அனுஜன்யா

பதிவுலகுடனான பரிட்சையம் துவங்கி விளையாட்டுப்போல நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது.கவுண்டர் ஒரு படத்தில் நடந்து,பின்னர் சைக்கிள்,பின்னர் காரில் வந்து என பிச்சை எடுப்பாரே! அதுபோல முதலில் பதிவுகளைப் படித்து,பின்னர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு,அப்புறம் பதிவெழுதத் துவங்கியென ஒரு மாதிரி பதிவராக செட்டிலானேன்.

2008 ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் அதிகம் எழுதியதும் அந்த ஆண்டில்தான்.ஆண்டு.பதிவர்கள் பலரும் எனக்கு நேரில் அறிமுகமானதும் அந்த ஆண்டில்தான்.எனது பிளாக்கின் ஹிட் கவுண்டர் உச்சத்தைத் தொட்டதும் அந்த ஆண்டில்தான்.அப்துல்லா என்று ஒரு பதிவர் இருக்கின்றான் என பிறருக்குத் தெரியத் துவங்கியதும் அந்த ஆண்டில்தான்.

விடாமல் எழுதிவந்த எனக்கு இடையில் ஒரு சலிப்பு.காரணமற்ற சலிப்பு.எனக்கென்று இல்லை,பதிவர்கள் பலருக்கும் இந்த சிண்ட்ரோம் நிச்சயம் வரத்தான் செய்யும். லக்கிலுக்,உண்மைத் தமிழன் போல எழுத்தாளர்களாய் இருப்பவர்களுக்கு அதாவது எழுத்தை ஒரு passion நினைக்கும் சிலருக்கு மட்டும் இது விதிவிலக்கு.சிறிது சிறிதாக எழுதுவது குறைந்து இப்போது வேலைப் பளுவும் அதிகரிக்க சுத்தமாகவே எழுதுவதில்லை என்றாகிவிட்டது. அதேபோல இன்னோரு விஷயம் பின்னூட்டம். நான் பொதுவாக பின்னூட்டங்களுக்குத் தனித் தனியாக பதில் சொல்வதில்லை,மொத்தமாகத்தான் சொல்வேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதை என்னிடம் கடுமையாக எதிர்த்த ஒரு புது பதிவர் “நம்மைத் தேடி பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பதி சொல்வதுதான் முறை,மரியாதை என்று கடுமையாக கோபித்துக்கொண்டார். அவர் இப்போதெல்லாம் இடுகை இடுவதோடு சரி.பின்னூட்டங்களுக்கு பதிலே சொல்வதில்லை. எதுவுமே ஆரம்பத்தில் அதிகம் ஈர்க்கும்,எனவே அதற்கு அதிகம் நேரமும் ஒதுக்குவோம்.பின்னர் ஈடுபாடு குறையும்போது நாம் அதற்கு ஒதுக்கும் நேரம் குறையும்.எல்லாமே குறைந்துவிடும்.இது பொதுவான விஷயம்.

ஆனால் ஈடுபாடு குறையாமல் ஒருவன் பதிவுலகில் இருந்து விலகியே இருப்பது என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.அப்படி ஒருவர் இருக்கின்றார்... அண்ணன் அனுஜன்யா. பதிவுலகில் கிட்டத்தட்ட  அனைவரும் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.என்னை டேய் எப்படி இருக்க? என்று உரிமையோடு அழைக்கும் ஓரிருவரில் அண்ணன் அனுஜன்யாவும் ஒருவர்.இத்தனைக்கும் நான் அவரை நேரில் சந்தித்தது ஒருமுறை..ஒரே ஒரு முறை.பேசியது சிலமுறை..வெகு சிலமுறை.அவரை முதல் முறைச் சந்திக்க முடிவானபோது பணி நிமித்தம் சேலத்தில் இருந்தேன்.கிளம்ப சற்று தாமதமாகிவிட்டது. இருப்பினும் இடையில் ஓய்வெடுக்காது தொடர்ந்து வண்டி ஓட்டி 6 மணி நேரத்தில் சென்னைக்கு வந்த என்னை கடுமையாக் கடிந்து கொண்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. அவர் கவிதை எழுதி பதிவில் போட்டால் போட்டிக்கு நானும் ஒரு கவிதை எழுதி எனது பதிவில் போடுவேன். நான் எழுதிய பெரும்பாலான கவிதைகள் அவருக்குப் போட்டியாக எழுத முயற்சித்ததில் வந்ததுதான். ஒருமுறை ஒரு கவிதை எழுதி என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் “அனுஜன்யா என்றே தலைப்பு வைத்தேன்.நான் இப்போது அதிகம் எழுதாமல் போனதற்கு அவர் இல்லாததும் ஒரு காரணம்.

