் வாழ்விலும் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம் வீனா போச்சு:(((( +12 வை ரெண்டு வருசம் படிக்க வெச்சிட்டானுவோ பாவி பயலுவோ:(((


  9. //முதல்நாளும்,நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முதல்நாளும்//

    முதல் என்று வருகிற எல்லாம் நாளுமே ஸ்பெசல் தான் அண்ணாத்தே!


  10. // பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.//

    உன்னை எல்லாம் ஸ்கூலில் சேர்க்கும் பொழுது அந்த டீச்சர் மாபெரும் இம்சையை ஒப்படைக்கிறார்கள் என்று உணர்ந்திருப்பாங்க.


  11. அண்ணே,

    பல ஐரோப்பிய நாடுகளில், ஐந்து வயதாகும் வரை எல்.கே.ஜி.லேயே சேர்ப்பதில்லை. நாம் தான் மூன்று வயதாகும் பொழுதே சேர்த்து விடுகிறோம்.

    குழந்தையில் மூளை வளர்ச்சி அப்பொழுது தான் உள்வாங்கும் திறன் பெற்றிருக்கும் என்பதும், விளையாட்டுப் பருவத்தில் பள்ளிகளில் விடுவது தேவையற்றது என்பதும் அவர்கள் கருத்து.

    இங்கே பள்ளிகள் அப்படி ஒரு விதிமுறை போட்டிருப்பது அதிலும் காசு வசூலிக்கவே அன்றி குழந்தைகளுக்கு நல்லது செய்வதற்கு அல்ல என்று நினைக்கிறேன்.


  12. தலையை சுத்தி காதைத் தொடுவதைத் தாண்டி எனக்கெல்லாம் ஒரு தகுதியும் கேட்கலை. :) 4 வயசுலையே ஒண்ணாப்பு சேர்ந்துட்டோம்ல..


  13. [[[குசும்பன் Says:
    ஆங்ங்ங் இப்படிதான் அண்ணாத்தே என் வாழ்விலும் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம் வீனா போச்சு:(((( +12 வை ரெண்டு வருசம் படிக்க வெச்சிட்டானுவோ பாவி பயலுவோ:(((]]]

    அப்படிப் படிச்சுமாடே இப்படி இருக்குற..?


  14. தம்பி,

    என் “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி” தொடருக்கு இணைப்பு கொடுத்தற்கு நன்றி.

    //மாணவர்களும் மாதா,பிதாவுக்குப் பின்னர் ஆசிரியரை வைத்த நிலைமாறி நாம் குடுக்கும் காசுக்கு நமக்கு வேலை செய்யும் வேலைக்காரன் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது உண்மை.//

    நிதர்சனமான உண்மை:(((


  15. கேந்திரிய வித்யாலயாவில் முதல் வகுப்பு சேர்க்க மார்ச் 31 ற்குள் பிறந்து இருக்கணும்..இதை அடிக்கடி மாற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்.


  16. உங்க வலைப்பூ எழுத்துகள் சரியாத் தெரியலை. ஆனா, பின்னூட்டப் பக்கத்தில தெளிவாத் தெரியுது. என்ன பிரச்னை.


  17. பல பெற்றோருக்கு இருக்கும் பிரச்சனையை எழுதியுள்ளீர்கள். ஹும்ம் இந்தியாவில் இப்படி சில கொடுமைகளோடு தான் வாழ வேண்டியுள்ளது


  18. அண்ணே.. உங்களுக்கு தான் எவ்வளவு நண்பர்கள் !! நீங்க எப்பவோ ஒரு தடவை எழுதினாலும், எப்ப எழுதுவீங்கன்னு பாத்துட்டு கியூவில் வந்து கமெண்ட் போடுறாங்க; கலக்குங்க :))


  19. என்ன அண்ணே,

    பாப்பாவுக்கு அட்மிஷன் வாங்க போனீங்களா????

    நல்ல பதிவுதான். இன்னும் இந்தப் பள்ளிகளை பற்றி எழுதணும்னா எத்தனையோ மேட்டர் இருக்கு.

    யோவ்.. ஆதி, கம்னு இருக்க மாட்டியா, ரொம்ப நாளைக்ப்புறம் எதோ இப்பத்தான் இந்தாளு எழுத வந்திருக்காரு, உடனே கலாய்ச்சா, சாமி மறுபடியும் மலையேறிடும்ப்பா...


