காதல் தீவிரவாதம் (லவ் ஜிகாத்)


சமீபத்தில் தமிழகத்தின் வெகுஜன வாரப் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வந்து அதிர்வை ஏற்படுத்தியது.அதாவது இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதத்தைச் சார்ந்த இளைஞர்களிடம் ஹிந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றும்படி மூளைச் சலவை செய்வதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நம்மிடம் இப்படி யாரும் சொல்லவில்லையோ! ஒருவேளை நாம இளைஞர் இல்லையோ என்ற பலத்த சந்தேகம் என் மனதில் எழுந்த அதே நேரத்தில் நான் மணமானவன் என்ற உண்மையும் உறைத்தது.

சரி நம்மதான் கல்யாணமான ஆளு.அதுனால நம்மகிட்ட சொல்லாம விட்டிருக்கலாம். கல்யாணம் ஆகாத பசங்க யாருக்காவது இப்படி தகவல் வந்ததான்னு கேப்போம்னு எனக்குத் தெரிஞ்ச முஸ்லீம் பசங்க ஒருத்தன் பாக்கி இல்லாம கேட்டேன்.ஒரு பயலும் அப்படி யாரும் சொல்லலையேண்ணேன்னு சொல்லிட்டானுங்க.எனக்கோ குழப்பம்.இல்லாமலா இப்படி பத்திரிக்கையில எழுதுறானுங்கன்னு.

அதற்கு விடை இன்னைக்கிதான் தெரிஞ்சது.அப்படி கீழே குடுத்துருக்குற மூணு படத்தையும் நல்லா உத்துப் பாருங்க.










                                           
   

மேலே உள்ள படங்கள் ஆர்குட்டில் உள்ள சில ஜாதி அமைப்புகளின் ஃபோரம். அதில் வேறு ஜாதி இளைஞர்கள் தங்கள் இனப் பெண்களைக் குறி வைத்து கிளம்பி இருப்பதாக செய்தி பறிமாறிக் கொள்கின்றனர்.


ஆக இது இஸ்லாமியர்களை குறி வைத்து மட்டுமல்ல பிற சாதிகளையும், அதாவது ஒரு சாதி தனக்குப் பிடிக்காத பிற சாதிகளின் மேல் திட்டமிட்டுப் பரப்பும் அவதூறு என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

எனது மிக நெருங்கிய உறவுப்பெண் ஃபரிதா கோவையில் உள்ள சத்ரியகுல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திரு.சிவா அவர்களைக் காதல் திருமணம் செய்து இருக்கிறார். நான் அவரிடம் இப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு “உங்களிடம் உங்கள் மத அமைப்பைச் சேர்ந்த யாரேனும் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து அவமானப்படுத்து என்று மூளைச் சலவை செய்தார்களா?” என்று கேட்டேன். மனுஷன் பதறிவிட்டார்.”எனக்குப் பிடித்திருந்தது.அவளுக்கும் பிடித்திருந்தது திருமணம் செய்தோம், இதைத் தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை” என்றார். 

நம்முடைய பதிவர் கேபிள் சங்கரின் மைத்துனி ஒரு இஸ்லாமியரைக் காதலித்து மணம் செய்து இருக்கின்றார்.இருவரும் தற்போது ஈரோட்டில் இருக்கின்றனர்.அந்த அண்ணனிடமும்  இதே கேள்வியைக் கேட்டேன்.நல்லவேளை ஃபோனில் கேட்டேன்.இல்லாவிட்டால் அவர் துப்பிய எச்சில் என் முகத்தில் தெறித்து இருக்கும்.

ஆக எந்த ஜாதி,மத அமைப்பும் தங்கள் இளைஞர்களை பிற சமூகப் பெண்களைத் திருமணம் செய்து அவமதிக்கச் சொல்லிக் குடுக்கவில்லை.அது அவரவர் மனப்போக்கில் இயல்பாக நடக்கின்றது.

