வராக நதிக்கரை ஓரம்

எழும்பூரில் கமிஷ்னர் ஆபிஸ் ரோடில் “கல்யாணபவன்” பிரியாணிக்கடைக்கு சைடாக ஒரு சிறு சந்தில் இருக்கின்றது அந்த தர்ஹா. நாளும்,கிழமையும் தற்போது மறந்து போன அந்த நாளில் நான் உள்ளே நுழையும் போது வெளியே வந்த அவரைப் பார்த்தேன்.எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிப்பதற்குள் சட்டென்று கடந்து சென்றார் இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்த ’’இசைப்புயல்” ஜனாப்.ஏ.ஆர்.ரஹ்மான்.இன்றைய ரஹ்மானின் உச்சத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு நான் சொல்வது சற்றுக் காமெடியாகவே இருக்கும்.ஆனால் அன்றைய நிலையில் சற்று யோசித்து சுதாரித்துத்தான் அவரை அடையாளம் காணவேண்டி இருந்தது.


அவர் அறிமுகமான காலகட்டத்தில் நான் தீவிர ராஜா விசிறி(இப்ப மட்டும் என்ன?!??). இளையராஜா உயிரோடு இருக்கும்வரை அவர்தான் என்றும் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன்னாக இருப்பார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருந்த காலம். என் கண்முன்னே ராஜாவின் ராஜாங்கம் ஆட்டம் காணத்துவங்கியதில் ராஜாவைவிட எனக்குப் பெரும் அதிர்ச்சி.அன்றைக்குப் பதின்ம வயதுகளில் இருந்த பலரும் என்னைப்போலவேதான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.





ரோஜாவில் அறிமுகமாகி புதியமுகம்,திருடாதிருடா,உழவன் என்று பாடல்களை ஹிட் செய்தாலும் ரஹ்மான் பதின்ம இளைஞர்களின் மனதை ஆக்கிரமிக்கத் துவங்கியது ஜெண்டில்மேனில்தான். காதலனில் அவர் கிளப்பிய இசைப்புயல் ஊரையே சுழற்றி அடித்தது. டாக்டர் ஆல்பனின் சில இசைக்கோர்வைகளைப் பயன்படுத்தி இளைஞர்களைப் படுத்தாப்பாடு படுத்தினார். அடுத்து பம்பாயில் கண்ணாளனேவில் கவாலியை அவர் கையாண்ட விதம்...அன்றே உலகத்தரம். வராகநதிக்கரை ஓரம் பற்றிச் சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம்.


இதற்கிடையில் படம் ஓடுகின்றவரைதான் அவர் பாடல்களை இரசிக்கமுடிகின்றது... பாடல்கள் ஹிட்டானாலும் பிண்ணனியில் சொதப்புகின்றார்....மிகுந்த நேரம் எடுத்துக்கொள்கின்றார் என்று பல குற்றச்சாட்டுகள் அவரை புயல்போல் சூழ்ந்தன. இருப்பினும் அசையவில்லை இந்த கலங்கரை விளக்கம். ஒரு மனிதன் அமைதியாய் தன்னுடைய வேலையை மட்டும் மிகச் சரியாக செய்து கொண்டிருந்தால் என்ன பலன் என்பதற்கு, சுருங்கச் சொன்னால் ”கடமையைச் செய்” என்ற கீதையின் வார்த்தைக்கு இந்த இஸ்லாமியரே சாட்சி. மாஷா அல்லாஹ். 


பழைய படம் ஒன்றில் கவுண்டமணி பாடகராக முயற்சி செய்து கொண்டு இருப்பார். ஏதேனும் டார்ச்சர் நிகழும்போது ”நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்??” என்று பீல் செய்வார்.பிண்ணனியில் இளையராஜா கை அசைக்க கவுண்டர் ஹெட்போனோடு பாடிக்கொண்டு இருப்பார். அதே கனவு எனக்கும் அலுவலகத்தில் வீணாய்போன கணிணியின் டெபிட்,கிரெடிட்டுக்கு மத்தியில் வரும். கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் :)
64 Responses
  1. தலைப்பே பத்தி..பத்தியப் பத்தி என்ன சொல்ல?


