இதைப் படிக்கும் முன்பு சாம்ராஜ் எழுதிய இந்த அருமையான இடுகையைப் படித்துவிட்டு வாருங்கள்.
நண்பர் சாம்ராஜின் அந்த இடுகை சொல்லும் சேதிகள் எத்தனை எத்தனை..
நல்லவேளையாக எனக்கு என்னுடைய குடும்பப் பாரம்பரியம் கிட்டத்தட்ட எட்டு தலைமுறைகளாகத் தெரிந்திருக்கின்றது.அதாவது என் மகள் துவங்கி அதற்கு முன்னாள் உள்ள ஏழு தலைமுறை மூத்தோர்கள்.
என் மகள்களின் தந்தையான அப்துல்லாவாகிய நான்,என் தந்தையார் இஸ்மாயில், அவர் தந்தையார் காதர் பாட்சா, அவரது தந்தையார் முகமது இப்ராஹிம்,அவரது தந்தையார் நத்தர் சாஹிப்,அவரது தந்தையார் சையது அப்துல்காதர்,அவரது தந்தையார் கருப்பையா ராவுத்தர்.இதில் இந்த கருப்பையா ராவுத்தர் பிறப்பால் கருப்பையாத் தேவராக இருந்தவர்.ஒரு விவசாயியாக அமைதியான எளிமையான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தவர். குற்றப் பரம்பரைச் சட்டம் வந்தபோது அதில் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீள்வதற்காக இஸ்லாமியராக மதம் மாறியிருக்கின்றார்.இவர் மட்டுமல்ல புதுக்கோட்டை,சிவகங்கை,இராமநாடு,விருதுநகர்,மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று உள்ள இஸ்லாமியர்களில் பலரும் இதே காரணத்திற்காக அன்று மதம் மாறியவர்களே.
மதம் மாறிய கிருஸ்துவர்கள் இன்னமும் மோசஸ் பிள்ளை, செபஸ்டியன் நாடார்,மைக்கேல் உடையார் என்று சாதிய அடையாளங்களைத் விடாமல் தொடரும் நிலையில்,மதம் மாறிய இஸ்லாமியர்கள் முற்றிலும் தங்கள் ஜாதி அடையாளங்களைத் துறந்துவிட்டனர்.கடற்கரை ஓரப் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மீனவ(செம்படுவ) சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் வந்தவர்கள்.தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். வடக்கு மாவட்ட இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் குடுத்தல் எடுத்தல் உண்டு.சரி இதை விடுவோம். மீண்டும் என் பரம்பரை அடையாளத்துக்கு வருகின்றேன்.
அந்த கருப்பையா ராவுத்தரின் உடன்பிறந்தவர்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை.அதேபோல சையது அப்துல்காதர் மற்றும் அவரது மகன் நத்தர் சாஹிபின் உடன் பிறந்தவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
முகமது இப்ராஹிமின் உடன் பிறந்தோர் காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர்( இதில் காதர்மீரா ராவுத்தர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எம்.எல்.சி யாக பதவி வகித்தவர்.இவர் மறைவிற்குப்பின் அவரது நேரடி வாரிசுகள் மைனர்களாக இருந்ததால் அந்தப் பதவி வாரிசு பதவியாக என் தந்தையின் தந்தை காதர் பாட்சா ராவுத்தருக்கு வந்தது.அவர் மறைவிற்குப்பின் என் அப்பா மைனராக இருந்ததால் அப்பாவின் சித்தப்பா முகமது பாவாவிற்கு சென்றது. இவர் பதவியில் இருந்தது 2 ஆண்டுகள் மட்டுமே.காரணம் அப்போது தனி நாடான புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைந்து இந்தியன் யூனியனில் அங்கமாகிவிட்டது) மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர்.பெண் வாரிசுகள் மூன்று பிறந்து சிறு வயதிலேயே இறந்துவிட்டன.