அண்ணே, நீங்க எழுதாம இருக்குறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.ஆனால் ஈடுபாடு குறைவோ அல்லது சிந்தனை வறட்சியோ நிச்சயம் காரணமாக இருக்க முடியாது.இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.வாங்க ரெண்டு பேரும் முந்திமாதிரி ஆட்டத்தை ஆரமிப்போம்.
82 Responses
  1. Karthik Says:

    Welcome back, both of you! :-)


  2. அப்பாடா..


  3. //2008 ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் அதிகம் எழுதியதும் அந்த ஆண்டில்தான்.//

    எங்களுக்கும்... மும்பை தாக்குதலாவது ஒருநாளோட முடிஞ்சுட்டு ஆனா 2008 ஆம் ஆண்டு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  4. //எனது பிளாக்கின் ஹிட் கவுண்டர் உச்சத்தைத் தொட்டதும் அந்த ஆண்டில்தான்.//

    அண்ணே எந்த உச்சத்தை தொட்டுச்சு?
    எத்தனை வாசகர் கடிதம் வந்துச்சு? எத்தனை லவ் லெட்டர் வந்துச்சு? கமான் டெல் மீ தி டீடெயில்ஸ்...


  5. cigarette pidikiravan pudicha dhummai anaichittu innoruvanidan sonnanam "thammadicha udamabukku keduthalda"


  6. //2 ஆண்டுகளுக்கு முன்னர் இதை என்னிடம் கடுமையாக எதிர்த்த ஒரு புது பதிவர் “நம்மைத் தேடி பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பதி சொல்வதுதான் முறை,மரியாதை என்று கடுமையாக கோபித்துக்கொண்டார். அவர் இப்போதெல்லாம் இடுகை இடுவதோடு சரி.பின்னூட்டங்களுக்கு பதிலே சொல்வதில்லை.//

    அடிங்க நான் ஒழுங்கா பதில் சொல்லிடுவேன்...


  7. ஆமா அனுஜன்யான்னு தலைப்பு வெச்சிட்டு அப்துல்லா என்ற மாபெரும் பதிவர் வாழ்ந்தார், எழுதினார், என்று வரலாற்று தகவலா பதிவு செஞ்சிக்கிட்டு இருக்க...தல எண்ட்ரி எப்பய்யா?


  8. //எதுவுமே ஆரம்பத்தில் அதிகம் ஈர்க்கும்,எனவே அதற்கு அதிகம் நேரமும் ஒதுக்குவோம்.பின்னர் ஈடுபாடு குறையும்போது நாம் அதற்கு ஒதுக்கும் நேரம் குறையும்.//

    ரெண்டு புள்ளைங்களோட அவன் அவன் ஸ்டாப் செஞ்சிடும் ரகசியம் இன்றுதான் புரிஞ்சுது... ஆனா அந்த காலத்தில் 10,12 பெத்தானுங்களே ஆர்வம் குன்றாத பெருசுங்கன்னு ஒரு பதிவு போடு...


  9. //என்னை டேய் எப்படி இருக்க? என்று உரிமையோடு அழைக்கும் ஓரிருவரில் அண்ணன் அனுஜன்யாவும் ஒருவர்.//

    இன்னொருவர் யாருன்னு எனக்கு தெரியுமே!:)))


  10. //அவர் கவிதை எழுதி பதிவில் போட்டால் போட்டிக்கு நானும் ஒரு கவிதை எழுதி எனது பதிவில் போடுவேன். //

    ஆக நீங்க ரெண்டு பேரும் எழுதியது கவிதைன்னு சொல்றீங்க...
    ம்ம்ம்ம் எதையோ செஞ்சி வெச்சிட்டு இதுக்கு சாம்பாருன்னு வீட்டுல சொல்ற மாதிரி இருக்கு உன் கதை...


