ஜெய் ஹிந்த்... மன்னிக்கவும்.. ஜெய் இந்தி !!

மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்த படத்தை பாருங்கள்

இந்த படம் மொத்த கருவுறுதல் விகிதச்சாரத்தை காட்டுகிறது.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த பெர்டிலிட்டி விகிதச்சாரம்.

இது இரண்டு என்ற நிலையில் இருந்தால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள் என்று அர்த்தம்

ஒன்று என்றால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்

மூன்று என்றால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்

அது எப்படி 2.7 அல்லது 3.5 என்று வரும் என்று கேட்கிறீர்களா

அப்படி என்றால் ஒவ்வொரு பத்து தம்பதிகளும் சராசரியாக 27 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்த விகிதாச்சாரம் 2.7

இந்த விகிதாச்சாரம் 2 என்று இருந்தால் அந்த ஒவ்வொரு தம்பதியினரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி பிறக்கும் அனைத்து குழந்தைகளுமே திருமணம் செய்த்து மேலும் இரண்டு குழந்தைகள் பெற முடியாதே. விபத்து மற்றும் பிணிகள் குறுக்கே வருமே

எனவே இந்த விகிதாச்சாரம் இரண்டு என்று இருந்தால் மக்கள் தொகை குறையவே ஆரம்பிக்கும்

இந்த விகிதாச்சாரம் 2.1 என்று இருந்தால்  (விபத்து மற்றும் பிற நோய்களில் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஈடு செய்து) அந்த சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும்.

2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும். இதை மக்கள் தொகை குறுக்கம் என்றழைக்கிறார்கள். அதாவது நீங்கள் மக்கள் தொகை பெருக்கம் என்ற அடிக்கடி கேள்விப்படும் பதத்திற்கு
எதிர்பதம்

இப்பொழுது நமது படத்திற்கு வருவோம்

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன

தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா,  ஹரியானா ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது

இந்த நிலையில் மத்திய அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பார்க்கலாமா

இந்த கோப்பின் 124ஆம் பக்கத்தை பாருங்கள்

அதில் 4 செங்குத்து வரிசைகள் உள்ளன

  1. வரிசை எண்
  2. மாநிலம்
  3. தற்சமயம் இருக்கும் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம்
  4. இலக்கு
உங்களுக்கு புரிவதற்காக நான் அதில் கூடுதலாக ஒரு வரிசை சேர்த்துள்ளேன்.

ANNEXURE 3.1.7
Total Fertility Rate—India and Major States
வரிசை எண்
மாநிலம்
தற்போதைய நிலை
இலக்கு
இலக்கின் நோக்கம்

இந்தியா முழுவதும்
2.9
2.1
மக்கள் தொகை சம நிலையில் இருக்க

1
ஆந்திர பிரதேசம்
2.1
1.8
மக்கள் தொகை குறைய
2
அசாம்
2.9
2.3
மக்கள் தொகை அதிகரிக்க
3
பீகார்
4.3
3.0
மக்கள் தொகை அதிகரிக்க
4
சட்டிஸ்கர்
3.3
2.4
மக்கள் தொகை அதிகரிக்க
5
தில்லி
2.1
1.8
மக்கள் தொகை குறைய
6
குஜராத்
2.8
2.2
மக்கள் தொகை அதிகரிக்க
7
ஹரியானா
3.0
1.9
மக்கள் தொகை குறைய
8
இமாச்சல பிரதேசம்
2.1
1.8
மக்கள் தொகை குறை
9
ஜம்மு காஷ்மீர்
2.4
2.0
மக்கள் தொகை குறைய
10
ஜார்கண்ட்
3.5
2.5
மக்கள் தொகை அதிகரிக்க
11
கர்நாடக
2.3
1.8
மக்கள் தொகை குறைய
12
கேரளா
1.7
1.7
மக்கள் தொகை குறைய
13
மத்திய பிரதேசம்
3.7
2.6
மக்கள் தொகை அதிகரிக்க
14
மகாராஷ்ட்ரா
2.2
1.9
மக்கள் தொகை குறைய
15
ஒரிசா
2.7
2.1
மக்கள் தொகை சம நிலையில் இருக்க
16
பஞ்சாப்
2.2
1.8
மக்கள் தொகை குறைய
17
ராஜஸ்தான்
3.7
2.6
மக்கள் தொகை அதிகரிக்க
18
தமிழ்நாடு
1.8
1.7
மக்கள் தொகை குறைய
19
உத்திர பிரதேசம்
4.4
3.0
மக்கள் தொகை அதிகரிக்க
20
மேற்கு வங்காளம்
2.2
1.8
மக்கள் தொகை குறைய
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை

அதாவது சில மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிக்க திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்

அதாவது மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன

  1. இந்தியாவின் மக்கள் தொகை அப்படியே இருக்க வேண்டும்
  2. சில மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்
  3. சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும்
அப்படித்தானே !! இது நல்ல திட்டம் தானே !!! இதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா

இனி

எந்த மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் மற்றும் எந்த மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும் என்று பார்க்கலாமா

வரிசை எண்
மாநிலம்
பேசும் மொழி
இலக்கு
இலக்கின் நோக்கம்
3
பீகார்
இந்தி
3.0
மக்கள் தொகை அதிகரிக்க
19
உத்திர பிரதேசம்
இந்தி
3.0
மக்கள் தொகை அதிகரிக்க
13
மத்திய பிரதேசம்
இந்தி
2.6
மக்கள் தொகை அதிகரிக்க
17
ராஜஸ்தான்
இந்தி
2.6
மக்கள் தொகை அதிகரிக்க
10
ஜார்கண்ட்
இந்தி
2.5
மக்கள் தொகை அதிகரிக்க
4
சட்டிஸ்கர்
இந்தி
2.4
மக்கள் தொகை அதிகரிக்க
2
அசாம்
அசாமி
2.3
மக்கள் தொகை அதிகரிக்க
6
குஜராத்
இந்தி, குஜராத்தி
2.2
மக்கள் தொகை அதிகரிக்க

இந்தியா முழுவதும்

2.1
மக்கள் தொகை சம நிலையில் இருக்க
15
ஒரிசா
ஒரியா
2.1
மக்கள் தொகை சம நிலையில் இருக்க
9
ஜம்மு காஷ்மீர்
காஷ்மீரி
2.0
மக்கள் தொகை குறைய
7
ஹரியானா
பஞ்சாபி
1.9
மக்கள் தொகை குறைய
14
மகாராஷ்ட்ரா
மராத்தி
1.9
மக்கள் தொகை குறைய
1
ஆந்திர பிரதேசம்
தெலுங்கு
1.8
மக்கள் தொகை குறைய
5
தில்லி
இந்தி
1.8
மக்கள் தொகை குறைய
8
இமாச்சல பிரதேசம்
இந்தி
1.8
மக்கள் தொகை குறைய
11
கர்நாடக
கர்நாடகம்
1.8
மக்கள் தொகை குறைய
16
பஞ்சாப்
பஞ்சாபி
1.8
மக்கள் தொகை குறைய
20
மேற்கு வங்காளம்
வங்காளி
1.8
மக்கள் தொகை குறைய
12
கேரளா
மலையாளம்
1.7
மக்கள் தொகை குறைய
18
தமிழ்நாடு
தமிழ்
1.7
மக்கள் தொகை குறைய
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை

ஜெய் ஹிந்த்... மன்னிக்கவும்.. ஜெய் இந்தி !!
44 Responses
  1. தட்டி கேட்க ஆள் இல்லை அதான்.. அதுவும் இல்லாம அதிகாரத்துல இருக்குற தமிழனெல்லாம் சுயநலத்துடன் இருப்பதும் ஒரு காரணம்..

  2. TBCD Says:

    பட்டென்று குறைக்க முடியாதல்லவா, அதனால் இடைக்கால குறிக்கோளாக முன்னர் இருந்ததை விட குறைவான குறிக்கோளை கொடுத்திருக்கலாம் !

  3. எ கொ ச இ?

    அதுசரி.. எங்கிருந்துய்யா இப்படியெல்லாம் மேட்டரைப் பிடிச்சு பதிவெழுதறீங்க..

    உண்மையிலேயே அட்டகாசமான பதிவு அண்ணே..

  4. @ அண்ணன்கள்

    சந்தோஷ்
    தாமிரா
    அபிஅப்பா

    நன்றி!நன்றி!