இப்போது அண்ணன் தம்பிகளான முகமது இப்றாஹிம் ராவுத்தர்,காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல்ரகுமான் ராவுத்தர் ஆகிய இந்த மூன்று பேரின் வழித்தோன்றல்களான நாங்கள் 216 பேரும் (இதில் சமீபத்திய வரவு அபுதாபில் உள்ள என் சித்தப்பா மகனுக்கு 2 மாதம் முன்பு பிறந்த பெண் குழந்தை.சமீபத்திய மறைவு என் அப்பாவின் சித்தப்பாவும் 1940 களில் சென்னை மாகாண ரஞ்சி கிரிக்கெட் அணி வீரருமான தாத்தா நத்தர் சாஹிப் ) இன்று வரை ஒருவொருக்கொருவர் ஒருவர் நல்ல தொடர்பில் உள்ளோம். ஏதேனும் விஷேசங்கள் என்றால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் ஒன்றுகூடி விடுவோம்.
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.இது மட்டும் போதும் என்று நிறுத்திவிட்டேன். இதில் என் அம்மாவிற்கு மிகவும் வருத்தம்.காரணம் பரம்பரையின் பெயர் சொல்ல எனக்கு ஆண் வாரிசு இல்லாமல் போய்விட்டதாம்.வாழ்க்கையில் சாதித்த காலம்போய் வாழ்வதே சாதனையாகிவிட்ட இன்றைய நாளில் வாரிசு என்பது ஆணா?பெண்ணா? என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
சரி நமது மூதாதையர்கள் மற்றும் ஒன்றாம்,இரண்டாம்,மூன்றாம் தலைமுறைப் பங்காளிகளை,பெண் குடுத்த வகையில் வரும் சொந்தங்களைத் தெரிந்து வைப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். பரம்பரையாக இத்தனை பேர்களை நினைவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் சோழ வம்சம் அல்ல.கருப்பையா ராவுத்தர் காலம் துவங்கி இன்று வரை ஒரு சாதாரண குடும்பம்தான். ஆனால் இத்தனை ஆண்டு வரலாறு எனக்குச் சொந்தம் எனும்போது எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணம். நமது வேர்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதில் இது ஒரு பெரும் பயன்.
வரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரம் அல்ல... அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்.
டிஸ்கி : என் பெயரும், என் மூதாதையர் பெயரும் என் தலைமுறைக்கு செல்ல வேண்டுமென்பதே என் எண்ணம். அதற்காக ஒரு குடும்ப ஆவணப் புத்தகம் தயாரிக்கும் முயற்சியில் உள்ளேன். இதை தற்போது கெனி (Geni) எனும் தளம் அருமையாக செய்து வருகிறது. அதன் மூலம் கொஞ்சம் நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அறிவதோடு குடும்ப உறுப்பினர்களைப் பதிந்து வைக்கலாமே.



சூப்பர் அப்து, இத்தனை தலைமுறைப் பெயர்கள் தெரியுமா...
www.geni.com/ என்ற லிங்க் கொடுங்கோ.. :-))
பரம்பரை ரகசியங்களை வீட்டோட வச்சுக்கணும்.. அஸ்ஸலாமு-அலைக்கும்
//நேரடி வாரிசுகள் மைனர்களாக இருந்ததால் //
அண்ணே நீயும் மைனர்தானே...உனக்கு அந்த பதவி இல்லை என்றாலும் அட்லீஸ்ட் எம் எல் ஏ பதவியாவது வாங்கிடு:)))
தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள்
/\*/\
இதுக்கு மட்டும் என்ன காரணம் என்று அடியேனுக்கு புரியவில்லை
எங்க வீட்டு மூலபத்திரத்தை எடுத்தா அதுல அம்புட்டு விவரம் இருக்கு... அதை ஸ்கேன் செஞ்சு வெச்சிக்கனும், அப்பதான் தெரியும்.
அண்ணே,
ஏற்கனவே ஒருக்கா கருப்பையா தேவர் பேரு வரைக்கும் எழுதியிருந்த. இப்ப இன்னும் கனமா இருக்கு இந்த போஸ்ட்.
நல்ல பதிவு. ஏற்கனவே எம்.எல்.சி எல்லாம் இருந்த குடும்பம். சீக்கிரம் அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கட்டும்.