  11. ஒருத்தன் என்ன செஞ்சானாம் தென்னை மரத்த பற்றிய கட்டுரைய மட்டும் படிச்சிட்டு,அதுதான் பரிட்சையிலும் வரும் என்று நினைச்சிக்கிட்டு போனானாம்..ஆனா பரிட்ச்சையில் பசுவை பற்றிய கட்டுரை எழுத சொல்லிட்டாங்களாம்.இவனும் என்ன செஞ்சானாம் படிச்ச தென்னை மர கட்டுரையையே எழுதிட்டு...கடைசி வரியில் இத்தனை சிறப்பு உள்ள தென்னை மரத்தில் பசுவை கட்டுவார்கள் என்று எழுதி முடிச்சானாம்...அதுமாதிரி கடைசி வரியில் அனுஜன்யா வாங்க என்று முடிச்சிட்ட:)))


  12. யோவ் குசும்பா, வர்றவைய்ங்களையும் பின்னூட்டம் போட்டே துரத்துற... நல்லாருடே :)))


  13. //வாங்க ரெண்டு பேரும் முந்திமாதிரி ஆட்டத்தை ஆரமிப்போம்.
    //

    அண்ணே வினோத் காம்பி வந்து சச்சின் கிட்ட , வாங்க சச்சின் திரும்ப முன்னமாதிரி ஆடுவோம் என்று சொல்வது மாதிரி இருக்கு...


  14. அப்பா ரொம்ப நாளைக்கு அப்புறமா வரீங்க..தொடரட்டும் உங்கள் எழுத்து சேவை...


  15. //யோவ் குசும்பா, வர்றவைய்ங்களையும் பின்னூட்டம் போட்டே துரத்துற... நல்லாருடே :)))

    //

    இது ஒரு ஊக்கம் இந்த குசும்பன் மாதிரி சல்லிபய எல்லாம் நம்மை கிண்டல் செய்யுற மாதிரி எழுதுறோமேன்னு நீ நினைச்சு பீல் செஞ்சு ....புடம் போட்ட தங்கம் மாதிரி ச்சும்மா தக தகன்னு எழுதனும் ஏன்று கும்முறேன் அண்ணே...


  16. //நான் பொதுவாக பின்னூட்டங்களுக்குத் தனித் தனியாக பதில் சொல்வதில்லை,//

    நம்ம உ.த இருக்காரு பாரு அதை அப்படியே காப்பி செஞ்சு பேஸ்ட் செஞ்சு...அதுக்கு ஒரு கலர் கொடுத்து பதிவு பத்து மைல் நீளம் என்றால்...பின்னூட்டத்தை 20 மைல் நீளம் ஆகிடுவாரு...அவரை எல்லாம் பார்த்து அதுமாதிரி ஆயிடாத!


  17. //விடாமல் எழுதிவந்த எனக்கு இடையில் ஒரு சலிப்பு.//

    சலிச்ச சலிப்பில் கல்லு மண்ணு எல்லாம் மேலேயே தங்கிட்டா?:))


  18. கற்பனை வளம் உள்ள நானே அவ்வள்வா எழுதறதில்லை அனுஜன்யா என்ன பண்ணுவார் பாவம்


  19. //குசும்பன் said...

    ஒருத்தன் என்ன செஞ்சானாம் தென்னை மரத்த பற்றிய கட்டுரைய மட்டும் படிச்சிட்டு,அதுதான் பரிட்சையிலும் வரும் என்று நினைச்சிக்கிட்டு போனானாம்..ஆனா பரிட்ச்சையில் பசுவை பற்றிய கட்டுரை எழுத சொல்லிட்டாங்களாம்.இவனும் என்ன செஞ்சானாம் படிச்ச தென்னை மர கட்டுரையையே எழுதிட்டு...கடைசி வரியில் இத்தனை சிறப்பு உள்ள தென்னை மரத்தில் பசுவை கட்டுவார்கள் என்று எழுதி முடிச்சானாம்...அதுமாதிரி கடைசி வரியில் அனுஜன்யா வாங்க என்று முடிச்சிட்ட:)))//

    மக்கா.. முடியலைய்யா :))


  20. ///பதிவுலகில் இருந்து விலகியே இருப்பது என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.///

    எந்த நாட்டாமை இப்படி தீர்பு செல்லுச்சு? அவரு ஏன் பதிவுலகை விட்டு விலகியிருக்காரு? இப்ப அண்ணத்தண்ணி யாரும் புழங்குவதே இல்லையா?


  21. அண்ணே : நாயகன் டையலாக்க மாத்தி சொல்லிருக்கீங்க போல.........

    ம்........... பூவ "பூ"ன்னும் சொல்லலாம், "புய்ப்பம்"ன்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.