    @ டிபிசிடி

    உம்ம அளும்புக்கு அளவே இல்லை :)))))))

  5. TBCD Says:

    @அப்து

    நான் நினைத்ததை சொன்னேன். சொன்னதில் என்ன குறை என்று கொஞ்சம் சொல்லுங்களேன். புதசெவி !

  6. TBCD Says:

    பெருசுகள் பட்டியலில் என்னை சேர்க்காததற்கு நன்றிங்கண்ணோவ் :-)

  7. இந்த ஸ்கெட்ச் போட்ட அறிவாளி யாருங்க?

  8. Anne.........

    nalla (?) mettaru...

    ethula yenkala mathiri alunkalukku yethavathu arivurai unda...

  9. ம்ம்ம்....இந்தி யா? இந்தியாவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வெகுகாலமாச்சுண்ணே.....

    என்ன செய்யறது....கேள்வி கேக்கறதோட சரி நாம.....

    பகிர்வுக்கு நன்றிங்கண்ணா

  10. வித்தியாசமான பதிவு.

  11. மரா Says:

    நம்ம கையில என்ன அண்ணே இருக்கு. எல்லாம் அந்த ஆண்டவனா
    குடுக்குறான் :)
    (பதிவுக்கு சம்பந்தமில்லாமல் காமெண்ட் போடுவோர் சங்கம்!)

  12. Ŝ₤Ω..™ Says:

    அண்ணா.. இது வெறும் ஹிந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகையை அதிகரிக்கவும், மற்ற மொழி மாநிலங்களில் குறைப்பதற்கான ஒரு செயல் திட்டம் போல் இருந்தாலும், இதில் வேறு ஏதோ உள்குத்து இருக்கறது போல தெரியுது..
    இப்போ சமீபகாலமா, மத்திய அரசு தனியொரு கட்சி ஆட்சியமைக்க முடியாமல், கூட்டணியாட்சியே அமையுது.. இப்படி தனித்து ஆட்சிசெய்யவிடாமல் கடிவாளம் போடும் பிரதான கட்சிகள்ன்னு பார்த்தா, அது தமிழ்நாடு, கர்நாடகா, மே.வங்காளம், மகாராஸ்ட்ரா, ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலக் கட்சிகளே.. So.. கூட்டிகழிச்சி பார்த்தா, எங்கயோ இடிக்குதேண்ணே..
    ஒரு வேளை இப்படியும் இருக்குமோ????

  13. Anonymous Says:

    நீங்க ஒரு வலையுலக கேப்டன் ... !

  14. அட‌க்கொடுமையே.. இப்ப‌டி எல்லாமா யோசிக்கிறாங்க‌? இதெல்லாம் த‌மிழ‌க‌ அர‌சுக்கு தெரியாதா? இல்ல‌ தெரியாத‌ மாதிரி ந‌டிக்குறாங்க‌ளா? அட‌ எதிர்க்க‌ட்சிக‌ளாவ‌து இதுக்கு எதிரா குர‌ல் குடுத்திருக்காங்க‌ளா?

  15. Jai Hindustan :(-

    Aravindan
    Bangalore

  16. ஜெய் இந்தி !!

  17. அசத்தல் பதிவு அண்ணே,

    இதைத்தான் தலைவர் சொன்னாரோ, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று.

  18. கொடுமைண்ணே..

    இந்தியா என்றாலே இந்தியா? என்று உலகம் கேட்க வேண்டும் என்று இப்படி செய்றாங்க போல..

    வேற வழியில்ல.. நானும் ஒரு இந்தி ஃபிகர பார்த்து கல்யாணம் செய்து என் வம்சத்த தழைக்க வைக்க வேண்டியதுதான்

  19. தம்பி..

    இந்தி மொழியின் வளர்ச்சிக்காக மறைமுகமாக உதவி செய்கிறார்கள் டில்லிவாலாக்காரர்கள்..!

    உடனேயே தாத்தாவின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று டில்லி ஏகாதிபத்தியத்தின் முயற்சியை முறியடித்து வடக்கு போலவே தெற்கேயும் மக்கள் பெருக்கத்தைப் பேணிக் காப்பது திராவிட இயக்கத்தின் கடமை என்று போர் முரசு உரைக்கச் சொல்..!

  20. என்ன அண்ணா...?
    இப்படி பிரிச்சு மேஞ்சிட்டீங்க...?
    கதி கலங்குதே...!

