பட்ஜெட் பார்வை

ரயில்வே பட்ஜெட் முடுஞ்சுருச்சு.மைய அரசின் பட்ஜெட்டும் முடுஞ்சுருச்சு. அடுத்து மாநில அரசின் பட்ஜெட் விரைவில் வரும்.ஒரு பட்ஜெட் வந்தவுடனே என்னவெல்லாம் நடக்கும்னு பார்ப்போம்.

எந்த ஆளும்கட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்கின்றதோ அந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்களும்,மக்கள் பிரதிநிதிகளும் மக்களை உய்விக்க வந்த ஒரே நிவாரணி இந்த பட்ஜெட் என்ற ரேஞ்சில் பேட்டிகள் அளிப்பார்கள்.ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் நல்ல பட்ஜெட் என்று ஒரு சப்போர்ட்டிங் அறிக்கை விட்டு அவர்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள். எதிர் கட்சிகளின் தலைவர்கள் புதிதாக அறிமுகப்படுத்திய வரிகள் மக்களை நேரடியாகத் தாக்கும் (அதென்ன கொரில்லாவா சைடில் இருந்து தாக்க??) என்று கடுமையான அறிக்கை ஒன்றை விடுப்பார்கள்.அப்படியே அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அறிமுகப்படுத்திய வரிகளை வசதியாக மறந்தும்விடுவார்கள். எதிர்கட்சிக்களின் அறிக்கையில் முக்கியமான இன்னோரு வாசகமும் இருக்கும்.அது... ”இந்த பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் எதனையும் பிரதிபலிக்கவில்லை”. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த வாசகம் எதிர்கட்சிகளின் அறிக்கையில் இருக்கின்றது. சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாட்டைவிட,மாநிலத்தைவிட இன்றைய நிலை உயர்ந்ததாகவே இருப்பது கண்கூடு.அப்படி இருக்க வளர்ச்சித் திட்டம் எதுவும் இல்லாமலேயே எப்படி வளர்ந்தது என்பதை மக்களும் யோசிக்க மாட்டார்கள்.எதிர்கட்சிகளும் அந்த ரகசியத்தைச் சொல்லமாட்டார்கள்.

அப்புறம் ஆளும்கட்சி நாங்கள் இத்தனை சதவிகித வளர்ச்சியை வரும் ஆண்டில் அடைவோம்.அதை உத்தேசித்தே இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்.ஆண்டு முடிந்ததும் நாங்க சொன்னது இவ்வளவு, நடந்தது இவ்வளவு என்று அவர்களும் சொல்வதில்லை.யாரும் கேட்பதில்லை. மீண்டும் புதிய இலக்கோடு புதிய பட்ஜெட் வந்துவிடும்.

முன்பெல்லாம் மத்திய பட்ஜெட்டை மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மட்டுமே கவனிப்பார்கள்.ஆனால் சமீபகாலமாக கிராமப் பகுதிகளின் அதாவது பஞ்சாயத்துராஜ் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள்கூட கவனிக்கத்துவங்கி விட்டனர்.காரணம் மத்திய அரசு ஒதுக்கும் நிதி :)

சமீபத்தில் வந்த மத்திய பட்ஜெட் பற்றி பொருளாதார வல்லுனர்களான சக பதிவர்கள் சகோதரி நாஸியா, அண்ணன் சுரேகா போன்றோர் கருத்துரைக்க வேண்டுகின்றேன். மாநில அரசின் பட்ஜெட் வந்ததும் அதுபற்றிய பார்வைகளை நான் எழுதுகின்றேன்.

இன்னோரு முக்கியமான விஷயம்.சமீபத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த மாண்புமிகு.மம்தா பேனர்ஜி அதில் “ரெயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம்” என்று அறிவித்தார். இரயில்வே பட்ஜெட்டுக்கு கருத்து அறிக்கைவிட்ட தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா “ரெயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும்”னு சொல்லியிருக்காரு. இப்ப என்ன சொல்ல வர்றீங்க அம்மா?? தாழ்த்தபட்டவர்கள் அறிவில்லாதவர்கள்னு சொல்ல வர்றீங்களா? இல்லை தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாய்மொழிதவிர வேற்று மொழிகற்க திராணியற்றவர்கள்னு சொல்ல வர்றீங்களா?? இல்லையில்லை நான் அப்படிச் சொல்லலை.அவர்கள் கிராமப்புற பள்ளிகளில் இருந்து வருவதால் ஆங்கிலத்தில் பயிலாது இருப்பார்கள்.அதனால் சொல்றேன்னு சொல்றீங்களா? சரி அப்படியே பார்த்தாலும் கிராமப்புறம் என்றால் அதில் தாழ்த்தப்பட்டோர் மட்டுமா இருக்கின்றார்கள்? செட்டியாரு,முதாலியாரு,வன்னியரு,இஸ்லாமியருன்னு எத்தனையோ பேரு கிராமப்புறத்தில இருக்காங்களே. கிராமப்புற பள்ளிகளின் கல்வித் தரத்தில் எல்லாச் சாதிக்கார மாணவர்களும் தாழ்த்தப்பட்டோரே.கிராமபுறத்துலேந்து வர்ற எல்லாரும் வெள்ளக்கார தொர கணக்கட்டா இங்கிலீசுல பேசுற மாதிரியும், என்னவோ தாழ்த்தபட்டோர் மட்டும் பேசமுடியாம தவிக்கிற மாதிரியும்...