  22. //பிளாக்கின் ஹிட் கவுண்டர் உச்சத்தைத் தொட்டதும் அந்த ஆண்டில்தான்.//

    நானும் போய் உன் ஹிட் கவுண்டரை பார்த்தேன்...கடந்த வருட டாப் ஹிட் 18 பேரு வந்ததுன்னு இருக்கு. நீ நம்ம ஆதிக்கு பயங்கர போட்டியா இருப்ப போல...


  23. //குடுகுடுப்பை said...
    கற்பனை வளம் உள்ள நானே அவ்வள்வா எழுதறதில்லை அனுஜன்யா என்ன பண்ணுவார் பாவம்

    //

    தஞ்சாவூர் காரய்ங்களுக்கு கற்பனை வளம் என்பது ஊத்து மாதிரின்னே அதுபாட்டுக்கு ஊறிக்கிட்டே இருக்கும்...


  24. ஹஹஹ குசும்பன் பின்னூட்டம் சூப்பரு...



  25. //ஒருமுறை ஒரு கவிதை எழுதி என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் “அனுஜன்யா என்றே தலைப்பு வைத்தேன்.//

    இந்த சம்பவத்துக்கு பிறகுதான் அவர் எழுதாமல் போய்விட்டாரா?

    அண்ணே நீ செய்ததும் பெரும் தவறு...

    1) நீ எழுதியது

    2) அதுக்கு கவிதை என்று லேபிள் வெச்சது.

    3) அதுக்கு தலைப்பா அவரு பேரை வெச்சது

    வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பேரு வெச்சானாம் என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் சொல்லுவாரு...அதுமாதிரி இருக்கு நீ செஞ்சது.


  26. //அஹமது இர்ஷாத் said...
    ந‌ல்ல‌து ...

    //

    அப்து அண்ணே இவரு என்ன சொல்றாரு? நீங்க இருவரும் எழுதாம இருப்பது நல்லதுங்கிறாரா? டவுட்டா இருக்குன்னே...


  27. திட்டுவதா?

    இங்கு வந்து திட்டக்கூடிய ஆட்கள் இருக்கிறார்களா?

    4 க்கு வாழ்த்துகள்.

    குசும்பன் என்பது சரியான பெயரே,



  28. ஆமாண்ணே, வாங்க செத்து செத்து வெளாடுவோம். நாங்க எல்லாம் பார்க்காத்தையா நீங்க பார்த்துட்டீங்க? ஜுஜுபி


  29. Mahesh Says:

    என்னது... இன்னிக்கி கார்க்கியும் இதே டாபிக்ல... .பேசி வெச்சுக்கிட்டு எழுதறீங்களா?

    ஆமா அது யாரு hit கவுண்டர்? சின்ன கவுண்டருக்கு பெரியப்பாவா?பெரிய கவுண்டருக்கு சித்தப்பாவா?


  30. //குசும்பன்
    25 November 2010 10:34
    வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பேரு வெச்சானாம் என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் சொல்லுவாரு...அதுமாதிரி இருக்கு நீ செஞ்சது //



    குசும்பன் ராக்ஸ் :)


  31. குசும்பா,

    ஏன் இந்த‌ கொலைவெறி?

    அது ச‌ரி, ஏன் இப்ப‌ அப்துல்லாவுக்கும் கார்க்கிக்கும் அனுஜ‌ன்யா க‌விதை எல்லாம் திடீர்னு நினைவுக்கு வ‌ந்திருக்கு? அநேக‌மா வ‌ட‌ கொரியா ஏவுக‌ணை தாக்குத‌ல்னு ந்யூஸ் ப‌டிச்சிருப்பாங்க‌ன்னு நினைக்குறேன்...


  32. //
    கவுண்டர் ஒரு படத்தில் நடந்து,பின்னர் சைக்கிள்,பின்னர் காரில் வந்து என பிச்சை எடுப்பாரே!
    //

    அண்ணே, நீ இப்ப‌ சைக்கிளா காராண்ணே?


  33. //
    2008 ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் அதிகம் எழுதியதும் அந்த ஆண்டில்தான்.
    //

    ம்ம்ம்.. 2009ம் 2010ம் த‌ப்பிச்ச‌து.


  34. //
    நான் பொதுவாக பின்னூட்டங்களுக்குத் தனித் தனியாக பதில் சொல்வதில்லை,
    //

    அண்ணே, உன‌க்கு வ‌ர‌தே ரெண்டு பின்னூட்ட‌ம் அதுல‌ ஒண்ணை நீயே போட்டிருப்ப‌, இன்னொன்னும் அநாநியா வ‌ந்திருக்கும், அநேக‌மா அதையும் நீயேத்தான் போட்டிருப்ப‌, அதுக்கு எதுக்கு ப‌தில் எல்லாம்...