    நான் இதை பின்பற்றப்போவதில்லை... ஜெய் தமிழ்...! ஆங்..!

  21. இன்னும் நிறையா ஊழல் இருக்குன்னே நீங்க தான் கண்டு பிடிச்சி குடுக்கனும்

  22. தமிழ் தாய் Says:

    Your comment has been saved and will be visible after blog owner approval.

    இதென்ன கொடுமை சூரியனுக்கே டார்ச்சா?

  23. Joseph Says:

    அடப் பாவிங்களா,
    நல்லா போடுறாய்ங்களே திட்டம்.
    இவனுங்க திட்டம் இருக்கட்டும், நம்ம ஊர்ல தான் இப்பல்லாம் 2 மேல ஒருத்தனும் பெத்துக்க மாட்டேங்குறானே?

  24. அப்படியே தமிழ்நாட்டை கொண்டு போய் டெல்லிக்கு பக்கத்தில் வைச்சிட்டா எல்லாம் சரியாயிடும்

  25. தமிழ் தந்தை Says:

    உடன் பிறப்பே

    என் பின்னூட்டம் வெளியிடாததைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்.

  26. இதனை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் அப்துல்.

    எல்லா மாநிலங்களுமே தற்போதைய நிலையிலிருந்து விகிதாச்சாரத்தைக் குறைக்கவே திட்டமிட்டுள்ளன (கேரளத்தைத் தவிர்த்து). எவ்வளவு சதவிகிதம் குறைக்க முற்பட்டுள்ளன என்று பார்த்தால் உண்மை நிலவரம் புரியும்.

    இந்தியா : 27.58%

    ஹிந்தி பேசும் மாநிலங்களில், கருவுறுதல் விகிதாசாரம் தற்போது அதிக அளவிலும், மற்ற மொழி பேசும் மாநிலங்களில் குறைவாகவும் இருக்கிறது. எல்லா மாநிலங்களும் இந்த விகிதாசாரத்தைக் குறைக்கும் இலக்கு வைத்திருந்தாலும், ஹிந்தி மாநிலங்கள் தங்கள் இலைக்கை அடைய அதிக அளவில் இந்த விகிதத்தைக் குறைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பீகார் 32%, சாடீஸ்கர் 27%, ஹரியானா 36%, ஜார்கண்ட் 28%, மத்தியப் பிரதேசம் 29%, ராஜஸ்தான் 29% என்றிருக்க தென் மாநிலங்களில் கேரளம் 0௦%, தமிழகம் 5%, கர்நாடகம் 21%, ஆந்திரா 14% என்று உள்ளன. வளர்ச்சி அடையாத வட மாநிலங்களில் இதை விட வேகமாக இந்த விகிதாசாரம் குறையும் வண்ணம் இலக்கு வைக்க வேண்டுமென்றால் மறைந்த சஞ்சய் காந்தி (நம்ம சஞ்சய் இல்லை) தான் திரும்ப வரவேண்டும்
    :(

    TBCD பகடியாகச் சொன்னதுபோல் இருந்தாலும், அவர் சொல்வதுதான் உண்மை. சும்மா எல்லாவற்றிலும் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' அயர்ச்சியாக இருக்கிறது அப்துல் :(. ஆனால் தமிழ் வலையுலகில் அதுதான் அரசியல் சரிநிலை.

    அனுஜன்யா

  27. KADAR OLI Says:

    good information abdulla...but u should consider the demography,geography and topography. these all are in important factors of either increasing or decreasing of the population in a particular region. i really appreciate u guys for doing these all.

  28. ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வைக்க வேண்டிய தகவல்.

    ஏற்கனவே சுயம் இழந்து, சொந்த ஊர் இழந்து வாழும் தமிழர்கள் இந்த பதிவை உங்கள் வலைதளத்திலும், முகபுத்தகத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.(அப்துல்லாவின் அனுமதியோடு)

  29. //ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும்//

    ஓ, அப்ப பல கணவர்களுக்கு ஆவுறது கணக்குல இல்லைன்னு சொல்லிச் சொல்றீகளா?? #ஐயப்பாடு-1

  30. அண்ணே, வெச்சி விளையாடிட்டீங்க...

    எந்த மாநிலத்திலயும் அதிகரிக்கும்படியான திட்டம் அதில இல்லை....