பண்டைய சமூகத்தில் நிலம்,கால்நடைகள்,பெண்கள் ஆகியவை உடமைகள்.அதைக் கவர்தல் என்பது பறி கொடுத்தவனுக்கு இழுக்கு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண் என்பவள் பொருள் அல்ல சக உயிர் என்ற நிலைக்கு மாறி இருக்கின்றது.காலத்தால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பினும் அதன் எச்சம் இன்னும் இருந்துகொண்டுதான் இருகிறது.மறையத் துவங்கும் பழம்சித்தாந்தங்களை மீண்டும் பயன்படுத்திப் புரளி கிளப்பி தங்கள் மதத்தை அல்லது ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் ஜாதிய மற்றும் மதவெறியை வளர்ப்பது என்பது கொடுமை. 

மதத் தீவிரவாதத்தை வளர்க்கும் அமைப்புகள் பத்திரிக்கைத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதால் இஸ்லாமியர்களைப் பற்றிய அந்தப் புரளி பத்திரிக்கையில் வந்தது. பிற உயர் சாதியினரிடையே பத்திரிக்கை இல்லாததால் ஃபோரம் மூலம் இந்த வெறி வளர்க்கப்படுகின்றது. அதிலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பு படித்தவர்களே?!?!?......பெரும் கொடுமை.

தேவர்மகன் படத்தின் இறுதிக் காட்சியில் திரு.கமலஹாசன் “இனிமே அடுச்சுக்காதிங்கடா,போய் புள்ள குட்டிங்களைப் படிக்கவைங்க என்பார். இப்போது அந்தப் படத்தை அவர் ரீமேக் செய்தால் “டேய் அடுச்சுக்காதிங்கடா, போய் புள்ள குட்டிங்களை ஸ்கூல்லேந்து கூட்டிவந்து வீட்டுலயே வச்சுக்கங்க” என்று மாற்ற வேண்டி இருக்கும்.

                                                                                                                                                                                             
66 Responses
  1. Venky Says:

    :( r we educated ???


  2. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.




    ஆர்குட்டில் இம்புட்டு சாதிவெறி பிடித்த நாதாரிங்களா??? இதில் சில சகோதரிகளும்


    கருமம் கருமம்


  3. வெங்கி அண்ணா, எனக்கும் அந்த சந்தேகம் வந்திருச்சு. போயி ரெண்டு பேரும் நம்ம டிகிரியைத் திருப்பிக் குடுத்துட்டு மனுஷனா திரும்பி வந்துருவோமா? :))))


  4. Jeeves Says:

    // அதிலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பு படித்தவர்களே?!?!?...... //


    டாக்டரும் படிச்சவங்களும் கூடவா ? என்ன கொடுமை அப்து அண்ணே :( வெட்கம்


  5. நல்ல பகிர்வு. நல்ல பதிவு!


  6. அண்ணே படிப்புக்கும்... இதுக்கும் சம்மந்தம் இருக்கிறமாதிரி தெரியலை...


  7. பத்திரிக்கைகள் விற்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதி விடுகிறார்கள்... அப்துல்லா அண்ணே நைஸ் போஸ்ட்....


  8. Ŝ₤Ω..™ Says:

    “சாதிகள் இல்லயடி பாப்பா..
    குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்..”

    இதெல்லாம் மார்க்குக்குத்தாண்ணே.. நடைமுறையில் கடைபிடிக்க முயன்றா நாமெல்லாம் முட்டாப்பயலுவ..
    அட நீயேண்ணே டென்ஷன் ஆகற?? நம்மை எல்லாம் யாரும் திருத்தமுடியாது..


  9. மாப்ள நானும் அதை பார்த்தேன், ரொம்ப கஷ்டமாயிருந்திச்சி

    மேலும் ... உனக்கு(ம்) தான் தெரியுமே


  10. இது போன்ற தவறான தகவல்களை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சிக்கும் உங்கள் செயல் பாராட்டுக்குறியது...!


  11. நல்ல விஷயம்..! நறுக்குன்னு சொன்னீங்க!

    பெரிய ஒற்றுமை! சில நிமிட இடைவெளியில் இருவரும் பதிவிட்டிருப்பது!

    அது தமிழ்மணத்தில் அடுத்தடுத்து வந்திருக்கு!

    அதைவிடப்பெரிசு....ரெண்டுபேருமே தேவர் மகன் படத்தைத் தொட்டிருக்கோம்...!

