அயோத்’தீ’

அயோத்தி வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு எப்படி வருமோ என்ற கவலை எனக்குச் சிறிதுமில்லை.அதைவிட எத்தனை உயிர்கள் போகுமோ என்ற கவலையே பெரிதும் வாட்டுகின்றது.என்னுடைய பதின்மப் பருவத்திற்கு முந்திய ஒரு அழகான நாட்கள் இருந்தது.வணக்கமுறை என்ற ஒன்றைத் தவிர மற்றபடி கலாச்சாரத்தாலும்,மனிதாபிமானத்தாலும் மட்டுமே மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்த நாட்கள்  பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் சிறிது குறையத் துவங்கிவிட்டது அப்பட்டமான உண்மை.


‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள். பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’.இதைச் சொன்னவர் இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னாள் உளவு உயர் அதிகாரி திரு.ராமன்.அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், இவை சத்தியமான வார்த்தைகள்.இன்றும் சில இஸ்லாமியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் பாக்கிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.இந்த பழக்கம் முதன்முதலில் துவங்கியது மசூதி இடிப்பிற்குப் பின்னர்தான்.என்னுடைய நண்பன் நிஜாம் தீவிர கிரிக்கெட் ரசிகன்,அதி தீவிர இந்திய அணியின் வெறியன்,மசூதி இடிப்பிற்குப் பின்னர் ஒரே நொடியில் பாக்கிஸ்தான் அணியின் ஆதரவாளனாக மாறிப்போனான்.”ஏண்டா மாப்ள?”என்ற என்னுடைய கேள்விக்கு அவன் கைகள் சுட்டிக்காட்டிய இடம் அயோத்தி.”அதுக்கும்,இதுக்கும் என்னடா சம்மந்தம்??இந்தியாவுல இருக்குற எல்லா இந்துக்களும் ஒன்னுகூடியா இடிச்சாங்க?? அதை இடிச்சதை ஆதரிச்ச இந்துக்களைவிட எதிர்த்த இந்துக்களின் எண்ணிக்கைதானடா ஜாஸ்தி” என்ற என் வார்த்தைகளை காதில் வாங்கும் மனநிலையில் அன்று அவன் மட்டுமல்ல பெரும்பாலான இஸ்லாமியர்கள் எவருமே இல்லை.எண்னிக்கையில் கம்மியா இருக்குறதாலதானே கைவச்ச? எனக்கும் ஆள் இருக்குன்னு காட்டும் விதமாக தங்கள் எண்ணிக்கையை கூட்டும் முகமாக பிற தேசத்து இஸ்லாமியர்களோடு மத அடிப்படையில் தன்னை இனைத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டிப் பாதுகாப்பு தேடும் மனநிலை அது.சொந்த தேசத்தில்,சொந்த மண்னில் எங்கே நாம் பிறரிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டோமோ,உரிமை இழந்துவிட்டோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடுதான் அதுவரை தாங்கள் உண்டு,தங்கள் வேலை உண்டு என்று அமைதியாக
வாழ்ந்து வந்த ஒரு சமூகம் வெளிப்படுத்தத் துவங்கிய வன்முறை முகம்.தேசப்பிரிவினைக்கு பின்னர் பாபர் மசூதி இடிப்புவரை இந்திய இஸ்லாமியர்கள் எங்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திரம் இன்றுவரை இல்லை.அதுவும்கூட ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டது.அதாவது இவர்கள் ஒரு இடத்தில் குண்டு வைத்தால் இவர்கள் பேரைச் சொல்லி அவர்கள் மூன்று இடத்தில் குண்டு வைத்த கதையெல்லாம் இப்போது வெளிவருகின்றது.


அதேபோல  மதம்மாறி இஸ்லாமைப் பின்பற்றினாலும் கலாச்சாரத்தால் தங்கள் முந்தைய மதமான ஹிந்துக்களின் சம்பிரதாயங்களை இந்திய இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.திருமண வீடுகளில் மாவிலையும்,வாழைமரமும் கட்டுவது,பூப்புநீராட்டு நிகழ்ச்சி என்று எத்தனையோ சொல்லலாம்.இந்த மசூதி இடிப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட அந்நிய உணர்வு இஸ்லாமியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அந்த காலாச்சார நீரோட்டத்தில் இருந்து விலகி இஸ்லாம் தோன்றிய அரபு தேசத்தின் கலாச்சாரத்தையும் பின்பற்றும் போக்கு துவங்கியதும் மசூதி இடிப்பிற்குப் பின்னர்தான்.வகாபியிசம்,நஜாத் போன்ற அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே முக்கியத்துவம் பெறத் துவங்கிய இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர்தான். இப்படி பல விஷயங்களில் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலையை மாற்றி சொந்த தேசத்திலேயே அந்நியப்பட வைத்து  புண்ணியம் தேடிக்கொண்டதைத் தவிர பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ். வேறு ஒன்றும் சாதிக்கவில்லை.


