தம்பியின் டைரிக் குறிப்புகள் (03/12/10)


கிட்டத்தட்ட 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளதாக இரு அரசுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு நகருக்கும் பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும் கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.ஆங்கிலேயர் காலத்தில் தலைமன்னாருக்கு சென்னையில் இருந்தே டிக்கெட் எடுக்கலாம்.அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி(ராமேஸ்வரம்) வரை ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து கப்பலில் தலைமன்னாருக்கு செல்வது. இதில் கப்பலில் பயணிக்கும் கட்டணமும் ரயில்டிக்கெட்டிலேயே அடங்கிவிடும்.இன்றும் புதுக்கோட்டையில் சில பெருசுகள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ”போட் மெயில்” என்று அழைப்பதைப் பார்க்கலாம். கப்பல் போக்குவரத்துபோல கச்சத்தீவின் மீதான உரிமையையும் மத்திய அரசு மீட்டுத்தந்தால் கோடி புண்ணியம்.இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் நடுவில் இருவருக்கும் பொதுவாக இருந்த கச்சத்தீவு இன்று இலங்கைக்கு உரிமையாகிவிட்டது.இன்று எந்த இந்தியரும் விசா இல்லாமல் பிரவேசிக்க முடியாது.என்னுடைய தாய்மாமாவும் அவரது குடும்பத்தினரும் இலங்கையில் வசித்து வந்தனர். தன் தங்கையை பார்க்க விரும்பிய மாமா ஒரு தேதியைக் குறிப்பிட்டு “நீ அன்று கச்சத்தீவு வந்துவிடு.நாங்களும் அங்கே வந்து விடுகின்றோம்” என்று ஒரு கடிதம் போட்டு இருந்தார்.6 வயது சிறுவனான என்னையையும்,பாட்டியையையும் அழைத்துக்கொண்டு அம்மா கச்சத்தீவு சென்றார்.ஏதோ திருவிழா அப்போது அங்கு நடந்து கொண்டிருந்ததுபோல மங்கலாக நினைவில் உள்ளது.மாமா குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு அன்றே திரும்பினோம். ஒரு கடிதம்...ஒத்தக் கடிதம்... அது கிடைத்திருக்கும்,தங்கை வருவாள் என்று நம்பி மாமா வந்து காத்திருந்தார். அதே கடிதத்தை நம்பி இடையில் வேறுகாரணங்களினால் அண்ணன் பயணத்தை ரத்து செய்ய மாட்டார் என்ற உறுதியுடன் என் அம்மாவும் சென்றார். நேற்று மாலை 7 மணிக்கு நானும் கேபிள் சங்கரும் நேரில் சந்திப்பதாக செல்ஃபோனில் பேசிக்கொண்டோம். அநேகமாக நாளை மாலைக்குள் சந்தித்துவிடுவோம்.



---------------------------------------------------------------------



அமெரிக்க ஃபுளோரிடாவில் உள்ள எதோ ஒரு பல்கலைக்கழகம் தே.மு.தி.க இயக்கத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்குகின்றது.முதலில் அவருக்கு எனது வாழ்த்துகள்.பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று. எனக்குத் தெரிந்து அதை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு.துணை-முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.திருச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது ஒரு நிர்வாகி வரவேற்பு விளம்பரத்தில் டாக்டர்.ஸ்டாலின் என்று அடித்து இருந்தார்.அவரை அழைத்து அவ்வாறு அடிப்பது தவறு என்று அறிவுரை வழங்கியதை நேரில் கண்டிருக்கிறேன்.திரு.விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்??பார்ப்போம்.



---------------------------------------------------------------------



நந்தலாலா படத்தைப் பற்றி பல விமர்சனங்கள்.ஏதோ ஒரு ஜப்பான் படத்தின் காப்பி என்று அண்ணன் பைத்தியக்காரன்கூட கூகுள்பஸ்சில் எழுதி இருந்தார்.எனக்கு உலகப்படம் தெரியாது.ஏன் உள்ளூர் இந்தி படம்கூட நான் பார்ப்பதில்லை.நான் பார்த்த தமிழ் படங்களில் இது ஒரு சிறந்த படம்.அவ்வளவுதான் என் விமர்சனம்.



