சமீபத்தில் நான் என் நண்பருக்கு அனுப்பிய மெயிலையும் அதற்கு அவர் அனுப்பிய பதில் மெயிலையும் பொதுவில் வெளியிட விரும்புகின்றேன்.காரணம் இது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால்தான். வாசகர் கடிதம் வெளியிட்டாத்தானே பிரச்சனை வரும்.இது என் நண்பரின் பதில் கடிதம்தான் :)
*******************************************************
அன்பின் அண்ணன் மதிக்கு,
தங்களின் நலமும்,அண்ணி மற்றும் முரளியின் நலமும் அறிய விளைகின்றேன். தற்போது முரளியின் உடல்நலம் எப்படி உள்ளது?? அவனை கடந்தமுறை பார்த்து வந்ததில் இருந்து மிகுந்த மன சங்கடமாகவே உள்ளது. என்னால் முடிந்தவரை எங்கெல்லாம் இதற்கு மருத்துவ வசதி வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை அறிய முயற்சிக்கின்றேன்.(நீங்கள் இதற்கு மருத்துவமே இல்லை என்று சொன்னாலும்கூட). பிறகென்ன விஷேசங்கள். ஃபோனில் அழைக்க நினைத்தாலும் அளவுகடந்த வேலை அதை மறக்கடித்து விடுகின்றது. மார்ச் மாதம் என்பது என் போன்ற கணக்கபிள்ளைகளுக்கு மிகுந்த பணிச்சுமை உள்ள கொடுமையான மாதம் என்பது உங்களுக்குத் தெரியும்தானே!! சரி, அடுத்தமுறை நேரில் வரும்போது பார்ப்போம்.
அன்பின் மகிழ்வில்,
எம்.எம்.அப்துல்லா.
*********************
அன்பு அப்துல்லாக்கு,
நீயும்,தங்கையும், குழந்தைகள் அர்ஷியா,ஹிபா மற்றும் அனைவரின் நலம் அறிய ஆவல். இங்கு நான் நான்,அண்ணி,முரளி மற்றும் அனைவரும் நலம்.
வெறும் வார்த்தைக்குதான் நலம் என்று சொல்கிறேனே தவிர மற்றபடி முரளியின் உடல் நிலை பற்றியும் அதனால் எங்கள் இருவரின் மனநிலை பற்றியும் உனக்குத் தெரியும். உன்னையல்லாமல் என் நண்பர்கள் பலருக்கும் தெரியும். அதில் ஒரு நண்பர் (பெயர் வேண்டாம்.. ஒரு நண்பர் என்றே வைத்துக் கொள்வோம்.) முரளி மேல் ப்ரியம் அதிகம் உள்ளவர். அவனுடன் பேசும் போதும், அவனுடைய ஐக்யூ வைப் பார்த்தும் இவ்வளவு ப்ரிலியண்டா இருக்கானே, இவனுக்கா இப்படி என்று ரொம்ப அனுதாப படுவார்.
அவருக்கு ஒரு நண்பர். டாக்டர் என்றுச் சொல்லிகிட்டு இருந்தார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும் ஜோசியக்காரர் ஒருவரும் நண்பர். அவருடைய நண்பர் டாக்டரிடம் முரளியைப் பற்றிச் சொல்லி குணம் ஆக்க முடியுமா எனக் கேட்டு இருக்கின்றார். அவரும் இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். நான் குணப் படுத்திவிடுகின்றேன் என்றுச் சொல்லியிருக்கார்.
என் நண்பரும் என்னிடம், அண்ணே (என்னை அண்ணே என்றுதான் அழைப்பார்) இந்த மாதிரி ஒரு டாக்டர் இருக்கார். முரளி பற்றி அவரிடம் சொல்லியிருக்கேன். குணப்படுத்த இயலும் என்றுச் சொல்லுகின்றார் என என்னிடம் சொன்னார். அதன் பின் எனக்கும் அவருக்குமான உரையாடல்.
நான் : அப்படியா ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரு விஷயம் ...