  35. கார்க்கியின் பதிவில் சொல்லியது:


    அண்ணன் அனுஜன்யா ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது ”குலத்தொழில்” (http://anujanya.blogspot.com/2009/09/blog-post_22.html)என்ற அவருடைய கவிதையை முதன் முதலில் வாசித்தேன். அன்றிலிருந்து அவருடைய எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். என்னுடைய சோம்பேறித்தனத்தால் பின்னூட்டங்கள் போடுவதில்லை.

    அண்ணன் அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!


  36. //குசும்பன் said...
    ஒருத்தன் என்ன செஞ்சானாம் தென்னை மரத்த பற்றிய கட்டுரைய மட்டும் படிச்சிட்டு,அதுதான் பரிட்சையிலும் வரும் என்று நினைச்சிக்கிட்டு போனானாம்..ஆனா பரிட்ச்சையில் பசுவை பற்றிய கட்டுரை எழுத சொல்லிட்டாங்களாம்.இவனும் என்ன செஞ்சானாம் படிச்ச தென்னை மர கட்டுரையையே எழுதிட்டு...கடைசி வரியில் இத்தனை சிறப்பு உள்ள தென்னை மரத்தில் பசுவை கட்டுவார்கள் என்று எழுதி முடிச்சானாம்...அதுமாதிரி கடைசி வரியில் அனுஜன்யா வாங்க என்று முடிச்சிட்ட:)))
    //

    Kusumban Rocks!!!


  37. எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.வாங்க ரெண்டு பேரும் முந்திமாதிரி ஆட்டத்தை ஆரமிப்போம்.

    வாங்க அனுஜன்யா, ஆட்டத்த ஆரம்பிங்க..

    இவியிங்க எப்போமே இப்படிதான் பாஸ்


  38. //எனக்கு இடையில் ஒரு சலி//
    உங்களுக்கு இடுப்புல என்ன கண்டம்?


  39. எழுதுறதே ஆடிக்கொருக்கா அமாவசைக்கொருக்கா. இதுல mmabdulla.comனு பெர்சனல் டொமைன் வேற


  40. அண்ணே,

    தொடர்ந்து எழுதுங்கண்ணே...!


  41. குசும்பன் கலக்கோ கலக்கிங்ஸ் :))))
    அப்துல்லா,ஆசிப்,பால பாரதி,லக்கி,குசும்பன்,ஜோசப் இன்னும் மற்ற
    அனானி முன்னேற்றக்கழக அன்பர்களின் கும்மிகள், அடடா அது ஒரு
    வசந்த காலம் :)


  42. ஒரு மனுசன் அப்படி என்னதான்யா சொல்லிட்டாரு........... எழுதுறேன்ணு சொன்னது தப்பா.........

    அண்ணே : நீங்க ஒன்னியும் கவல படாதீங்க.... எல்லாருக்கும் உங்க மேல பொறாம :))


  43. மின்னுது மின்னல் Says:

    குசும்பா ::))


  44. naanjil Says:

    உங்களை நான் 2010 தமிழர்த் திருவிழாவில் (பெட்னா) சந்தித்ததுக் குறித்துப் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். மீண்டும் நிறைய எழுதுங்கள்.

    உளங்கனிந்த 'நன்றி நவிலல் நன்னாள்' வாழ்த்துக்கள்.

    அன்புடன் அண்ணன்
    நாஞ்சில் பீற்றர், சில்வர் ப்ரிங், மெரிலான்ட்.
    www.worldthamil.org
    www.fetna.org


  45. இதுக்கெல்லாம் பயப்பட்டா வேலைக்கு ஆகாது..

    வாங்க வந்து கடமைய ஆத்துங்க அப்துல்லா:))


  46. இத நீங்க சொல்றீங்க??? ஒரு பழமொழி ஞாபகம் வருது.. வேணாம், சொன்னா திட்டுற மாதிரி ஆகிடும்.

    //இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.//

    அரசியல்வாதின்னு நிரூபிக்கிறீங்க. இது எத்தனையாவது முறையா கொடுக்கிற அதே வாக்குறுதி?