அன்று அரசர் காலம் தொட்டு இன்றுள்ள ஆட்சியில் இருப்பவர் வரைக்குமுள்ள பரம்பரையை பற்றியே சிந்தித்தும் அது பற்றி பாடபுத்தகத்தில் படித்தும் வரும் சாமானியனுக்கு இந்த பதிவு ஒரு நூதன சவுக்கடி. நாம் நினைப்பது போல்தானே நம் முன்னோர்களும் நினைத்திருக்க கூடும்.
நிச்சயம் நம் சந்ததியினர் இலகுவாக புரிந்துக்கொள்ள வசதிஏற்படுத்திவைக்க வேண்டும்
தம்பி..
நீ பரவாயில்லை..
என் பரம்பரைல என் தாத்தாவோட பேர் மட்டும்தான் எனக்குத் தெரியும்..! அவுக கூட பொறந்தவங்க லிஸ்ட்டெல்லாம் ம்ஹூம்..!
நீயொரு லக்கி கய்..!
"தாத்தாவின் அப்பா பேர் தெரியுமா??"/ தெரியாது, இது ஒரு கொலைக் குத்தமா?
தெரியும்? அதுக்கென்ன இப்போ?
கலக்கீட்டீங்க அப்துல்லா அண்ணே. அது சரி, எதுக்கு இந்த பின்னூட்ட மட்டுறுத்தல். கேபிள் அண்ணனும் புதுசா ஆரம்பிச்சிருக்காரு, நீங்களும் ..... இன்னா மேட்டரு
ஏன் உ.த.. இங்கிலீசு.. தமிழன்னு பேரு வச்சிட்டு.. ஓகே ரைட்ட்.. அண்ணே.. நல்ல கனமான பதிவு..
கேபிள் ராவுத்தர்.
//வாழ்க்கையில் சாதித்த காலம்போய் வாழ்வதே சாதனையாகிவிட்ட இன்றைய நாளில் வாரிசு என்பது ஆணா?பெண்ணா? என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. //
வாஸ்தவம் தான். ஆனால், பரம்பரையைப் பற்றிச் சொல்லும்போது நீங்க உங்க அப்பா வழிப் பரம்பரையைப் பற்றித் தானே சொல்றிங்க, அம்மா வழியை இல்லையே. எட்டுத் தலைமுறை கண்ட பரம்பரையைப் பற்றி அடுத்துச் சொல்ல ஆள் இல்லாமல் போகுமே என்ற கவலை அவருக்கு.
எனக்கு வெக்கமா இருக்கு அப்பு. அப்பாக்கு திதி செய்யறப்ப மட்டும்தான் மூதாதையர் பெயர் கேட்டுக்கறேன் நான்..
அதுவும் ஒவ்வொரு வருஷம் செய்யறப்பவும் மறந்து வேற போய்டுது... ப்ச்...
ஒரு உண்மையைச் சொல்லவா? 2002ல் Ancestry.com ல் ஆரம்பிச்சேன், ஒரு 340+ மக்களை உறவுகளா கண்டுபுடிச்சு, அவுங்க வாரிசைய எல்லாம் ஒரு இ-குழுமத்துல சேர்த்து இன்னார் இன்னாருன்னு மடல் போட்டு சேர்க்கப் பார்த்தேன். ஒன்னும் விளங்கல. இப்போ அந்தக் குழுவுல எத்தனை பேர் செயல் முறையில இருக்காங்க தெரியுமா? யாருமே இல்லே. செயல் முறையில இருந்தவங்க எல்லாம் அலைபேசியில பேசிட்டு இருக்கிற மக்கள்தான். அப்புறம் எதுக்கு குழுவுன்னு சொல்லிட்டாங்க. அந்த பாதிப்புல எழுதின கதைதான் ஆணிவேர் . இப்போ சொல்லுங்க, இந்த Internet உறவுகளை கொண்டு வருமா(நட்புகளை இல்லை)
தூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.
ரஹ்மான் ராவுத்தர்( இதில் காதர்மீரா ராவுத்தர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எம்.எல்.சி யாக பதவி வகித்தவர்
நீங்க என்ன பதவி வகிக்கிறீங்க..?
இன்று வரை ஒருவொருக்கொருவர் ஒருவர் நல்ல தொடர்பில் உள்ளோம்.
