ஒரு பூர்ஷ்வாவின் தன்னம்பிக்கையும், கம்யூனிஸ்ட்டின் கோழைத்தனமும்

ஒரிரு நாட்களுக்குமுன் மதியம் உணவிற்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அங்கே திரைப்பட நடிகை சகோதரி கனகா தனியே அமர்ந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் நேரில் பார்க்கும் வாய்ப்பு.இந்த இடைவெளியில் அவர் உருவத்தில் சிறிது மாற்றம் இருந்தது. சற்றே இளைத்திருக்கின்றார்.”எப்பவும் இந்த ஹோட்டலுக்கு வருவீங்களா?” என்று கேட்டதற்கு “எப்பவும் வரமாட்டேன்.பசிச்சா மட்டும்தான் வருவேன் என்று சொல்லிச் சிரித்தார்.கைகளில் அணிந்திருந்த வளையல்களைக் காட்டி இப்பல்லாம் இந்த மாடல்தான் ஃபேஷன் என்றார். இதையேன் ஒரு பெண்ணிடம் சொல்வதுபோல் என்னிடம் சொல்கின்றார் என்று நான் குழம்பிக்கொண்டு இருந்த நேரத்தில் ”ஆனா இந்த நகையெல்லாம் என் பாட்டியோடது.ஒல்ட் எல்லாம் இப்ப ஆண்டிக் என்று ஃபேஷனாகிவிட்டது” என்றார்.இப்போது நான் சிரிக்கத் துவங்கினேன். ஒரு அரைமணி நேரம் அவரோடு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்ததில் ஒரு வார்த்தைகூட அவர் குடும்பத்தில் சமீபத்தில் சந்தித்துவரும் பிரச்சனைகளைப் பற்றி அவரும் பேசவில்லை.நானும் கேட்கவில்லை. பத்திரிக்கைகளில் வருவதுபோல அவர் மனக்குழப்பத்தில் இருப்பதாக எனக்கு எதுவும் தெரியவில்லை.மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்.



****************************************



தோழர்.வரதராசன் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய், பின்னர் அவரது உடல் போரூர் ஏரியில் கைப்பற்றப்பட்டுள்ளது. தோழர்.வரதராசன் கடந்த ஓரிரு மாதங்களாகவே பெரும் மனக்குழப்பத்தில் இருந்ததாகவும் வீட்டிலும்,கட்சியிலும் அவருக்கு நிறைய மனக்காயங்கள் நேர்ந்ததாகவும் செய்திகள் வருகின்றன.அவரது நெருங்கிய தோழர்களிடத்தில் இதைப்பற்றி தொடர்ந்து அவர் பேசி வந்திருக்கின்றார். ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மக்கள் கஷ்டங்களைத் தீர்க்க வேண்டியவர்.தன் கஷ்டம் தீர்க்கத் தெரியாமல் தவறான முடிவைத் தேடியுள்ளார்.தன் உடலை புதைக்காமல் மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிப்பதே இறுதி ஆசை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இறுதி ஆசையும் நிறைவேறாது போல.காரணம் உடல் தண்ணீரில் மிகவும் ஊறிவிட்டதால் அந்த உடலை மருத்துவக்கல்லூரிகள் ஏற்பது கடினம் என்கின்றனர்.



****************************************



மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளில் முதல் நிகழ்வில் சம்மந்தப்பட்டவர் ஒரு சித்தாந்தவாதி அல்ல.பணமும்,பகட்டும்,போலி மரியாதைகளும் நிறைந்த திரையுலகைச் சேர்ந்தவர். தந்தையின் முகம் அறியாது வளர்ந்தவர்.தாயின் ஆதரவிலும்,பாசத்திலும் மட்டுமே வாழ்ந்தவர்.உலகம் அறியும்முன்னே ஹாலஜன் விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்து கேமிராமுன் நின்றவர்.ஒரே துணையான தாயையும் நடிக்க வந்த ஒரிரு வருடத்தில் இழந்தவர். சரியாக அமையாத மண வாழ்க்கை, சொத்தைக் குறி வைக்கும் பெற்ற தந்தை என்று அவர் தினமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.அவரால் வாழ்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகின்றது.ஆனால் சித்தாந்தத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் பிரச்சனைகளில் இருந்து விடுபட மரணத்தைத் தேடுகின்றார். தோழர்.வரதராஜன் இறந்தது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. ஒரு கம்யூனிஸ்ட்காரன் தற்கொலை செய்து கொண்டதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
55 Responses
  1. நல்ல அலசல் அப்துல்லா.. கடைசி வரிகள் யோசிக்க வைக்கின்றன. உண்மையில் வாழ்நாள் முழுக்க கம்யூனிஸ்டாக இருந்த ஒருவர் போராட பயந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. நல்ல பதிவு.