ஆனால் இந்திய இஸ்லாமியர்கள் மொத்தமாக தேச உணர்வில் இருந்து அந்நியப்படவில்லை.கார்கில் போரின் போது நேரடி பங்களிப்பு,நிதிகளைக் குவித்தது என்று இந்த சமூகம் தேசத்தின் பின்னால் ஒட்டுமொத்தமாக நின்றது.கிரிக்கெட்டில் பாக்கிஸ்தான் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் என் நண்பன் நிஜாம் கார்கில் போரில் இந்தியா வெல்ல வேண்டும் தொழுகை நடத்தியது ஒவ்வோரு இந்திய இஸ்லாமியனின் ஆழ்மனதிலும் இந்த தேசத்தின் மீது உள்ள பிடிப்பைக் காட்டியது.கடந்த 18 ஆண்டுகளில் காலம் தடவிய மருந்தில் கசப்புணர்வுகள் குறைந்து மசூதி இடிப்பிற்குப் பின்னர் பிறந்த புதிய இஸ்லாமிய தலைமுறை தேச உணர்வோடு இருக்கின்றது.இந்தத் தீர்ப்பு அதை மீண்டும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்ம பதிவர் குசும்பன் அவருடைய நண்பரோட வட இந்திய டூர் போனபோது பல இடங்களில் கோவில்களும்,மசூதிகளும் அடுத்தடுத்து இருப்பதைக் கண்ட அவர் நண்பர் ”இந்த பாய்ங்க வேணும்னே எப்படி கட்டிருக்கனுங்க பாரு? என்றிருக்கின்றார்.
அதற்கு குசும்பன் “டேய், ஊருல அங்காளி பங்காளியா இருக்கும் பொழுது ஒரே சுவத்தை ஒட்டி இரண்டு வீடா கட்டிப்பாங்க, நம்ம மாமன் தானே நம்ம மச்சான் தானே என்று ஒன்னுமன்னா இருப்பாங்க..இரண்டு தலை முறைக்கு பிறகு அவுங்களோட பாசம் தெரியாது.வீட்டை ஒட்டி இருப்பதால் இவன் வீட்டு வாரி தண்ணி அவன் சுவத்துல விழுதுன்னு அடிச்சிப்பானுங்க...அதுமாதிரிதான் இதுவும் அப்ப எல்லாம் இரு மதத்தவரும் ஒன்னா ஒத்துமையா இருந்து எந்த பிரச்சினையும் இல்லாம சாமி கும்மிட்டு இருப்பானுவோ...இப்ப இந்த அரசியல்வாதிங்களால் தான் பிரச்சினை” என்றிருக்கின்றார்.எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

எனக்கு ஏதோ ஒரு நிலத்துக்கு உரிமையாளனாக இருப்பதைவிட என் பங்காளிக்கு சகோதரனாய் இருப்பதுதான் பெரிதாய்படுகின்றது.உங்களுக்கு???
50 Responses
  1. Anonymous Says:

    நம்பிட்டோம்


  2. குசும்பனோட நண்பர் சொன்னதைப் போலவே நானும் எழுதி இருந்தேன் ஒரு டெல்லிப் பதிவில். சரித்திர முக்கியத்துவம் உள்ள மசூதிகள் நினைவிடங்களுக்குப் பக்கத்தில் இப்படி ஒரு பெருமாள் கோவிலைக் கட்டி இருக்காங்களேன்னு.


    ஆனது ஆச்சு போனது போச்சு. பழைய விஷயங்களைத் தோண்டி பகை வளர்த்து அதில் பயனடையும் அரசியல் வியாதிகளால்தான் ஒன்னுமண்ணா இருந்த மக்களுக்குள் துவேஷம் வளர்ந்து நிக்குது.