நண்பர் : சொல்லுங்கண்ணே.
நான் : அவர் வைத்தியம் பார்க்கட்டும். குணம் ஆனால்தான் பைசா கொடுப்பேன் அதுவரை ஒரு பைசா கொடுக்க மாட்டேன். இதற்கு முன் ஒருவர் இது மாதிரி சொல்லி 3 லட்சத்திற்கு மேல் செலவு.எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. பணம் கொடுப்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் குணமடைந்தபின் தான் பணம் குடுப்பேன்.
நண்பர் : சரிங்கண்ணே. அவரிடம் நம்ப இரண்டு பேரும் பேசலாம்.ஆனால் அதற்கு முன்னாடி முரளி ஜாதகத்தை அவர் ஜோசியக்கார நண்பர் பெயர் சொல்லி அவரிடமும் கேட்கலாம். அவர் ரூ 300/- பீஸ் வாங்குவார். உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், அதை நான் கொடுக்கின்றேன். ஜாதகத்தை மட்டும் நீங்க எடுத்துவாங்க.
நான் : ரூ. 300 தானே பரவாயில்லை. கொடுக்கின்றேன். (அவர் என்ன சொல்லுகின்றார் எனப் பார்க்கலாம் என மனதற்குள் நினைத்துக் கொண்டேன்).
இரண்டு நாள் கழித்து அவர் ஜோசியக்கார நண்பரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி நாங்க இருவரும் பார்க்கப் போனோம். அவரும் முரளியின் ஜாதகத்தை இப்படி அப்படி புரட்டிப் பார்த்து, ஒரு 20 நிமிஷம் என்ன என்னவோ கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு, இந்த உடல் நிலை நிச்சயம் குணமாகிவிடும். அதனால் இப்போ வைத்தியம் பாருங்க எல்லாம் சரியாகிவிடும் என்றுச் சொன்னார்.
அப்படி, இப்படி என்று ஒருவாரம் கழித்து அந்த டாக்டர் நண்பர் வந்தார். முரளியைப் பார்த்தார். கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துவிட்டு, சரியாக ஒரு வருஷத்தில் இவனை ஓட வைக்கின்றேன் எனச் சொன்னார். அப்போது நான், நீங்க சொல்வது எல்லாம் சரி. ஒத்துக்கிறேன். உங்களால் நல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால், அதுவரை உங்களுக்கு எந்தவிதமான பணமும் கொடுக்க மாட்டேன். ஒன்றுச் செய்யலாம், நீங்க என்ன என்ன செலவு செய்கின்றீர்களோ அனைத்தையும் எழுதி வையுங்க. உங்க போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, மருந்து செலவு எல்லாம் எழுதி வைங்க. முரளி குணம் அடைந்த அடுத்த நொடி உங்களுக்கு அந்த பணம் + 5 லட்சம் தருகின்றேன். அது போக நீங்க செய்யும் வைத்தியம் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்வோம். அதனை நீங்க சொல்லும் டிவியில் ஒரு மாதத்திற்கு விளம்பரம் செய்யும் ஆகும் செலவும் என்னோடது என்றேன். உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்றால், இதை ஒரு நல்ல வக்கீலை வைத்து அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். உங்களுக்கு சாதகமாகவே போட்டுக்கலாம் என்றும் சொன்னேன். அதற்கு அவர் அக்ரிமெண்ட் எல்லாம் வேண்டாம். நிச்சயம் சரி செய்கின்றேன் என்றுச் சொல்லிவிட்டு, அதற்கு முன் நீங்க ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊர் மாயவரம் பக்கத்தில் இருக்கு அங்கு போய் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்திருங்க என்றும் சொன்னார்.