  2. ராஜாவைக் கொண்டாடுபவர்களை ரகுமானையும் மதிக்க ஆரம்பிக்க வைத்த அவரது பண்பை, திறமையை குறித்து அழகாகப் பதிந்திருக்கிறீர்கள் நண்பா!

    டக்கென்று முடிந்துவிட்டதாய்த் தோன்றுகிறது... பார்ட் டூ ப்ளீஸ்!


  3. அன்பின் அப்துல்லா,

    நதிக்கரையோரம் அமர்ந்து விரிவாக அசை போடுவதுதானே நம் வழக்கம்?

    சுண்டலுடன் முடித்துவிட்டீர்களே...

    என்றாலும் சுண்டல் நல்ல டேஸ்ட் :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்


  4. Vinitha Says:

    ரஹ்மான் சென்னை சிட்டிசெண்டர் அருகில் இருக்கும் தர்காவிற்கு தான் அடிக்கடி செல்வதாக என் கணவர் சொல்லுகிறார். அவர் அம்மாவும் அங்கு சென்று வருவாராம்.

    அவருக்கு வாழ்த்துக்கள்!

    நீங்கள் அவரை சந்தித்த அனுபவம் எழுதுங்கள் அண்ணா. :-)

    ( அவர் கிட்டே பாடும் போது, ரெண்டு நாள் முன்னாடியே சளி மாத்திரை எல்லாம் சாபிட்டுடுங்க! )


  5. ரஹ்மானை இளையராஜாவோடு ஒப்பிடுவது நிறுத்தப்பட்டு சர்வதேச இசைப் பிரம்மாண்டங்களோடு ஒப்பிட, விமர்சிக்க துவங்குவதுதான் இந்த மகத்தான கலைஞனுக்குச் செய்யும் மரியாதை என்கிறேன் நான்!


  6. புதுவீடு வந்த நேரம் பொன்னான நேரம் !!!

    தனிவீட்டிற்கு வாழ்த்துகள் !


  7. //கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் :)//

    நடக்கும் நடக்கும் நான் கூடச் சொல்கிறேன் !


  8. இந்தக் கடையில டீ குடிச்சு ரொம்ப நாளாச்சு!


  9. //வுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் //

    இன்ஷா அல்லாஹ!


  10. இன்ஷா அல்லாஹ்


  11. பிரசன்ட் சார்


  12. mayilravanan Says:

    //என் கண்முன்னே ராஜாவின் ராஜாங்கம் ஆட்டம் காணத்துவங்கியதில் ராஜாவைவிட எனக்குப் பெரும் அதிர்ச்சி.//
    ஏன்னே இப்படி.....ஏற்கனவே அங்கங்க ஒரே புகைச்சலா இருக்கு.


  13. இன்ஷா அல்லாஹ் விட பொருத்தமான வார்த்தை ஏது! நானும் அதே.:)


  14. படுத்து கிடந்த தமிழ் இசைக் குழந்தையை தூக்கி நிற்க வைத்தவர் ராஜா. அது நடக்க தொடங்கியதும் விரல் பிடித்து ஊர் சுற்றி காட்டுகிறார் ரகுமான். இருவரின் செயல்களும் அந்தந்த காலக்கட்டத்தில் அசாத்தியமானவை. அதை விட்டு அவர் நிற்க வைத்தார், இவர் நடக்கவே வைத்தார் என்ற வாதம் தேவையற்றது.

    எல்லைகளை கடந்த ரகுமானின் இசையை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு வெறும் 20% தமிழர்களுக்கே இருக்கக்கூடும். மிச்சமிருப்போருக்கு இன்னமும் தூளியிலே ஆட வந்த தான் தாலாட்டு.