    என்ன நடக்குது?


  12. இடுகையின் மையக் கருத்துக்கு வெளியிலான பின்னூட்டம் இது:

    தனிப்பட்ட தகவல்களை இப்படிப் பொது வெளியில் வைக்கலாமா அண்ணே?? :-(


  13. @ பழமைபேசி

    அண்ணா ஒரு திட்டமிட்ட சாதி,மதவெறி ஊட்டப்படுவது தனிப்பட்ட முறையில் நடந்தாலும் அதன் பாதிப்பு பொதுவெளியில் உள்ள அனைவருக்கும்தானே???


  14. இந்தச் சாதிப்பித்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோகாம விடமாட்டானுங்க போலயிருக்குது. கருமம். இந்தக் கருமம் புடிச்சவங்களை நினைச்சா எரிச்சல்ல எங்கியாவது போயி முட்டிக்கலாமான்னு இருக்குது. வேற ஒண்ணும் செய்யறதுக்கும் இல்ல, சொல்றதுக்கும் இல்ல.. முட்டிக்கிறதுக்கு யாராவது கம்பெனி கொடுக்க வர்றீங்களா.?


  15. Cable Sankar Says:

    எனக்கு தெரிந்து சாதி வெறி.. இவர்கள் சொல்லும் இயம் பேசுவர்களிடம் இல்லை.. மற்ற ஜாதிக்காரர்களுக்குதான் அதிகம் இருப்பதாய் படுகிறது.


  16. எனது நண்பரின் தம்பி முஸ்லிம், மணந்த பெண் சென்னையை சேர்ந்த இந்து பெண், திருமணத்தை தடுக்க இரண்டு குடும்பமும் எவ்வளவோ முயற்சித்தார்கள் முடியவில்லை, ஒரு செயின் மற்றும் மாற்றி திருமணம்
    செய்து கொண்டார்கள். திருமணத்திற்காக மதம் மாறச்சொல்லாத அளவுக்கு பண்பட்டவன். இது பற்றி உங்களுக்கு ஏற்கனவே ஒரு மெயிலில் தெரிவித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.மதங்கள் அந்தந்த மண்ணில் தோன்றிய வாழ்க்கை முறை என்பதே என் கருத்து, தேவைக்கேற்ப அவைகளின் வடிவம் மாறும் , உதாரணம் நீங்கள் பின்பற்றும் சூபிசம் என்பது என் புரிதல்.காதலில் ஏமாறும் அளவுக்கு பெண்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத்தெரியாது ஏனென்றால் அனுபமில்லை



  17. மீடியாவும், பத்திரிக்கையும் கையிலே இருக்கு என்பதற்காக என்னா வேணும்னாலும் (பத்திரிக்கை சுதந்திரம்) எழுதலாம்னு நெனப்பு இவ்னுங்களுக்கு. இதெல்லாம் காசுபாக்கவேயன்றி வேறில்லை, த்த்தூ இந்த பொழப்புக்கு ?????

    உண்மைய வெளிச்சம்போட்டு காட்டியதுக்கு ஒரு சபாஷ் மாப்ஸ்


  18. Good one Abdulla...

    aruveruppaaga irukkirathu... intha jaathi veri..


  19. :((


    //எம்.எம்.அப்துல்லா Says:
    31 August 2010 22:27

    வெங்கி அண்ணா, எனக்கும் அந்த சந்தேகம் வந்திருச்சு. போயி ரெண்டு பேரும் நம்ம டிகிரியைத் திருப்பிக் குடுத்துட்டு மனுஷனா திரும்பி வந்துருவோமா? :))))//

    :))


  20. அடப்பாவி ஒரு மும்மீனாக இருந்து கொண்டு ஜிகாத் என்றால் தீவிரவாதம் என்று மொழிப் பெயர்த்திருக்கிறாயே.....