நானும் அவர் சொல்கின்றார் என்பதற்காக, ஸ்ரீவாஞ்சியம் போய் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த தகவலை அவரிடமும் தெரிவித்தேன். அவரும் அடுத்த வாரம் வருவதாக போனில் சொன்னார். சொன்ன நாள் அன்று வரவில்லை. அதற்கு இரண்டு நாள் கழித்து என்னை போனில் அழைத்து, தான் ஒரு இடத்தில் இருப்பதாகவும் என்னை வந்து அழைத்துப் போங்க என்றும் சொன்னார். அன்று பல அவசர வேலைகள் இருந்தன. அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முரளிக்காக ஓடோடி சென்று அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குப் போனோன். போகும் போதே அவரிடம், எனக்கு சொன்னா சொன்ன நேரத்திற்கு வரணும். இல்லாட்டி எனக்கு பிடிக்காது என்பதை நாசுக்காக சொன்னேன். புரிந்து கொண்டாரா என எனக்குத் தெரியவில்லை. அதன் பின் இரண்டு தடவை வீட்டிற்கு வந்தார். இரண்டு தடவை அவர் வைத்தியம் செய்தபின், முரளி அப்பா எனக்கு இந்த வைத்தியம் வேண்டாம். உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்கின்றது என்றான்.
இதற்கிடையில், அந்த டாக்டர் என் நண்பரிடம், நான் தங்கும் செலவுக்காகவது பணம் கொடுக்கச் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின் அந்த டாக்டர் என்னுடன் போனில் பேசவேயில்லை. நான் கூப்பிட்டாலும் போன் எடுப்பதில்லை. இப்படியாக ஒரு மாதம் ஓடிவிட்டது. பல வேலைகளால் நான் என் நண்பரை பார்க்கவும் இல்லை. ஒரு மாதம் கழித்து என் நண்பரை பார்த்தபோது, அவர் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார். என்ன விஷயம் என்று நான் கேட்ட போது, அவர் வைத்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கையே இல்லை. அவர் வரும் போது போய் கூப்பிட்டுக் கொண்டு வரமாட்டேன் என்கின்றீர்கள். அதனால் அவர் இனி வரமாட்டார் என என்னிடம் சொன்னார். அதற்கு நான், அது அப்படியில்லை. இந்த உடல் நிலைக்கு அவர் வைத்தியம் பார்த்து சரி செய்தார் என்றால், நிச்சயம் உலகப் புகழ் கிடைக்கும். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப் படவேயில்லை. மேலும் குணம் ஆனவுடன் நான் பணம் கொடுக்கின்றேன் என்றுச் சொல்லியிருக்கேன். முதலில் பணம் கொடுக்கமாட்டேன் என்றுச் சொல்லுகின்றேன். அதற்காகத்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கின்றார் என நான் சொல்லவும், என் நண்பர் மேலும் டென்ஷன் ஆகி, உங்க குழந்தை மேல் உங்களுக்கு அக்கறையில்லை, அது இது என்று பேச ஆரம்பித்தார்.
அய்யா இது மாதிரி பேசாதீங்க. அவரால் முடியவில்லை. பணம் மட்டும்தான் அவரின் குறி. அதற்கு நீங்க பலியாகிவிடாதீங்க அப்படின்னு சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டேன்.
சில நாள் கழித்து இருவருக்கும் பொதுவான வேறு ஒரு நண்பரைச் சந்தித்தப்போது, அவரும் நான் செய்தது சரிதான் என்றும், அந்த டாக்டர் என்று சொல்பவர் சும்மா டகால்டி பார்ட்டி என்றும் சொன்னார்.
உலகத்தில் எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க என்று நினைத்து மருகாமல் இருக்க முடியலீங்க.எங்களுடைய இத்தனை துன்பங்களுக்கு இடையில் உன் போன்ற உறவுகளின் பிராத்தனை மட்டும்தான் அவனுக்கான மருந்தாக அமையும். எங்கே வைத்தியம் கிடைக்கும் என்று தேடி உன் நேரத்தை வீணாக்காமல் அவனுக்காக குணமடைய பிராத்தனை செய் அது போதும்.
அப்புறம் உன் போன்ற கணக்கப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குத் தேர்வு, பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்கம் டாக்ஸ் பிரச்சனை என அனைவருக்குமே மார்ச் கொடுமையான மாசம்தான். பொலம்பாம போய் வேலையப்பாரு.
