கொஞ்சம் கண்டுக்கங்க காவல்துறை கமிஷனர் அய்யா

90 களின் ஆரம்பம், நான் சென்னைக்குப் படிக்க வந்த புதிது.எல்லாமே என் கண்களுக்கு அதிசயமாகத் தெரியும்.சிக்னல் உட்பட. தியாகராய நகரிலுள்ள பர்கிட் ரோடு சிக்னல்தான் கிராமப்புறத்தில் இருந்து வந்த நான் முதன்முதலில் பார்த்த சிக்னல்.பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள சஃபா காபி செண்டரில் காபி வாங்கிக் குடித்தபடி சிக்னலில் நின்று போகும் வாகனக் கடல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்பது எனது அன்றைய பிரதான பொழுதுபோக்கு.அப்போதெல்லாம் பைக்,கார்களோடு சைக்கிள்களும் சிக்னலுக்கு நின்றுதான் செல்லும்.சிக்னலை மீறும் சைக்கிள் ஓட்டிகளை போலீஸார் நிறுத்தி காற்றைப் பிடிங்கி அனுப்புவதை பலமுறை கண்டிருக்கின்றேன்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வந்த வழக்கம் குறைந்து போய் இன்று முற்றிலும் இல்லாமலேயே போய்விட்டது. ஆம் இன்றைக்கு சென்னையில் நீங்கள் சைக்கிளில் பயணிப்பவர்களாக இருந்தால் சிக்னல்களில் நின்று செல்லவேண்டிய அவசியம் இல்லை.சிகப்பு விளக்கு எரிந்தாலும் நீங்கள் பாட்டுக்கு ஜவடாலாக போய்க்கொண்டே இருக்கலாம்.காவலர் இருந்தாலும் கேள்வி கேட்க மாட்டார்.காரணம் நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.உங்களுக்கு சல்யூட் அடித்து அனுப்ப வேண்டியது அவர் கடமை.




மனிதனுக்கு பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் வந்தால்தான் ஆத்திரம் வரும் என்பதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. நேற்று ராதாகிருஷ்ணன் சாலையில் கடற்கரை ரோடு நோக்கி சென்றுகொண்டு இருந்தேன்.டி.டி.கே சாலை சந்திப்பில் பச்சை விளக்கு எரிகின்றதே என்று நான் வாகனத்தை செலுத்தியபோது சட்டென்று குறுக்கே வலப்புறம் இருந்து வந்த சைக்கிள் ஓட்டியால் ஒரு நிமிடம் நிலைதடுமாறிப் போய்விட்டேன்.நான் திடீர் என நிறுத்தியதால் பின்னால் வந்த டூவீலர்காரர் என் வாகனம் மீதுமோதி கீழே விழுந்தார். எழுந்தவர் முதலில் திட்டியது என் அம்மாவை. பின் நிலமை புரிந்து அந்தத் திட்டை அந்த சைக்கிள் ஓட்டி மேல் செலுத்தினார். அதற்குள் அந்த சைக்கிள் ஓட்டி அவர் வீட்டுக்கே போய் சேர்ந்திருப்பார்.

இந்தக் கூத்தையெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே கவனித்த அங்கிருந்த காவலர் என் அருகில் வந்து நான் திடீர் என நிறுத்தியதால்தான் இந்த சிறு விபத்து நடந்ததாகவும் அதனால் என் மேல்தான் தவறு எனவும் அவருடைய மாமூல் வாழ்க்கைக்கு அடிப்போட்டார். என் சீற்றம் கண்டு பின் விலகிச் சென்றார்.இது எனக்கு மட்டும் நடந்த அனுபவம் அல்ல. தினம்தோறும் சென்னையில் பலருக்கும் நடக்கும் அனுபவம் இது.சிக்னலில் எதைப்பற்றியும் கவலையில்லாது குறுக்கே வரும் சைக்கிள் ஓட்டிகளால் தினமும் சென்னையில் சிறு விபத்துகள் நடப்பதை நானே பலமுறை கண்டிருக்கின்றேன்.இப்போது அனுபவமும் பட்டுவிட்டேன்.இவர்களது விதிமீறலால் நடக்கும் விபத்துகள் பெரும்பாலும் மிகச் சிறு சேதத்தை மட்டுமே (வாகன உரசல்கள் மற்றும் சிறு காயங்கள்) ஏற்படுத்துவதால் காவல்துறையின் ரெக்கார்ட்டுகளில் வருவதில்லை.அதனால்தானோ அல்லது பொருளாதார ரீதியாக இவர்களால் தங்களுக்கு ஆதாயம் இல்லை என்பதாலோ போக்குவரத்து காவல்துறை இவர்களை மட்டும் கண்டுகொள்வதேயில்லை.உடல் உறுப்புகளை இழப்பதும்,உயிரை இழப்பதும் நிகழ்ந்தால் மட்டும்தான் சட்டப்படி விபத்தா? கைகால்களில் ஏற்படும் சிராய்த்தல்கள், சிறு காயம் மற்றும் வாகனத்திற்கு சிறு சேதம் போன்றவை நிகழ்ந்தால் அது விபத்துக் கணக்கில்லையா??

சென்னை நகர காவல்துறை  கமிஷனர்(போக்குவரத்து) அய்யா அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. அய்யா, சைக்கிள் ஓட்டிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?? உங்கள் பதில் ஆம் என்றால் குடிமக்களிடையே ஏன் பாகுபாடு பார்கின்றீர்கள்?? அப்படியே டூவீலர்,திரீவீலர் மற்றும் ஃபோர்வீலர் ஓட்டிகளையும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்க வேண்டியதுதானே?!?!?!!
91 Responses
  1. இந்த சட்டம் சட்டம்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?

    அளவில்லா டவுட்டுடன் :))


  2. \\இந்த சட்டம் சட்டம்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?
    \\

    ஹய்யோ ஹய்யோ இது தெரியாதா? கமல், சரத்பாபு, மாதவி நடிச்ச பாலாஜி படம்:-))

    டவுட் கிளியர் செஞ்ச திருப்தியுடன்
    அபிஅப்பா


  3. சைக்கிள்காரனை புடிச்சா பத்து ரூபாகூட தேறாது..

    உன்னைப் புடிச்சா ஐயாயிரம்கூட தேத்திரலாம்ல..

    அதான் காரணம்..!


  4. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருமே இல்லை. உங்கள் இடுகையில் நீங்க சொல்லியது போல், அவர்களால் எந்த பொருளாதார லாபமும் இல்லை என்பதால், காவலர்கள் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

    இதே நீங்க ஒரு அரை டிராயர், நைக் ஷூ, டி-ஷர்ட், தலைகீழாக மாட்டப் பட்ட கேப், இப்படி போங்க உங்களை மடக்கி, 100 கேள்வி கேட்டு, உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாங்க.


  5. maximum cycle wall tube kazatta mudiyum... vera enn seyya?

    cyclekkum traffic rules, atleats metorsla mattum podanum


  6. இது கமிஷ(ஸன்)னர் மட்டும் கண்டுக்கற விசயம் இல்லீங்க அண்ணே!!

    மேலிடத்தில் இருந்து சாலைகள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    சைக்கிள் ஓட்டிகள் முதல் சொகுசுப்பேருந்து வரை அனைவருக்கும் ஒரே சாலை.. ஒரே லேன்(??) அது தான் காரணம்.