---------------------------------------------------------------------



உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் 5 இடங்களில் வன்னியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று பா.ம.கவின் தலைவர். மருத்துவர்.திரு.இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாடு மக்கள் தொகையில் 50 சதவிகிதம் வன்னியர்கள் இருப்பதால் இந்தக் கோரிக்கை. ஏங்கய்யா தமிழ்நாட்டைப் பாக்குறீங்க? உங்க வீட்டுக்குள்ள பாருங்க 100% வன்னியர்தான். அப்புறம் ஏன் அல்பத்தனமா 5 பணியிடத்துக்கு மட்டும் கேக்குறீங்க?? 9 பணியிடத்துக்கும் சேர்த்து கேளுங்க. யாருகிட்ட கேக்குறீங்க?? அண்ணங்கிட்டதான கேக்குறீங்க?? சும்ம்ம்மா கூச்சப்படாம கேளுங்க.



---------------------------------------------------------------------



தினத்தந்தி வெளியிட்டுள்ள ”வரலாற்றுச் சுவடுகள்” புத்தகம் தொடராக வந்த காலத்திலேயே விடாமல் படித்தேன்.இப்போழுது புத்தக வடிவிலும் சிறப்பாகவே உள்ளது.நமக்கு நினைவு தெரிந்த பின்னர் நடந்து நிகழ்வுகளினூடே பயணித்து சமகால வரலாற்றில் வந்து நிற்கும்போது சிறு பிராயத்தில் இருந்து படிப்பாடியாக நாம் வளர்ந்து இன்றைய வயதில் நிற்கும் உணர்வு அதைப் படிக்கும்போது கிடைகின்றது.worth buying



---------------------------------------------------------------------

பிடித்த கவிதை


நம்பிக்கை


கல்லில்

சிரிப்பைச் செதுக்கி

பூவைப் பிடுங்கி

அடித்தேன் கல்லில்

‘பூஜை’என்று

கும்பிட்டது

கும்பல்.



ஏதோ சிரிப்பு

எங்கிருந்து?

உள்ளிருந்தா?

வெளியிருந்தா?



செத்து செத்து

உபதேசிக்கிறது

பூவின் சிரிப்பு.



கேட்டேன்

பூவைக்

கும்பிட்டேன்.



ஊரைப் பார்த்து

‘கல்லின் சிரிப்பு

முறைப்பு’ என்றேன்.



கேட்ட கும்பல்

கல்லைப் பிடுங்கி

பூவையடித்தது.





-- பிரமிள்


டிஸ்கி : அர்த்தம் புரியலைன்னா இரண்டாம் முறை படிக்காதிங்க.அர்த்தம் புருஞ்சா நம்ம மேலேயே நமக்கு அசிங்கமா வரும்.


----------------------------------------------------------------------

அறிஞரின் தத்துவம்



கண்ணா நீ டி.எம்.கேவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, ஏடிஎம்கேவுக்கு ஓட்டுபோட்டாலும் சரி, ஓட்டிங் மிஷன்லதான் போடணும்.
55 Responses
  1. அண்ணே : ஒவ்வொரு குறிப்பும் அழுத்தமா (டைரியோட மறுபக்கத்துல தெரியரமாதிரி) ..........
    மதிப்புறு முனைவர் பட்டம் பத்தின விசயம் எனக்கு புதுசு .............


  2. அண்ணே வாரா வாரம் ஒண்ணாவது எழுதுங்க. முதல் சமாசாரத்தில் கடைசியில் கேபிள் எதுக்கு வந்தார்? புரியலை. எனக்கு இன்னும் பயிற்சி தேவை போலிருக்கு :))


  3. ஐ......... நான்தான் இன்னக்கி டைரிய மொத ஆளா புரட்டிஇருக்கேன்........