இப்படிக்கு,
உன் அன்பு அண்ணன்,
மதியழகன்.
டிஸ்கி : இப்படியும் சம்பாரிக்க நினைப்பவர்களை என்ன செய்வது? ச்சீய் நாயும் பிழைக்க்காது இந்தப் பிழைப்பு.
"நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு"
:(
அப்துல்லாஜி,
வேற எதுனா திட்டலாமே, நாய் நன்றி உள்ளது இல்லையா ..!!
குழந்தைக்கு என் பிரார்த்தனைகள்.
--
#*%(%**()(#@!%(*#%&#)%() இது நான் திட்டினது.
சொன்னது நானே..:))
- ஷங்கர்.
என்ன பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை..:((
ஆனால் ஒன்று..இடுகையின் தலைப்பே தவறு
'நாயும் பிழைக்காது இந்த பிழைப்பு' என்று இருக்க வேண்டும்..
நாயைக் கேவலப்படுத்தாதீர்கள்
//நீங்கள் இதற்கு மருத்துவமே இல்லை என்று சொன்னாலும்கூட//
அப்படி என்ன வியாதி என்று தெளிவாக சொல்லவில்லையே... விழிப்புணர்வுக்குதான் இந்த பதிவுதானே தவிர அது என்னன்னு சொன்னா இன்னும் நாலு பேரு வருவான்கிற பயமா?
கேவலமான பிழைப்பு. பிணம் திண்ணி கழுகுகள் மாதிரி... எவன் எப்ப சாவான், பணம் பிடுங்கலாம் என் நினைக்கும் பிழைப்பாளிகள்.
/// SHAN said...
அப்துல்லாஜி,
வேற எதுனா திட்டலாமே, நாய் நன்றி உள்ளது இல்லையா ..!!
//
// T.V.ராதாகிருஷ்ணன் said...
என்ன பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை..:((
ஆனால் ஒன்று..இடுகையின் தலைப்பே தவறு
'நாயும் பிழைக்காது இந்த பிழைப்பு' என்று இருக்க வேண்டும்..
நாயைக் கேவலப்படுத்தாதீர்கள்
//
உண்மைதான் உடனே மாத்துறேன்.
முரளிக்கு பிரார்த்திக்கிறோம்...
@ அண்ணன் எறும்பு - Duchenne Muscular Dystrophy (DMD)
@ ராகவண்ணன் - :(
மாப்ள நாய் கோச்சிக்க போகுது ...
நண்பரே ஏற்கனவே நீங்கள் படித்திருக்கலாம். இல்லெயென்றால் இதை படிக்கவும்: http://quest.mda.org/news/new-dmd-care-recommendations/
நாய் ஓகே!
அந்த டாக் டர்.............!
அப்புடித்தான்!
என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை...எரியற வீட்டில புடிங்கிற வர லாபம் என்று பலர் இருப்பது கண்கூடாக தெரிகிறது.
கொடுமையாக இருக்கிறது..
உங்கள் நண்பர் விவரமாக இருப்பதால் பிழைத்தார். எத்தனை பேர் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று செலவழிக்கத்தயாராய் இருக்கிறார்?
மற்றபடி, உங்கள் நண்பரின் குழந்தை நலம்பெற என் பிரார்த்தனையும்..
படிக்கவே பத்திக்கிட்டு வருது. பணம் பிடுங்கறதும் இல்லாம அந்த குழந்தைக்கு இன்னும் மோசமா ஏதாவது பண்ணித் தொலையாம இதோட போனது.:(
போலி டாக்டர்கள் பெருகி விட்டனர்
டாக்டர்களிலும் போலி பெருகி விட்டது
நடிகர் நெப்போலியன் மகனுக்கு கூட இவ்வியாதி இருப்பதாக அறிந்தேன்.
மருந்துகள் குறைந்த விலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
குணமடைய பிரார்த்திப்போம்
விஜய்
wish all the best for your son,
முரளிக்கு என் அன்பு.