    :-))))))


  47. //கவுண்டர் ஒரு படத்தில் நடந்து,பின்னர் சைக்கிள்,பின்னர் காரில் வந்து என பிச்சை எடுப்பாரே!//

    ஐ லைக் இட் :D.


    ஊர்ப்பக்கம் போனீங்களா... ஆலங்குடி வெங்கடாசலம் மேட்டர் பத்தி எழுதுங்க...


  48. Anonymous Says:

    // அரபுத்தமிழன் said...
    குசும்பன் கலக்கோ கலக்கிங்ஸ் :))))
    அப்துல்லா,ஆசிப்,பால பாரதி,லக்கி,குசும்பன்,ஜோசப் இன்னும் மற்ற
    அனானி முன்னேற்றக்கழக அன்பர்களின் கும்மிகள், அடடா அது ஒரு
    வசந்த காலம் :)

    //

    அதிலும் அண்ணன் அப்துல்லாவும்,குசும்பனும் ரவுண்டு கட்டி அடிப்பாங்க. சீக்கிரம் கும்மியும் ஸ்டார்ட் செய்ங்க அண்ணே.

    கணேஷ்,
    ஹாம்ஸ்பயர்.


  49. Ŝ₤Ω..™ Says:

    அண்ணே.. நீ தொடர்ந்து பதிவு போட்டு எல்லாருக்கும் கிலி கிளப்ப பார்த்த.. உனக்கு கிலி குடுக்க குசும்பனைத்தவிர வேறு ஆளே இல்லை..
    :-)

    ஆனா நீ மறத்தமிழன்.. இந்த மாதிரி சிறுசிறு சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாத.. உன் பணி தொடரட்டும்...


  50. குசும்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


  51. குசும்பன் said..
    //அஹமது இர்ஷாத் said...
    ந‌ல்ல‌து ...

    அப்து அண்ணே இவரு என்ன சொல்றாரு? நீங்க இருவரும் எழுதாம இருப்பது நல்லதுங்கிறாரா? டவுட்டா இருக்குன்னே...//

    அப்து அண்ணே திரும்ப‌ எழுத‌ வ‌ந்த‌த‌ ந‌ல்ல‌துன்னு சொன்னேன்..ஒங்க‌ள‌ மாதிரி வ‌ண்டி வ‌ண்டியா வெள‌க்க‌ம் குடுக்க‌ ந‌ம‌க்கு வ‌ராதுங்...


  52. ஏன்யா ஒரு மனுசன் சீரியஸா ஃபீல் பண்ணிப் பதிவு போட்டிருக்காரு. குசும்பனும் வெண்பூவும் இப்படியா கும்முவாங்க :)


  53. சுந்த‌ர்ஜி,

    எல்லாம் நீங்க‌ அமைதியா இருக்குற‌துனால‌தான் நாங்க‌ எல்லாம் ஆட‌ வேண்டி இருக்கு... இற‌ங்குங்க‌... ம‌றுப‌டியும் காம‌க்க‌தைக‌ள் செக‌ன்ட் சீரிஸ் ஆர‌ம்பிச்சா ப‌திவுல‌க‌த்துக்கே ஒரு பெப் வ‌ந்துடாது..

    அப்புற‌ம் பாருங்க‌ அனுஜ‌ன்யா என்ன, அவ‌ருக்கு முன்னால‌ ஓடிப்போன‌வ‌ங்க‌ எல்லாம்கூட‌ அடிச்சி புடிச்சி திரும்ப‌ வ‌ந்துடுவாங்க‌.. :))))


  54. அடடே... எழுதி போஸ்ட் போட்டு இருக்கீங்களா... எப்படி இதெல்லாம்... இதில் குசும்பன் கொண்டாட்டம் வேற..

    நடத்துங்க அப்பு..


  55. // ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    ஏன்யா ஒரு மனுசன் சீரியஸா ஃபீல் பண்ணிப் பதிவு போட்டிருக்காரு. குசும்பனும் வெண்பூவும் இப்படியா கும்முவாங்க :) //

    அண்ணே... அவருக்கு அது சீரியஸ்... எங்களுக்கு கும்ம ஆள் கிடைச்ச சந்தோஷம்.. நாணயத்தின் மறுபக்கம்..


  56. // shortfilmindia.com said...
    அப்பாடா.. //

    எதுக்கு இந்த பெருமூச்சு... அப்துல்லா இடுகை போட்டதுக்கா?