    அண்ணே : எனக்கு ஒரு சந்தேகம்.......... அடுத்தவங்க டைரிய படிக்கறது தப்புன்னு யாரும் படிக்காமலே இருந்துட்டா என்ன பண்ணுறது???

    அந்த இங்கிதம் தெரிஞ்சா மொத ஆல கடக்குள்ள வந்துறிப்பியான்னு எதிர் கேள்வி கேக்கப்படாது.


  4. மின்னுது மின்னல் Says:

    இன்னைக்கு குசும்பன் லீவு நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன் :))


  5. /இன்றும் புதுக்கோட்டையில் சில பெருசுகள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ”போட் மெயில்” என்று /

    grrrrrrr.நான் சிறுசா வேலைக்குப் போனப்போவே போட்மெயில்னுதான் சொல்லுவோம். அப்ப நான் பெருசா?

    /மாலை 7 மணிக்கு நானும் கேபிள் சங்கரும் நேரில் சந்திப்பதாக செல்ஃபோனில் பேசிக்கொண்டோம். அநேகமாக நாளை மாலைக்குள் சந்தித்துவிடுவோம்./

    சாப்பாட்டுக்கடை இல்லாத இடமா சொல்லிகிட்டீங்களோ:))

    /திரு.விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்??பார்ப்போம்.
    /
    இது அதுக்கில்ல. செல்ஃபோன் வெளிச்சத்துல ஆபரேஷன் பண்ணதுக்குன்னு சொல்லிட்டா:))

    /ஏன் உள்ளூர் இந்தி படம்கூட நான் பார்ப்பதில்லை.நான் பார்த்த தமிழ் படங்களில் இது ஒரு சிறந்த படம்.அவ்வளவுதான் என் விமர்சனம்./

    அதே அதே. ஹி ஹி. நான் பார்த்தப்புறம் இப்படி சொல்லிக்கிறேன்.

    /9 பணியிடத்துக்கும் சேர்த்து கேளுங்க. யாருகிட்ட கேக்குறீங்க?? அண்ணங்கிட்டதான கேக்குறீங்க?? சும்ம்ம்மா கூச்சப்படாம கேளுங்க./

    கள்ளமில்லாச் சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு லொள்ளா. 9 அம்மாக்கு ராசி நம்பருன்னுதானே கேக்குறாருன்னு இல்லைன்னு சொல்லட்டும்னுதானே அகுடியா?

    /அர்த்தம் புருஞ்சா நம்ம மேலேயே நமக்கு அசிங்கமா வரும்./

    வந்திருச்சி.

    *மாபெரும் அறிஞரின் தத்துவம்*
    /கண்ணா நீ டி.எம்.கேவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, ஏடிஎம்கேவுக்கு ஓட்டுபோட்டாலும் சரி, ஓட்டிங் மிஷன்லதான் போடணும்./

    கண்ணா நீ டி.எம்.கேவுக்கு ஓட்டு கேட்டாலும் சரி, ஏடிஎம்கேவுக்கு ஓட்டு கேட்டாலும் சரி, துட்ட பாக்கட்லதான் போடணும்னு சொல்லீட்டா:)))


  6. //உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் 5 இடங்களில் வன்னியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று பா.ம.கவின் தலைவர். மருத்துவர்.திரு.இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாடு மக்கள் தொகையில் 50 சதவிகிதம் வன்னியர்கள் இருப்பதால் இந்தக் கோரிக்கை. ஏங்கய்யா தமிழ்நாட்டைப் பாக்குறீங்க? உங்க வீட்டுக்குள்ள பாருங்க 100% வன்னியர்தான். அப்புறம் ஏன் அல்பத்தனமா 5 பணியிடத்துக்கு மட்டும் கேக்குறீங்க?? 9 பணியிடத்துக்கும் சேர்த்து கேளுங்க. யாருகிட்ட கேக்குறீங்க?? அண்ணங்கிட்டதான கேக்குறீங்க?? சும்ம்ம்மா கூச்சப்படாம கேளுங்க//

    இதுல உள்குத்து எதுவும் இல்லையே?