இப்படி நிறைப்பேர் வைத்தியம் பண்ணுறேன்னு ஏமாத்திக்கிட்டு இருக்காங்க அப்துல்லா உங்க அணுகுமுறை சரியானதுதான்
வைத்தியரின் வைத்தியங்களை விட நல்ல மனதுள்ளவர்களின் பிரார்த்தனை நிச்ச்ச்சயம் பலன் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேபிள் சங்கர்
கேவலமான பிழைப்பு. பிணம் திண்ணி கழுகுகள் மாதிரி... எவன் எப்ப சாவான், பணம் பிடுங்கலாம் என் நினைக்கும் பிழைப்பாளிகள்.
:-(
முரளியின் உடல் நலத்திற்குப் பிரார்த்தனைகள்
Enna solrathunnu theryavillai. muralikkaha perrthani seyran. Nenga nall homeopathy dr anugalam(qulified) sari seyamudiyavillai enralum noyien theveram kurium.
நித்யா தியான முகாம் திரும்பவும் ஆரம்பிச்சா... போய் பாக்க சொல்லுங்க... நிச்சயம் குணமடையும்...
(I am not joking)
முரளியின் உடல் நிலை குணமாக பிரார்த்தனைகள்
follow-up
:((
குழந்தை குணமடைய ப்ரார்த்தனைகள்.
:(
முரளிக்கு என் பிரார்த்தனைகள் அண்ணே!
பிரபாகர்...
முரளிக்காகப் ப்ரார்த்திக்கிறோம்....
:-(
இறைவன் நலமாக்கித் தரப் பிரார்த்தனைகள்.
தந்தையின் மனதைரியம் மெச்சப்படவேண்டியது.
அந்த குழந்தை விரைவில் குணம்டைய என் பிரார்த்தனை
டிஸ்கி: அந்த குழந்தைக்கு என்ன பிரச்சினை என்று சொல்லிருந்தால் வேறு ஏதுனா வழிவகை கிடைக்க வாய்ப்பிருக்கு, முதல் பாராவில் இதுபர்றி சொல்லுமாப்ளே
முரளி குணமடைய பிரார்த்தனைகள்.
இதே மாதிரி நான் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு டாக்டர் கிட்ட மாட்டிகிட்டேன். முடிந்தால் பதிவாக எழுதுகிறேன்.
முரளிக்கு பிரார்த்திக்கிறோம்...
முரளிக்குப் பிரார்த்தனைகள்
மருத்துவத்திற்கும், ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம்!?
மதி அண்ணன் செய்தது தான் சரி!
///////// T.V.ராதாகிருஷ்ணன் said...
என்ன பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை..:((
ஆனால் ஒன்று..இடுகையின் தலைப்பே தவறு
'நாயும் பிழைக்காது இந்த பிழைப்பு' என்று இருக்க வேண்டும்..
நாயைக் கேவலப்படுத்தாதீர்கள்////////
அய்யோ பாவம் அந்த நாய் .
விகடனின் "ஆபாசத்தின் எல்லை" கட்டுரையில் தங்களின் கருத்தையும், புகைப்படத்தையும் படித்தேன்/பார்த்தேன், நன்று
அண்ணே முரளி விரைவில் குணமடைய வாழ்த்துகள். மதி அண்ணன் செய்தது சரியே...
தலைப்பு இப்போ பொருத்தம் தான்.
//மருத்துவத்திற்கும், ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம்!?
//
கொஞ்சம் சம்மந்தம் இருக்கு அண்ணே. ஆனால் அதுக்கு மருத்துவரும் போலியாக இருக்க கூடாது.ஜோசியரும் போலியாக இருக்கக்கூடாது
ஒரு டாக்டர் இப்படி சொல்வது ஆச்சர்யம் அளிக்கிறது!
உலகெங்கும் ஏற்றுகொள்ளப்பட்டது மருத்துவம், ஆனால் ஜ்தாகத்தை பற்றி உள்நாட்டிலேயே பல முரண்பாடுகள் உள்ளன!