    :)


  21. மரா Says:

    எல்லாம் சர்.நல்ல இடுகை. ஆனால் இந்த ‘orkut’ல ஸ்கிரீன்ஷாட்ஸ் எடுத்துப் போட்டதுதான் என்னமோ போல் உள்ளது. உங்களுக்கும் அவிங்களுக்கும் என்ன வித்தியாசம்? எவிங்களுக்குன்னு உங்களுக்கு தெரியும் :)

    மிக்க தோழமையுடன்
    மரா


  22. //@ பழமைபேசி

    அண்ணா ஒரு திட்டமிட்ட சாதி,மதவெறி ஊட்டப்படுவது தனிப்பட்ட முறையில் நடந்தாலும் அதன் பாதிப்பு பொதுவெளியில் உள்ள அனைவருக்கும்தானே???//

    மகா வெள்ளச் சோளம்ண்ணா நீரு....

    நான் சொன்னது.... நண்பர்கள் சிலரோட பின்னணியப் பொதுவுல வெச்சதைச் சொன்னேனுங்க...


  23. //ஆர்குட்டில் இம்புட்டு சாதிவெறி பிடித்த நாதாரிங்களா??? இதில் சில சகோதரிகளும்


    கருமம் கருமம்//


    சிவா, அடுப்புலருந்து கீழே இறங்குங்க, நீங்க ஏன் தினமும் அதையே நினைச்சு கஷ்டப்படனும்!


  24. அண்ணே! சாதி , மத மறுப்புள்ளவர்கள் திருமண விளம்பரத்திற்கு நான் கொடுத்த அழைப்பு நல்லா ரீச் ஆகுது, தனி ப்ளாக்கா போட்டு தொடரலாம்னு இருக்கேன்! நீங்க ஒரு அட்மின் ஆனா சந்தோசப்படுவேன்!


  25. அப்போ ஃபோர்ம்ல இருக்கிற எல்லோருமே ஜாதி வெறியர்கள்னு சொல்றீஙக்ளா?

    ஒரு டவுட்டுக்கு கேட்டேன்


  26. //இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதத்தைச் சார்ந்த இளைஞர்களிடம் ஹிந்துப் பெண்களை காதலித்து//


    இது ரொம்ப பழசாச்சே!! இதுக்கு vice-versa‍வாயில்ல‌ எனக்கு மெயில் வந்துது!!


  27. Karthik Says:

    எகொசா இது?

    லகான், ரங் தே பசந்தி, மதராசப்பட்டினம் எல்லாம் பார்த்து பிரிட்டிஷ்காரங்களும் இப்படி ஒரு நோட்டீஸ் விடப் போறாங்களாம். :))


  28. சாதிகளைக் குறித்து எனக்கு எவ்விதக் கருத்துமில்லை.

    நீங்கள் தப்பான ஆட்களிடம் கேட்டிருக்கிறீர்கள், அதாவது உண்மையாகக் காதலித்தவர்களிடம்.

    காதலிப்பதாக நாடகமாடி, வீட்டைவிட்டு ஓடிவரவைத்து, ஒரு வாரமோ, பத்து நாட்களோ சேர்ந்திருந்தபின், அவள் கொண்டுவந்த நகை, பணத்தையும் எடுத்துக் கொண்டு, அவளை விட்டுவிட்டு, பின்னர் அப்பெண் குறித்த ஆதாரங்களை(ஃபோட்டோ போன்ற) அழிக்க, அவளின் பெற்றோரிடமும் பெருந்தொகை ப‌றிப்ப‌தாக‌ வ‌ரும் செய்திக‌ளைக் கேள்விப்ப‌ட்டால், அவன் காத‌ல் தீவிர‌வாத‌ம் செய்ப‌வ‌னோ இல்லையோ, ந‌மக்கு தீவிர‌வாத‌த்தைக் கையிலெடுத்தால் என்ன‌ என்று தோன்றும்.

    இவ்விஷயத்தில், படித்த/படிக்காத பெண்கள் என்று பாரபட்சமில்லாமல் குழியில் விழுவது கண்டு வேதனையாக இருக்கிறது.