  2. பிரச்சினைன்னு வந்தா எல்லாம் மழுங்கடிச்சுடும் போல. சிலர் விளையாட்டாகவே மீண்டு வந்துடுவாங்க. சிலர் இப்படி!


  3. \\கம்யூனிஸ்ட்காரன் தற்கொலை செய்து கொண்டதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.\\

    :-(



  4. Ŝ₤Ω..™ Says:

    அண்ணா.. இரு வேறு துரை சார்ந்தவரின் வாழ்க்கையை நல்லாவே அலசி காயபோட்டு இருக்கீங்க..

    இப்போ உள்ள கம்யூனிஸ்ட்கள் எல்லாருமே பயம் கொண்டவர்கள்தானே?? என்ன.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பயம்..

    இறந்தவர் பற்றி விமர்சிப்பது அநாகரிகம் என்றாலும், இங்கே என் மனம் சொல்லும் ஒன்றை பதிவு செய்கிறேன்..
    நீங்க சொல்லி இருப்பது போல சித்தாந்தங்களில் அவர் உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருந்திருப்பாரேயானால், இப்படி ஒன்று நிகழ்ந்து இருக்குமா??
    மேலும், தனதுடல் தானமாக தரப்பட வேண்டும் என்ற விருப்பமுள்ளவர், தண்ணீரில் மூள்கி இறந்திருப்பாரா??

    ஆமா அண்ணே.. உண்மையிலேயே இது தற்கொலை தானா??


  5. நல்ல அலசல். weaker sex அப்படின்னு சொன்னாலும் பெண்கள் அதிக மனவலிமை உடையவர்கள் என்பது நிதர்சன மான உண்மை.


  6. //சரியாக அமையாத மண வாழ்க்கை, சொத்தைக் குறி வைக்கும் பெற்ற தந்தை என்று அவர் தினமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.அவரால் வாழ்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகின்றது.ஆனால் சித்தாந்தத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் பிரச்சனைகளில் இருந்து விடுபட மரணத்தைத் தேடுகின்றார். தோழர்.வரதராஜன் இறந்தது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. ஒரு கம்யூனிஸ்ட்காரன் தற்கொலை செய்து கொண்டதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. //


    இந்த கடைசி வரிகள் அருமை அண்ணே...

    நிறைய யோசிக்க வைக்குது


  7. முரண்பட்ட இருவேறு நிலைகளில் வாழும் இருவரை ஒரு புள்ளியில் இணைய வைக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

    பல இடங்களில் வேறுபடுகிறேன். என்றாலும் உங்கள் பார்வையிலிருந்து சரியாக எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்


  8. அட்றா சக்கை,

    எங்கண்ணன் எழுத ஆரம்பிச்சுட்டாருடோய்.

    இரண்டும் வெவ்வேறு கோணங்கள் அண்ணே. கம்யூனிஸ்டா இருந்தாலும் அடிப்படையில் அவரும் ஒரு மனிதர்தான


  9. ஹ்ம், எழுதுங்க எழுதுங்க..,


  10. கம்யூனிஸ்டோ, இல்லையோ, 60 வருட வாழ்க்கை கூடவா பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்க்கக் கற்றுத் தரவில்லை?

    கனகா இயல்பாக இருக்கிறார் என்பது நல்ல தகவல். பத்திரிகைகள் அவரை ஒரு மனநோயாளி போலச் சித்தரித்திருந்தன.


  11. வருத்தம் புரியுது மாப்ளே


  12. ஹும்ம் இதுக்குத்தான் வெங்காயத்த முழுசா உறிக்கணும். மிச்சமுமிருக்காது. கண்ல தண்ணியும் இருக்காது.:))

    --
    //வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம். //

    :)


  13. //பல இடங்களில் வேறுபடுகிறேன். என்றாலும் உங்கள் பார்வையிலிருந்து சரியாக எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.//

    நானும்...