  7. @ வழிப்போக்கன்

    அண்ணே நலமா? அமெரிக்கா நலமா?? வெள்ளையம்மா நலமா?? :))


  8. நல்லா இருக்கு குறிப்புகள். தொடர்ந்து எழுது அப்துல். முந்தைய இடுகைக்கும், என் எல்லா நண்பர்களுக்கும் ... அன்பு.

    வன்னியர் சமுதாயம் தமிழகத்தில் 50% என்ற தகவல் எனக்குப் புதிது. 20-25% இருக்கும் என்று நினைத்தேன்.

    மோகன் குமார் - தொலை தொடர்பு முன்னேறினாலும் சொல்லி வைத்த தருணத்தில் சந்திக்க முடியாத தற்போதைய சூழலைச் சொல்கிறார். கேபிளை எல்லாம் இலேசில் சந்தித்துவிட முடியுமா :)

    அனுஜன்யா


  9. @ மோகன்குமார்

    // முதல் சமாசாரத்தில் கடைசியில் கேபிள் எதுக்கு வந்தார்? புரியலை //

    அது ஒன்னும் இல்லண்ணே.. அந்தக் காலத்தில் வெறும் கடிதத்தை மட்டும் நம்பி (கிடைச்சிடுச்சா இல்லையா ஒன்னும் தெரியாது ) நேரில் சந்தித்துக்கொண்டனர். ஆனா இப்போ செல்ஃபோன்,மெயில் அது இதுன்னு எத்தனையோ தொலைத்தொடர்பு முன்னேற்றம் வந்திடுச்சு. இருப்பினும் குறித்த காலத்தில் பேசியபடி யாரும் சரியான நேரத்தில் சந்திக்க முடியலை :((


  10. டைரி நல்லாயிருக்கு தம்பி..


  11. மின்னுது மின்னல் Says:

    // முதல் சமாசாரத்தில் கடைசியில் கேபிள் எதுக்கு வந்தார்? புரியலை //

    பிரபல பதிவர்களே இப்படிதான் பாஸ்

    அதிலும் போன பதிவுக்கு இப்ப வந்து அன்புனு சொல்லிட்டு போறாரே அவரோட நண்பர் வேற எப்படி இருப்பாரு


  12. Chitra Says:

    அமெரிக்க ஃபுளோரிடாவில் உள்ள எதோ ஒரு பல்கலைக்கழகம் தே.மு.தி.க இயக்கத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்குகின்றது.

    ..... I am really interested to know the name of the university. mmmm.... really a "shocking" news!


  13. Jaathi vari kanakeduppu innamum start pannalathane ? Ramadas 50% sariya? Kanakku sarinu thonala . Vanniyar nu oru caste college poithan enakku therium . South side ivanga rompa kammiyathan irukkanum .


  14. ADMK , DMK Entha k kum ennala vote poda mudiyathu . Ennai indian citizen a yarum mathikala . Voter id tharave illa . Apply panni veruthu pochu.


  15. // எம்.எம்.அப்துல்லா //

    அண்ணே நலமா?
    //
    ஓ......... எங்க அண்ண நல்லா இருக்காரு :)......

    // அமெரிக்கா நலமா?? //
    அமெரிக்காவுக்கு என்ன கொறச்சல்.........

    //வெள்ளையம்மா நலமா?? :)) //
    டேஞ்ச்சரஸ் பெல்ல்லோ..... உங்கள ஏர்புல்லாத்தான் ஏன்டில் பண்ணனும் (வடிவேலு மாதிரி படிச்சிக்குங்க...)


  16. அண்ணே பாமக மேட்டர் சூப்பரு :) அப்புறம் அண்ணனோட டைரிக்குறிப்புகள் அப்படின்னு தானே இருக்கு... நிறைய அரசியல் விஷயங்கள் தெரியுது.. தொடர்ந்து எழுதுங்க..