  20. Leo Suresh Says:

    அன்பின் அப்துல்லா

    நீங்களே ஆளும் கட்சியின் முக்கியமானவர் தானே இதை எடுத்து சொல்லி தீர்வு காண முடியாதா


    லியோ சுரேஷ்


  21. கண்ணுமுன்னால அநியாயம் நடக்குதுன்னு தெரிஞ்சாலும் நம்மால என்ன செய்ய முடியும்!!!???


  22. ஆதி, கம்னு இருக்க மாட்டியா, ரொம்ப நாளைக்ப்புறம் எதோ இப்பத்தான் இந்தாளு எழுத வந்திருக்காரு, உடனே கலாய்ச்சா, சாமி மறுபடியும் மலையேறிடும்ப்பா...//

    :)


  23. @குசும்பன்.- ///ஆங்ங்ங் இப்படிதான் அண்ணாத்தே என் வாழ்விலும் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம் வீனா போச்சு:(((( +12 வை ரெண்டு வருசம் படிக்க வெச்சிட்டானுவோ பாவி பயலுவோ:(((///

    நாங்கெல்லாம் +2 தான் படிச்சோம். ஆனா குசும்பன் மட்டும் +12(+ twelve years) வருஷம் படிச்சிருக்காரு!!!? அம்மாடியோவ்!


  24. @குசும்பன்.- ///ஆங்ங்ங் இப்படிதான் அண்ணாத்தே என் வாழ்விலும் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம் வீனா போச்சு:(((( +12 வை ரெண்டு வருசம் படிக்க வெச்சிட்டானுவோ பாவி பயலுவோ:(((///

    நாங்கெல்லாம் +2 தான் படிச்சோம். ஆனா குசும்பன் மட்டும் +12(+ twelve years) வருஷம் படிச்சிருக்காரு!!!? அம்மாடியோவ்!


  25. தனியார் பள்ளிகள் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி விட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    குழந்தைகளை மூன்று வயதிலேயே எல்.கே.ஜி.யில் சேர்ப்பது சரியல்ல. (அதுவும் இக்காலத்திய பாடத்திட்டம்...!!!) நாலு வயதில்தான் நான் என் இரு குழந்தைகளையும் சேர்த்தேன். எனக்கு அவ்வாறு தங்கள் அனுபவத்தினால் அறிவுறுத்தியது இரு தம்பதியர். இருவருமே, முதல் குழந்தையை 3 வயதிலும், இரண்டாவது பிள்ளையை 4 வயதிலும் பள்ளியில் சேர்த்தவர்கள்.

    வளர்ந்தபின் எவ்வளவோ இழக்கிறோம்; அட்லீஸ்ட் இனிமையான குழந்தைப் பருவத்தை கூடுதலாக ஒரு வருடமேனும் இழக்காதிருக்கட்டுமே இன்றைய குழந்தைகள்?

    பொண்ணை பள்ளிக்கூடம் சேர்க்கப் போறீங்க போல? வாழ்த்துகள்.


  26. ஓ இப்படி வேற நடக்குதா? :-(((
    இதுக்கு என்னாண்ணே பண்ணலாம்?


  27. //எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இந்த தைரியம்??? தனியார் பள்ளிகள் என்ன தனி அரசா???//

    அரசையும் இப்போ தனியார்மயம் ஆக்கிட்டாங்களாண்ணே!


  28. //குசும்பன் said...
    // பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.//

    உன்னை எல்லாம் ஸ்கூலில் சேர்க்கும் பொழுது அந்த டீச்சர் மாபெரும் இம்சையை ஒப்படைக்கிறார்கள் என்று உணர்ந்திருப்பாங்க.
    //

    அப்துல்லா அண்ணனுக்கே இந்த நிலைமையினா, குசும்பன் பள்ளிக்குப் போன முதல் நாளுதான் அந்த டீச்சரோட கடைசி வேலைநாளா இருந்திருக்கும். :-))


  29. சென்னையில் ஒரு பள்ளியில் தாளாளருக்கும் பெற்றொருக்கும் நடந்த உரையாடல்


    தாளாளர் “நாங்கள் இது போல் பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறோம். அதில் சில ஏழை குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் இல்லாமலேயே நடத்தப்படுகிறது