  7. தேராட்டம் காரினிலே
    ரொம்ப திமிரோட போறவரே
    எங்க ஏரோட்டம் நின்னு போனா
    உங்க காரோட்டம் என்னவாகும்

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ன்னு ஒரு பாட்டுல வந்த வரிகள்.

    சரி சரி கூல் மேன் :)

    அவர்களுக்கு என்று தனி பாதை இருக்க வேண்டும். நிறைய வெளிநாட்டு நகரங்களில் செய்கிறார்கள். சுற்றப் புறச் சூழலுக்கு மிதிவண்டிகள் மிகவும் நண்பர்கள். ஆனாலும், சட்டப்படி நடக்கணும்னு ஒத்துக்கறேன். போறுமா? :))

    அனுஜன்யா


  8. நல்ல பதிவு. நன்றி சைக்கிள்காரர்.
    :)


  9. சைக்கில்" கூட ஆட்டோவையும் சேத்துக்கலாம்.. எங்க திருப்புவாங்க எப்படி திருப்புவாங்கன்னு சொல்லவே முடியாது. திருப்ப கூடாத எடத்துல திருப்பி நம்மள சில்லறை பொறுக்க
    வச்ருவாங்க..

    :(


  10. என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அப்துல்லா நீங்கள் ஏன் ராதா கிருஷ்ணன் சாலைக்கு சென்றீர்கள்?

    இப்படிக்கு,
    ஜோ அ ரா பெ ரசிகன்...


  11. //
    இதே நீங்க ஒரு அரை டிராயர், நைக் ஷூ, டி-ஷர்ட், தலைகீழாக மாட்டப் பட்ட கேப், இப்படி போங்க //

    அப்துல்லா அண்ணன இந்த கெட்அப்ல நினச்சு பாக்கவே ஆனந்தமா இருக்கு..

    அப்படியே அர ட்ராயர கொஞ்சம் கிழிச்சு விட்டுக்குங்க


    :)


  12. //என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அப்துல்லா நீங்கள் ஏன் ராதா கிருஷ்ணன் சாலைக்கு சென்றீர்கள்?

    இப்படிக்கு,
    ஜோ அ ரா பெ ரசிகன்...

    //

    அங்கதானே தலைவரே குப்பை கொட்டுறேன் (ஐ மீன் ஆபிஸ்)

    :))


  13. //அப்படியே அர ட்ராயர கொஞ்சம் கிழிச்சு விட்டுக்குங்க

    //

    நேத்து கொஞ்ச நேரத்துல கிழிச்சு விட்டுக்கிற நிலைமையிலதான் இருந்தேன்.


  14. @மயில்
    அபிஅப்பா
    உண்மைதமிழன்
    ராகவண்ணா

    @ செந்தில் அண்ணன்

    அண்ணா இங்க லேன் பிரச்சனையே இல்லை.எந்த ஒரு சைக்கிள் ஒட்டியும் சிக்னலில் நிற்பதே இல்லை.குறுக்கே எத்தனை வண்டி வந்தாலும் கவலை இல்லை அவர்களுக்கு. இந்த நிலையை உருவாக்கியது காவல்துறைதான். காத்தைப் புடுங்குவாங்கன்னு பயம் இருந்த காலத்தில் எல்லா சைக்கிளும் சிக்னலில் நின்னு போச்சே!! இப்ப ஏன் ஒருத்தரும் நிக்கிறது இல்லை.



    @கார்க்கி

    //maximum cycle wall tube kazatta mudiyum... vera enn seyya? //

    கார்க்கி என் இடுகையில் அதைத்தானே சொல்லி இருக்கேன்...முன்னாடியெல்லாம் காற்றைப் புடுங்குவாங்கன்னு. இப்ப அந்த பழக்கத்தை விட்டதுதான் பிரச்சனை.


    @ அனுஜன்யா

    அண்ணா, ஏர் ஓட்டுறவங்களை நான் எங்க குறை சொன்னேன்.சைக்கிள் ஓட்டுறவங்களைத்தான் சொல்றேன்.நான் எங்கேந்து வந்தேன்?சைக்கிள்கூட இல்லாத வீட்டில் இருந்துதான் :).அதைநான் இன்னும் மறக்கலை. நான் பூர்ஷ்வாவும் கிடையாது.அதே நேரத்தில் வசதி குறைவானவர்கள் செய்யும் அத்தனையும் நியாயம் என்று வாதாடும் முற்போக்கு சிந்தனையாளனும் கிடையாது. நான் சொல்வது வாகனம்னா எல்லா வாகனம்தான்.சட்டைத்தை அனைவரும் கடைபிடிக்கச் செய்வது காவல்துறையின் கடமை என்பதைத்தான்.

    @எறும்பு

    ஆட்டோக்கள் செய்வது அவர்களின் தனிப்பட்ட திமிர். ஆனால் சைக்கிள்காரர்களை இவ்வாறு ஆக்கியது காவல்துறை மட்டுமே.



    அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


  15. "சட்டம் தன் கடமையை செய்யும்"

    அப்புறம்
    அப்புறம்
    அப்புறம்

    சட்டம் கண்டிப்பா "நல்லாவே" தன் கடமையை செய்யும்...!


  16. சைக்கிள்காரங்க மேலே ஏன் சட்டம் பாய மாட்டேங்குது? ஒருவேளை அவங்கள்லாம் திமுககாரங்களா இருப்பாங்களோ? :-)


  17. அப்படியே அர ட்ராயர கொஞ்சம் கிழிச்சு விட்டுக்குங்க//

    முன்னாடியா? பின்னாடியா?


  18. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    சைக்கிள்காரனை புடிச்சா பத்து ரூபாகூட தேறாது..//

    சட்டத்த மீறுனதுக்கு புடிச்சா தேராது. ஆனா இடிச்சிப் பாருங்க:)). வீல் கோணிக்கும். அம்புட்டுதான். சில நேரம் எங்கயாவது கொஞ்சம் ரத்தம் வரும். ஆனா விழுவான் பாருங்க 50வது மாடில இருந்து விழுந்த போசுல. பீ.பீ.னு ஊதிக்கிட்டு வருவாரு. இடிச்சவனுக்கு சங்கு. ஆசுபத்திரிக்கு கூட வந்து எப்போ என்ன பேசுவாங்களோ தெரியாது. வண்டி ரிப்பேர் செலவு, வேலைக்கு (அது ராத்திரின்னாலும்) போகமுடியாத கூலி அது இதுன்னு பஞ்சாயத்து குறைஞச்து 1000 தேத்திடுவாய்ங்க.


  19. அப்துல்லா,

    சைக்கிள்காரன் கிட்ட எவ்வளவு கறக்க முடியும்? அதனாலதான் உங்ககிட்ட மாமூல் வாழ்க்கைக்கு அடிபோட்டிருக்கிறார் நம்ம ஆள்.

    ஸ்ரீ....


  20. D.R.Ashok Says:

    //சைக்கிள்காரங்க மேலே ஏன் சட்டம் பாய மாட்டேங்குது? ஒருவேளை அவங்கள்லாம் திமுககாரங்களா இருப்பாங்களோ? :-)//

    ஹிஹி நானும் அப்படிதான் நெனைக்கறேன்


  21. சென்னை கமிஷ்னர் Says:

    அப்துல்லா உங்கள் பதிவை படிச்சேன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் எங்கள் காவலர்கள் பார்த்துப்பார்கள்!