    தற்போதைய நிலையிலிருந்து குறைத்து, ஒரு எண்ணை இலக்காக வைத்திருக்கிறார்கள். அவ்வளவே!

    படத்தைக் காமிக்கிற மாதிரி, காமிச்சி, இரயிலையே மறைச்சுட்டீங்க....

    இந்தி பேசும் மாநிலத்தில் தற்போதைய நிலை 4 என்றால், ஒரேயடியாக 1.6க்கு கொண்டு வருவது சாத்தியமே இல்லை... எனவே மூன்று என வைத்து இருக்கிறார்கள்.

    இன்னுஞ் சொல்லப் போனால், அவர்களின் பெருக்கத்திற்கு பெருத்த அடி? எப்படி??

    1.7 ஆக இருக்கும் தமிழகத்தின் இலக்கு 1.6 (-6%)

    4.4 ஆக இருக்கும் உபியின் இலக்கு 3.0 (-32%)

    நாங்களும் கணக்குல 100% வாங்குனவிங்கதான் அண்ணே? இஃகிஃகி!!

    =============

    நிற்க! அதே வேளையில், இந்திக்காரர்களின் மக்கள் தொகைக்கும் தமிழர்களின் மக்கள் தொகைக்கும் உள்ள இடைவெளி பல மடங்கு பெருகிறது என்பதும் உண்மை.

    ஆக மொத்தத்தில், தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் வடவர்களைவிட வரும் ஆண்டுகளில் பல மடங்கு அவர்களது ஆதிக்கம் கூட வாய்ப்பு உள்ளது.

    இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை...

  31. அண்ணே, வெச்சி விளையாடிட்டீங்க...

  32. Ameer Says:

    NEEGA ENNA KANAKU EDUKUM ATHIKARIAYA ILLA FINANCE MANAGERA

  33. Anonymous Says:

    //அண்ணே, வெச்சி விளையாடிட்டீங்க...

    எந்த மாநிலத்திலயும் அதிகரிக்கும்படியான திட்டம் அதில இல்லை....//

    அண்ணே
    நல்லா பாருங்கள்

    2.1க்கு மேல் இருந்தால் அது மக்கள் தொகையை அதிகரிக்கும் திட்டம்
    2.1க்கு கீழ் இருதால் அது மக்கை தொகையை குறைக்கும் திட்டம்

    மீண்டும் நல்லா பாத்துபுட்டு சொல்லுங்க

    //தற்போதைய நிலையிலிருந்து குறைத்து, ஒரு எண்ணை இலக்காக வைத்திருக்கிறார்கள். அவ்வளவே!//

    இல்லை

    சில மாநிலங்களில் மக்கள் தொகையை அதிகரிக்கவும்
    சில மாநிலங்களில் மக்கள் தொகையை குறைக்கவும் இலக்கு வைத்திருக்கிறார்கள்

    //படத்தைக் காமிக்கிற மாதிரி, காமிச்சி, இரயிலையே மறைச்சுட்டீங்க....//
    இல்லையே

    //இந்தி பேசும் மாநிலத்தில் தற்போதைய நிலை 4 என்றால், ஒரேயடியாக 1.6க்கு கொண்டு வருவது சாத்தியமே இல்லை... எனவே மூன்று என வைத்து இருக்கிறார்கள்.//

    சரி
    ஆனால் தமிழகத்தில் இலக்கு 2.1 என்று வைத்திருக்க வேண்டியது தானே

    ஏன் அதிலும் கீழிறங்கி இங்குள்ள மக்கள் தொகையை குறைக்க முயலவேண்டும்

    //இன்னுஞ் சொல்லப் போனால், அவர்களின் பெருக்கத்திற்கு பெருத்த அடி? எப்படி??