  57. // பதிவுலகுடனான பரிட்சையம் துவங்கி விளையாட்டுப்போல நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது. //

    இன்னொரு கமெண்ட்ல குருஜி சுந்தர் சீரியசா என்று சொல்லியிருக்கார்... நீங்க என்னடான்ன விளையாட்டுப் போல என்று சொல்றீங்க... இது விளையாட்டா / சீரியசா? # டவுட்டு


  58. // அதுபோல முதலில் பதிவுகளைப் படித்து,பின்னர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு,அப்புறம் பதிவெழுதத் துவங்கியென ஒரு மாதிரி பதிவராக செட்டிலானேன். //

    அப்போ நீங்களும் ரவுடிதான்... ஐ மீன் வலைப்பதிவர்தான்... வெரி குட்,,


  59. // 2008 ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் அதிகம் எழுதியதும் அந்த ஆண்டில்தான். //

    நான் வலைப்பூக்களைப் பற்றி தெரிஞ்சுகிட்டதும் 2008 தான்... என்னா பண்ணுவது... விதி வலியது.. கொடியது... 2008 மறக்க முடியுமா?


  60. // அப்துல்லா என்று ஒரு பதிவர் இருக்கின்றான் என பிறருக்குத் தெரியத் துவங்கியதும் அந்த ஆண்டில்தான்.//

    இது சந்தோஷமா / வருத்தமா? # டவுட்டு


  61. // விடாமல் எழுதிவந்த எனக்கு இடையில் ஒரு சலிப்பு.காரணமற்ற சலிப்பு.எனக்கென்று இல்லை,பதிவர்கள் பலருக்கும் இந்த சிண்ட்ரோம் நிச்சயம் வரத்தான் செய்யும்.//

    இதுக்கெல்லாம் கவலைப்படமுடியுமா? இந்த மாதிரி சிண்ட்ரோமுக்கு.. எந்த டாக்டரைப் பார்த்தால் சரியாகும்?


  62. அதுபோல முதலில் பதிவுகளைப் படித்து,பின்னர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு,அப்புறம் பதிவெழுதத் துவங்கியென ஒரு மாதிரி பதிவராக செட்டிலானேன்.
    //

    ஓ நீங்க பதிவரா சொல்லவே இல்லை :))


  63. // சிறிது சிறிதாக எழுதுவது குறைந்து இப்போது வேலைப் பளுவும் அதிகரிக்க சுத்தமாகவே எழுதுவதில்லை என்றாகிவிட்டது. //

    ஆமாண்ணே... இந்த கம்ப்யூட்டர் எல்லாம் வந்த பிறகு... எழுதுவது ரொம்ப குறைந்து போயிட்டது.

    முன்பு எல்லாம் வாரத்திற்கு இரண்டு பால் பாயிண்ட் பேனா வேண்டும்... இப்ப வருஷத்திற்கே இரண்டு பேனா போதுமானதா இருக்குண்ணே..


  64. // மின்னுது மின்னல் said...
    அதுபோல முதலில் பதிவுகளைப் படித்து,பின்னர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு,அப்புறம் பதிவெழுதத் துவங்கியென ஒரு மாதிரி பதிவராக செட்டிலானேன்.
    //

    ஓ நீங்க பதிவரா சொல்லவே இல்லை :)) //

    மாதிரி என்ற வார்த்தை விட்டு போயிடுச்சு...


  65. // அதேபோல இன்னோரு விஷயம் பின்னூட்டம். //

    ஆமாங்க பின்னூட்டம் என்பது வேறு விஷயம்தான்... யாரு இல்லை என்று சொன்னாங்க..


  66. // அஹமது இர்ஷாத் said...
    குசும்பன் said..
    //அஹமது இர்ஷாத் said...
    ந‌ல்ல‌து ...

    அப்து அண்ணே இவரு என்ன சொல்றாரு? நீங்க இருவரும் எழுதாம இருப்பது நல்லதுங்கிறாரா? டவுட்டா இருக்குன்னே...//

    அப்து அண்ணே திரும்ப‌ எழுத‌ வ‌ந்த‌த‌ ந‌ல்ல‌துன்னு சொன்னேன்..ஒங்க‌ள‌ மாதிரி வ‌ண்டி வ‌ண்டியா வெள‌க்க‌ம் குடுக்க‌ ந‌ம‌க்கு வ‌ராதுங்... //

    அண்ணே என்னாது இது... வண்டி வண்டியா வரவில்லை என்றால் ... கூடை கூடையா சொல்லுங்க...