ஜாதகம் என்பதே நம்பிக்கை சார்ந்த விசயம் என்ற பிறகு அதில் அசல், போலி எங்கிருந்து வரும்!
ஜாதகம் என்பது ஒன்றுமில்லை ’நீ எப்பொழுது துறவுநிலை ஏற்கவேண்டும்’ என்பதன் நீட்சியே.
எங்களூரில் ஒரு குரு உண்டு... அவரிடம் 85 சீடர்களுண்டு.... 85ல் 42 பேர் டாகடர்ஸ்..எல்லாம் சாதரண டாக்டர்ஸ் இல்ல.. பெரிய பெரிய மெகா சர்ஜனஸ்.
நம்பிக்கை, அறிவு தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது வால்.
//எங்களூரில் ஒரு குரு உண்டு... அவரிடம் 85 சீடர்களுண்டு.... 85ல் 42 பேர் டாகடர்ஸ்..எல்லாம் சாதரண டாக்டர்ஸ் இல்ல.. பெரிய பெரிய மெகா சர்ஜனஸ்.//
டாக்டர்ஸ் எல்லாருமே புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்ல!
ஒரு இஞ்சினியர் எப்படி மனப்பாடமா படிச்சு ஞாபகம் வச்சு பரிட்ச்சை எழுதுறானோ, அதே தான் ஒரு டாக்டருக்கும்!. படிப்புக்கும், சிறுவயதிலிருந்தே ஊட்டப்படும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை!
42 டாக்டர்ஸ் இருக்காங்க அதனால நானும் ஃபாலோ பண்றேன் என்பது பெரும்பான்மையிடம் தம்மை ஒப்புகொடுக்கும் பொது புத்தி!
90 வயசு குரு சொல்ற தத்துவத்தை எதோஒரு சூழ்நிலையில் 6 வயது சிறுவன் சொல்லிவிடக்கூடும், நமக்கு ஏற்றுகொள்ளத்தான் மனம் இல்லை!
நானா அனுபவபட்டு தெரிந்து கொள்ளமாட்டேன், குரு சொன்னா தான் தெரிஞ்சிகுவேன்னு சொல்றவங்களை ஒன்னும் பண்ணமுடியாது! அவர்களுக்கு உறைந்த நிலையில் இருக்கு மூளை!
வால் செம்ம காமெடி...
மறுபடி நீங்கள் கூறியது நான் கூறியது திரும்பவும் நீங்கள் கூவியது.. படித்து பாருங்கள்...
//நம்பிக்கை, அறிவு தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது வால்.//
இதற்கு தான் அந்த பதில்!
அறிவு தாண்டிய விசயம் ”அறிவின்மை”
எம்புட்டு தூரம் தாண்டுறிங்களோ, அம்புட்டு முட்டாளாக நாட்டில் வாழலாம்!
அறிவுக்கு opposite தானுங்கண்ணா அறிவிண்மை
//அறிவுக்கு opposite தானுங்கண்ணா அறிவிண்மை//
உள்ளுக்கு புறம் வெளி!
அது எதிராக தான் இருக்கனும்னு அவசியமில்லை! அருகிலேயே கூட இருக்கலாம்!
அதாவது அண்ணன் புத்திசாலியாகவும், தம்பி மந்தமாகவும் இருக்கலாம்! அதில் எங்கிருந்து ஆப்போசிட் தேடுவது! அப்போசிட் உதாரணம் எல்லாவற்றிற்கும் ஒத்துவராது!
சரியான விளக்கம் வேணு/னு(?)ங்களாண்ணா..
அயலை அறிவது அறிவு, அயலை அறியும் அறிவை அறிவது ஞானம்.
//
சரியான விளக்கம் வேணு/னு(?)ங்களாண்ணா..