  29. \\ஒருவேளை நாம இளைஞர் இல்லையோ என்ற பலத்த சந்தேகம் என் மனதில் எழுந்த அதே நேரத்தில் நான் மணமானவன் என்ற உண்மையும் உறைத்தது//
    காமடி?
    //எம்.எம்.அப்துல்லா Says:
    31 August 2010 22:27

    வெங்கி அண்ணா, எனக்கும் அந்த சந்தேகம் வந்திருச்சு. போயி ரெண்டு பேரும் நம்ம டிகிரியைத் திருப்பிக் குடுத்துட்டு மனுஷனா திரும்பி வந்துருவோமா? :))))//
    அதே தான் அண்ணே



  30. mkr Says:

    இந்துத்துவா சக்திகள்தான் இந்த மாதிரி அஜெண்டா வைத்து இருக்கிறார்கள்.இதை சில அமைப்புகள் சுட்டிகாட்டியதை திசை திருப்ப இந்துத்துவா சக்திகள் ஊடகங்களை பயன்படுத்தி இந்த மாதிரி செய்திகளை பரப்பி விட்டனர்.


  31. இதுக்கு முன்னால இதுமாதிரி ஹைதராபாத்திலேசொன்னான்னுங்க இப்ப தமிழ்நாட்டிலயா .இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா


  32. Anonymous Says:

    //வட இஸ்ரேலிய யூத நகரம் Safed இல், யூதப் பெண்களை எச்சரிக்கும்சுவரொட்டிகள் காணப்படுகின்றன. "அரபுக்களை காதலிக்கும் அப்பாவி யூத நங்கைகள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், விபரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும்" இந்த போஸ்டர்கள் பகிரங்கமாக இனவாதம் பேசுகின்றன. நாசிச ஜெர்மனியிலும் இதே போன்ற போஸ்டர்கள் யூதர்களுக்கு எதிராக ஒட்டப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொரு யூதநகரமான Pisgat Zeev இல், 35 இளைஞர்களைக் கொண்ட விழிப்புக் குழுவொன்று இயங்கிவருகின்றது. “Fire for Judaism” என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர் பட்டாளம் நகர தெருக்களில் ரோந்து செல்கின்றனர். தெருக்களில் எங்காவது அரபு ஆண்களுடன், யூதக் கன்னிகைகள் காணப்பட்டால் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனர். இருப்பினும் தாம் அரபு இளைஞர்களை தாக்குவதில்லை என்றுஇவர்கள் கூறினாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள்இடம்பெற்றுள்ளன.//http://kalaiy.blogspot.com/2009/09/blog-post_27.html

    இந்த வரியையும் படியுங்கள்.. இந்த சிந்தனைதான் இங்கும் பரவி வருகிறது ரொம்ப வேதனையான ஒன்று..

    நன்றி

    அகதியானவன்


  33. @ அண்ணன்கள்

    ஜீவ்ஸ்
    அபிஅப்பா
    ராகவன் நைஜீரியா
    சுகுமார் சாமிநாதன்
    சென்

    நட்புடன் ஜமால் - நீ கூட வேற்று மதத்தில் பெண் எடுத்தவந்தான்.உன்னைய யாரும் மூளை சலைவை செஞ்சாங்களா என்ன??

    தமிழ் அமுதன்

    சுரேகா - :))

    பழமைபேசி - அண்ணா சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுவிட்டுதான் எழுதினேன்.


    ஆதிமூலகிருஷ்ணன்
    கேபிள்சங்கர்

    குடுகுடுப்பை - அண்ணா நீங்கள் ஏற்கனவே சொன்ன விஷயம்தான். படிக்காத மனிதர்களைவிட படித்த நாய்கள்தான் சாதி,மத வெறியில் ஊறித் திளைக்கிறது.

    உண்மைத்தமிழன் - படிச்சா மட்டும் பத்தாது.எதாவது சொல்லிட்டு போகணும் :))

    மாப்பிள்ளை மாலிக்
    இனியா
    எம்.எஸ்.கே

    கோவியார் - அண்ணா நான் மொழி பெயர்க்கவில்லை. அந்த பத்திரிக்கையில் வந்த தலைப்பை அப்படியே போட்டிருக்கின்றேன் :)

    மரா

    வால்பையன் - சிவாவுக்கு நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க :)

    கார்க்கி - நிச்சயமா.என்னைக்கு நம்ம ஆளு என்று ஒதுங்கிவிட்டோமோ அன்றைக்கே நாம் அருவருப்பானவர்கள்தான்.இதில் என்ன சந்தேகம்??