  22. அப்துல்லா Says:

    எப்படி அய்யா பார்த்துப்பார்கள்?


  23. சென்னை கமிஷ்னர் Says:

    அப்துல்லா அதையும் பதிவாக போட்டு கேள் அப்பொழுதுதான் பதில் சொல்லுவேன், பின்னூட்ட கேள்விக்கு எல்லாம் கமிஷ்னர் ஆகிய நான் பதில் சொல்ல மாட்டேன்!


  24. விஜயகாந்த் Says:

    காமராஜ் ஆச்சியில் சைக்கிள் வெச்சிருந்தவங்க 15 பேர், அதில மெட்ராசில் சைக்கிள் வெச்சிருந்தவங்க 7 பேர், அதில் 3 பேர் சிக்னலை மதிக்காம போய்வந்தவங்க!

    அடுத்து எம்.ஜி.ஆர் ஆட்சியில் சைக்கிள் வெச்சிருந்தவங்க 20012 பேர் அதில் 12112 பேர் சென்னையில் சைக்கிள் வெச்சிருந்தாங்க, அதில் 1210 பேர் ரூல்ஸ் மதிக்காம இருந்தாங்க...

    இப்ப உங்க ஆட்சியில் சைக்கிள் வெச்சிருப்பவங்க 1212121423232 பேர்
    சென்னையில் மட்டும் 12122423 பேர்
    இதுல ரூல்சை பாலோ செய்யாதவங்க 1212122 பேர் ...


  25. வீரபாண்டி சிக்ஸ் பேஸ் சிஸ்யன் Says:

    //டி.டி.கே சாலை சந்திப்பில் பச்சை விளக்கு எரிகின்றதே //

    தேவை இல்லாம சந்திப்பில் பச்சை விளக்கு எரிகிறதேன்னு அதை ஆப் செஞ்சுட்டு போய் இருந்தா நீ மனுசன். ஆப் செய்யாம போன நீ மனுசனா?:))


  26. ஆசாரி ஆறுமுகம் Says:

    இந்த சட்டம் சட்டம்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?//

    சதுரமா அல்லது செவ்வங்கமா மரத்தால் போட்டோவுக்கு பிரேம் அடிப்பாங்களே அதுதான் சட்டம்!


  27. அழகர் சங்கம் Says:

    உன்னைப் புடிச்சா ஐயாயிரம்கூட தேத்திரலாம்ல..

    அதான் காரணம்..!//

    இவரு என்னா ரோட்டர அழகியா இவரை புடிச்சா 5 ஆயிரம் தேத்த!
    நல்லா சொல்றாய்ங்கய்யா டீடெயிலு:)))


  28. ஷோரூம் மேனேஜர் Says:

    //இதே நீங்க ஒரு அரை டிராயர், நைக் ஷூ, டி-ஷர்ட், தலைகீழாக மாட்டப் பட்ட கேப், இப்படி போங்க உங்களை மடக்கி, //

    மடக்க அப்துல்லா என்ன சேர்ரா இல்லை கட்டிலா?

    ஆமா ராகவன் நீ சொன்ன மாதிரிதான் ஷோரூம் பொம்மை கூட இருக்கு அதை என்ன செய்யலாம்?:


  29. டி.டி.எச் மில்க் தினகரன் Says:

    //மேலிடத்தில் இருந்து சாலைகள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.//

    செயிண்ட் தாமஸ் மவுண்ட் மேலிருந்து யோச்சிசா சரியா இருக்குங்களா செந்தில்?


  30. ட்ரை சைக்கிள் சேல்ஸ் மேன் Says:

    //சுற்றப் புறச் சூழலுக்கு மிதிவண்டிகள் மிகவும் நண்பர்கள்.//

    அடுத்தமுறை அனுஜன்யா,மும்பையில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் வருவார் என்று சொல்லிக்கிறோம்.


  31. பூரான் Says:

    எறும்பு அப்துல்லா அங்கபோய்தான் உச்சா போவாரு! போதுமா பதில்?


  32. நீங்க‌ ஒன்று பார்த்தீர்க‌ள் என்றால் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவீர்க‌ள்...ந‌ம் சாலையை எப்ப‌டிப்ப‌ட்ட‌ வாக‌ன‌ங்க‌ள்/ம‌க்க‌ள் எல்லாம் உப‌யோகிக்கிறார்க‌ள் என்று? இத‌ற்கு மிக‌ முக்கிய‌மான‌ கார‌ண‌ம் ட‌வுன் பிளானிங் இல்லாத‌து தான்.எங்கு ஹோட்ட‌ல் வ‌ர‌னும் எங்கு சாப்பாடுக்க‌டை வ‌ர‌னும் அத‌ற்கு தேவையான‌ போக்குவ‌ர‌த்து ஒழுங்கு எப்ப‌டி இருக்க‌னும் இப்ப‌டி ப‌ல‌ "க‌னும்" இருக்கு.இது எதுவே இல்லாம‌ல் அடித்த‌ட்டு ம‌க்க‌ளை எப்ப‌டி சாலையை ஆக்கிர‌மிக்காம‌ல் இருக்க‌ச்செய்வ‌து?சென்னையை ஒழுங்குப‌டுத்துவ‌து என்ப‌து இன்னும் 100 ஆண்டுக‌ள் க‌ன‌வென்று தைரிய‌மாக‌ சொல்ல‌லாம்.
    சும்மா ஒரு க‌ண‌க்குக்கு எடுத்துப்போமே..
    ப‌ஸ்
    ஆட்டோ
    கால் டேக்ஸி
    லாரி
    ஷேர் ஆட்டோ
    டெம்போ
    கார்
    மிதிவ‌ண்டி
    மாட்டுவ‌ண்டி
    சைக்கிள் ரிக்க்ஷா
    இது அத்த‌னையும் இருக்கிற‌ இர‌ண்டு லேனுக்குள்!! முடியுமா? இவ‌ர்க‌ளோடு போட்டி போட‌ சாலையோர‌ சாப்ப‌ட்டுக்க‌டை ம‌ற்றும் ப‌ழ‌க்க‌டைக‌ள் வேறு.த‌லைசுற்ற‌வில்லை?இப்ப‌ சொல்லுங்க‌ உங்க‌ளை வ‌ழிம‌றித்த‌ சைக்கிள்கார‌ரை முழுவ‌துமாக‌ குற்ற‌ம் சொல்ல‌முடியுமா?

    க‌டைசியாக‌,நம்மூரில் எவ்வ‌ள‌வு சாலைக‌ளில் லேன் மார்க்கிங் இருக்கு அதை எவ்வ‌ள‌வு நாட்க‌ளுக்கு ஒரு முறை செய்கிறார்க‌ள்?ஒரு லேனுக்குள் 2 வ‌ண்டி ஓட்டும் ம‌க‌ராச‌ன்க‌ளை என்ன‌ சொல்வ‌து?


  33. வெட்னரி டாக்டர் Says:

    யுவகிருஷ்ணா //சைக்கிள்காரங்க மேலே ஏன் சட்டம் பாய மாட்டேங்குது? //

    ஏன்னா சட்டத்துக்கு லாங் ஜம் தெரியாது அதான் பாயமாட்டேங்குது!