  14. Anonymous Says:

    ஒருவரின் தற்கொலையை இப்படி கீழ்த்தரமாக எடைபோடுவது அநாகரிகம்.பலவீனமான தருணத்தில்/மனசோர்வில்
    அவர் தற்கொலையை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

    சமயங்களில் தற்கொலை என்பதன் பின்னால் இருப்பது பயம் அல்ல பழிவாங்கும் உணர்வாகக் கூட இருக்கலாம்.உங்களிடமிருந்து ஒரேடியாக ஒதுங்குகிறேன் என்ற வீம்பாகக் கூட இருக்கலாம்.

    கம்யுனிஸ்ட் ஆன அவர் மரணத்திற்குப் பின் சொர்க்கம்
    என்ற நம்பிக்கையில் கொலை(கள்) செய்து விட்டோ அல்லது மனித வெடிகுண்டாகவோ மாறி உயிரை நீத்து பிறரையும் கொல்லவில்லை.
    அவர் தேடிய முடிவு அதீத முடிவு.
    அதை நோக்கி அவரை த்தள்ளியது எது எனக்குத் தெரியாது.
    நான் தற்கொலை செய்து கொள்வதை ஆதரிக்க மாட்டேன், அப்படி யாரேனும் செய்து கொண்டாலும் அதைப் புரிந்து கொள்ள முயல்வேனே ஒழிய அதை அவதூறு செய்ய பயன்படுத்தமாட்டேன்.


  15. D.R.Ashok Says:

    //பிரச்சினைன்னு வந்தா எல்லாம் மழுங்கடிச்சுடும் போல. சிலர் விளையாட்டாகவே மீண்டு வந்துடுவாங்க. சிலர் இப்படி!//
    கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன்


  16. ஒரு பெரிய ஓட்டலுக்கு நடிகை தனியாக வந்தாரென்று நம்பலாம். ஆனால், ஒரு அன்னியமனிதனிடம் இவ்வளவு இயல்பாக பேச்சுக்கொடுப்பார் என்பது நம்பமுடியவில்லை.

    இருவர் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

    முதலில் சொன்னவர் ‘தன்னம்பிக்கயோடு வாழ்க்கையை எதிர்கொண்டார்’ என்று எப்படிச்சொல்கிறீர்கள். இனிமேதான் அவர் போராட்டமே இருக்கிறது. ‘தோழர்’ வயது 62. அவ்வயதில் இன்னடிகை தொடர்ந்து இருக்க பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டும். தாக்குபிடிப்பாரா என இப்போது சொல்ல முடியாது.
    அவசரப்பட்டு விட்டீர்கள்! அவரும் இம்முடிவையே தேடுவார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவர் வாழ்க்கை போகும் பாதை பார்க்கும்போது, there is a premonition.

    A young woman.
    Lost mother when she was young.
    Father never lived with mom.
    He is after her savings now.
    A false marriage with a false man.
    Broken for ever.
    Right now, she is like a person in a mid sea without even a log to hold on.

    She is a fit case for religious people, esp. Penacostalists. அவர்கள் இவரைப்போன்றவர்களைத்தான் தேடுகிறார்கள்.

    Ms Kanaka may either join a religious sect; or .....???

    இப்படிப்பட்ட காரணிகளை அலசும்போது, ‘வாழ்க்கையை போராடி ஜெயித்து விட்டார் என்பதற்கு கொஞம் wait பண்ணித்தான் தீர வேண்டும்.

    தோழரைப்பற்றியும் எழுதலாம் நிறைய. ஆனால் பின்னூட்டம் நீண்டுவிடும்.


  17. mano Says:

    MANY THANKS FOR YOUR VISIT TOO...


  18. ஒரு ஓநாயா இருந்து பார்த்தா தான் அதோட பிரச்சனை நமக்கு புரியும்!

    (ஹேராம் பட வசனம்)


  19. தற்கொலை என்பது ஒரு மலையுச்சியை நோக்கிச்செல்லும் பயணம்.

    வழியிலே அவர்களில் பலர், மிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்.

    கனகா நிறைய மறைக்கிறார். அப்துல்லா ஏமாந்து விட்டார்
    நல்லவர்கள் அவரிடம் பழகி அவரை திசை திருப்பி விட்டால் நல்லது.

    பொதுவாக தற்கொலை முடிவுகள் ஓரொரு நாளில் எடுக்கப்படுவதல்ல.