    பேசாம அந்த அயோத்தீயை அணைக்கிற வழியைத் தேடவேணாமா?
    குறிப்பிட்ட நிலம் யாருக்குமே சொந்தமில்லை. பொறக்கும்போது நிலத்தைக் கையில் புடிச்சுக்கிட்டா வந்தோம்?


    நாட்டுக்குப் பொதுவா, அதுவும் குழந்தைகளுக்கான ஒரு பூங்காவா அதை மாத்திடலாம். பிஞ்சுக் குழந்தைகளுக்கு மதம் பிடிக்காது. அவர்கள் உலகமே தனி.


  3. // Anonymous said...
    நம்பிட்டோம்

    //

    சந்தோஷம்.

    அப்புறம் அமெரிக்காவுல மழையெல்லாம் நல்லா பெய்யுதா?
    (அனானியா வர்றது பெருசில்ல.அடையாளம் தெரியாம வரணும்)


  4. கடைசி வரிக்கு நான் ஒத்துப்போகிறேன் அப்துல்லா அண்ணே..


  5. //. பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’.இதைச் சொன்னவர் இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னாள் உளவு உயர் அதிகாரி திரு.ராமன்.//

    100% நிஜம்!

    இதை வெச்சி அரசியல் செய்யும் கட்சிகள் தடை செய்யப்படும் என்று சொல்லிட்டா ஒரு பயலும் பேசமாட்டானுங்க.


  6. இந்த லிங்க பாருங்க
    http://kgjawarlal.wordpress.com/2010/09/23/

    நீங்க கம்மெண்ட பார்த்து வெளிட்டா நல்லா இருக்கும்

    மற்றபடி மிக நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்


  7. கலவரமெல்லாம் ஒன்றும் நடக்காது என்று திடமாக எண்ணுகிறேன்.


  8. மாப்ள ...

    நிறைய உணர்வுகள் தோனுது

    பொதுவாதிகள் என்று சொல்லி கொள்பவர்களில் பலர் இத பத்தி மூச்சு கூட விடல

    எழுதிய சிலரின் சுயரூபம் அவர்கள் வரிகளில் தெரிகிறது

    நானும் எழுதனும் நினைச்சிகிட்டேயிருந்தேன், பாதுகாப்பை பற்றி மட்டும் தான்

    யாரும் மாலை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் - பிரயாணங்களை முடிந்த வரை தவிர்த்து கொள்ளுங்கள்

    யாருடையதாக இருந்தாலும் உயிர் ஒன்று தான்

    பாதுகாப்பாய் இருப்போம்

    மனிதன் என்ற உணர்வோடு

    பொருமை காப்பது என்பதும் ஜிஹாத் தான் ...


  9. நல்ல பதிவு அப்துல்லா...


  10. //ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன//

    மிக உண்மையான வார்த்தைகள்!!

    இந்த கிரிக்கெட் - காலேஜில் படிக்கும்போது நான் இந்திய டீமுக்குத்தான் சப்போர்ட் பண்ணுகிறேன் என்பதை அறிந்து ஆச்சர்யப்படுவார்கள்!!

    முஸ்லிமாய்ப் பிறந்ததினாலேயே என் தேசப்பற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என்று எங்கோ படித்தது எனக்கும் பொருந்துகிறது.


  11. எம்.எம்.அப்துல்லா said...
    // Anonymous said...
    நம்பிட்டோம்

    //

    சந்தோஷம்.

    அப்புறம் அமெரிக்காவுல மழையெல்லாம் நல்லா பெய்யுதா?
    (அனானியா வர்றது பெருசில்ல.அடையாளம் தெரியாம வரணும்)
    //
    முந்தாநாள் டெக்ஸாஸில் நல்ல மழை. மத்தபடி அந்த அனானிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, என்னையும் ஜீப்புல ஏத்திராங்க


  12. D.R.Ashok Says:

    என்ன சொல்லறது... சும்மா படிச்சிட்டு போயிட்டேன்...


  13. தீர்ப்பால் ஒண்ணும் ஆகிவிடாது என்று திடமாக நம்புகிறேன்.

    பதட்டப்பட வேண்டாம்.