  17. இந்தப் பதிவைப் பற்றியும் பற்றாமலும்

    அப்துல்லாவிற்கு, பகிர்வுக்கு நன்றி

    அனுஜன்யாவிற்கு

    நீங்கள் latest ஆக (கடைசி என்று சொல்லத் தோன்றவில்லை) எழுதி இருக்கும் மீள் பதிவு நன்றாகவே இருந்தது.

    கடந்த வாரம் ஒரே நாளில் மூன்று பதிவர்கள் உங்களை எழுதச் சொல்லி அழைத்திருந்தனர். They have a much longer shared history with you. எனக்கு அவ்வாறு அழைக்க எந்த உரிமையும் இல்லை என்று எனக்குப் புரிகிறது.

    என்னால் இப்போதைக்கு முடிந்த விஷயம் உங்கள் followers லிஸ்டில் சேர்வதுதான்.

    இன்னொரு விஷயமும் குறிப்பிடத் தோன்றுகிறது. எங்கள் அலுவலகத்தின் மிக அழகான, மிகவும் சூட்டிகையான ஒரு பெண் வேலையை விட்டபோது நான் சொன்னது: 'நாளை முதல் அலுவலகத்தின் சராசரி உற்பத்தித் திறன், அழகு அதல பாதாளத்திற்குப் போய்விடும்'


  18. ரொம்ப நாளா எனக்கொரு கிஃப்ட் குடுக்கனும்னு சொல்லிட்டே இருப்பியே மாமா.. வரலாறு சுவடுகள் வாங்கி அனுப்பிடு. :)


  19. Riyas Says:

    //இந்தி படம்கூட நான் பார்ப்பதில்லை.நான் பார்த்த தமிழ் படங்களில் இது ஒரு சிறந்த படம்.அவ்வளவுதான் என் விமர்சனம்.//

    கரெக்ட்.


  20. //கிட்டத்தட்ட 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் //

    நான் பிறப்பதர்க்கு முன்.

    இப்போதைய தலைவர்களில் ஸ்டாலின் மட்டும் தான் பந்தா இல்லாத ஆள்.

    இந்தி டப்பிங்கோ தெலுங்கு டப்பிங்கோ ஜப்பானிய டப்பிங்கோ தமிழில் வந்த நந்தலாலா இசையுடன் மனதை கொள்ளைகொண்டது.

    அரசியல்ல அவரு ஒரு காமடி பீஸ்ஸுன்னு எல்லாருக்கும் தெரியும்.

    யாராவது ஊரில் இருந்து வந்தால் கொண்டுவர சொல்லனும்.

    கவிதை.

    திமுகாவுக்கு போட்டாலும் ஆதிமுகாவுக்கு போட்டாலும் நம்ம நிலமை???தான்.


  21. // மங்கலாக நினைவில் உள்ளது.//

    1964 புயலில் மின்கம்பங்கள் எல்லாம் சாய்ந்து விட்டன. அதற்கு பிறகு சரியான மின்வசதி இல்லாததால், மங்கலாகத்தான் இருக்கும்.


  22. அண்ணே நலமா?
    :)


  23. நல்லா இருக்கீங்களா? ஊர்லதானா? போன் போட்டா சுவிச்சுடு ஆஃப்னு வருது!!!


  24. அடடா என் சந்தேகத்துக்கு விளக்கம் அனுஜன்யாவே சொல்லிட்டாரே. ஐ யாம் வெரி ஹாப்பி:))

    அப்துல்லா அண்ணே உங்களுக்கும் நன்றி


  25. எத்தனை தரம் தான் போன் பண்றது, அது எப்படி நான் எப்ப போன் போட்டாலும் சுவிட்ச் ஆஃப்னெ வருது.

    கடுப்படிக்கறாங்க மை லார்ட்.


  26. @ அண்ணன் வானம்பாடிகள்

    // grrrrrrr.நான் சிறுசா வேலைக்குப் போனப்போவே போட்மெயில்னுதான் சொல்லுவோம். அப்ப நான் பெருசா?