    சகோதரி ஹூசேனம்மா - அந்த மெயில் எனக்கும் வந்தது. இப்படி ஒவ்வொரு ஜாதியும் தனக்கு எதிரான ஜாதிகளின் மேல் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றது.அதை ஆதாரத்தோடு ஸ்கிரீன் ஷாட் போட்டுருக்கேன். ஆனால் உண்மையில் எந்த சாதி,மத அமைப்புகளிடமும் அப்படி ஒரு அஜெண்டா இல்லை. தங்கள் இன இளைஞர்களுக்கு சாதீய வெறியூட்ட சம்மந்தப்பட்ட அமைப்புகளே திட்டமிட்டு பரப்பும் செயல் இது.

    அதே போல உங்களது இரண்டாவது பின்னூட்டத்தோடு 100% ஒத்துப்போகின்றேன்.

    --------

    ஆறுமுகம்
    டாக்டர்.புருனோ
    எம்.கே.ஆர்

    ஜெய்லானி - :))

    அனானிமஸ்

    தங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.


  34. R Gopi Says:

    இதப் பற்றிப் பெரிசா எதுவும் தெரியாது. அதனால் அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கறேன்.

    போன் பண்ணா போன எடுக்கணும். இல்லன்னா இருக்குற (?!) கொஞ்ச நஞ்ச வாசகர்களும் எஸ்கேப் ஆய்டுவாங்க:)


  35. கோபி அண்ணா,எனக்கு ஒரு SMS தட்டி விடுங்க :)


  36. மாப்ள அழுதுறுவேன் அவ்வ்வ்வ்வ்வ்

    சட்டையே நமக்கு சலவை கிடையாது

    இதுல மூலையா


  37. ஏற்கனவே உண்மைக்காதல் செத்துக்கிட்டு இருக்கு இதுல இவனுங்க வேற பொய்பீதிய கிளப்புறானுங்களா?


  38. நல்ல வேளை நான் அஞ்சாப்பு பெயிலு... இல்லையினா எனக்கும் ஜாதி வெறி வந்திருக்கும் :)


  39. @வால்

    நீங்க ஈஸீயா சொல்லீட்டீங்க
    :)))))))


  40. அண்ணே : நல்ல இடுகை....


  41. அப்துல்லா அண்ணே,

    //நாம இளைஞர் இல்லையோ என்ற பலத்த சந்தேகம் என் மனதில் எழுந்த அதே நேரத்தில்//

    பல நேரங்களில் நீங்கள் இளைஞர் தான் என்று மக்கள் முன்னர் நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.

    சகோதரி ஹுஸைனம்மாவின் இரணடாவ்து கருத்தை நான் 100% ஏற்றுக் கொள்கிறேன்.

    பத்திரிக்கையை சாடினால் எழுத்து சுதந்திரம் பாதிக்கிறது என்று சொல்லும் பத்திரிக்கைக்காரர்கள் பல நேரங்களில் மனித சுதந்திரத்தையும், நேர்மையையும், நாகரீக வாழ்க்கை தரத்தையும் மதிப்பதில்லை அல்லது பாதுக்காப்பதில்லை. சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் இந்த துறையை தேர்ந்தேடுத்து மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


  42. கிரி Says:

    //வெங்கி அண்ணா, எனக்கும் அந்த சந்தேகம் வந்திருச்சு. போயி ரெண்டு பேரும் நம்ம டிகிரியைத் திருப்பிக் குடுத்துட்டு மனுஷனா திரும்பி வந்துருவோமா? :)))//

    அப்துல்லா பெரிய ஆளு.. டிகிரி படிபெல்லாம் படித்து இருக்கீக ;-)


  43. நம்ம நாட்டிற்குள் இருக்கும் வரைதான், இந்த ஜாதி மதமெல்லாம். வெளிநாட்டில் இரு இந்தியர்கள் சந்தித்துக் கொள்ளும் போது, இந்தியன் என்கிற பாச உணர்வு மட்டுமே மேலோங்கியிருப்பதாகத் தான் தோன்றுகிறது. கவிஞர் மு.மேத்தா அவர்களின் பெண் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு இருக்கும் எங்கள் மகன் குடும்பத்துடன் சகோதரப் பாசத்துடன் பழகுவதாக அறிந்து உண்மையிலேயே பெருமையாக இருந்தது......