  34. ராமராஜன் Says:

    //ஸ்ரீ.... said...
    அப்துல்லா,

    சைக்கிள்காரன் கிட்ட எவ்வளவு கறக்க முடியும்?
    //

    சைக்கிள்காரன் என்ன டெல்லி பசுவா? காலையில் 10 லிட்டர், மாலை 10 லிட்டர் பால் கறக்க? நல்லா கேட்கிறாய்ங்கய்யா டீடெயிலு!!!


  35. கும்மிய நல்லவன் Says:

    இங்கு அதர் ஆப்சனில் கும்மியவர் அட்ரஸ் அப்துல்லாவுக்கு தெரியும் பரிசு அனுப்ப நினைப்பவர்கள் அவரிடம் வாங்கி பரிசை அனுப்பவும்!


  36. உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
    http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html


  37. @ வடுவூர் குமார் அண்ணா.

    //இப்ப‌ சொல்லுங்க‌ உங்க‌ளை வ‌ழிம‌றித்த‌ சைக்கிள்கார‌ரை முழுவ‌துமாக‌ குற்ற‌ம் சொல்ல‌முடியுமா?

    //

    முழுவதுமாக குற்றம் சொல்ல முடியும்.அண்ணா, ஒரே லைனில் செல்லும் பஸ்,ஆட்டோ,டூவிலர் என அனைத்தும் சிக்னலில் நின்று செல்லும்போது சைக்கிளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்பதுதான் என் கேள்வி?? பிற ஊர்காரர்களுக்கு நான் சொல்வதை முழுவதுமாகப் புரிந்து கொள்வது சிறிது கடினம். காரணம் அவர்கள் நேரடியாகக் காணாததால். சென்னை மக்களுக்கு நான் சொல்வதன் நியாயம் நன்றாகவே புரியும்.


  38. தொழிற்நுட‌ப‌ம் வ‌ள‌ர்ந்த‌ இக்கால‌த்திலும் ந‌ம் ச‌க‌ ம‌னித‌ரை (டிராபிக் போலீஸ்)அவ்வ‌ள‌வு வாக‌ன‌ப்புகையில் வேலை செய்யும் ம‌னித‌நேய‌ம் விய‌க்க‌வைக்க‌வில்லை?ச‌மீப‌த்தில் சிக‌ப்பு விள‌க்குக‌ளை மீறுப‌வ‌ர்க‌ளை பிடிக்க/எச்ச‌ரிக்க‌ ஒரு சாத‌ன‌த்தை சென்னையில் கொண்டுவ‌ந்தார்க‌ள் அத‌ன் அருகில் 3 போலீஸ்கார‌ர்க‌ள்-‍ செம‌ காமெடியாக‌ இருந்த‌து.

    சாலையில் ஓடும் வாக‌ன‌ங்க‌ளுக்கு காலாவ‌தி டேட் என்று ஏதாவ‌து இருக்கா?

    நினைக்க‌ நினைக்க‌ கோவ‌மாக‌ வ‌ருதுங்க‌


  39. இந்த பிரச்சனையை அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல....
    ஏதாவது ஒரு முட்டு சந்தில் இருந்து போராட்டம் நடத்துவோம்......
    அணி திரண்டு வாரீர்!!


  40. மக்கு மண்டாராம் Says:

    //வடுவூர் குமார் said...
    நீங்க‌ ஒன்று பார்த்தீர்க‌ள் என்றால் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவீர்க‌ள்...
    //

    1 இதை பார்த்து ஆச்சர்யபட என்ன இருக்கு?

    இப்படிக்கு
    ஒன்னாவதில் இருந்து ஒன்னை பார்க்கும் மக்கு பையன்


  41. நறுக் டாக்டர் Says:

    //இத‌ற்கு மிக‌ முக்கிய‌மான‌ கார‌ண‌ம் ட‌வுன் பிளானிங் இல்லாத‌து தான்.//

    அவன் அவன் பேமிலி பிளானிங்கே இல்லாம வத வதன்னு பெத்துக்கிட்டு இருக்காய்ங்க! இப்படி சைக்கிள் போகிறவர்களுக்கும் அப்படி பேமிலி பிளானிங் செஞ்சுவிடலாமா?


  42. பிட் பீதாம்பரம் Says:

    //த‌லைசுற்ற‌வில்லை?இப்ப‌ சொல்லுங்க‌ உங்க‌ளை வ‌ழிம‌றித்த‌ சைக்கிள்கார‌ரை முழுவ‌துமாக‌ குற்ற‌ம் சொல்ல‌முடியுமா?
    //

    க்ளைமேக்சில் விஜயகுமார் மூச்சு விடாம அட்வைஸ் செய்வது போல் பேசிட்டு டக்குனு பதில் கேட்டா எப்படி அண்ணே, கொஞ்சம் கேப் விட்டு கேளுங்க!!!

    இப்படி பதில் தெரியாமல் விழிப்போர் சங்கம்


  43. தாய் மாமன் Says:

    //ஷர்புதீன் said...
    உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்//

    நல்லா கொடுக்கிறாய்ங்கய்யா இன்விட்டேசன், எதையும் ஆபிஸில் வந்து வெத்திலை பாக்கு வெச்சி கொடுக்கவும்.


  44. திரு அப்துல்லா,முத‌லில் அங்கு சைக்கிள் வ‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தை பார்த்தால் முழுக்குற்ற‌ம் அவ‌ரிட‌ம் இருக்காது.
    3 அல்ல‌து 4 மாத‌துக்கு ஒரு முறை ந‌ம்மூர் சாலையில் தான் இரு ச‌க்க‌ர‌வாக‌ன‌த்தில் வ‌ல‌ம் வ‌ருகிறேன்,என்ன‌ செய்வ‌து த‌லையை வெறுப்புட‌ன் ஆட்டிக்கொண்டு "ச‌ல்தா ஹை" என்று தான் போக‌வேண்டியிருக்கு.

    ஓட்டு வ‌ங்கி ம‌ற்றும் விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளின் நிலையை க‌ருத்தில் கொண்டு பார்க்கும் இப்போது இருக்கும் நிலையில் பெரிய‌ மாற்ற‌ங்க‌ள் எதையும் யாராலும் கொண்டுவ‌ர‌முடியாது என்றே தோன்றுகிற‌து.முடியும் என்று நினைத்திருந்தால் கூவ‌ம் எப்போதோ ப‌ட‌கு ச‌வாரிக்கு த‌யாராக‌ இருந்திருக்கும்.

    நம்மிடையே இருக்கும் குறைக‌ள் மிக‌ மிக‌ பெரிய‌ன‌ அதை சீர்செய்வ‌தைக்காட்டிலும் மேலும் கெடுக்காம‌ல் இருந்தாலே கொஞ்ச‌ம் முன்னேற்ற‌ம் தெரியும்.


  45. ப்ரூஸ்லி Says:

    //ஜெட்லி said...
    இந்த பிரச்சனையை அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல....
    ஏதாவது ஒரு முட்டு சந்தில் இருந்து போராட்டம் நடத்துவோம்......
    அணி திரண்டு வாரீர்!!
    //

    ப்ரூஸ்லி நானே மூடிக்கிட்டு இருக்கேன், நீ ஏன்யா பொங்குற? அதெல்லாம் முடியாது என் தலமையில் தான் அணி திரண்டு போராட்டம் நடக்கும்!


  46. அம்பையர் Says:

    வடுவூர் குமார் அண்ணே நீங்க அவுட்!