    As I said, they gradually reach the precipice. Along the way, they become more and more certain that all doors are closed to them; and they are completely deserted by every human being. No one to talk to.

    Psychiatrists treating them, will adopt the technique that they agree with the patient that life is bad; hostile; and everyone is against the patient.

    In other words, the doctors takes the same road along with the patient for some time, before he initiates his cunning act of diverting the patient from the path. Gain their confidence and make them pour out their hearts.

    Kanaga should go for counselling. If she does not, someone interested in her welfare, should take her w/o telling her where and what for.

    There is also another remedy; and that is better one.

    Right now Kanaga needs a young man who can win her confidence and respect whose shoulder she can believe to be the most ideal place to cry on.

    A husband offers emotional security to wife.

    She needs that.

    Where is he?

    The answer is unfortunately in the negative. Because, our world is such that a young woman with a lot of money is a fair game for confidence tricksters.


  20. நல்ல அலசல் அப்துல்லா.. கடைசி வரிகள் யோசிக்க வைக்கின்றன.

    பிரச்சினைன்னு வந்தா எல்லாம் மழுங்கடிச்சுடும் போல.
    நிறைய யோசிக்க வைக்குது. இருவேறு நிலைகளில் வாழும் இருவரை ஒரு புள்ளியில் இணைய வைக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

    கனகா இயல்பாக இருக்கிறார் என்பது நல்ல தகவல்.

    பத்திரிகைகள் அவரை ஒரு மனநோயாளி போலச் சித்தரித்திருந்தன.

    திருஷ்டிக்காக வைக்கப்பட்டிருக்கும் போட்டோ சூப்பரோ சூப்பர்!


  21. kantha Says:

    பொதுவாக யாருக்கும் யாரை பற்றியும் கவலை கிடையாது.. .. இங்கு ஒரு பொதுப் புத்தியில்தான் அத்தனையும் ஆராயப் படுகிறது.. ஒரு முதலாளி தொழிலாளி என்று சொன்னால், நிச்சயம் தொழிலாளி தவறே செய்ய மாட்டான்.. முதலாளிதான் தவறிழைப்பான் என்ற கண்ணோட்டம் இடதுசாரிகள் சர்வசாதாரணமாக முடிவுக்கு வந்து விடுவார்கள் அதைப் போல ஒரு ஆண் என்றால் நிச்சயம் பெண்ணுக்கு தீங்கு இழைப்பான் என்றும் சர்வசாதாரணமாக முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பிரச்சனையின் பன்முகத் தன்மை.. ஆண் பெண் சமத்துவம் போன்ற வற்றில் பல மாற்றங்கள் கால தேச வர்த்தமானங்களில் நடந்துள்ளது.. அதைப் பற்றி கணக்கில் யாரும் எடுத்துக் கொள்ளவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது.. இது சம்பந்தமாக அறிஞர்கள் மார்க்சீயவாதிகள் விவாதித்து செழுமை செய்யவேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதைத்தான் இவர் மரணம் காட்டுகிறது..
    கந்தசாமி


  22. யோசிக்க வேண்டிய விஷயம்தான் அப்துல்லா.


  23. கனகா இது போன்ற காண்ட்ரவர்சில இருக்கறது புதுசில்லையே. என்.டி. ராமாராவை கல்யாணம் செய்துக்கிட்டார் அப்படிங்கறமாதிரியெல்லாம் கூட ஆரம்பத்தில வதந்தி. இதெல்லாம் பழக்கம் ஆகியிருக்கணும்.


  24. பாபு Says:

    எப்படி இருக்கீங்க?

    மிக நல்ல அலசல்.


  25. அப்துல்லா ! அவர் எழுதியிருந்த கடித்தத்தில் தற்கொலை செய்பவன் கம்யூனிஸ்ட்டே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். என்ன ஒரு முரண்பாடு !!


  26. Cable Sankar Says:

    ennai பொருத்தவரை கம்யூனிசம் என்பதே முரண்பாடுதான்..:)


  27. அருமையான அலசல். அப்துல்லா எவ்வளவெல்லாம் சோதனை பாருங்களேன்.


  28. நல்ல அலசல் அப்துல்லாண்ணே.

    ஆமா பூர்ஷ்வான்னா என்னாண்ணே.