  44. "சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் பாரதி அந்த பாப்பாக்கள் பாட்டிகளாகியும் இன்னும் சாதி ஒழியவில்லை " அப்பிடின்னு எங்கேயோ படிச்சது தான் நினைவுக்கு வருது..... இப்ப போற போக்க பார்த்த இந்த பாட்டிகளோட பேத்திகள் பாட்டியானலும் கூட சாதி ஒழியாது போல இருக்கே....



  45. //போயி ரெண்டு பேரும் நம்ம டிகிரியைத் திருப்பிக் குடுத்துட்டு மனுஷனா //

    எத்தன டிகிரி... 90 ஆ, 180 ஆ, 360 ஆ....???



    //ஒருவேளை நாம இளைஞர் இல்லையோ என்ற பலத்த சந்தேகம் ///

    கேபிளோட ரொம்ப பழகாதீங்க.... யூத், யூத்னு நினைக்க வைத்து புலம்ப வைப்பார்.....


  46. சாதி வெறிக்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... உதா. கமல் பெரிய பகுத்தறிவாளன், அறிவு ஜீவிபோல் காட்டிக்கொள்வான்.... ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை எப்போதுமே கொச்சைபடுத்துவான்... அவன்லாம் படிச்சவனா??? ‍‍ப‌திவில் க‌ம‌ல் வ‌ந்ததால் இந்த‌ கேள்வி??? விவாதிக்க‌ விரும்ப‌வில்லை....


  47. //படிக்காத மனிதர்களைவிட படித்த நாய்கள்தான் சாதி,மத வெறியில் ஊறித் திளைக்கிறது.////


    நீங்களும் நானும் த‌ஞ்சாவூர் பேஸ்.... அதான் இந்த‌ மாதிரி ந‌மக்கு தெரிஞ்ச‌துதான் உல‌க‌ம்னு ந‌ம்புறோம்... கொஞ்ச‌ம் ம‌துர‌, திருநெல்வேலிக்கார‌ங்க‌ இத‌ ப‌த்தி க‌ருத்து சொன்னா தேவ‌லாம்


  48. Dr.Rudhran Says:

    நானும் இம்மாதிரி கீழ்மைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    அப்புறம் ருத்ரன் என்று ஒருவன் எழுதுவது பார்த்தேன்.
    என் பெயரில் எவன் எழுதினாலும் அது நான் எழுதியதாய் ஆகாது, என் அப்பாவுக்கு நான் மட்டுமே பிறந்தவன்.


  49. அப்துல்லா, ஸ்கிரீன் ஷாட்டில் உள்ள உரையாடலை படித்தால் எவ்வளவு வன்மம் கொட்டி வைத்திருப்பதாகப்படுகிறது. எப்படி இத்தனை வன்மங்களையும், வெறுப்பையும், முட்டாள் தனங்களின் கூறுகளையும் இந்தியா கடத்திக் கொண்டே பிணைந்து இருக்கிறது. இத்தனை நடிப்புகளும் எத்தனை நாளுக்கு கடத்திச் செல்லப்படப் போகிறது.

    நினைக்கவே திகிலா இருக்குதுங்கோவ்! பகிர்ந்துகிட்டது நன்றி...