    பதிவுலக ரூல்ஸ்படி நீங்க பதிவை விட பின்னூட்டம் பெருசு பெருசா போட்டு அவுட் ஆயிட்டீங்க!


  47. ஏ.ஆர்.ரஹ்மான் Says:

    //நம்மிடையே இருக்கும் குறைக‌ள் மிக‌ மிக‌ பெரிய‌ன‌ அதை சீர்செய்வ‌தைக்காட்டிலும் மேலும் கெடுக்காம‌ல் இருந்தாலே கொஞ்ச‌ம் முன்னேற்ற‌ம் தெரியும்.//

    ஜாரே ஜகாங்கே அச்சா, ஹிந்துஸ்தான் மே கமாரா..

    வந்தே மாதரம்...


  48. @ குமார் அண்ணன்

    அண்ணே பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிக்னலில் நின்று சென்ற சைக்கிள்கள் இன்று நிற்காமல் செல்ல ஒரே காரணம் காவல்துறையினருக்கு அந்த விளிம்பு நிலை மனிதர்களால் எந்தப் பொருளாதார ஆதாயமும் இல்லை என்று கண்டுக்காம விட்ட ஒரே காரணம்தான். ஒரே ஒரு சைக்கிள்காரர்கூட இன்று சென்னையில் சிக்னலில் நின்று செல்வதில்லைண்ணே. நிச்சயம் அவர்களால் சென்னை நகரில் ஒருநாளில் குறைந்தது 5 அல்லது 10 சிறு விபத்துகளாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.


  49. டவுட் தனபால் Says:

    ஓட்டு வ‌ங்கி ம‌ற்றும் விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளின் //

    முதல் கொஸ்டின் : ஓட்டு வங்கியில் ஹோம் லோன் கொடுப்பாங்களா?

    இரண்டாவது கொஸ்டின்: விளிம்பு நிலைமனிதர்கள் என்றால் விளிம்பில் களிம்பு தடவிக்கிட்டு நிப்பாங்களா?


  50. அப்துல்லா அண்ணா அருமையான பதிவு. அறச்சீற்றம்!


  51. யாருப்பா இந்த‌ அனானி... ரொம்ப‌நாள் க‌ழிச்சி ஒரு அனானியினால‌ சிரிச்சிட்டு இருக்கேன்.. :)))

    அப்துல்லா அண்ணே, நீங்க‌ சொல்லுற‌த‌ பாத்தா சைக்கிள்கார‌ன் ம‌ட்டும்தான் அப்ப‌டி ஆகிட்டாங்க‌ன்ற‌ மாதிரி இருக்கு.. ந‌ம்ம‌ள‌ த‌விர‌ ம‌த்த‌ எல்லாருமே அப்ப‌டித்தான் ஓட்டுறாங்க‌.. ஆனா அவ‌ங்க‌ள‌ கேட்டாலும் அவங்க‌ளும் இதையேத்தான் சொல்லுவாங்க‌.. அதுதான் என‌க்கு புரிய‌மாட்டேங்குது.. :)


  52. அப்துல்லா அண்ணே உங்க பதிவு என்னை யோசிக்கவைத்துவிட்டது, அதை விட அண்ணன் வடுவூர் குமார் பின்னூட்டங்கள் ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது. சூப்பர் பதிவுங்க!


  53. கும்மிய நல்லவன் Says:

    // வெண்பூ said...
    யாருப்பா இந்த‌ அனானி... ரொம்ப‌நாள் க‌ழிச்சி ஒரு அனானியினால‌ சிரிச்சிட்டு இருக்கேன்.. :)))
    //

    ம்ம்ம் சொல்லுவய்யா சொல்லுவ, எல்லோரும் அதர் ஆப்சனை பூட்டிவெச்சிக்கிட்டா எப்படி நான் கும்முவது. ரொம்ப நாள் கழிச்சு கும்ம வசதி செய்து கொடுத்த அண்ணன் அப்துல்லா வாழ்க வாழ்க!


  54. கைபுள்ள ஒயர் பங்கர் Says:

    மிஸ்டர்.வெண்பூ பின்னூட்டம் போடுவது எல்லாம் இருக்கட்டும் உங்களை பதிவு எழுத வைக்கனும் என்றால் திரும்ப ஒரு பதிவர் சங்கத்தை ஆரம்பிச்சு சட்டு புட்டுன்னு கலைச்சால் தான் உங்களை எழுத வைக்க முடியும் என்கிறார்களே அது நிஜமா?


  55. ஆமாம் சட்டம் சட்டமுன்னு சொல்லிட்டு இருக்கீயளே..என்னோட பழைய போட்டா ஒண்ணு இருக்கு அதை இந்த சட்டத்துல மாட்ட முடியுமா?


  56. சட்டம்னா ஆசாரி ஆணியடிச்சு கோர்த்து தருவாரே அதைதானே சொல்றிங்க. ஜெமினி பிளை ஓவர் கீழ சட்டம், பலகையெல்லாம் கிடைக்குதாமில்ல. அதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை.


  57. சைக்கிள்க்காரன் Says:

    நான் கிரீன் சிக்கனல் போட்டவுடன தான் தம்பி வந்தேன்... என் 500 சிசி சைக்கிள் ரோட்டை கடக்கரதுக்குள்ள உங்க பக்கம் சிக்னல் கிரீன் ஆயிடுச்சு...

    ஒரு நாள் சைக்கிள் எடுத்துக்கிட்டு சென்னையை சுத்திபாருங்க...புரியும்... :)


  58. அருமையான பதிவு!பூங்கொத்து!


  59. நித்திய ஜெயிலானந்தா Says:

    //காற்றைப் பிடிங்கி அனுப்புவதை பலமுறை கண்டிருக்கின்றேன்//

    முதல் மாதிரி இப்ப எல்லாம் சைக்கிளில் வால்டியூப் பிடுங்க முடியாது...

    கதவைத்திறந்தா மட்டுமல்ல...
    வால்டியூப் பிடிங்கினாலும் காற்று வரும்..

    எனக்கே வால்டியூப் பிடிங்கீட்டங்கல்ல்ல....


  60. தற்போதைய வெப்பம், புகை, மற்ற வாகன ஓட்டிகளின் அலட்சியம், பொருளாதார நிலை இவர்களுக்கென்று இருந்த இடத்தை மற்ற வேக வாகனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டது.

    போக நாம் சர்ரென்று கடக்கும் தூரத்தை ஒரு சைக்கிள் ஓட்டி கடக்க ஆகும் வேதனை போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் 'அ'.

    அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அதனதன் நியாயங்கள் புரியும். ;)

    I am not justify the cyclist, Just to answer why they are not following the rules.

    //ஒரு நாள் சைக்கிள் எடுத்துக்கிட்டு சென்னையை சுத்திபாருங்க...புரியும்... :)//

    very true!!. :)


  61. @ ஷங்கர் அண்ணா.

    நான் தினமும் காலையில் ஐ.ஐ.டி க்கு வாங்கிங் செல்ல என் வீட்டில் இருந்து சைக்கிளில்தான் செல்கின்றேன்.அதனால் சைக்கிளின் சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும்.