  14. //இந்தியாவுல இருக்குற எல்லா இந்துக்களும் ஒன்னுகூடியா இடிச்சாங்க?? அதை இடிச்சதை ஆதரிச்ச இந்துக்களைவிட எதிர்த்த இந்துக்களின் எண்ணிக்கைதானடா ஜாஸ்தி” என்ற என் வார்த்தைகளை காதில் வாங்கும் மனநிலையில் அன்று அவன் மட்டுமல்ல பெரும்பாலான இஸ்லாமியர்கள் எவருமே இல்லை.//

    நிதர்சனமான உண்மை.

    ஹுஸைனம்மா said

    //முஸ்லிமாய்ப் பிறந்ததினாலேயே என் தேசப்பற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என்று எங்கோ படித்தது எனக்கும் பொருந்துகிறது.//

    நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் சகோதரி.

    நல்ல பதிவு. நன்றி அப்துல்லா அண்ணே.


  15. மிக நல்ல பதிவு. முடிவாய் வைத்த கேள்விக்கு பதில் :'எங்களுக்கும்'!

    தொடர்புடைய என் பதிவு இங்கு. போஸ்டர் அல்ல. ஆதங்கம்.

    கர்நாடகத்தைப் பொறுத்தவரை பதட்டமே நிலவுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு 2 தினங்கள் விடுமுறை. அலுவலகங்கள் மதியத்துடன் மூடுகிறார்கள்.

    துளசி மேடம் சொன்னது போல பூங்காவாகவோ, அல்லது ஆதரவற்றோர் இல்லமாகவோ பொது நலனுக்குத் தரப்பட்டால் நன்றாக இருக்கும்.


  16. அயோத்'தீ' ஆகிவிடாமல் அமை'தி'யாக முடியப் பிரார்த்திப்போம்.



  17. அப்துல்லா,

    எனக்கும் சகோதரனாய் இருப்பதில்தான் பெருமை. சுயநலவாதிகளின் மனத்திமிர், மதத்திமிராக வெளிப்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இனிமேலாவது நமது திருநாட்டில் அமைதியும், ஒற்றுமையும் தழைக்கட்டும். மிகவும், அவசியமான, அர்த்தமுள்ள இடுகை. (நண்பர் குசும்பன் வார்த்தைகள் சூப்பர்!)

    ஸ்ரீ....


  18. Anonymous Says:

    //இஸ்லாமிய சமூகத்தின் மனநிலையை மாற்றி சொந்த தேசத்திலேயே அந்நியப்பட வைத்து //
    இதுதான் அவர்களின் நோக்கமே. இதனால மதவாதிகளுக்கு லாபம், மனிதர்களுக்கு நஷ்டமே


  19. //‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள். பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’.//

    நிதர்சனமான உண்மை...


  20. Anonymous Says:

    அய்ய்யோதீ..!

    கலவரம் எப்பொழுதும் அனானிமஸ் ஆட்களால் தான் நடக்குது..!


  21. மோனி Says:

    கோவையே வெறிச்சென்று இருக்கிறது.
    பதற்றத்துடனே காத்திருக்கிறோம்.
    தீர்ப்பிற்காய் மட்டுமல்ல...

    எப்போது திருந்துவார்கள்??
    :-(


  22. அரசாங்கம் முன்னெச்ச்ரிக்கை என்ற பேரில் நடத்தும் அடாவடித்தான் பெரிய கலவரம் என்ரு நான் நினைக்கிறேன். நல்லதே நடக்கும், இந்த அமைதி எப்பவும் நிலவ பிரார்த்திப்போம்


  23. மிகத் தெளிவா சொல்லியிருக்கீங்க அண்ணா...எனக்கு இதைப்பற்றி அதிகம் தெரியாது..ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று கிடையாது.... நாம் இந்தியர்கள் சகோதரத்துவமாய் இருந்தோம் இருக்கிறோம் இருப்போம்...அதற்கு நாம் சொற்ப உதாரணமாக (அதாதவது இந்த பதிவுலகில் நம்மை போல சகோதரத்துவமாய் நட்பாய் இருப்பதை சொல்கிறேன்) இருப்போமே....உயிர்பலி கூடாது என்ற உங்கள் எண்ணமே என்னதும்...