    இசை என்னும் ஒற்றைப்புள்ளியில் இருவரையும் குறை சொல்ல முடியாது. அதை சுற்றி போடப்படும் கோலத்தில் தான் வித்தியாசம். ரகுமான் ரங்கோலி. ராஜா சிக்கு கோலம்


  15. Karthik Says:

    superb post ngnaa!!

    rahman is not only a musical phenomenon, a wonderful human being, a national icon. jaiho rahman!!

    i second karki's opinion abt rahman - raja comparison.


  16. Karthik Says:

    email follow up...


  17. //என் கண்முன்னே ராஜாவின் ராஜாங்கம் ஆட்டம் காணத்துவங்கியதில் ராஜாவைவிட எனக்குப் பெரும் அதிர்ச்சி.//

    கலைஞர்கள் ஒருவர் தோள் மீது இன்னொருவர் ஏறி நிற்கிறார் என்பதே உண்மை,அப்துல்லா.
    பீதோவனுடன் இன்றைய இசைக் கலைஞர்களை ஒப்பிடுவது சரியாகாது.


  18. //கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும்//

    ஆஹா..மனதுக்குள் படம் ஓட்டவே....அழகாய் இருக்கே


  19. உங்க துறை சார்ந்தவர்ன்னு மார் தட்டுங்கண்ணே...!


  20. அருமை.. அருமை...நல்லா சொல்லி இருக்கீங்க..... ஆனா அவசரத்துல் முடித்தது மாதிரி இருக்கு!

    விரைவில் வாய்ப்பு கிட்ட வாழ்த்துக்கள்!!


  21. நாங்களும் அந்த நாளை எதிர்பார்த்து இருக்கிறோம் (ஓசி டிக்கெட் உண்டு தான?)


  22. //
    கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம்
    //

    அவசியம் பார்க்கத்தான் போகிறோம் பாடகரே...

    ராஜாவின் இசையைப் பிடித்த எல்லாருக்கும் ராஜாவைப் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.. அதே போல் ராஜாவின் ரசிகராக இருந்தாலும் ரஹ்மானைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.. (சரியா பேசுறேனா?) அழகா சொன்னீங்க அப்துல்லா...


  23. This comment has been removed by the author.

  24. டெபிட்,கிரெடிட்டுக்கு மத்தியில் ஒரு குட்டி பதிவு. வாழ்த்துகள்.


    உயிர்மையில் ஷாஜியின் கட்டுரையும் இந்த இதழ் சூரிய கதிரில் அகிலன் சித்தார்த் கட்டுரையும் வாசித்தீர்களா? {Raja Vs Rahman )


  25. //ரோஜாவில் அறிமுகமாகி புதியமுகம்,திருடாதிருடா,உழவன் என்று பாடல்களை ஹிட்//

    நாங்கெல்லாம் மூழ்காத ஷிப்பே ப்ரண்ஷிப்தான் எத்தனைதடவை ஒவ்வொருநாளும் பாடியிருக்கோம் தெரியுமா?


  26. //கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் :)//

    கண்டிப்பாய் நடக்கும்.

    ரஹ்மான், ராஜா, ரெண்டு பேருமே நமக்கு கிடைத்த வைரங்கள். :)


  27. Rangs Says:

    அண்ணே... ராஜாவையும் ரகுமானையும் ஒப்பிடுவது சரியா? இருவரும் வெவ்வேறு தளம்..


  28. கண்டிப்பாய் நடக்கும்,

    அண்ணனுக்கு அடுத்த உலக விருந்து கிடைக்கும் வேளையில் சின்ன அண்ணனின்(உங்க) பேரை மேடையில் சொல்லும் காலம் தூ.....ரத்தில் இல்லை...


  29. அப்பா, எங்கண்ணன் கடை தொறந்துட்டாருப்பா.......


  30. அண்ணே, இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்
    :)


  31. மாப்ளே ரகுமானின் பிண்ணனியிலே உன் குரல் கேக்குறமாதிரி அடிக்கடி கனவு வருது, விரைவில் நிஜமாகட்டும் இன்ஷா அல்லாஹ்...


