நாளிதழ்களுடனான எனது நினைவு தினத்தந்தியுடனேதான் துவங்குகின்றது.காலையில் வீட்டிற்கு வரும் தினத்தந்திக்கான எனது காத்திருப்பு 28 வருடங்களாக இன்றும் தொடருகின்றது. கன்னித்தீவு ஏற்படுத்திய ஆர்வம்தான் இந்த நொடிவரை எனது வாசிப்பிற்கும்,கற்பனைக்குமான வித்தாக இருக்கிறது. வட இந்திய நடிகைகள் மட்டுமல்ல வடக்குபட்டி கோயிந்தசாமிக்குக்கூட தமிழை அறிமுகம் செய்வது இன்றும் தினத்தந்திதான்.
உலகில் எந்த ஒரு சிக்கலான விஷயமும் மொழி ஆளுமை கைகூடும்பட்சத்தில் சொல்வதற்கும்,புரிதலை ஏற்படுத்துவதற்கும் மிகவும் எளிதாகிவிடும்.அரை நூற்றாண்டு கடந்து இன்னமும் அதன் ஆசிரியர் குழுவினருக்கு அதில் வரட்சியே இல்லை என்பது பெரும் ஆச்சர்யம்.சக மனிதன் ஒருவன் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து வெத்தலை,பாக்கு போட்டுக்கொண்டு நம்மோடு அரட்டை அடிக்கும் தொணி தினத்தந்தி நமக்குள் ஏற்படுத்தும் ஒரு சுகானுபவம்.
சமீப நாட்களாக தினத்தந்தியில் தலையங்கமும் வரத் துவங்கி இருக்கின்றது.செய்திகளை மட்டும் மக்கள்முன் வைத்துவிட்டு தன் கருத்துக்களை வெளியில் சொல்லாமல் இருந்துவந்த தினத்தந்தியின் பாணி இதன் மூலம் சற்றே மாறுகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை விவசாயம்,தொழிற்சாலைகளின் உற்பத்தி,ஏற்றுமதி,இறக்குமதி வணிகம்,இயற்கை வளங்கள்,உட்கட்டமைப்பு,தங்கம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு,மக்கள்தொகை,சுகாதாரம்,கல்வி என்று எத்தனையோ காரணிகள் சேர்ந்துதான் நிர்ணயிக்கின்றன. நான் பொருளாதாரம் படித்தவன்.ஆனால் தினத்தந்தி போல எளிமையாக விளக்கத் தெரியாதவன்.இதற்கு மேலும் சொல்லிகொண்டு இருந்தால் போர் அடிக்கும்.போதும் நிறுத்திக்குவோம்.
தினத்தந்தி தலையங்கம் எழுதுவதை அதன் கால்நூற்றாண்டு வாசகனாய் பெரிதும் வரவேற்கின்றேன்.ஆனால் ஒரு செய்தியை அல்லது விஷயத்தைத் தலையங்கத்தில் தன் கருத்தாய் முன் வைக்கும்போது அதன் உண்மைநிலை சிறிதும் மாறாமல் இருப்பதை அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு பலமுறை உறுதிப்படுத்தி வெளியிட்டு விற்பனையில் இன்னும் பல நூற்றாண்டுகள் சரித்திரம் படைக்க தந்தியை வாழ்த்துகின்றேன்.
டிஸ்கி : நீண்ட நாட்களாக பதிவர் நாண்பர்கள் ஜெய்ஹிந்துபுரம்,சகோதரி நாஸியா,கேபிள் சங்கர்,முரளி கண்ணன்,தாமிரா மற்றும் சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்.

தூக்க சாமி
//சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்//
இப்பவே கண்ண கட்டுதே
ஆகட்டும்டா தம்பி ராஜா..நடத்து ராஜா..
சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்.
//
வாசகர் கடிதமா??
ம் நடத்துங்க ::)
கன்னித்தீவு ஏற்படுத்திய ஆர்வம்தான்
//
இன்னும் முடியலையா தம்பி???
/
“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் நிர்ணயிப்பது பங்கு சந்தையே என்ற செய்தி இருந்தது.