  29. தேர்ந்த பகிர்வு அப்துல்லா.! (தோழரின் மரணம் தற்கொலையாக இருக்கும்பட்சத்தில்)


  30. @ அண்ணன்கள்

    வெண்பூ
    வானம்பாடிகள்
    ராஜூ
    ராகவன் நைஜீரியா

    சென் - எனக்கு இது கொலையாகத் தெரியவில்லை.

    கண்ணா
    பைத்தியக்காரன்
    தாராசு
    வெள்ளிநிலா
    அபுஅஃப்ஸர்
    ஷங்கர்
    ஈரோடு கதிர்

    அனானிமஸ் - அவர் மட்டும் அல்ல இப்படி பெயரில்லாமல் வந்து உளறும் நீங்களும் கோழைதான்.

    டி.ஆர்.அசோக்
    மனோ
    வால்பையன்
    மங்களூர்சிவா
    கந்தசாமி
    அகநாழிகை
    பாபு
    தண்டோரா

    கேபிள் சங்கர் - உங்கள் கருத்தில் நான் முரண்படுகின்றேன்

    ஸ்டார்ஜன்

    அக்பர் - பூர்ஷ்வா என்றால் முதலாளித்துவ சிந்தனையாளன் என்று அர்த்தம்

    ஆ.மூ.கி

    @ சகோதரிகள்

    புதுகைதென்றல்
    ஹூசேனம்மா
    சின்ன அம்மணி

    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


  31. ஒரு பெரிய ஓட்டலுக்கு நடிகை தனியாக வந்தாரென்று நம்பலாம். ஆனால், ஒரு அன்னியமனிதனிடம் இவ்வளவு இயல்பாக பேச்சுக்கொடுப்பார் என்பது நம்பமுடியவில்லை.

    //

    அண்ணே,

    உங்களுக்கு யார் சொன்னது எனக்கும்,அவருக்கும் அறிமுகம் கிடையாதென்று??
    நான் அவருக்கு அந்நியன் அல்ல.நன்கு அறிமுகம் ஆனவன். அவருடைய தொழிலில்தான் நானும் இருக்கின்றேன். இதெல்லாம் உண்மையா என்பதில் இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் ஒன்று சம்மந்தப்பட்ட அவரையே கேளுங்கள்.இல்லை நம் சகபதிவர் நண்பர் தண்டோராவைக் கேளுங்கள்.

    அப்புறம் நம்பாத ஒரு விஷயத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் இரண்டு பின்னூட்டமும் போட்டு இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றது. உங்களுக்கு நம்பிக்கையில்லாத எந்த ஒரு விஷயத்திற்கும் நேரத்தையும்,சக்தியையும் வீணாக்காதீர்கள்.


  32. இந்த ஒப்பீடு மிக மிக மேலோட்டமானது.


  33. //மாதவராஜ் Says: 23 February 2010 15:48
    இந்த ஒப்பீடு மிக மிக மேலோட்டமானது

    //

    அண்ணா நான் என்ன கம்யூனிஸ்ட்டா ஆழ்ந்து சிந்தித்து ஒப்பிட?? நினைத்தேன்.எழுதினேன்.


  34. ஏதோ சொல்ல வந்து சொல்லாம விட்ட மாதிரி இருக்கு.


  35. மன்னிக்கவும், தவறான ஒப்பீடு போல தோன்றுகிறது.


  36. நமக்கு படிக்கக் கிடைப்பதெல்லாம் பரப்ரப்புக்கு எழுதும் வணிகர்களின் பத்திரிக்கைகள் தானே.. அவர்கள் பிதற்றுவதை வைத்து யாரைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது..

    தோழர் வரதராஜனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இப்போது இருக்கும் போலி கம்யூனிஸ்டுகளைப் பற்றி எவ்வளவு தான் பேசுவது..


  37. SUFFIX Says:

    பொறுப்பில்லாத மீடியாக்களின் எதிர்மறையான தாக்குதல்களை தாக்குப் பிடித்து அவர்கள் நிற்பது மகிழ்ச்சியே.

    திரு. வரதராஜன் - வருத்தமான முடிவு : கொள்கை பிடிப்பு, வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் அவ்வள்வுதானோ? சிந்திக்க வைக்கிறது.


  38. ஆதியின் கருத்தை வழிமொழிகிறேன்..