  32. கூடிய சீக்கிரம் தம்பி ரகுமான் இசையில் பாடட்டும்!!

    இன்ஷா அல்லாஹ! கிராமி அவார்டு வேற வாங்கிட்டாரு. ராஜாவை போற்றுவோம்! ரகுமானை கொண்டாடுவோம்!!


  33. //கோவி.கண்ணன்
    1 February 2010 19:55
    //கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் :)//

    நடக்கும் நடக்கும் நான் கூடச் சொல்கிறேன் !//

    இன்ஷா அல்லாஹ் :)

    பலமுறை உரத்த குரலில் வழிமொழிகிறேன் அண்ணே. :-)


  34. குடுகுடுப்பை Says:

    வெண்பூ said...
    //
    கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம்
    //

    அவசியம் பார்க்கத்தான் போகிறோம் பாடகரே...

    ராஜாவின் இசையைப் பிடித்த எல்லாருக்கும் ராஜாவைப் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.. அதே போல் ராஜாவின் ரசிகராக இருந்தாலும் ரஹ்மானைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.. (சரியா பேசுறேனா?) அழகா சொன்னீங்க அப்துல்லா.//

    நானெல்லாம் இந்த ரகம். ரகுமான் என்ற மனிதர் இசையைத்தாண்டி இழுக்கிறார். ஒரு சுஃபி நண்பன் சொன்னான், ச்பி இஸ்லாமியர்கள் 0.01% தான் 90% இஸ்லாமியர்கள் சுஃபியை பாலோ பண்ண ஆரம்பித்தால் யோசித்துப்பார்


  35. ராஜாவின் ராஜாங்கம் வேறு. ரகுமான் எல்லைகளைக் கடந்துவிட்டார். இருவரையும் ஒப்பிடுவது தவறு.

    கார்க்கி சொன்னதுதான் சரி.


  36. //
    கார்க்கி சொன்னதுதான் சரி.
    //

    அண்ணாச்சி, என்னாச்சி???


  37. //
    வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
    //

    அடப்பாவி அப்துல்லா, இதைப் படிக்காம போயிட்டேனே.. திட்டுறதுக்கு கெட்ட வார்த்தை அலவ்டா??? :)))


  38. SUFFIX Says:

    இளையராஜா, ரஹ்மான் இருவரையும் ஒப்பிடுவதை விட, ந்ண்பர் செந்தில் நாதன் கூறியது போல, இருவரும் நமக்கு கிடைத்த வைரங்கள் என அகமகிழ்வோம்!! நல்ல எழுத்து நடை அப்துல்லா, இன்னும் ஓரிரு பத்தி எழுதியிருக்கலாமே.


  39. ஒரு பெரிய கட்டுரை படிக்க போகிறோம் என்று சேரை அட்ஜஸ்ட் செய்து படிக்க ஆரம்பித்தால் இன்ஷா அல்லா போட்டுடீங்களே ! சும்மாவே உங்கள ஸ்டார் பதிவராக்கிதான் அதிகம்?! எழுத வைக்க முடிஞ்சது, அத நினைத்தால்தான் .....,



  40. கலக்குங்க தல! கண்டிப்பா நடக்கும்!

    நீங்க சாதிக்கப்பிறந்தவர்!


  41. கலக்குங்க தல! கண்டிப்பா நடக்கும்!

    நீங்க சாதிக்கப்பிறந்தவர்!


  42. கலக்குங்க தல! கண்டிப்பா நடக்கும்!

    நீங்க சாதிக்கப்பிறந்தவர்!


  43. அடிக்கடி எழுதறேன் சொல்லிட்டு மாசம் ஒரு பதிவு போட்டா எப்படி அண்ணே


  44. //கண்டிப்பா நடக்கும்!

    நீங்க சாதிக்கப்பிறந்தவர்!//

    repeateyyyy


  45. கனவு மெய்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்.