/
பிரதிபலிப்பதுன்னு போட்டிருந்தா கரிக்ட்டா??
//சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்//
waiting
பஜ்ஜியில் இருக்கும் எண்ணெயை உறுஞ்சி ஆரோக்யம் காக்கும் அரும்பணியும் தினத்தந்தியே செய்கின்றது. //
ஹிஹிஹி...
ஒவ்வொரு தமிழனும் வாங்க வேண்டிய செய்தி தாள் தினத்தந்தி,என் ஓட்டு இதுக்கு தான்.
சக மனிதன் ஒருவன் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து வெத்தலை,பாக்கு போட்டுக்கொண்டு நம்மோடு அரட்டை அடிக்கும் தொணி தினத்தந்தி நமக்குள் ஏற்படுத்தும் ஒரு சுகானுபவம்.]]
நன்னா இரசிச்சி இருக்கடா அம்பி :)
"தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்."
என் பதிவொன்றில் நான் சொன்னது:))!
kanni theevu rasigana iruntha daily oru post poduviya mama?
உங்க க்ரவுண்டு. அடிச்சு ஆடுங்க...!
"தந்தி பற்றி தம்பி" என தலைப்பு குடுத்திருக்கலாம் :))
ஆடம் ஸ்மித்தின் பொருளாதார வாரிசு அப்துல்லா அவர்களாலே வருக வருக
க்ளாசு எப்பஸ் ஸ்ஸார் தொர்ர்ர்ர்ர்ரப்பீங்க:)). பக்ஸே வந்தப்ப ஒரு தலையங்கம் வந்திச்சே. பத்திக்கிட்டு வந்திச்சி:(
"இன்று தீபாவளி” “இன்று பொங்கல்” என்று அறிய உண்மைகளையும் அறிவிக்கும் நாளிதழ்,பெண்களை எப்பவும் அழகிகள் என்று தான் சொல்லும்!!..எனக்கும் பிடிக்கும்..
ம்... நடத்துங்க... எழுதறேன் சொல்லிட்டு எழுதணும்... சும்மா எதாவது காரணம் சொல்லிகிட்டு இருக்கபிடாது... ஆமாம் சொல்லிபுட்டேன்
அப்துல்லா தினத்தந்தியை யாராலும் மறக்கமுடியாது; காலம்காலமாக நம்முள் ஒருவனாய் இருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள். அருமையான பதிவு. நன்றி அப்துல்லா.
28 வருடங்களாக இன்றும் தொடருகின்றது
//
20 வயசுல எழுத்து கூட்டி படிக்க ஆரம்பிச்சிங்க
28 வருசமா தொடருது ::))
ஆசானே,
இவ்விட வரும், குறைச்சு பாடம் கத்து தரும் ஆசானே!
Aama anna.. Naanum MBA padicha kalathula irundhu indru varai andha samacharam onniyum en siru moolaiku piriyave matengudhu.. Adhe pola, indha pangu sandhai pangu sandhai nu pesikireengale.. Adhu pathiyum sollunga na..
/பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்./
waiting anne:)
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
//சக மனிதன் ஒருவன் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து வெத்தலை,பாக்கு போட்டுக்கொண்டு நம்மோடு அரட்டை அடிக்கும் தொணி தினத்தந்தி நமக்குள் ஏற்படுத்தும் ஒரு சுகானுபவம்.//
ரசனை... பாடகர் அண்ணே! :-))
பாடம் சீக்கிரம் நடத்துங்க... நாங்க ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம் நடத்துனா எங்க உடம்பு மட்டுமில்ல... எங்க பொருளாதாரமும் ரொம்ப வீக்காத்தான் இருக்கும். :-)
//நாளிதழ்களுடனான எனது நினைவு தினத்தந்தியுடனேதான் துவங்குகின்றது//
காலைல டீ குடிச்சிட்டு படிப்பீங்களா இல்லை காப்பி குடிச்சிட்டு படிப்பீங்களா :)
ஆஸ் பர் த எகானமிஸ்ட் ரிப்போர்ட்.. அட ரைட்டு நீங்க ஆரம்பிங்க...:)
பொருளாதாரத்தை பற்றி அடிமட்ட குடிமகனுக்கும் தெரியனும். தெளிவா எழுது மாப்ஸ் நானும் காத்துக்கிட்டிருக்கேன்
நாட்டு மக்களில் 70 சதவீதம் பேர் விவசாயத்துறைய நம்பி வாழற நாட்டோட பொருளாதாரத்தை அரசுகளின் விவசாயம் குறித்த கொள்கைகள் தான் நிர்ணயிக்கும் (மழை+ பாசன நீரும் முக்கியம் தான்). பட்ஜெட்ல 70 சதம் விவசாயத்துக்கு ஒதுக்கச்சொல்லுங்க ஷேர் மார்க்கெட் எல்லாம் பழைய சினிமால ஜோதிலட்சுமி பாவாடை மாதிரி தூ...............க்கிக்கும்
//விவசாயம்,தொழிற்சாலைகளின் உற்பத்தி,ஏற்றுமதி,இறக்குமதி வணிகம்,இயற்கை வளங்கள்,உட்கட்டமைப்பு,தங்கம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு,மக்கள்தொகை,சுகாதாரம்,கல்வி//
இது அனைத்துமே பங்கு சந்தையை பாதிக்கும் அப்துல்லா...
ஆதலால் ... பங்குசந்தை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பே...
மேலும் விவரத்திற்கு எங்கிருந்தாலும்... பட்டர்பிளை சூர்யா பறந்து வரவும் :)
ஆமாண்ணே...பட்டர்ஃப்ளாயயும் கூட்டு சேத்துக்கங்கண்ணே...விரைவில் எதிர்பாக்கிறோம நல்ல கருத்தான கட்டுரைத் தொடர்.
\“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் நிர்ணயிப்பது பங்கு சந்தையே \
அடப்பாவமே!
***
நிறைய எழுதுங்கள் சகோதரரே! ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்கோம் :)
//எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்.//
இந்த முடிவைக் கேட்ட அதிர்ச்சியிலதான் சென்னை நேத்து ஆடிடுச்சோ!!
:-))))
http://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post_14.html
viruthu waiting
நான் 10, 12 படிக்கையில் எல்லா மாணவர்களையும் போல நானும் தினத்தந்தி வாங்கிருக்கேன். :)
அடிக்கடி எழுதுறேன்னு சொல்றது சந்தோஷம். எக்னாமிக்ஸா இருந்தாலும். ;)
தினத்தந்தி படிக்காத, அட்லீஸ்ட் பார்க்காத தமிழர் இருக்கவே முடியாதுதான்!
பொருளாதார தொடருக்கு சிவப்புக் கம்பளம் தயார்..! இறங்கி ராஜநடை போடுங்கள் ! :)
நீங்கதானே? விரிவான பாடங்கள்தானே? எழுதிட்டாலும்.. ஹுக்கும்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.
நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.
இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.
ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.
நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.
நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html
தமிழன்!
கொடுத்துள்ள தகவல்கள் தவறு என்று நிறுபித்து விட்டு நிராகரிக்க சொல்வது தானே நியாயம்!, உண்மையை கேட்டால் இப்படி தான் செய்ய சொல்லியிருக்கிறதா இஸ்லாம்!?
செங்கொடி பக்கம் போய் பாருங்கள் எவ்வலவு நாகரிகமாக விவாதிக்கிரார் என்று உங்கள் விவாதம் தப்பு அல்ல விவாத முறைதான் சரியில்லை என்று என் என்னம் உங்களுக்கு எத்தனையோ முஸ்லிம் வலை நன்பர்கள் இருக்கிறார்கள் அவர்க்ள் நபியயை உயிரிலும் மேலாகமதிக்கிரார்கள் உங்கள் பக்கம் நியாயம் என்றால் அழகானமுறையில் எடுத்துறைக்கலாம் என்பது என் என்னம்
நாங்கள் எல்லா மதத்தையும் ஒரே மாதிரி தான் எதிர்கிறோம் தோழர்!
வைரஸிடம் கண்ணியம் எப்படி காட்டுவது!?
நண்பா...
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தா ஒரு பதிவாவது எழுதி தெரியபடுத்தனும்