  39. சித்தாந்தங்கள் தனிமனித வாழ்விற்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்ற விசாரணையைத் தூண்டும் பதிவு!


  40. மேலோட்டமாக நல்ல பதிவாக தோன்றினாலும் ஒப்பீடுகள் வருத்தமளிப்பதாகத்தான் இருக்கின்றன..

    வேறு வேறு வாழ்க்கை..
    வேறு வேறு சூழ்நிலைகள்..
    எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டுமல்லவா அண்ணே..


  41. அன்பின் அப்துல்லா,
    கனகாவைப் பத்தி எனக்கு தெரியாது. ஆனா வரதராஜன் ரொம்ப அருமையான ஆளுமை.சீக்கிரம் நானொரு பதிவு போடுறேன் இவரைப் பற்றி இன்ஷா அல்லாஹ்.


  42. //உங்களுக்கு யார் சொன்னது எனக்கும்,அவருக்கும் அறிமுகம் கிடையாதென்று??
    நான் அவருக்கு அந்நியன் அல்ல.நன்கு அறிமுகம் ஆனவன். அவருடைய தொழிலில்தான் நானும் இருக்கின்றேன். இதெல்லாம் உண்மையா என்பதில் இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் ஒன்று சம்மந்தப்பட்ட அவரையே கேளுங்கள்.இல்லை நம் சகபதிவர் நண்பர் தண்டோராவைக் கேளுங்கள்.

    அப்புறம் நம்பாத ஒரு விஷயத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் இரண்டு பின்னூட்டமும் போட்டு இருப்பது ...//

    பதிவு தமிழ்மணத்தில் வ்ருகிறது. திறக்கிறோம்; படிக்கிறோம்; பின்னூட்ட்மிடுகிறோம்.

    பதிவே அடிப்படை. உங்கள் பதிவில், நீங்கள் கனகாவிற்கு முன்பே தெரிந்தவர் என்று எங்குமில்லை. இல்லாதவொன்றை எப்படி ஊகிக்கமுடியும்?

    பொதுயிடத்தில் எந்த பெண்ணும் - அவர் நடிகையாயினும் கூட - ஒரு அன்னிய ஆடவன் வந்து பேசினால் விரும்பமாட்டாள். அப்படி சென்று யாரும் பேசமாட்டார்கள். அது பணபாடுடைய செயலல்ல. இவை பொது உண்மைகள். அதைத்தான் சொன்னேன்.

    தண்டோராவை ஏன் கேட்கவேண்டும்? பதிவே போதும்.

    நீங்கள் கனகாவைப்பற்றி, மறைந்த தோழரைப்பற்றியும் போட்ட பதிவு ஒரு பொது பதிவு. அதாவது தமிழர்களுக்கு நன்கு தெரிந்த இருவரைப்பற்றி சொன்ன பொதுக்கருத்துகள். இவற்றைப்படித்து பின்னூட்டம் போட, உங்கள் biodata எனக்குத் தெரிய வேண்டியது அவசியமா?

    கனகாவையும் தோழரையும் ஒப்பிடுவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவ்தாகும். எனினும் நான் அதைச்சொன்னால் sensitive ஆகி விடுவீர்கள் எனக்கொண்டு கனகாவைப் பற்றி மட்டும் எழுதினேன்.

    மற்றவர்கள் பின்னூட்டம் என் கருத்தையே சொல்கிறது.

    ஒப்பீடு தவறென்பதை.

    மாற்றுக்கருத்துகள் வ்ரத்தான் செய்யும். எல்லாரையும் ஆண்டவ்ன் ஒரே மாதிரியாகவா படைத்திருக்கிறான்?


  43. அப்துல்லா ரொம்ப நல்லா அலசி இருக்கீங்க...


  44. முதலில் தோழர் தற்கொலைதான் செய்து கொண்டாரா ..?


  45. அண்ணன் ஜோ அமலன்,

    மாற்றுக் கருத்து வரக்கூடாது என்ற மனநிலை எனக்கு இருக்குமானால் நான் ஏன் பின்னூட்டப்பெட்டியை திறந்து வைத்து இருக்கின்றேன்???


    //பொதுயிடத்தில் எந்த பெண்ணும் - அவர் நடிகையாயினும் கூட - ஒரு அன்னிய ஆடவன் வந்து பேசினால் விரும்பமாட்டாள். அப்படி சென்று யாரும் பேசமாட்டார்கள். அது பணபாடுடைய செயலல்ல. இவை பொது உண்மைகள். அதைத்தான் சொன்னேன்.