    எனவே அங்கிருக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட செலவை நீங்கள் ஏற்க வேண்டும்”

    “எவ்வளவு”

    “குறைந்தது 25000”

    நேரடியாக நன்கொடை (டொனேஷன்) என்று கேட்காமல் இப்படி ஒரு வழியா

    “சரி சார். நான் அப்படி நீங்கள் இலவசமாக நடத்தும் பள்ளியிலேயே சேர்த்துக்கொள்கிறேன். எந்த பள்ளி. எங்கு உள்ளது”

    அந்த தாளாளர் முகம் எப்படி மாறியிருக்கும் என்று நினைத்தாலே சிரிப்பு வருகிறது


  30. Ŝ₤Ω..™ Says:

    அண்ணே பள்ளி மட்டுமில்லைண்ணே.. ஆசிரியர்களின் மனநிலையும் வெகுவா மாறிடிச்சி.. நண்பர் ஒருவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்.. நல்லா சொல்லிக்குடுப்பார் அவர்.. சமீபத்தில் அவரிடம் பேசிட்டு இருக்கும் போது அவர் சொன்ன வார்த்தைகள் சுறுக்கு சுறுக்கு குத்திச்சி..
    “மச்சி இன்னைக்கு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்க 1கோடி இருந்தா போதும்.. நீ 10 நபர் சேர்த்துக்கோ.. ஆளுக்கு 10லட்சம் invest செய்யனும்.. நல்லா படிக்கும் 5 மாணவர்களை நாம வேறு ஸ்கூலில் இருந்து எடுத்து அவங்களுக்கு boarding, lodging, fees எதும் இல்லாமல் ஸ்கூல் செலவில் படிக்க வச்சி அவங்கள State rank வாங்க வச்சிட்டா போதும்.. அப்புறம் மார்க்கெட்ல நம்ம ஸ்கூல் தான் டாப்.. முதல் 4/5 வருஷம் returns எதிர்பார்க்கக் கூடாது.. அப்புறம் நம்ம areaல நாம தான் ராஜா”
    இவை அவரது வார்த்தைகள்..

    நண்பர் ஒரு வியாபார காந்தம் எல்லாம் கிடையாது.. ஆசிரியர் என்பது தான் கொடுமையே..


  31. //ஹுஸைனம்மா Says: 8 December 2010 11:31 உங்க வலைப்பூ எழுத்துகள் சரியாத் தெரியலை. ஆனா, பின்னூட்டப் பக்கத்தில தெளிவாத் தெரியுது. என்ன பிரச்னை.

    //

    பிரச்சினை ஒன்னும் இல்ல. பாதி புண்ணியம் பாதி பாவம் செஞ்சிருக்கீங்கன்னு அர்த்தம்.

    புரியவில்லையா?

    //உங்க வலைப்பூ எழுத்துகள் சரியாத் தெரியலை. //
    இது நீங்க செஞ்ச புண்ணியம்.

    //பின்னூட்டப் பக்கத்தில தெளிவாத் தெரியுது.//

    இது நீங்க செஞ்ச பாவம்.


  32. //மோகன் குமார் said...
    அண்ணே.. உங்களுக்கு தான் எவ்வளவு நண்பர்கள் !! நீங்க எப்பவோ ஒரு தடவை எழுதினாலும், எப்ப எழுதுவீங்கன்னு பாத்துட்டு கியூவில் வந்து கமெண்ட் போடுறாங்க; கலக்குங்க :))

    //

    ஹி ஹி சட்டுபுட்டுன்னு 40 கமெண்ட் போட்டு முதல் பக்கத்திலிருந்து தூக்கிவிடுவோம். அதுதான் ரகசியம்.
    ஏன்னா புதுசா எழுதவரும் ஆளுங்க இவரை பார்த்து கெட்டு போய் ஆடிக்கொருபதிவு போட ஆரம்பிச்சிட்டா?:))


  33. //குசும்பன் said...

    பிரச்சினை ஒன்னும் இல்ல. பாதி புண்ணியம் பாதி பாவம் செஞ்சிருக்கீங்கன்னு அர்த்தம்.