அயலை அறிவது அறிவு, அயலை அறியும் அறிவை அறிவது ஞானம். //
அயல் என்பது புறத்தை குறிக்கிறது! புறம் சார்ந்த அறிவு பொருளாதாரம் சம்பந்தபட்டது, அகம் சார்ந்த அறிவு தத்துவம் சம்பந்தபட்டது! தத்துவம் மனதிற்கு ஆறுதல் அளிக்கலாம் ஆனால் வயிறு நிரம்பாது! புறம் சார்ந்த அறிவு இருப்பதினால் தான் நானும் நீங்களும் இன்று மதியம் சாப்பாடு சாப்பிட முடிகிறது!
அகம் சார்ந்த அறிவு நம்பிக்கை சார்ந்தது, ஆனால் அவசர கதியில் தத்துவங்கள் உயிர்காக்கா என்பது ஒரு காக்காவுக்கும் தெரியும், இருந்தும் நான் அதை தான் கட்டிகிட்ட் சாவேன் என்றால் யாராவது வந்து தெடுக்கப்போராங்களா என்ன!?
சரி இங்க வாங்க கொஞ்சம் கும்மலாம்!
i read abt Murali's health issue.. dnt worry pray well.. he will get cure soon.. i dnt know whether u ll believe jesus.. just 1 time u coem to church and pray.. he will be cured.. have faith on him.. if possible come to following address, here god do lot of miracles to ppl..
Br.Samuel,
Athumanesar sabai,
Mathikare,
Bangalore.
Hope he ll cure in name of Jesus and by his blood..
:(
இவ்வியாதி உள்ளவர்கள் குணமடைய பிரார்த்திப்போம்
prarthana brings victory.
முரளியும் மற்றும் இதுபோன்று நோயுள்ளவர்களும்
குணமடைய பிரார்த்திக்கிறேன். மதியழகன் நம்பிக்கையை
விடவேண்டாம்.
எல்லா ஊரிலும் இதுபோன்ற பிணம் தின்னிகள் திரிகிறார்கள்!
திரு.மதி செய்ததுதான் சரி!
முரளி குணமடைய நம் பிரார்த்தனைகள் உதவட்டும்!
அப்துல்லா இந்த உலகில் பலர் இப்படி உள்ளார்கள்
பட்டியல் போட்டால் இடம் பத்தாது
இப்படி கூடவா ஏமற்றுவார்கள் என நினைக்கும் அளவுக்கு
நாம் தான் எப்போதும் முன் ஜாக்கிரதையாக இருக்கனும்
நல்ல பகிர்வு
பல இடங்களில் இப்படித்தான் நடப்பது.
எத்தத்தின்னா பித்தம் தெளியும் எனும் மனநிலையை சாதகமாக்கி காசு பார்க்கும் கூட்டம் இருக்கு. :((
இதெல்லாம் ஒரு பிழைப்பு அதுவும் நாயோடு ஒப்பிட்டு, பாவம் நாய் விட்டுடுங்க அப்துல்லா.
http://niroodai.blogspot.com/
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html
அப்பப்ப வந்துபோங்க
முரளிக்கு என் பிரார்த்தனைகள்.
குழந்தைக்கு நீங்கா நோய் இருப்பது தெரிந்து வாழும் பெற்றோரின் வாழ்வு கொடுமையானது. உங்கள் நண்பருக்கு மன திடம் இருக்கிறது.
மயோபதி என்டழைக்கப் படும் இந்த மஸ்குலர் டிஸ்ட்ரோபி, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப் பட்டால், பெருமளவு குணமாகக் கூடியதே!
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று பேர்களுக்கு இந்த மயோபதி இருக்கிறது. உடன் பிறந்த இன்னுமொரு மூன்று பேர்கள் நச்ள்ள நிலையில் தான் இருக்கிறார்கள். இதே குடும்பத்தின் நெருங்கிய உறவில் சிறு சிறு பெண் குழந்தைக்கும் இந்த நோய் இருக்கிறது.
இதற்கான ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் பாதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை மிகச் சிறிய அளவில் தான்.
அதிகம் காசு பார்க்க முடியாது என்பதாலோ என்னவோ, மருந்து தயாரிப்பாளர்கள் இந்த ஆராய்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
இப்போது, உங்கள் பதிவின் உள்ளடக்கத்தைத் தொட்டு......