  46. ம்....நடத்துங்கள் உங்கள் "ராஜா"ங்கத்தை.


  47. கண்டிப்பா நீங்க பாடுவீங்கனு பட்சி சொல்லுதுண்ணே!


  48. ரொம்ப நாள் கழிச்சு எழுதுறீங்க. இவ்ளோ சின்ன பதிவா? சரி சரி.. கடைசி பாரா அப்படியே கண் முன் ஓடும் படி எழுதி இருந்தீர்கள்.:)) உங்க நல்ல மனசுக்கு இது நடக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எப்போதும் செய்து கொண்டிருங்கள் அப்துல்லா. ரஹ்மான் ராஜாங்கம் இன்னும் பல decade-களுக்கு இருக்க போகிறது..நீங்கள் விரைவில் அவர் இசையில் பாட வாழ்த்துக்கள்


  49. மீ த 50.

    அருமை. கடந்த இரண்டுவாரமா ஜெயாவுல்யா, கலைஞர்லயான்னு தெரியலை 8 மணிக்கு இளையராஜா ஷோ ஒளிபரப்பறாங்க. வரும் சனிக்கிழமை நிகழ்ச்சி இருக்கு.


  50. வெரிகுட் பதிவு :)

    நாங்கல்லாம் ரோஜாவுக்கே மனச பறிகுடுத்துட்டோம்.. ஜெண்டில்மேன் வரை காத்திருக்கவில்லையாக்கும்.. :)


  51. YUVARAJ S Says:

    nice posting mr. abdullah.

    Find my scribbling at:

    http://encounter-ekambaram-ips.blogspot.com/

    keep blogging


  52. henry J Says:

    unga blog romba nalla iruku

    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    Download Youtube Videos free Click here

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here


  53. henry J Says:

    Unga blog romba nalla iruku
    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    Download Youtube Videos free Click here

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here


  54. கனவு நனவாக வாழ்த்துக்கள்


  55. chandramohan Says:

    அப்துல்லா..
    உங்கள் பதிவு படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது..
    கலீப் நகர் டீக்கடையில் அமர்ந்து மாற்றி மாற்றி பாடிக்கொண்டு இசை பற்றியும் இளையராஜா பற்றியும் பேசிகொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
    தங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.. காதலன் , ஜென்டில்மன் பட பாடல்களின் மூலங்களை பற்றி விமர்சிதுக்கொண்டிருந்த அப்துல்லா எங்கே?


  56. கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். //
    வாழ்த்துக்கள்.


  57. வருகை புரிந்து கருத்துரைத்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


  58. Anonymous Says:

    Illayaraja is a musician.. But A.R. Rahman is a magician.. we dont want any certificate for the Oscarian and Gramian..


  59. நல்லதொரு இடுகை..


  60. ippa nee adutha pathivu poda poriyaa , illa nan pathivu podattumaa ?


  61. //என் கண்முன்னே ராஜாவின் ராஜாங்கம் ஆட்டம் காணத்துவங்கியதில் ராஜாவைவிட எனக்குப் பெரும் அதிர்ச்சி.அன்றைக்குப் பதின்ம வயதுகளில் இருந்த பலரும் என்னைப்போலவேதான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
    //

    பலர் இப்பொழுதும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள் :) :)


  62. //ரஹ்மானை இளையராஜாவோடு ஒப்பிடுவது நிறுத்தப்பட்டு சர்வதேச இசைப் பிரம்மாண்டங்களோடு ஒப்பிட, விமர்சிக்க துவங்குவதுதான் இந்த மகத்தான கலைஞனுக்குச் செய்யும் மரியாதை என்கிறேன் நான்!
    //

    வழிமொழிகிறேன்


  63. Raghuraman Says:

    ராஜாவை ரகுமானுடன் ஒப்பிடும் உங்கள் கருத்து மிகவும் சிறுபிள்ளைதனமாக இருக்கிறது.தயவுசெய்து உங்கள் அறிவுஜீவிதனத்தை நிறுத்துங்கள்.


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']