    புரியவில்லையா?//

    அடடா, என்னே ஒரு அற்புத விளக்கம்!! இதுதான் +2 படிச்சவங்களுக்கும், +12 படிச்சவங்களுக்கும் உள்ள வித்தியாசம்!!

    :-))))


  34. //மோகன் குமார் said...
    பல பெற்றோருக்கு இருக்கும் பிரச்சனையை எழுதியுள்ளீர்கள்.
    //

    அண்ணே அப்ப பெற்றோருக்கு இருக்கும் பல பிரச்சினைகளை பற்றியும் எழுதுவீயா?


  35. //அடடா, என்னே ஒரு அற்புத விளக்கம்!! இதுதான் +2 படிச்சவங்களுக்கும், +12 படிச்சவங்களுக்கும் உள்ள வித்தியாசம்!! //

    ஆக படிச்சேன் என்று ஒத்துக்குறீங்க...இதை எங்க ஆத்தா கேட்டா ஆனந்த கண்ணீர் விடும்:)))


  36. குசும்பா சீக்கிரம் ஆட்டத்தை முடிச்சிட்டு கிளம்பு.நான் எல்லாருக்கும் பதில் போடணும் :)


  37. //குசும்பன் பள்ளிக்குப் போன முதல் நாளுதான் அந்த டீச்சரோட கடைசி வேலைநாளா இருந்திருக்கும். :-))
    //

    ஆமாங்க அந்த டீச்சருக்கு டீச்சரா கடைசி வேலைநாளா இருந்திருக்கும், அதன் பிறகு புரோபசர் ஆகியிருப்பாங்க. ஏன்னா நம்ம அறிவுவை கண்டு இவனுக்கு ஸ்கூலில் பாடம் எடுப்பதுக்கு. ஈசியா காலேஜில் பாடம் எடுக்கலாம் என்று போய் இருப்பாங்க:))


  38. //எம்.எம்.அப்துல்லா said...
    குசும்பா சீக்கிரம் ஆட்டத்தை முடிச்சிட்டு கிளம்பு.நான் எல்லாருக்கும் பதில் போடணும் :)

    //

    அதெல்லாம் முடியாது நீ ஒரு பக்கமா பதில் சொல்லு...நான் ஒரு ஓரமா கும்மிக்கிறேன்.

    வருடத்தை வேஸ்ட் செய்யக்கூடாதுன்னு பதிவு எழுதும் நீ...காத்திருந்து டைத்தை வேஸ்ட் செய்யலாமா?


  39. @ அண்ணன்கள்

    சென்ஷி
    வெங்கி
    முரளிகுமார்
    ஆதிமூல்கிருஷ்ணன்

    ம.ரா - அண்ணே ஓடிப்போயிரு நீயி :))

    செந்தில்வேலன்
    சஞ்செய்காந்தி
    உ.த
    இரவிச்சந்திரன்

    மோகன்குமார் -

    //நீங்க எப்பவோ ஒரு தடவை எழுதினாலும், எப்ப எழுதுவீங்கன்னு பாத்துட்டு கியூவில் வந்து கமெண்ட் போடுறாங்க; //

    ஆமாம்ணே.அதேபோல 900 -1000 ஹிட்சும் வந்திரும்.பாசக்கார பயபுள்ளைக :)


    பெஞ்சமின்ணே (தராசு) - அண்ணா உங்க ஃபோன் நம்பர் மாறிடுச்சா??

    லியோசுரேஷ் - அண்ணா நல்லாருக்கீங்களா?? துபாய் குளிர் எப்படி இருக்கு?? அப்புறம் இது சம்மந்தமா விரைவில் தீர்வு வரும்.கண்டிப்பா.


    இரா.சிவக்குமரன் - அன்ணே, உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    ரோஸ்விக் - குட் கொஸ்டீன்.ஆனா இதை என்கிட்ட கேக்காம ஒரு மனுவா எழுதி கலெக்டர்கிட்ட குடுங்க :)))

    மருத்துவர்.புருனோ அய்யா ( நாட்டுல யார் யாரையோ மருத்துவர் அய்யானு சொல்றாங்க. உங்களைச் சொல்லலாம்.தப்பேயில்லை)


    சென்

    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


  40. @ ரோஸ்விக்

    // அப்துல்லா அண்ணனுக்கே இந்த நிலைமையினா, குசும்பன் பள்ளிக்குப் போன முதல் நாளுதான் அந்த டீச்சரோட கடைசி வேலைநாளா இருந்திருக்கும். :-))

    //


    அடி குடுத்த கைப்புள்ளைக்கே இந்தக் காயம்னா அடி வாங்குனவன் உசுரோட இருப்பான்னு நினைக்கிற???