    ஹி...ஹி... சும்மா ஜாலிக்கு... நோ டென்ஷன்... :-))).... ஹி..ஹி..


  67. // நான் பொதுவாக பின்னூட்டங்களுக்குத் தனித் தனியாக பதில் சொல்வதில்லை,மொத்தமாகத்தான் சொல்வேன்.//

    நோ ரிடைய்ல் சேல்ஸ்... ஒன்லி ஹோல் சேல்ஸ்..


  68. // இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.//

    நல்லது... வாங்கோ...


  69. // குசும்பன் said...
    //எனது பிளாக்கின் ஹிட் கவுண்டர் உச்சத்தைத் தொட்டதும் அந்த ஆண்டில்தான்.//

    அண்ணே எந்த உச்சத்தை தொட்டுச்சு?
    எத்தனை வாசகர் கடிதம் வந்துச்சு? எத்தனை லவ் லெட்டர் வந்துச்சு? கமான் டெல் மீ தி டீடெயில்ஸ்... //

    இரண்டு வருஷத்திற்கு பிறகு எழுதணும் என்று ஆர்வம் வந்திருக்குன்னு சொல்லியிருக்கார் இல்ல... எழுதுவார்... அவசரப் படாதீங்க..


  70. // இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.//


    அத நெனைச்சாதான் திக்’குனு இருக்கு


  71. // மின்னுது மின்னல் said...
    // இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.//


    அத நெனைச்சாதான் திக்’குனு இருக்கு //

    இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா... ஆண்டவனை வேண்டிகிட்டு படிங்க.. எல்லாம் சரியா போயிடும்..


  72. இதனால் சகல பதிவர்வர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
    யாரவது ஒதுங்கனும்னு நெனச்சீங்கன்னா.... மூத்த அண்ணன் ஆதி மாதிரி ஒரு கருத்து கணிப்பு
    நடத்திட்டு ஒதுங்கிக்குங்க... இல்லாட்டி இந்த கார்க்கி, அப்துல் அண்ணன் மாதிரி பதிவர்கள் உங்கள புகழ்றமாதிரியே (ஒரு படத்துல வடிவேலு ஒரு தாதாவ முட்டுசந்துக்கு கூப்டு வர்ற மாதிரி) முச்சந்தில நிறுத்தீருவாங்க.... ஜாக்கிரதை


  73. ஹலோ வெயிட் வெயிட் வெயிட்
    அண்ணன் அப்துல்லா எவ்வளவு பாசமா அவருடைய நண்பர மீண்டும் பதிவெழுத அழைக்கிறார் உங்கள் எல்லோருக்கும் (அண்ணன் குசும்பன் உட்பட)ரொம்பகிண்டலா இருக்கு .

    இன்ணேரம் ஒரு போராட்டத்த அறிவிச்சி அண்ணன் அனுஜன்யாவை தூக்கிட்டு வந்திருக்க வேண்டாமா?


  74. //வாங்க ரெண்டு பேரும் முந்திமாதிரி ஆட்டத்தை ஆரமிப்போம். //

    Welcome back


  75. // விடாமல் எழுதிவந்த எனக்கு இடையில் ஒரு சலிப்பு.காரணமற்ற சலிப்பு.எனக்கென்று இல்லை,பதிவர்கள் பலருக்கும் இந்த சிண்ட்ரோம் நிச்சயம் வரத்தான் செய்யும் //

    உண்மைதான்... ஆனால் அந்த சிண்ட்ரோமை விரட்டுவது எளிது...


  76. சாமி Says:
    This comment has been removed by a blog administrator.

  77. @ சகோதரர் சாமி.

    நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நீங்கள் உங்க சொந்த ஐ.டியில் வந்து அவரின் முகத்திரையைக் கிழிக்கலாமே?? நாங்களும் தெரிந்து உஷாராக இருப்போம் அல்லவா!

    நீங்கள் அதர் ஆப்ஷனில் வந்து கூறுவதால் நீங்கள் சொல்லும் செய்தியின் நம்பகத்தன்மைக் கருதி அதை நீக்குகின்றேன்.மன்னிக்கவும்.


  78. அண்ணே வாங்க வாங்க..

    எல்லா பின்னூட்டமும் தேடி பாத்தும் அனுஜன்யா ஏதும் சொன்ன மாதிரி தெரியலை..


  79. கபடி.. கபடி.. கபடி...


  80. வாங்கண்ணே! வாரதுக்கு முன்னாடியே களைகட்டுது1 :)))


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']