    1.7 ஆக இருக்கும் தமிழகத்தின் இலக்கு 1.6 (-6%)//

    இல்லை

    அது 1.7 பெருக்கம் இல்லை
    20 சதம் குறைவு

    அதாவது -40

    தமிழகத்தின் மக்கள் தொகையை குறைக்க ஏற்படுத்தப்பட்ட இலக்கு அது
    மீண்டும் பாருங்கள்

    நாம் பேசுவது TFR
    இதில் 0 என்பது 2.1 தான்
    அதற்கு கீழிப்பது negative

    //4.4 ஆக இருக்கும் உபியின் இலக்கு 3.0 (-32%)//

    இல்லை
    அது +2.3ல் இருந்து +0.9
    அதாவவது 40 சதம் அதிகரிப்பு

    //நாங்களும் கணக்குல 100% வாங்குனவிங்கதான் அண்ணே? இஃகிஃகி!!//

    ஹி ஹி ஹி
    ஆனால் இங்க தப்பா புரிந்து கொண்டுள்ளீர்கள்

    =============
    //நிற்க! அதே வேளையில், இந்திக்காரர்களின் மக்கள் தொகைக்கும் தமிழர்களின் மக்கள் தொகைக்கும் உள்ள இடைவெளி பல மடங்கு பெருகிறது என்பதும் உண்மை.//

    அதற்கு காரணம்

    தமிழக மக்கள் தொகையை குறைக்கும் படி 2.1க்கு கீழாக 1.7 என்று இலக்கு இந்திக்காரர்களின் மக்கள் தொகையை பெருக்கும் படி 2.1க்கு மேலாக இலக்கும் நிர்ணயிப்பது

    //ஆக மொத்தத்தில், தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் வடவர்களைவிட வரும் ஆண்டுகளில் பல மடங்கு அவர்களது ஆதிக்கம் கூட வாய்ப்பு உள்ளது.

    இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை...//

  34. Anonymous Says:

  35. Anonymous Says:

  36. Anonymous Says:

  37. அண்ணே, ரொம்ப அவசியமான பதிவு... நல்லாவே அலாரமமட்இச்சிருக்கீங்க! இன்னும் இந்த விஷயம் தமிழ்தேசியம் பேசுறவங்க கண்ல படலையா? அந்த அளவுக்கா அவங்க வீக்கா இருக்காங்க?

    ஆனாலும் அண்ணே... கண்ணுல வெளக்கெண்ணைய ஊத்திட்டு நெறைய விஷயங்களை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெளிவா தெரியுது.

  38. //#

    அண்ணா.. இது வெறும் ஹிந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகையை அதிகரிக்கவும், மற்ற மொழி மாநிலங்களில் குறைப்பதற்கான ஒரு செயல் திட்டம் போல் இருந்தாலும், இதில் வேறு ஏதோ உள்குத்து இருக்கறது போல தெரியுது..
    இப்போ சமீபகாலமா, மத்திய அரசு தனியொரு கட்சி ஆட்சியமைக்க முடியாமல், கூட்டணியாட்சியே அமையுது.. இப்படி தனித்து ஆட்சிசெய்யவிடாமல் கடிவாளம் போடும் பிரதான கட்சிகள்ன்னு பார்த்தா, அது தமிழ்நாடு, கர்நாடகா, மே.வங்காளம், மகாராஸ்ட்ரா, ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலக் கட்சிகளே.. So.. கூட்டிகழிச்சி பார்த்தா, எங்கயோ இடிக்குதேண்ணே..
    ஒரு வேளை இப்படியும் இருக்குமோ????//

    இருக்குமோ இல்லைங்க.... அதேதான்! ஒற்றை தேசியம் அப்டீங்குற அமைப்பைக் கட்டிக்காக்கவும், அதிகாரக் குவிப்புக்கும் இது மட்டும்தான் அவங்களுக்குத் தீர்வு... "தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ்- ஒரு பைனாகுலர் பார்வை" அப்டீன்னு நான் ஒரு பதிவு போட்ருக்கேன் பாருங்க (இது வெளம்பரம் இல்லீங்கோ!)

  39. அதுசரி.. எங்கிருந்துண்ணா இப்படியெல்லாம் மேட்டரைப் பிடிச்சு பதிவெழுதறீங்க..

    உண்மையிலேயே அட்டகாசமான பதிவு அண்ணே...//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  40. ramanans Says:

    அப்போ ஹிந்தி கத்துக்கிட்டா இந்தியால எங்க வேணா வாழலாம் இல்லையா?

  41. mahes Says:

    வாழ்த்துகள்
    http://maheskavithai.blogspot.com/
    MAHES

  42. இதான்..இதைத்தான் எதிர்பார்த்தேன்.!

    புள்ளிவிபரப்புலி நீங்களேதான்!

    நல்ல அலசல்!

TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']