உங்களை உங்க கட்சிக்காரன் எல்லாரும் சசிகலாவைவிட்டு வெளிய வாங்க, கொடநாட்டை விட்டு வெளிய வாங்கன்னு கரடியாக் கத்துறான். அதுலேந்தெல்லாம் நீங்க வாங்க இல்லாட்டி நாசாமாப்போங்க. ஆனா முதல்ல உங்க ஆதிக்கசாதி மனப்பான்மையில இருந்து வெளிய வாங்க. உலகம் ரொம்பப் பெருசு.

41 Responses
  1. அண்ணே காலையில் நீங்க சொன்ன பட்ஜட் பற்றிய பதிவை எப்ப எழுதுவீங்க? பட்ஜெட் பற்றி அலசல் என்று சொல்லிட்டு அம்மாவை போட்டு காச்சிருக்கீங்க?


  2. பட்ஜெட் பார்வைன்னு ஆரம்பிச்சு, அந்தம்மாவை ஏன் விமர்சிச்சிருக்கிறீங்க?

    அவங்களே எத்தைத் தின்னாப் பித்தம் தெளியும்னு, பட்ஜெட்டைப் பாராட்டினாலாவது காங்கிரஸ் நம்மள நம்புமான்னு நப்பாசையில சொல்றாங்க.. அதப்போயி..


  3. //தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும்”னு சொல்லியிருக்காரு. இப்ப என்ன சொல்ல வர்றீங்க அம்மா?//

    அப்படின்னா தமிழ் வழி பொறியியல் கல்லூரிகள் வரப்போறதா சொல்றாங்களே,அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?


  4. கால் ஆட்டலைனா போட்டோவுக்கு மாலை மாட்டிருவாங்கண்ணே!


  5. காலையில் நீங்க சொன்ன பட்ஜட் பற்றிய பதிவை எப்ப எழுதுவீங்க?


  6. தல நீங்க Finance Head-ஆ இருந்துட்டு பட்ஜெட் பத்தி எழுதாட்டா எப்புடி?

    ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்த்ததில் ரெண்டு மூனும் பதிவு போட்டுருக்கீங்க. Follower ஆகிட்டேன். So, இனிமே அடிக்கடி வருவேன்.


  7. //சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாட்டைவிட,மாநிலத்தைவிட இன்றைய நிலை உயர்ந்ததாகவே இருப்பது கண்கூடு//

    ஆனால்... மிக மிகக் குறைவு


  8. D.R.Ashok Says:

    especially last para :)


  9. கூல் டவுன், கூல் டவுன்


  10. KVR Says:

    பட்ஜெட் பார்வை, அதுவும் ஃபினான்ஸ் துறையைச் சேர்ந்தவர் எழுதியதுன்னு உள்ளே வந்தேன். கொஞ்சம் ஏமாற்றம்.


  11. வாழ்த்தீட்டே போறன் சாமி:)



  12. M.M.Abdullah MBA,
    Please write about Individual tax relaxations, and other benefits given in the budget and also adding more services in to service tax in detail. how this affect the common man.
    Ammava thitrathu ellam ungala mathiri aalungalukku vendaam. Unga range kku ithu romba kammi.


  13. காலையில் நீங்க சொன்ன பட்ஜட் பற்றிய பதிவை எப்ப எழுதுவீங்க?

    :)


  14. காலையில் நீங்க சொன்ன பட்ஜட் பற்றிய பதிவை எப்ப எழுதுவீங்க?

    :)


  15. :) (எல்லாம் உங்ககிட்டேந்து வந்ததுதான்)


  16. திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்...

    சரி..ஆனா மனசு வரல...


  17. உங்கள சொல்லி குத்தமில்ல...

    தலைவர் எவ்வழி..தொண்டர்களும் அவ்வழி..


  18. சூப்பர் பட்ஜெட் பார்வை...

    ரொம்ப பிரமாதம்...

    பெண்டாஸ்டிக்..

    இது வரை யாருமே பார்க்காத பார்வை..