    சிக்னலில் நில்லாமல் போவதற்கு முழுகாரணம் தண்டனை இல்லை என்பதுதானே தவிர தூரத்தைக் கடக்க ஆகும் நேரமெல்லாம் கிடையாது. நான் சைக்கிள் ஓட்டிகளைக் குறை சொல்லவில்லை. காரணம் சிக்னல் என்பது மோட்டார் வாகனங்களுக்கு மட்டும்தான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பதுதான். தவறு அந்த விதி அவர்களுக்கும் பொருந்தும் என்று அவர்களுக்கு உணர்த்தாமல் இருக்கும் காவல்துறைமீதுதான். நான் கமிஷ்னருக்குத்தான் கேள்வி கேட்டு இருக்கின்றேன்.சைக்கிள் ஓட்டிகளிடம் அல்ல.


  62. ஒரு பேசிக் கொஸ்டின்...

    நீங்க ஏன் தலை அவ்வளவு வேகமா சிக்னலைக் க்ராஸ் பண்றீங்க? பிரேக் போட்டதும் பின்னாடி வந்தவன் இடிக்கிற மாதிரி?

    பை த வே.. அமெரிக்காவில் (அட்லீஸ்ட் நியூயார்க்கில்)சைக்கிள்களுக்கு சிக்னல் இல்லை. பாதசாரிகளைப் போல அவர்களும் மதிக்கப்படுவர்..

    ஓ நம்ம ஊர்லதான் பாதசாரிகளுக்கே மரியாதை இல்லையே.

    முதல்ல சைக்கிளுக்குனு ஒரு தனி லேன் போட்டுக்குடுக்கச் சொல்லுங்க. அதை விட்டுட்டு அவங்களுக்கும் கார் லாரிக்கு போடுற அதே ட்ராஃபிக் ரூல்ஸா?


  63. விதிமீறல் தமிழனின் தனி உரிமை என நினைக்கும் மக்கள் இருக்கும் வரை இப்படித்தான் அப்துல்..

    மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் இடுகை..:))


  64. //நீங்க ஏன் தலை அவ்வளவு வேகமா சிக்னலைக் க்ராஸ் பண்றீங்க? பிரேக் போட்டதும் பின்னாடி வந்தவன் இடிக்கிற மாதிரி?

    //


    முகிலன் அண்ணா, நான் போனது 40 கி,மீ வேகம் இருக்கும். இன்னோரு பேஸிக் கொஸ்டின்.நான் வேகமாகப் போய் நிறுத்துவதால் பின்னாடி வர்றவன் இடிப்பானா?? இல்லை முன்னாடி போறவன் திடீர்னு நிறுத்துனா கண்ட்ரோல் பண்ண முடியாத அளவிற்கு இடைவெளி குறைவாகத் தொடர்ந்தும்,வேகமாகவும் வருவதால்தான் பின்னாடி வர்றவன் இடிக்கிறானா???


    //பை த வே.. அமெரிக்காவில் (அட்லீஸ்ட் நியூயார்க்கில்)சைக்கிள்களுக்கு சிக்னல் இல்லை. பாதசாரிகளைப் போல அவர்களும் மதிக்கப்படுவர் //

    அண்ணா இங்கேயும் பெடஸ்ட்ரைன் கிராசிங்கும் அதற்குத் தனி சிக்னலும் உண்டும். சைக்கிள்காரர்கள் அட்லீஸ் மற்ற வாகன சிக்னல் நேரத்தில் கடக்காமல் அந்த நேரத்தில் பாதசாரிகளோடு கடக்கலாம் இல்லையா?? அவர்கள் அதையும் செய்வதில்லை.

    நியூயார்க் நகரில் மட்டுமல்ல நான் பார்த்தவரை துபாய்,அபுதாபி,ஹாங்காங் போன்ற பல நகரங்களில் சைக்கிள்கள் பாதசாரிகள் செல்லும் சிக்னலில்தான் கிராஸ் செய்வார்கள். சென்னையைப்போல எந்த ஊரிலும் எந்த சிக்னல் இருந்தாலும் சைக்கிள்கள் போகலாம் என்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


    நீங்கள் சொல்லும்படி தனிலேன் இங்கு சாத்தியம் இல்லை. இருப்பதில் சிறப்பாக எதைச் செய்யலாம் என்பது மட்டுமே இங்கு முடியும் :(


  65. அண்ணே.. நம்மூருக்கு ஒரு வழக்கம் இருக்கும் ராத்திரியானா.. ஒன்வேல போலாம்ங்கிற எழுதாத சட்டம் மாதிரி ஆகிருச்சு.. சரி அதை விடுங்க.. நீங்க பதிவெழுதனுமின்னா.. யாராவது உங்க குறுக்கே விழுந்து எழணும் போலருக்கே..? வாழ்க அந்த சைக்கிள் காரன்.
    கேபிள் சங்கர்



  66. நியாயமான கோவம்தான்.


  67. நல்ல கேள்விகள்.


  68. உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ஒரு சைக்கிள் குறுக்கே சென்றதற்க்கே, காவல்துறைக்கு கடிதம் எழுதும் நீங்கள், ஏன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒட்டிகளின் விதிமுறை மீறல்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

    சைக்கிள் ஓட்டுபவர்கள் இவ்வாறு மாறிப் போனதற்க்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒட்டிகளின் விதிமுறை மீறல்களும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    பாதசாரிகள் சாலையை கடக்க உதவும், ஸீப்ரா கிராஸிங் தாண்டி வண்டிகளை நிறுத்துவோர் எத்தனை பேர்? அப்படியே வழிவிட்டாலும், ஆக்ஸிலேட்டரை திருவி திருவி, நடப்பவர்களை ஓட ஓட விரட்டுவது... மெதுவாக நடந்தால், எருமை மாதிரி ஆடி அசைஞ்சு போகுது பார் என்று வசை பாடுவது.. இதற்க்கெல்லாம் என்ன சொல்கீறிர்கள்..

    சிக்னல்களில், பாதசாரிகள் கடப்பதற்க்காக போடப்படும் சிக்னலை எத்தனை பேர் மதிக்கிறார்கள்? சைக்கிள் கிராஸ் செய்யும் போது, எத்தனை பேர் வழிவிடுகிறார்கள்?

    முதலில் இதெல்லாம் சரியாக நடைபெற்றால், சைக்கிள் ஒட்டிகள் கிடைக்கின்ற கேப்பில் விரைய அல்லது குறுக்கே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.


  69. சென்னை மக்கள் என்று , நீங்கள் குறிப்பிடுவது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஓட்டிகளை மாத்திரம் தான்...

    என்னைப் போல பேருந்தில் பயணம் செய்யும் ஆயிரக் கணக்கானவர்க்ளை விட்டிவிட்டீர்கள். அவர்கள் பதிவு போட ஆரம்பித்தால் அவ்வளவுதான்..

    சைதாப் பேட்டை பேருந்து நிலையம் மற்றும் லிட்டில் மவுண்ட் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள, ஸிப்ரா கிராஸிங்கில் காவலர் இல்லாவிட்டால், ஒட்டப் பந்தயம் தெரிந்தவரால் மட்டுமே கிராஸ் செய்ய முடியும்.



  70. அண்ணே.,

    சுஜாதா ஒரு முறை சொன்னது நினவிலி வருகிறது..

    பாதசாரிகளுக்குத்தான் நடைபாதைகளும் சாலைகளும் போடப்பட்டன்..

    காலப்போக்கில் வாகனங்கள் ஆக்கிரமித்து எல்லோரையும் துரத்தியாகிவிட்டது..