    உசுப்பேத்தாம போண்ணே :)))


  41. @ சகோதரிகள்

    தேனம்மை - அட! அக்கா நம்ம இடுகையெல்லாம் படிக்கிறாங்களா??

    சித்ரா

    அமுதா கிருஷ்ணன் - ஆமாம்க்கா. போன ஆண்டுவரை ஆகஸ்ட் 31தான் வச்சிருந்தாங்க. இந்த ஆண்டு முதல் அனைத்து கே.வி பள்ளிகளிலும் மார்ச் 31 நடைமுறையில் வருது.அவங்க தனி எண்ட்டிட்டி.அவர்களுக்கான சட்டங்களை அவர்களே வகுக்கலாம்.நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மாதிரி.


    ஹூசைனம்மா- அக்கா உங்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சனைன்னு நினைகிறேன்.விடுங்க..குசும்பன் சொன்ன மாதிரி புண்ணியம் செஞ்சுருக்கீங்க :)) . அப்புறம் வாழ்த்திற்கு நன்றி.ஆனா நான் எப்பவோ சேர்த்துட்டேன் :)

    புதுகை தென்றல் - புதுக்கோட்டையில் அரசு உதவி பெறும் உங்க பள்ளியில் படிச்ச ராமன் பின்னாளில் ஐ.ஏ.எஸ். ஆனாரு. புதுக்கோட்டையில் இன்றுவரை எந்த ஒரு தனியார்ப் பள்ளியில் படித்த எவரும் ஐ.ஏ.எஸ் ஆனதில்லை.


  42. அண்ணே
    உஙகள் எல்லா இடுகைகளையும் உடனே படித்து விடுவேன். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை. உஙளுடைய எல்லா பதிவுமே அறுமை அதனால் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லனுமானுதான். நிறைய எழுதுஙகள்.


  43. நல்லாத்தான் கொடுக்குறீங்க டீடெய்லு... சீக்கிரமா காசுபணத்தை சேத்து சீக்கிரமா ஒரு இஸ்கூல் கட்டணும்ணே! சேஃப்டியான பிஸினஸா தோணுது :)


  44. //எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இந்த
    தைரியம்??? //

    தட்டி கேட்க வேண்டிய நீங்களே கேள்வி கேட்டா எப்படி ?


  45. //
    சாதாரணமாக 2 ஆம் வகுப்பு படிக்கும் அளவிற்கு வயதும்,மூளை வளர்ச்சியும் உடைய மாணவனுக்கு ஒன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தினால் அவனால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். நீண்ட நாள் திட்டத்தில் பொதுத்தேர்வில் அவனால் பள்ளி செண்டம் ரிசல்ட் வாங்கும்
    //
    Correcta pointa pudichiteenga.



  46. அப்து அண்ணா , பேசாம ஒரு இஸ்கூலு ஆரம்பிச்சுருவோம். இல்லீன்னா எலிமெண்டரி ஸ்கூல் ல புள்ளைங்கள சேர்த்து விட்ருவோம். மறுபடி ஒரு பெரிய சுழற்சி வரட்டுமே.


  47. //பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.வருகின்ற மாணவர்களை எதிர்கால சமூகமாக நினைக்கும் மனநிலைமாறி நிகழ்கால காசாகவே பார்க்கும் நிலை இருப்பது உண்மை.//

    பொட்டிலறைந்தாற் போன்ற வரிகள், விழுக வேண்டிய காதுகளில் விழுந்தால் சரி. இப்பொழுதுதேன் ஸாதிகாக்கா பிளாகிலும் இதையே படிச்சிட்டு வ‌ர்றேன். என்ன சொல்வது...


  48. சிங்கம் இன்னுமா கிளம்பலே., உடான்ஸ் சிறப்பு பதிவர் ஆனப்பின்னுமா ., ம் கிளப்புங்க உங்கள் எழுதுகோலை, அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']