  50. Radha Says:

    முதல் முறையா உங்கள் எழுத்துக்களை படிக்கிற.. நீங்க ஒரு விஷயத்த பத்தி உங்க கருத்துக்களை சொல்றதுக்கு முன்னாடி அந்த விஷயததொட ஆதேண்டிசிட்டி செக் பண்றீங்களா??? இந்த போஸ்ட் ல ஒரு டாக்டர்னு சொல்லி இருக்கீங்க..அத நெசமா அவர் தான் எழுதினார்னு உங்களுக்கு 1௦௦% தெரியுமா? ஏன் அந்த பேர்ல வேற யாராவது எழுதி இருக்க கூடாது? ஓர்குட் போன்ற நெட்வொர்கிங் சைட் ல பிரபலமானவங்க பேர்ல இந்த மாதிரி தப்பான விஷயத்த பரபுரவங்க எராளமான பேர் இருகாங்க.. பிரபலங்க பேர்ல சொன்ன மத்தவங்க நம்புவங்கன்னு அவங்களுக்கு தெரியும்.. இது உங்களுக்கும் கண்டிப்பா தெரியும்..அப்படி இருக்க விஷயத்தோட உண்மைத்துவம் தெரியாம அத உங்க ப்ளாக் ல எழுதுறது ரொம்ப பெரிய தப்பு நு நெனைக்கிறேன் .. ஏன்னா டெய்லி உங்க எழுத்துகளை படிகனும்னே நெறைய பேர் இருகாங்க..அவங்கள கரெக்டா வழிநடத்தி செல்ற பொறுப்பு உங்க எழுத்துக்கு இருக்கு...எல்லாருக்கும் எழுதுற வரம் கிடைகள..உங்கள மாதிரி சில பேர்க்கு அது இருக்கும் பொது அத நல்ல விஷயங்கள பகிர்ந்துக்கிறதுல பயன்படுதுநீங்கன்ன எங்கள போன்ற சாதர்ணமனவங்களுக்கு உதவியா இருக்கும்..

    ராதா ராமமூர்த்தி


  51. ivanungala ellaam nadu rottula vachchi kallaala adikkanum


  52. appurom antha jihaath inge varalaamaa...? oru doubt athaan


  53. //Blogger ஸ்வாமி ஓம்கார் said...

    நல்ல வேளை நான் அஞ்சாப்பு பெயிலு... இல்லையினா எனக்கும் ஜாதி வெறி வந்திருக்கும் :)//

    நான் அஞ்சாப்பு பாஸ்...அப்ப எனக்கு ஜாதிவெறி உள்ளதா?

    மதவெறி கொண்ட கும்பல் பதிவு எழுதும்..அதில் இது போன்ற பதில்..
    மதமும் ஜாதியும் ஒன்றா?மதத்தை ஒழித்தவன் ஜாதியைப் பற்றி பேசலாம்.
    பின் குறிப்பு:அப்துல்லாவிற்கு வணக்க்ம்.


  54. அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

    வ ஸலாம்
    அன்னு


  55. @ மதிப்பிற்குறிய ருத்ரன்சார் மற்றும் ராதா


    நான் குறிப்பிடுவது நிச்சயம் தங்களை அல்ல. அது நீங்கள் அல்ல என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் சொன்னது அதில் உள்ள மருத்துவராய் உள்ள மற்றொரு நபரை.அவரை பதிவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அங்கு ருத்ரன் என்ற பெயரும் இருப்பதால் அது நீங்கள் அல்ல என்று நான் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.அவசரத்தில் நிகழ்ந்த பிழை.பகிரங்க மன்னிப்புக் கோருகின்றேன்.


  56. Raa... Says:

    நன்றி


  57. அண்ணே,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!


  58. என்ன அப்துல்லாஹ் பாய்,

    ஈத் முடிஞ்சும் ஆளையே காணம்? பிஸியா?


  59. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html


  60. curesure4u Says:

    நண்பரே ..உண்மை நீங்கள் சொன்னது ..பொய் பரப்படுகிறது ..ஆனால் ஈமானில் உறுதி இருந்தால் அந்நிய ஆணுடன் உறவு வருமா ?

    ..மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும் (அல் குரான் )..

    http://ayurvedamaruthuvam.blogspot.com/


  61. என்னண்ணே! மாசம் ஒரு பதிவு போட்டா போதும்னு இருக்கீங்களா? பின்னூட்டம் மட்டும் அங்கங்க தெரியுது?! அடிக்கடி எழுதுனாத்தானே எங்களுக்கும் பசியாறத் தோதா இருக்கும்!


  62. siva Says:

    mee the first.....


  63. அப்துல்லாஹ் பாய், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
    http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']