    பொதுவாம நியாயம் என்று ஒன்றிருக்க
    நமது மனப்பான்மை பைக்கில் பயனிக்கும் போது, காரில் பயணிக்கும் போது, பஸ்ஸில் பயணிக்கும்போது.,
    அல்லது எந்த வாகனமோ அதற்குத்தகுந்தவாறு மனநிலை மாறுபடுவதை உணர்ந்திருப்பீர்கள்..

    ஆக்ஸிலேட்டரை முறுக்குவதன் மூலமும் காரின் பெடலை அழுத்துவதன் மூலமும் நாம் கடக்கும் தொலைவுகளை சைக்கிளிஸ்ட்டுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்..

    நடைபாதைக்கும், சைக்கிளுக்கும் முதலில் தனிப்பாதை உருவாக்கி அவர்கள் வேகமாக கடக்கும் வாகனங்களில் இருந்து பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்தியபின்னரே நாம் அதிவேக சாலைகளை குறித்தும் அகலமான சாலைகளை குறித்தும் யோசித்திருக்க வேண்டும்...

    இப்போது நிலைமை தலை கீழ்..
    அகல, அதிவேக சாலைகளை உருவாக்கிய பின் நடந்து சைக்கிளில் செல்வோர் குறித்து நாம் யோசிக்கிறோம்...யோசிப்பது மட்டுமே...எதுவும் நடக்காது..

    எனக்கு தோன்றியவரை சைக்கிளிஸ்ட்டுக்களைவிட டூ வீலர் ஓட்டிகளுக்கும், டூ வீலர்களை விட காரோட்டிகளுக்கும் அதிக படிப்படியான சதவிகிதத்தில் சாலை விதிகள் தெரிந்திருக்கும்...காரணம் அவரவர் கடக்கும் தூரமும் சாலை அனுபவங்களும்தான்..

    அவர்களுக்குண்டான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுத்துவிட்டு அப்புறம் கேள்வி கேட்பதுதான் நியாயமாக இருக்கமுடியுமல்லவா....


  71. எங்களை மாதிரி நடராஜாக்களையும் இந்த ஆட்டத்துல சேர்த்துங்கோங்கோ....ஐ மீன் சட்டத்திற்கு புறம்பானவர்களாக...


  72. உங்க ப்ளாகோட ஜாதகம்
    அண்ணே வணக்கம்ணே,
    இன்னைக்கு உங்க ப்ளாகோட ஜாதகம்ங்கற இந்த பதிவோட‌ நான் கனவு காணும் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பற்றிய பதிவையும் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கட்டி தொடர்பதிவோட 7 ஆம் அத்யாயத்தையும் கூட போட்டிருக்கேன் அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா

    மனுஷ ஜாதகத்தை கணிக்க அனேக வெப்சைட்ஸ் இருக்கிறாப்ல நம்ம சைட்/ப்ளாகோட ஜாதகத்தை கணிச்சு சொல்லவும் அனேக வெப்சைட்ஸ் இருக்குங்கண்ணா. அதுல சில சைட்ஸோட யு ஆர் எல்

    http://www.websiteoutlook.com
    http://www.websiteaccountant.com
    http://www.alexa.com
    http://www.trafficestimate.com

    இன்னம் மஸ்தா கீதுங்கண்ணா. கூகுல்ல போயி value of a site, site ranking இப்படி மாத்தி மாத்தி அடிச்சு தேடுங்கண்ணா

    இந்த சைட்ஸ்ல லாகின் பண்ணி உங்க சைட்/ப்ளாக் பேரை டைப்படிச்சாலே போதும் உங்க ப்ளாகோட ஜாதகத்தை சொல்லிருதுங்க. எத்தனை பேர் பார்த்தாங்க, எத்தனை சைட்ஸ் உங்க சைட்டை லிங்க் பண்ணுது மாதிரி சமாசாரங்களையெல்லாம் அள்ளி வீசுங்கண்ணா.

    நேத்து கூகுல்ல சர்ஃப் பண்ணிக்கிட்டிருந்தப்ப ட்ராஃபிக் எஸ்டிமேட் டாட்காம்னு ஒரு வெப்சைட் மாட்டிக்கிச்சு. சரி நம்ம ப்ளாகோட ஜாதகம்தான் என்னனு தட்டினேன். அந்த சைட் கொடுத்த டேட்டாவின் படி நம்ம கவிதை07 க்கு கடந்த 30 நாட்கள்ள 85ஆயிரத்து 700 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. ( ஹிட் கவுண்டர்ஸுக்கும் இதுக்கும் ஏன் இவ்ள வித்யாசம்? யார்னா விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும்.

    (சில நாள் நான் நாலணா ரிப்போர்ட்டரா வேலை பார்த்த தினத்தந்திக்கு 18லட்சத்து 52 ஆயிரத்து 500 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு.ரெண்டுத்துக்கும் வித்யாசம் ஜஸ்ட் 17லட்சத்து 66 ஆயிரத்து 800 தான். என்னைக்கோ ஒரு நாள் பீட் பண்ணிருவமில்லை. சொம்மா காமெடிண்ணே )

    வழக்கமா நாம ப்ளாக்ல வைக்கிற ஹிட் கவுண்டர் கணக்குப்படி பார்த்தா கூட ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்கி கிட்டிருக்கோம், இதுலயும் நல்ல வளர்ச்சி தான் தலைவா!.

    கடந்த மே மாசத்துல இருந்து 10மாசத்துல ஒரு லட்சம் அடிச்சோம். இந்த ரெண்டரை மாசத்துலயே 50 ஆயிரத்தை நோக்கி இரைக்க இரைக்க ஓடிக்கிட்டிருக்கோம்.

    சனம் கண்டுக்கறதில்லை. கமெண்ட் போடறதில்லைனு ஒரு கூட்டம் கூவுது.ஆனால் பாருங்க நம்ம மெயில் பாக்ஸ் எப்பவும் ஹவுஸ் ஃபுல்லாவே கீது. விஷயம் என்னடான்னா நான் பதிவுகள்ள சொல்ற சமாசாரங்களை பகிரங்கமா ஒத்துக்கற தகிரியம் அவிகளுக்கு இல்லியே தவிர கு.ப தனிப்பட்ட மெயில்லயாவது தங்கள் கருத்தை தெரிவிக்கிற நியாய உணர்ச்சி இருக்கு. அவிக எனக்கே எனக்குனு எழுதற மெயில்ஸ் பகிரங்கப்படுத்தக்கூடாதுங்கற பொறுப்புணர்ச்சி எனக்கு இருக்கு.

    இந்த சந்தோசகரமான சிச்சுவேசன்ல நம்ம வலைப்பூவோட பேரை கொஞ்சமா அனலைஸ் பண்ணி பார்ப்போம்.

    "கவி"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் ஒன்னு கவிஞர் அடுத்தது குரங்கு.
    ( நமக்கு ஆஞ்சனேயருக்கு சூ.........ப்பர் கெமிஸ்டரிண்ணே) "தை"பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு ? தை பிறந்தா வழி பிறக்கும். சரி "க" வுக்கு "கா" விட்டுட்டு பார்த்தா "விதை" மூட நம்பிக்கைக்கு டாட்டா சொல்லி அக்மார்க் இறை நம்பிக்கைக்கு மட்டும் பிர்லா (டாட்டாவுக்கு எதிர்பதம் பிர்லா இல்லிங்களா அப்போ ஹலோனு வச்சிக்குவம்) சொல்லற புது நடைமுறைக்கு விதை போட்டிருக்கோம்.