    //

    நீங்க சிறிய பெருசுண்ணே :))


  27. @ அண்ணன்கள்

    முகிலன் - உள்குத்து என்ன? டைரக்ட் அட்டாக்தான் :))

    அனுஜன்யா - :)

    மின்னுதுமின்னல்
    சந்தோஷ்

    கோபிண்னா - உங்க உதாரனமும் அழகு :)

    சஞ்செய்காந்தி
    ரியாஸ்

    ராஜவம்சம் - // யாராவது ஊரில் இருந்து வந்தால் கொண்டுவர சொல்லனும் //

    அட்ரஸ் சொல்லுங்க.நானே அனுப்பி வைக்கிறேன்.


    கும்மி - அண்ணே நீங்க சொல்றது தனுஷ்கோடி. கச்சத்தீவில் என்றுமே மின்சாரம் கிடையாது :)

    நேசமித்ரன் - நல்லாருக்கேன்ணா.நீங்க நலமா??

    தராசு - ஹி..ஹி.. இருங்க கூப்பிடுறேன்.


  28. @ சகோதரிகள்

    அமுதா கிருஷ்ணன்

    சித்ரா - அது பல்கலைக்கழகம்கூட அல்ல. International Institute of Church Management (IICM) என்ற ஒரு அமைப்பு.

    மதார்

    புதுகைதென்றல் - டூர்ல இருந்தேன்க்கா.மாலை அழைக்கிறேன்.


  29. தம்பி..

    நான் உனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் தர்றேன்.. தயங்காம வாங்கிக்க..

    எதுக்குன்னுல்லாம் கேக்கப்படாது..! ஆனா மறக்காம உன் பேருக்கு முன்னால போட்டுக்க..!

    முனைவர் அப்துல்லா..!


  30. RAMYA Says:

    குறிப்புக்கள் அனைத்தும் அருமை.. தலை மன்னார் சென்று வந்த நிறைவு மனதிற்கு கிடைத்தது.

    ம்ம்ம்... நலமா சகோதரா???


  31. இப்போ லெட்டர் போட்டா, அது வந்துடுச்சான்னு போன் பண்ணிக்கேட்டுட்டு, அதுதவிர அதோட ஒரு காப்பியை மெயில் அனுப்பி , அதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துவச்சிருந்து பார்ட்டிக்கிட்ட காட்டினாலும்..கூலா..கிடைக்கலையேன்னுதான் சொல்லும் உலகம்!! :)


    துணைமுதல்வர் ஒரு வித்யாசமான குணாதசியம் கொண்டவர்தான்! உண்மை!

    பிரமிள்...பிரமிப்பு!


    பின்னுங்க!! :)


  32. //திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்//

    அண்ணே வணக்கம்!


  33. //வாராந்திரி//

    என்னாதிது??


  34. sriram Says:

    //அது ஒன்னும் இல்லண்ணே.. அந்தக் காலத்தில் வெறும் கடிதத்தை மட்டும் நம்பி (கிடைச்சிடுச்சா இல்லையா ஒன்னும் தெரியாது ) நேரில் சந்தித்துக்கொண்டனர். ஆனா இப்போ செல்ஃபோன்,மெயில் அது இதுன்னு எத்தனையோ தொலைத்தொடர்பு முன்னேற்றம் வந்திடுச்சு. இருப்பினும் குறித்த காலத்தில் பேசியபடி யாரும் சரியான நேரத்தில் சந்திக்க முடியலை :((//

    என்ன பண்றது அப்துல்லா அண்ணே..
    பிரபல பதிவர்களைச் சந்திப்பது அவ்வளவு சுலபமில்லை.
    ஒரு மிகப்பிரபல பதிவர் அமெரிக்கா வரும் முன்னரும் இங்கு இருக்கும் போதும் பல முறை போனிலும் இமெயிலிலும் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு கடேசில வராமலே இந்தியாவுக்குத் திரும்பி போயிட்டார்.
    அடுத்த முறை கண்டிப்பா பாக்கலாமுன்னு கருணாநிதி சொல்றா மாதிரி டயலாக் வேற..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்


  35. //டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று// என்ன இப்படி சொல்லிட்டீங்க, அவங்க டாக்டர் பட்டத்த வெச்சு மருத்துவமணை ஆரம்பிக்காம இருக்குற வரைக்கும் சரிதான்.