  24. //அப்புறம் அமெரிக்காவுல மழையெல்லாம் நல்லா பெய்யுதா?
    (அனானியா வர்றது பெருசில்ல.அடையாளம் தெரியாம வரணும்)//

    ஹி ஹி ஹி

    அப்புறம்

    ஆட்சி நன்றாக இருந்தால் மாதம் மும்மாரி பொழியுமாமே

    சென்னையில் பெய்கிறதா


  25. ஈஸ்வர் அல்லா தேரோ நாம்..கடைசி வரைக்கும் கஞ்சியை கண்லயே நீங்க காட்டலை


  26. //ஒரு நிலத்துக்கு உரிமையாளனாக இருப்பதைவிட என் பங்காளிக்கு சகோதரனாய் இருப்பதுதான் பெரிதாய்படுகின்றது.//

    மனிதநேயம்.....வாழ்த்துக்கள்.



  27. மாமம் மச்சானா இருந்தவங்களை கிழிச்சிப்போட இவனுங்களுக்கு ஒரு காரணம்?????தூ.......

    எங்க ஊருல நாங்க இன்னும் அண்ணன் தம்பியா, (கொடுத்து கட்டலைன்னாலும்) மாமா-மாப்பிள்ளைன்னு தான் பழகறோம். பேசிக்கிறோம்.

    வளர்ந்த பொருள் சார் சமூகத்திலும், கிராமம் சார்ந்த வாழ்வியல் சமூகத்தில்லும் இது ஒரு பிரச்சனையல்ல.

    ரெண்டுங் கெட்டான்களிடம் தான் இத்தனை குழப்பங்களும்...விடுங்கண்ணா


  28. இந்துவா இருந்து எங்கள் முன்னோர்களால் இஸ்லாத்திற்க்கு வந்த நாங்கள் இஸ்லாமியனாக வாழ்கிறோம் இந்தியாவை மட்டும் நேசிக்கிறோம் உங்கள் நண்பர் நிஜாம் போல் பல நிஜாம் உருவாக சில இந்துத்தீவிரவாதிகளே காரணம்.

    கடைசி வரியில் உங்களுடன் உடன்படுகிறேன் நன்றி.


  29. கார்த்திக் Says:

    // எங்க ஊருல நாங்க இன்னும் அண்ணன் தம்பியா, (கொடுத்து கட்டலைன்னாலும்) மாமா-மாப்பிள்ளைன்னு தான் பழகறோம். பேசிக்கிறோம்.//

    இங்க அப்படித்தான் எல்லாரும் இருக்காங்க :-))

    அரசியல் பண்ண எவ்வளவோ விசையம் இருக்கு காவிரியையும் இதையும் விட்டாங்கன்னா போதும்.


  30. அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.


  31. Mohamed Says:

    WAS A BIG QUESTION...MASJID OR TEMPLE??? VERDICT IS.. LET US HAVE BOTH ON EITHER SIDE... THAT IS INDIA... PROUD TO BE AN INDIAN..


  32. /உங்களுக்கு???/
    எனக்கும்.
    தினமும் காலையில் இன்று பள்ளிக்குப் போலாமா?குழந்தைகளை அனுப்பலாமா? என்று கவலைப் படவே நேரம் சரியா இருக்கு...நிம்மதியா எப்போ விடியும்கிற நிலைமைதான் இங்கு.


  33. சரியா சொன்னிங்க பங்காளி!



  34. அதெல்லாம் சரி, நாலு நாள் டாஸ்மாக் லீவுன்னு கேள்வி பட்டேன் உண்மையா!

    நாம குடிக்கலைனாலும், குடிமக்கள் பற்றிய அக்கறை எனக்குண்டு!


  35. //. பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’.இதைச் சொன்னவர் இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னாள் உளவு உயர் அதிகாரி திரு.ராமன்.//