    இன்னும் என்னென்ன பண்ணலாம்னு ஆர்னா ஐடியா கொடுத்தா இன்னும் தூளா இருக்குமுங்கண்ணா !


  73. அங்க மட்டும் இல்லைங்க இங்கயும் அப்பிடிதான் இருக்கு :( அவ்வ்வ்வ்
    (நீங்க சொன்ன மாதிரியே பதிவு போட்டுருக்கேன் ஒழுங்கா நம்ம கடை பக்கம் வந்து பின்னூட்டம் போட்டுருங்க அண்ணா )


  74. யுவகிருஷ்ணா said...
    சைக்கிள்காரங்க மேலே ஏன் சட்டம் பாய மாட்டேங்குது? ஒருவேளை அவங்கள்லாம் திமுககாரங்களா இருப்பாங்களோ? :-


  75. //நான் பார்த்தவரை துபாய்,அபுதாபி,ஹாங்காங் போன்ற பல நகரங்களில் சைக்கிள்கள் பாதசாரிகள் செல்லும் சிக்னலில்தான் கிராஸ் செய்வார்கள். //

    அண்ணே, அபுதாபில நீங்க பாத்தது பத்து வருஷம் முன்னாடியா இருக்கும்!! இப்ப இங்கயும் சைக்கிள்காரங்க பிரச்னைதான். கூடவே பைக் காரங்களும்!!


  76. உங்க சைட்டுக்கு மட்டும் பெரிய பெரிய பிரமுகர்களா வர்ராங்களே. அது எப்புடி அப்துல்லா அண்ணே!! மேட்டரை விட பீட்டர் ரொம்ப நல்லாவே இருந்தது.


  77. இதை சொல்ல மறந்துட்டேன்.உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,
    எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும்.
    TAMIL VASAM ,
    hardybodywindymi... ,
    இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
    நிர்வாண உண்மைகள் ,
    PAURUSHAM
    INDIAN POLITICAL CLOSEUP
    The Blog
    వాణీ పుత్రుని వాణి
    Woman voice
    kamasuthra
    The Tiger
    kavithai365
    C.K.THE TIGER
    Focus on Tomorrows
    Two Legends
    அனுபவ ஜோதிடம்


  78. /உங்க சைட்டுக்கு மட்டும் பெரிய பெரிய பிரமுகர்களா வர்ராங்களே. அது எப்புடி அப்துல்லா அண்ணே!! //

    v.i.p களின் பெயர்களில் பின்னூட்டமிட்டு இருப்பது நண்பர் குசும்பன் :)



  79. தனக்கு தனக்குன்னா தனக்கு தனக்குதான்!

    எத்த‌னை முறை இர‌வு ப‌ய‌ணங்க‌ளில் நிறுத்த‌ங்க‌ளை சரியாக‌ ம‌தித்து க‌ட‌ந்தீர் நண்ப‌ரே!

    உக்காந்து யோசித்து ப‌தில் சொல்லவும்.


  80. Jaleela Says:

    ம்ம் இங்கு துபாயிலும் சைக்கிள் காரர்கள் சிக்னல் எல்லாம் பார்பப்தில்ல்லை.அதே போல் பைக்கும், சிக்னலில் கார்கள் நின்று கொண்டிருந்தால் சந்துல சிந்து பாடி முதலில் போய் ஒட்டி கொண்டு நிற்பார்கள், எனக்கு அதை பார்க்கும் போது ரொம்ப பயமா இருக்கும்.


  81. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


  82. கரீட்டு..! :)


  83. //எத்த‌னை முறை இர‌வு ப‌ய‌ணங்க‌ளில் நிறுத்த‌ங்க‌ளை சரியாக‌ ம‌தித்து க‌ட‌ந்தீர் நண்ப‌ரே!

    உக்காந்து யோசித்து ப‌தில் சொல்லவும்.

    //

    யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை நண்பா. சுமார் 10 வருடம் இருக்கும்.. இரவுக்காட்சி ஆல்பர்ட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஸ்பென்சர் வழியாக வந்தேன். சுற்றி எந்த வாகனம் இல்லாத நிலையில் சிகப்பு விளக்கில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திரு.இரவி ஆறுமுகம் ஐ.பி.எஸ். அவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி என் அருகில் கைகுடுத்துவிட்டுச் சென்றதை எனக்கு கிடைத்த அங்கீகாரமாக இன்றும் உணர்கின்றேன். அந்த நேர்மைத்திறம் இருப்பதால்தான் துணிந்து இந்த இடுகை எழுத என்னால் முடிகின்றது. குற்றம் இருந்தாத்தானே என் மனசு குறுகுறுங்கும் :)


  84. நண்பா அதே பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னையில் இருந்த நாட்களில்
    இரவு பதினொரு மணிக்கு மேல் எல்லா சிக்னலுமே ஃப்ரியாக இருந்தன.
    நான் ஸ்பென்சரில் ஒர் பிபிஓ வில் வேலை பார்த்தேன்.

    இருந்தாலும் இரவுக் காட்சி முடியும் வரை சிக்னலை ஆன் பண்ணியிருந்த‌
    காவல் துறையின் பொறுப்பில்லாதனத்தை கண்டிக்கும் வேளையில்
    தங்கள் கையையும் அந்த அதிகாரியின் கையையும் பாராட்டுகிறேன்.


  85. //என் அருகில் கைகுடுத்துவிட்டுச் சென்றதை //


    அண்ணே அதிகாரியின் கை என்ன ஆச்சு அப்புறம்


  86. //அங்கதானே தலைவரே குப்பை கொட்டுறேன் (ஐ மீன் ஆபிஸ்)//

    அப்போ கூட்டி அள்றது யாரு?

    //சைக்கிள்காரங்க மேலே ஏன் சட்டம் பாய மாட்டேங்குது? ஒருவேளை அவங்கள்லாம் திமுககாரங்களா இருப்பாங்களோ? :-)//

    இருந்தாலும் இருக்கும்...


    //நீங்க பதிவெழுதனுமின்னா.. யாராவது உங்க குறுக்கே விழுந்து எழணும் போலருக்கே..? வாழ்க அந்த சைக்கிள் காரன்.//

    ரெண்டுநாளுக்கு ஒரு சைக்கிள் விழக்கடவது!


  87. Anonymous Says:

    http://tamilmajastories.blogspot.com/2010/05/blog-post_297.html

    சார் இது தான் செந்தழல் ரவியின் காம வெப்சைட்,
    ஜாலி கிங் என்பவன் - ரவி தான்,இதை உங்க்ளுக்கு சொல்ல் வேண்டிய கடமை எனக்கு உண்டு.
    நான் ரவி/வினவின் கூலிப்படையால் என் மனைவின் மார்பை அமுக்கப்பட்ட அவமானத்தில் இருந்து இன்னும் மீள்வில்லை,வினவு ஆட்கள் நடுவீட்டுக்குள் வந்து கக்கூஸ் மற்றும் சிறுநீர் கழிப்பவர்கள்,உங்களுக்கு கவலையில்லை,,நாங்க அப்பாவி லோக்கல் மிடில்க்ளாஸ்,உங்களை நடுநிலையாளராய் நம்பும் அப்பாவி.:((((((((((((((


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']