    //


    நான் நீங்கள் சொல்லி இருப்பது 100& உண்மை. இந்நிலையில் ஒருவன் என்னிடம் ஒரு நடிகை அவ்வாறு பேசினார் என்று எழுதி இருந்தால் அவன் அவருக்கு நன்கு அறிமுகமானவனாக இருப்பான்போல என்று எளிதில் யூகித்துக் கொள்ளலாமே??

    நான் என்ன கோனார் தமிழ் உரையா எழுதுகின்றேன் விலாவாரியாக எழுத? :))

    தெரியாத பெண்ணிடம் சென்றுபேச நான் பண்பாடற்றவனும் அல்ல.அலைபவனும் அல்ல.



    //மற்றவர்கள் பின்னூட்டம் என் கருத்தையே சொல்கிறது.

    //

    மற்றவர்கள் பின்னூட்டத்தில் சில மட்டுமே உங்கள் கருத்தைச் சொல்கின்றது.

    தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். ஆல்வேஸ் வெல்கம் :)


  46. திரு அப்துல்லா!

    ஒண்ணுமில்லை..ச்சும்மா என்று பேசிவிட்டுப் போகிற விஷயமாக தோழர் வரதராஜனைப் பற்றி எழுதியது வருத்தம் தருகிறது.

    சற்றே ஏறுக்குமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அனுபவப்பட்டவர்கள் நீண்ட காலமாகப் பாட்டாகவே பாடி வைத்துவிட்டுப் போன விஷயம், குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்பங்கள்!

    அந்த மனிதரை, அவர் விட்டுச் சென்ற நினைவுகளை நீங்கள் அறிந்திருப்பீர்களா என்பதே எனக்கு சந்தேகம்!

    அப்புறம் சஞ்சய் காந்தி!

    போலிக் கம்யூனிஸ்டுகளைப் பற்றிப் பேச போரடித்தால், போலி காண்டிகளைப் பற்றிப் பேசலாமா?


  47. @ அண்ணன்கள்

    நட்புடன் ஜமால்
    வி.பாலகுமார்
    சஞ்சய்காந்தி
    சபிக்ஸ்
    முகிலன்
    செல்வேந்திரன்
    கும்க்கி
    மயில்ராவணன்
    சந்தோஷ்

    கிருஷ்ணமூர்த்தி - அய்யா, மனைவி என்றாலோ நமக்குத் தொல்லைதான். கணவன் என்றாலே அவர்களுக்கு கண்டுகொள்ளாத மனிதந்தான். என்ன செய்வது??



    @ சகோதரிகள்

    அருணாக்கா
    இயற்கை
    தேனம்மை


    உங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.


  48. //அய்யா, மனைவி என்றாலோ நமக்குத் தொல்லைதான்//

    கட்டாயக் கல்யாணமா செஞ்சு வாச்சாங்க உங்களுக்கு? :-)))


  49. அடிங்க.. நான் உங்களுக்கு அண்ணனா? உறவு முறையை மாத்தாதய்யா வென்று..


  50. //உண்மையில் வாழ்நாள் முழுக்க கம்யூனிஸ்டாக இருந்த ஒருவர் போராட பயந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.//

    அவர் வாழ்க்கை முழுவதும் எதிரிகளுடன் போராடினார்

    மேலும் எதிரிகளுடன் போராட தயாராகவே இருந்திருப்பார்

    அவரால் தாங்க முடியாது துரோகம், நம்பிக்கை துரோகம் :( :(

    இது என் கருத்து

    தவறென்றால் மன்னிக்கவும்


  51. //ஒரு கம்யூனிஸ்ட்காரன் தற்கொலை செய்து கொண்டதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. //

    கடவுளே மனிதனாக பிறந்தாலும் அவன் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் அடிப்படையில் அவரும் ஒரு மனிதர் தானே? அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்கும் தனி மனித வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு. அங்கு கொள்கை. இங்கு பாசம். இதில் பாச போராட்டம் தான் சந்திக்க மிகவும் கடுமையானது.


  52. இரு நிகழ்வுகள்...ஒரு பார்வை..அதன் ஆழம்..! அப்துல்லா! நீங்கள் அழகாக வெளிப்படுகிறீர்கள்!!


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']