இதுக்கு பிடிங்க 4 இச்..இச், இச், இச்..
வாழ்க்கையில் சாதித்த காலம்போய் வாழ்வதே சாதனையாகிவிட்ட இன்றைய நாளில் வாரிசு என்பது ஆணா?பெண்ணா? என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
நல்லா சொல்லுங்க.
மொத்ததில் இந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள் தம்பி.
// உடன்பிறப்பு said...
தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள்
/\*/\
இதுக்கு மட்டும் என்ன காரணம் என்று அடியேனுக்கு புரியவில்லை
//
நாகூர் ஆண்டவர் தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும்,அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம்,கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம்,மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக இஸ்லாமியர்கள் இருப்பதன் காரணம் இதுதான்.அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமணஇல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.
// தராசு said...
எதுக்கு இந்த பின்னூட்ட மட்டுறுத்தல். கேபிள் அண்ணனும் புதுசா ஆரம்பிச்சிருக்காரு, நீங்களும் ..... இன்னா மேட்டரு
//
நாட்டுல வக்கிரம் புடிச்சவன் நிறையபேரு இருக்காண்ணே,என்ன செய்றது???
விரிவான விளக்கத்துக்கு நன்றிங்க தோழர்
/\*/\
நாட்டுல வக்கிரம் புடிச்சவன் நிறையபேரு இருக்காண்ணே,என்ன செய்றது???
/\*/\
என்னங்க இது அக்கிரமா இருக்கு
நல்ல பதிவு அப்துல்லா.
நான் பிறந்த வடகரையில் இஸ்லாமியரும் தேவரும் கொடுங்கல் வாங்கல் செய்வர். அதனால் என் சித்தப்பா அல்லது மாமாவோ ஒரு இஸ்லாமியராக இருப்பர். ஆகவே எங்களுக்கு தீபாவளியும் உண்டு ரம்ஜானும் உண்டு.
@ சகோதரிகள்
விக்கி
விதூஷ் - :)))
@ சகோதரர்கள்
குசும்பன் - யோய் அந்த மைனர் இல்லய்யா :)))
ஜோசப் பால்ராஜ்
அப்துல் மாலிக் - நல்லாருக்கானா பய?
உண்மைத் தமிழன்
இளா
கேபிள் சங்கர் - நன்றி, இப்படிக்கு, அப்துல்லா ஐயர் :))
கேவிஆர் - 100% உண்மை நீங்க சொல்றது :(
பரிசல்
காவேரி கணேஷ் அண்ணன்
வடகரை வேலன் - அண்ணாச்சி மதுரை பக்கத்து கிராமங்களில் இரு சமூகமும் சீயான் முறை சொல்லி அழைப்பதை நேரில் பார்த்து இருக்கின்றேன்.
தங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
வியக்கச் செய்திருக்கிறீர்கள் அப்துல்.!
வாழ்த்துக்கள் !!!
உண்மை தான்!
நான் மதம் என்ற பதம் இல்லாமல் சாதி ஒழிக்க நினைக்கிறேன்!
அருமை அப்துல்லா!!
மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது..
பகிர்வுக்கு நன்றி
அண்ணே அந்த தளத்திற்கு சுட்டி தாங்க..
கலக்கறீங்க. நம்ம தலைவருக்கு ட்ரீ போட்டா என்ன ஆகும்னு யோசிச்சேன்
ஒ அப்துல்லா ரொம்ப நல்லா இருக்கு உங்க பரம்பரை விசேஷம் ..எனக்கு என் தாத்தா பேரு தான் தெரியும் ..நீங்க எப்பிடி இவ்ளோ விஷயம் தெரிஞ்சிட்டிங்க ? ஆச்சர்யமா இருக்கு ..