    சரி பட்ஜெட் பத்தி இந்த இடுகையில் எங்க எழுதியிருக்கீங்க.. கொஞ்சம் ஹைலைட் பண்ணி வைங்க..


  19. பட்ஜெட் பற்றிய கட்டுரையில் 2 மற்றும் 6ஆவது பத்திகளில் வரி விலக்கு இல்லாமல் இருக்கிறது :)


  20. நான் சாயுங்காலம் வந்துதான் படிக்கணும்ண்ணே!



  21. எல்லாம் சரி அண்ணே..... ரெயில்வே பட்ஜெட்ல தமிழகம் மறுபடியும் புறக்கணிக்கப்பட்டிருக்கு......இத பற்றி நம்ம எம்பிக்கள் மத்திய அமைச்சர்கள பற்றியும் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்...........எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்னை-திருச்செந்தூர் வாராந்திர ரெயில் நிறுத்திட்டானுவ......திருநெல்வேலி-தென்காசி அகலரயில் பாதைய பற்றி ஒன்னும் இல்லசெங்கோட்டை-கொல்லம் அகல ரயில பாதை திட்டமும் அப்படியே.......... கெடக்கு.இதுக்காக உழைத்த ரெயில்வே அமைச்சருக்கும், நம்ம தமிழ்நாட்டு மத்திய அமைச்சர்களுக்கும்,. எம்பிக்களுக்கும்.. மிக்க நன்றி



  22. Vinitha Says:

    //உலகம் ரொம்பப் பெருசு. // :-)


  23. ஜெயலலிதாவின் அப்பிடின்னு தலைப்புக்கு முன்னாடி சேத்துடுங்க.. யாரும் திட்ட மாட்டாங்க.. :))


  24. இந்த ஐஸ் கட்டில ஈரம் மிஞ்சுமா??


  25. ஸ்ரீ Says:

    //கிராமபுறத்துலேந்து வர்ற எல்லாரும் வெள்ளக்கார தொர கணக்கட்டா இங்கிலீசுல பேசுற மாதிரியும், என்னவோ தாழ்த்தபட்டோர் மட்டும் பேசமுடியாம தவிக்கிற மாதிரியும்...//
    சரியாச் சொன்னீங்க.என்னத்தையாவது சொல்லணுமேன்னு சொல்றதுதான்.யாருக்கு இங்கே அக்கறை மக்களைப் பத்தி.
    நல்ல இடுகை.


  26. அன்பின் அப்துல்லா

    பட்ஜெட் விமர்சனம் நல்லாவே பண்ணி இருக்கீங்க - அம்மாவ ஒரு புடி புடிச்சீட்டிங்க - ம்ம்ம்ம்


  27. ஒண்ணுமில்லை.....ச்சும்மா


  28. ROMEO Says:

    \\ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் நல்ல பட்ஜெட் என்று ஒரு சப்போர்ட்டிங் அறிக்கை விட்டு அவர்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள். //

    காலம் காலமா செய்து வருகிற கடமை அண்ணே இது


  29. மாப்ளே பட்ஜெட் பத்திய விமர்சனம்தான் எழுதிருக்கியே தவிர பட்ஜெட் பத்தி உன் பார்வையிலே எழுதலியே


  30. SUFFIX Says:

    பட்ஜெட் பார்வையில் ‘பாவைகள்’ மேல் அட்டாக்கா..? அம்மா இப்போ அறிக்கை விடுறது கொஞ்சம் குறஞ்சு இருக்கே.


  31. ஜெயலலிதாவுக்கு கொடுத்த அட்வைஸ்தான் பட்ஜட்டைவிட சூப்பர் அப்துல்லா


  32. Anonymous Says:

    Super . . But what do you expect from a chief minister who openly supports her caste and is supported by her caste


  33. அண்ணே காலையில் நீங்க சொன்ன பட்ஜட் பற்றிய பதிவை எப்ப எழுதுவீங்க?

    :-)


  34. This comment has been removed by the author.

  35. superna ... unka mobile number venum .


  36. நானா..? ஏன்..ஏன்..? பொருளாதாரம்னு எல்லாம் பில்டப்பு? நான் ரௌடியே இல்லை! வேனில் ஏத்தாதீங்க! :)


    மே மாசம் வரப்போற விலையேற்றம் மற்றும் பொருளாதார குற்ற கைதுகளுக்காக காத்திருப்போம்.!! நியூஸ்களை பாத்திருப்போம்..! :)


  37. வருகை தந்து கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    @விலேகா - அப்பா நலமா?? எனக்கு மெயில் அனுப்புங்க நம்பர் தர்றேன்.
    pudukkottaiabdulla@gmail.com


  38. எல்லோருக்கும் அல்வா குடுத்திருக்கீங்க போல தெரியுது. அது.!


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']