    சத்தியமான உண்மை பாய். இப்ப வந்திருக்கிற தீர்ப்பும் யாருக்கும் பிரயோஜனமானது அல்ல. மீண்டும் மக்கள் தொகையை சரியச் செய்யும் முயற்சி அது. சிறுவயதில் அடிக்கடி டிடியில் "மிலே சுர் மேரா தும்ஹாரா" பாட்டு கேட்டப்ப எல்லாம் உண்மைலயே உடலில் உள்ள முடிகள் சிலிர்த்ததை எண்ணிப் பார்க்கிறேன். இப்பொழுது அந்த பாட்டும் பாடப்படுவதில்லை, அந்த எண்ணமும் எந்த கட்சியிடமும் இல்லை. இந்தியாவின் மாபெரும் சக்தியாய் அதன் கொள்கை 'Unity in Diversity' என்றிருந்தது. இப்பொழுது அதை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. எங்கள் அப்பா வங்கியில் பணி புரிந்த காலத்தில் அவரின் மிக மிக நெருங்கிய நண்பர்கள் அதிகமாய் பிரமாணர்களே...இருந்தாலும் வித்தியாசம் பார்த்ததில்லை, அவர்கள் வீட்டுக்கு போகையிலோ அல்லது அவர்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வருகையிலோ...இன்று அவர்களின் சந்ததியும் நாங்களும் அந்தளவு தொடர்பில் இல்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே...எனினும் மனதில் அந்த void/vacuum நிரம்பியுள்ளது....ஸ்கூல் நாட்களில் மதம் என்ற ஒன்றை என்னவென்றே அறியாமல் வாழ்ந்த காலங்களுக்கும் திரும்ப ஆசையுள்ளது...எது கனவாகும், எது நனவாகும் என்பது இறைவனின் விருப்பமே!!


  36. மரா Says:

    நல்லதொரு போஸ்ட்.


  37. என்னைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பு சரிதான்.

    ஒரு பக்கத் தீர்ப்பா இருந்தா...சனம் மறுபடி அடிச்சுக்கிட்டுச் சாகும்தானே?

    இப்ப அவுங்கவுங்க இடத்துலே என்னமாவது செஞ்சுக்கிட்டுப் போகட்டும்.

    இனிமேலாவது அந்த சகிப்புத்தன்மை வருதான்னு பார்க்கலாம்.

    இனிமே சமாதானப் போகலாமுன்னு புது வாழ்க்கையும் புது எண்ணமும் வளர்ந்தாச் சரி.


  38. உங்களை இந்த பதிவு எழுதும் சூழலை உறுவாக்கிய நாய்களை பெரும்பான்மையான இந்துக்கள் ஒதுக்கியது இதே காரணத்திற்கு தானே. மன்னிப்போம் அவ்ர்களை ஏனெனின் நாம் மனிதர்கள்.


  39. அழகாச் சொல்லியிருக்கீங்க.. பாசமோ உரிமையோ முக்கியத்துவம் இளைய சகோதரனுக்குதான். அந்த இடம் முழுமையாக இஸ்லாமியருக்குச் செல்லவேண்டும், அங்கு உலகம் வியக்கும் வண்ணம் ஒரு மசூதி எழும்பவேண்டும் என்பதே பலரைப்போல என் விருப்பமும். ஆனால் சே.! அதெல்லாம் நடக்குற கதையா? தீர்ப்பப் பாத்தீங்கள்ல.?


  40. Karthik Says:

    ரொம்ப நல்ல பதிவுங்ணா.

    Alienation புரிஞ்சுக்க முடியறதங்ணா.ு ஆனா எவ்ளோ தூரம் Justify பண்ண முடியும்னு தெரியலை. It betrays the love (majority of) one community has for another.

    நீதிமன்றங்கள் பிரச்சனை வராதபடியான compromised solution களைத்தான் வழங்கும் போல. உச்ச நீதிமன்றமும் கிட்டதட்ட இதையே செய்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. :(


  41. Karthik Says:

    Hope i didn't say anything wrong.


  42. Anonymous Says:

    Super message, but nizam bhai unga BBA Friend Irukumbola,


  43. பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன.

    இதைவிட நல்ல வரிகளை சொல்லவே முடியாது!

    சவுதி அரேபியாவில் இந்தியச் சகோதரர்களை ,பாகிஸ்தானியர் இப்படிச் சொல்லித்தான் இந்திய வெறுப்பைக்காட்டினர்! அதை நேராகக் கண்டிருக்கிறேன்.

    நமக்கு நாமே வைத்துக்கொண்ட அரசியல் கொள்ளி!

    மிக அழகாக, உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்.


  44. // Karthik said...
    Hope i didn't say anything wrong.

    //

    u never worng for anything ever karthik :)


  45. ஐயோ.... அப்ப நான் ஏதேனும் தப்பாச் சொல்லிட்டேனா.....


  46. // துளசி கோபால் said...
    ஐயோ.... அப்ப நான் ஏதேனும்

    //

    அம்மாஆஆஆஆஆ :)))))


  47. Karthik Says:

    நன்றிங்ணா. :)


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']