ஏதோ மல்டி லெவல் மார்கெட்டிங் பத்தி பதிவுனு பார்த்தா :)
பிறருக்கு செய் சொல்லுவதை காட்டிலும் நாமே செய்து முன்னுதாரணமாக இருப்பது என்பதை ரசித்தேன்.
s
என் கிராண்ட் பாரண்ட்ஸ் பற்றி எனக்கு தெரியாது காரணம் நான் எளிமையாக வாழ நினைப்பவன்... எதுக்கு நமக்கு கிராண்ட் எல்லாம் :)
///பரம்பரையாக இத்தனை பேர்களை நினைவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் சோழ வம்சம் அல்ல.கருப்பையா ராவுத்தர் காலம் துவங்கி இன்று வரை ஒரு சாதாரண குடும்பம்தான். ///
என்ன அண்ணே இப்படி சொல்லிபுட்ட?? சோழ வம்சம் இன்னைக்கு இருக்கும் இடமே தெரியல.. அப்படியே இருந்தாலும், இன்றைய தலைமுறை சோழனுக்கு உன்ன மாதிரி சரியா சொல்லத் தெரியுமாங்கறது சந்தேகமே..
///எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணம்///
கலக்கிட்டண்ணே..
நானும் எனக்குத் தெரிந்த 3 தலைமுறைக்கு முன் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்...
ம்ம். அருமை. பிரமிப்பாயிருக்கு.
அருமை அண்ணே..!அருமை
உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் வரலாற்று சிறப்பம்சங்களுடன், சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள்.... பகிர்வுக்கு நன்றி.... Geni இப்பொழுது தமிழில் வந்து இருப்பதால், இன்னும் பலர் பயன் அடைந்து கொள்ளலாம்.
அருமையான பதிவு போட்டு இருக்கீங்க அப்பு..! எனக்கு எங்க தாத்தா வோட
அப்பா பேரு தெரியாது ..! ஆனா என் பேரனோட பைய்யனுக்கு என் பேரு தெரியுரது போல வாழனும்னு உங்க பதிவ பார்த்து ஆசை வருது...!
நெகிழ்வு :)
கலக்கல்.
அப்துல்லா,
பரம்பரை குறித்த அழகான இடுகை.
ஸ்ரீ....
//ரி நமது மூதாதையர்கள் மற்றும் ஒன்றாம்,இரண்டாம்,மூன்றாம் தலைமுறைப் பங்காளிகளை,பெண் குடுத்த வகையில் வரும் சொந்தங்களைத் தெரிந்து வைப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். பரம்பரையாக இத்தனை பேர்களை நினைவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் சோழ வம்சம் அல்ல.கருப்பையா ராவுத்தர் காலம் துவங்கி இன்று வரை ஒரு சாதாரண குடும்பம்தான். ஆனால் இத்தனை ஆண்டு வரலாறு எனக்குச் சொந்தம் எனும்போது எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணம். நமது வேர்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதில் இது ஒரு பெரும் பயன்//
ரசித்த வரிகள்
//.. குசும்பன் - யோய் அந்த மைனர் இல்லய்யா :))) ..//
அப்போ நீங்க அந்த மைனர் தானா..??!!
பொறமயாகாவும், வெட்ட்கமாகவும், இருக்கு அப்துல்லாஹ்
லியோ
8 தலைமுறை தெரிந்து உள்ளது நிச்சயம் அதிசியம் தான்..
சிறப்பான பதிவு.
ஸ்வாமி ஓம்கார் said
//என் கிராண்ட் பாரண்ட்ஸ் பற்றி எனக்கு தெரியாது காரணம் நான் எளிமையாக வாழ நினைப்பவன்... எதுக்கு நமக்கு கிராண்ட் எல்லாம் :)//
அலுவலகம் என்று மறந்து சிரித்தேன்.
///எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணம்///
மிகவும் கவர்ந்த வரிகள். என்னிடம் என் தாயாரும், தந்தையரும் பல முறை உறவுகள் (அதாங்க குடும்ப பாரம்பரியம்) பற்றி சொல்லியிருக்கிறார்கள், நானும் என் அண்ணனும் கேட்டு விட்டு, என்னமோ சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல, என்று கூறிவிடுவோம். ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லிக் கொள்வோம்.
//ரஹ்மான் ராவுத்தர்( இதில் காதர்மீரா ராவுத்தர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எம்.எல்.சி யாக பதவி வகித்தவர்//
நீங்கள் தமிழ் நாட்டிற்கே முதல்வராக வர வேண்டும். வருவீங்களா அண்ணே?