இங்கே நிறைய மருத்துவர்களுக்கு இந்த வியாதியை பற்றி, அனேகமாக லேட்டஸ்ட் நிலவரங்கள் தெரிந்திருப்பதில்லை. சரியான மருத்துவம் இங்கே கிடைப்பதில்லை என்ற நிலையில், பிள்ளையை பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே! நேரடியாக ஒரு குடும்பத்தின் அவஸ்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
ஜோதிடம், பரிகாரம் தேடித் போவதெல்லாம் ஒரு மன ஆறுதலுக்காகத் தான்!
ராகவன் நைஜீரியா சொல்லியிருப்பது, மருத்துவம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்களுக்குத் தான் மிகவும் சரியாகப் பொருந்துகிறது!
// D.R.Ashok said...
நித்யா தியான முகாம் திரும்பவும் ஆரம்பிச்சா... போய் பாக்க சொல்லுங்க... நிச்சயம் குணமடையும்...
(I am not joking)
20 March 2010 21:02//
அந்த டாக்டருக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கா என்ன ?
//அந்த டாக்டருக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கா என்ன ? //
Those who spoke does not known; those who known does not speak
இன்னும் தெளிவா சொல்லனும்னா
‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ :)
அப்துல்லா பாய்,
ஸலாம்.
பமுத தடவை உங்க ப்ளாகுக்கு வர்றேன். முத பதிவு நான் படிச்சதே கண்ணை நிறைச்சிட்டுது. தன் மகன் படற கொடுமையை விட கொடுமை அவனை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை எதிர்கொள்வது. நானும் ஆசை ஆஇயாய் கூகுளில் தேடினேன், எங்கயாவது சிறு துரும்பு கிடைக்குமான்னு. நம்ம கண்ணுக்கு கிடைக்கலை. ஆனால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அதற்கும் ஒரு வழி வெச்சிருப்பான். கண்டிப்பா அவன் நாடியது நல்லதாகவே இருக்கும். தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
அப்துல்லா பாய்,
இந்த நோய் பற்றி படித்தவுடனே இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். இந்த லின்க்ல இருக்கற சகோதரரும் அதே நோய்க்கு ஆட்பட்டவர்தான் ஆனால் மன உறுதியும் தைரியமும் அவரை அதிக மக்களுக்கு தெரிய வெச்சிருக்கு. அதிக நாள் வாழ்க்கையும் மன உறுதியால்தான் அமையும். அதனால் முரளிக்கு அதே தைரியம் தரச்சொல்லுங்க. தைரியமா இருக்க சொல்லுங்க. ஒவ்வொரு நாளையும் அவனோட முன்னேற்றத்திற்காக எடுத்துக்கச் சொல்லுங்க. அப்படிங்கற ஒரு மன தைரியத்தைப் பற்றிய படிப்பு, எந்த அளவுக்கு வேணும்னாலும் நம் மன நம்பிக்கையால் சாதிக்கலாம்னு சொல்லுது. இன்ஷா அல்லாஹ், தீவிர நம்பிக்கையும் ஒரு மருத்துவம்தான். விடா முயற்சி செய்யச் சொல்லுங்க. அல்லாஹ் நல்லதையே நாடுவானாக. ஆமீன்.
சகோதரி அன்னு,
முரளிக்கு தங்கள் பின்னூட்டத்தின் சுட்டியை அனுப்பிவிட்டேன்.
முகம் தெரியாத மனிதர்களுக்கு பெரும் கருணையுடன் உதவி செய்து கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் போலிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். அந்த டாக்டரை அத்துடன் விட்டிருக்கக் கூடாது.
முரளிக்காக பிரார்த்தனைகள்.
அடப் பாவிங்களா... இப்பிடி கூடவா காசு சம்பாதிப்பாங்க?
முரளி சீக்கிரம் குணமடைய எங்களின் பிரார்த்தனைகள்.