  36. interesting abdulla...


  37. ////வாராந்திரி//

    என்னாதிது??// உஷ்ஷ்... உங்கள யாராவது இச்சார்லசுடன் அப்படின்னா என்னன்னு கேட்டமா?


  38. சும்மா அடிச்சு விடக்கூடாது. டாக்டர் பட்டத்தை பயன்படுத்துவது விதியில் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை. அபப்டியே இருக்கிறது என்றால் இது கூடவா துணை முதல்வர், முதல்வருக்கு எடுத்து சொல்லக்கூடாது? அவர் டாக்டர்.கலைஞராகத்தானே இருக்கிறார். கீழே இருப்பது விக்கிபீடியாவில் இருந்து எடுத்தாளப்பட்டது.

    இப்படிக்கு,
    டாக்டர். விஜயின் விசிறி

    :)))))

    Recipients of an honorary doctorate may if they wish adopt the title of "doctor". In many countries, including the United Kingdom, Australia, New Zealand, and the United States, it is now a matter of personal preference should an honorary doctor use the formal title of "doctor", regardless of the background circumstances for the award.


  39. //
    வன்னியர் சமுதாயம் தமிழகத்தில் 50% என்ற தகவல் எனக்குப் புதிது. //

    அண்ணே

    நீங்க நல்லவர் என்று தெரியும்
    ஆனால் இந்த அளவு அப்பாவி என்று தெரிந்து கொண்டேன் !!


  40. Dr R K Rudhran - Buzz - Public
    வரலாற்றுச் சுவடுகள்- மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள நூல். பாதுகாக்கவும் பரிசளிக்கவும் தகுந்த படைப்பு.
    ஆனால் நக்ஸல்பரி, கீழ்வெண்மணி, கோத்ரா-குஜராத் பற்றி இதில் இல்லாதது ஒரு குறை. அவையும் அறியப்படவேண்டிய சரித்திரம்.


  41. \\வன்னியர் சமுதாயம் தமிழகத்தில் 50% என்ற தகவல் எனக்குப் புதிது.\\

    அண்ணே இதல்லாம் நல்லதுக்கு இல்லே. உங்க இந்த பதிவை பிரிண்ட் எடுத்துகிட்டு மருத்துவர் அய்யா 117 சீட்டு கேட்க போராரு பாருங்க கூட்டணி சேரப்போகும் கட்சிகள்கிட்டே. உங்க இந்த பதிவால பல தலைவர்களுக்கு தர்மசங்கடம் வந்துடுச்சே!!!!

    நீங்க கிண்டலுக்கு சொல்லியிருக்கீங்கன்னு மருத்துவர் அய்யாவுக்கு புரியவா போகுது!


  42. பிரமிள் பிரமாதம் ...


  43. Cable Sankar Says:

    அந்த மொபைல் போன் கம்பேரிசன் அருமை.. வெல்கம் பேக் தம்பி....!!!


  44. @ உண்மைத் தமிழன் -

    மிக்க நன்றிண்ணே.

    இப்படிக்கு

    டாக்டர்.அப்துல்லா

    :))


  45. @ அண்ணன்கள்

    சுரேகா - :)

    பழமைபேசி - “வாராந்திரி” - அது வாராவாரம் டைரிக் குறிப்பு எழுதுன காலத்துல வச்ச லேபிள் :).
    சரிவிடுங்க இனி வாரா வாரம் எழுதிருவோம் :))

    ஸ்ரீராம் - அண்ணே, ரெண்டு அடியாவது அடிச்சிடுங்கன்ணே :))


    இனியா - அண்ணே, எப்படி இருக்கீங்க.பையன் எப்படி இருக்கான். முடிஞ்சா அடுத்த ஃபெட்னாவிலும் பார்ப்போம் :)



    அமரபாரதி - நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்கள் வருகை. நன்றிண்ணா.