அன்று சித்த வைத்தியர் சித்துல்லா
இன்று முதல்வர் அப்துல்லா என்று போஸ்டர் அடிக்கலாம்.
சூப்பர்! ஒரு ஃபேமிலி ட்ரீ படம் ஒண்ணூ வரைங்க!
நல்ல பதிவுண்ணே....
இது வரைக்கும் யோசிச்சே பாத்ததில்லை... அப்பா அம்மாவைக் கேட்டு தெரிஞ்சு வெச்சுக்கணும்..
உண்மைண்ணே.
அருமை அப்துல்லா,
பலருக்கும் அம்மாவீட்டுப்பக்கம் நிறைய்ய விவரங்கள் தெரிந்திருக்கும். அப்பா வீட்டுக்கும் பக்கம் கொஞ்சம் தான். அனைவரும் தன் உறவுகள் பற்றித் தெரிந்துக்கொள்ள முயன்றால் இந்த இடைவெளி குறைந்து உறவுகள் பலப்படும்.
லிங்குக்கு நன்றி
பிறந்தநாள் வாழ்த்துகள் சார்! :-)
ரொம்ப அருமை நான் ரொம்ப நால் நினைத்திருக்கிரென். சென்னை வந்தால் உஙலை சந்திக்கலாமா. உஙகலை பட்ரி கேல்விபட்டிருக்கிரென்
ஆருமுகம்
ஐதராபாத்
அண்ணே : மூதாதையர்கள் பற்றிய நல்லதொரு சுயபுராணம்......
பால்ய வயதில், எனது தாத்தாவுடன் இரவு நேரங்களில் பேசிக்கொண்டுருக்கயில் அவருடைய அப்பா மற்றும் தாத்தா பற்றிய விவரங்களை சொல்ல சொல்லி கேட்பேன்....
சாம்ராஜின் பதிவும் அருமை....
சிறப்பான பதிவுங்க அண்ணே!!
எனக்கும் என் தாத்தா(நாராயணன்), தாத்தாவின் தந்தை(ரங்கசாமி), தாத்தாவின் தாத்தா(பழனிச்சாமி), தாத்தாவின் தாத்தாவின் தந்தை(முத்துசாமி) வரை பெயர்கள் தெரிந்து வைத்துள்ளேன்.
நீங்கள் கூறியது போல இத்தனை தலைக்கட்டுகளுடன் தொடர்பு எல்லாம் இல்லை. ஆனால் குலதெய்வ வழிபாட்டு தினத்தன்று அனைவரும் கூடுவதுண்டு.
நானும் கூட இதைப் பற்றி ஒரு இடுகை எழுதலாம் என்றுள்ளேன்.
//எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை//
பாவம் நண்பா நீங்க..
எல்லா தப்பையும் கஷ்டபட்டு பண்ண வேண்டி இருக்குதா????
எனக்கு தாத்தாவே போட்டோ மூலம் தான் அறிமுகம் அனால் ஒரு உண்மை என்ன வென்றால் மூன்று அல்லது நான்கு தலை முறைக்கு முன்பு என் முன்னோர்கள் ஏதோ ஒரு இந்துகுழத்தில் தான் இருந்திருப்பார்கள்.
எங்கள் வம்சா வழியில் இந்த பிரச்சினை இல்லை.
அருணாசலம் மகன் நமசிவாயம் மகன் அருணாசலம் மகன் நமசிவாயம்.... அதாவது தாத்தா பெயர் பேரனுக்கு என்று வாழையடி வாழையாக வைப்போம்... ஒரு வேளை பெண் வாரிசாக இருந்தால் ஆண் வாரிசு வரை கண்டினியூ பண்ணுவோம்..... அல்லது இன்னொரு கல்யாணம் செய்வோம்....
அதனால் எனக்கு பதினாறு அல்லது முப்பத்திரென்டு தலைமுறை பேர் மட்டும் தெரியும்.... அருணாசலம்... அல்லது நமசிவாயம்..... அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாது
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/
உங்கள் வரலாற்றை வணங்குகிறேன்.