    கார்க்கி - டேய் விக்கிபீடியாங்குற நம்ம குடுக்குற தகவலைச் சொல்லுறதுதானே?? அதுல டாக்குடரைப் பத்தி இருக்கும் தகவல் ஒன்னைய மாதிரி ஒரு வெளங்காதவன் குடுத்த தகவலா இருக்கும் :))

    ஒழுங்கா கூகுளில் தேடு.கிடைக்கும்.



    நல்ல மருத்துவர்.புருனோ அய்யா

    அபிஅப்பா - ஹி..ஹி..

    கே.ஆர்.பி.செந்தில் - அண்ணே, நீங்க என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சு :(

    கேபிள் சங்கர்

    ரம்யா அக்கா

    அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.


  46. sriram Says:

    //அண்ணே, ரெண்டு அடியாவது அடிச்சிடுங்கன்ணே :))//

    அப்துல்லா அண்ணே.. எனக்கு உங்க மேல இருப்பது வருத்தமேயன்றி கோபமல்ல.. தெளிவா சொல்லிடறேன்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்


  47. இதுகெல்லாம் வகக்ணையா பதில் சொல்லுங்க. தலைவருக்கு குட்டித்தல அட்வைசலாமேன்னு சொன்னத மட்டும் லூசில விட்டுடுங்க


  48. டாக்குடர்ரு மேட்ரு ஜூப்பரு! போட்மெயில் பத்தியெல்லாம் பேசுறீங்க! கொஞ்சங்கொஞ்சமா பெர்சுங்க லிஸ்ட்டுல சேந்துட்டு வர்றீங்களோ? ராமதாஸ்க்கு ஐடியா கொடுக்குற உங்களை மொதல்ல கட்டம் கட்டணும்


  49. நானும் ஒரு போட்சவாரி பத்தி பேசலாம்னு பாத்தாக்கா சுச்சாப்பு! ஹ்ம்ம்ம்...


  50. //விக்கிபீடியாங்குற நம்ம குடுக்குற தகவலைச் சொல்லுறதுதானே?? //

    அப்போ விக்கீபீடியா நம்பகமானது இல்லையா?? சீரியஸாத்தான் கேக்குறேன்... ஏன்னா நிறைய மேட்டர் அதுலேர்ந்து எடுத்துத்தான் மேனேஜ் செய்யுறேன்


  51. //பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று//

    பின்ன எதுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் கொடுக்கிறாங்க???


    //ஓட்டிங் மிஷன்லதான் போடணும்///

    அப்போ தில்லுமுல்லு ப‌ண்ணிதான் ஜெயிக்கிறோம்னு தில்லா சொல்றீங்க‌ளா??


  52. கடிதம்.. ம்ம்..
    மிக அருமையான விஷயம். கல்லூரி நாட்களில் என் பாலு அண்ணன் எனக்கெழுதும் பாசப் பரிமாறலை ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்துத் தான் எத்தனை ஆர்வம்!. கடித நினைவுகளின் அலைகள் மட்டுமே தரும் மகிழ்ச்சியை இப்போதைய ஈமெயில் தந்து விடுமா என்ன !!ஹ்ம்ம்..

    கவிதை.. புரிஞ் .. இல்ல புரியலை அண்ணா ..:))


  53. அரசியல் நெடி அதிகமிருக்கே.. பிரமிள் கவிதை அபாரம்


  54. @சிவகாசி மாப்பிள்ளை.

    //அப்போ விக்கீபீடியா நம்பகமானது இல்லையா?? சீரியஸாத்தான் கேக்குறேன்... ஏன்னா நிறைய மேட்டர் அதுலேர்ந்து எடுத்துத்தான் மேனேஜ் செய்யுறேன்

    //

    நாம் குடுக்க்கும் தகவல்தான் அது. விக்கியில் எடுப்பதோடு கூகுளிலும் ஒருபார்வை பார்த்திடுங்க.


  55. durai Says:

    புரியலை அர்த்தம் புருஞ்சா நம்ம மேலேயே நமக்கு அசிங்கமா வரும்./


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']