தம்பியின் டைரிக் குறிப்புகள் (25/02/10)


எனக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான்.உங்களைப் பார்க்கையில் ரொம்பவே பொறாமையா இருக்கு...நம்பளும் இருக்கோமே ஒரு எளவும் சாதிக்காமன்னு.அதே நேரத்துல பெருமையாவும் இருக்கு...நானே சாதிச்ச மாதிரி.உங்களோட பெரிய பலமே நீங்க ஒவ்வொருமுறை சாதிக்கும்போதும் தானே சாதித்ததுபோல ஒவ்வொருவரும் நினைப்பதும்தான்.வாழ்த்துகள் சச்சின்.உங்களை எப்பத் தெரியுமா எனக்கு ரொம்பப்புடுச்சது?மும்பை இந்தியர்களுச் சொந்தம்னு சொன்னீங்கள்ல...கிரிக்கெட்டர் சச்சினைவிட இந்தியன் சச்சின் எனக்கு ரொம்பவே கிரேட்.

*******************************************************
இன்றைக்கு டுவிட்டரில் கார்க்கி “உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்ன்னு தோழியிடம் சொன்னது தப்பாபோச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்” என்று ஒரு மெசேஜ் போட்டு இருந்தான். நான் அதற்குப் பதிலாக “நீ மட்டும்தான் லூசுன்னு நினைச்சேன்” என்று டுவிட்டினேன். அதற்கு  அந்தக் கழுதை “நாங்கள் காதல் பைத்தியங்கள்.உங்களிடம் காதல் மட்டும் மிஸ்சிங்” என்று பதில் போட்டு இருக்கின்றான். நான் ங்ஏஏஏஏஏஏ ஆகிட்டேன் :))

********************************************************

சென்னை மாநகரக் காவல் துறையின் இணைக் கமிஷ்னர் திரு.சக்திவேல்.ஐ.பி.எஸ்., அவர்களை அலுவல் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றேன். அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் பலரும் அவருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். தனக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் உதவிகோரி வந்தால் ஒருவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி இருந்தது அவருடைய நடவடிக்கை.கனிவும்,கடுமையும் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக இருந்தார்.மக்கள் பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சரியான உதாரணம் அவர்.ஹேட்ஸ் ஆஃப் சார்.

********************************************************

இன்றைக்கு செய்திகளில் பெரிதும் ஆக்கிரமிக்கும் பிரச்சனை நக்சல்களைப் பற்றியது.மத்திய,மாநில அரசுகள் உரிய முறையில் மக்களைக் கவனித்துக்கொண்டால் பின்னர் மக்கள் நக்ஸல்களைக் கவனித்துக் கொள்வார்கள்.ஒருவன் இருட்டான இடத்தில் தன் பொருளைத் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்கும் இடத்தில் போய் தேடினானாம்.அந்தக் கதைதான் நினைவிற்கு வருகின்றது.

********************************************************

நான் போகிறேன் மேலே..மேலே

பூலோகமே காலின் கீழே.

சமீபகாலமாக இந்தப் பாடல் என்னைச் சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. அன்றாடப் பணிகளின் மீது செலுத்தும் கவனத்தைக்கூட சிதறடிக்கின்றது.முக்கிய காரணம் என் ஆசான் எஸ்.பி.பி. 25 வயது இளைஞனுக்குப் பாடியிருக்கும் அந்த 65 வயது மனிதரின் குரலைக் கேட்டீர்களா??

சரி இப்ப என்னோட சேர்ந்து பாடுங்க.

நான் போகிறேன் மேலே..மேலே

பூலோகமே காலின் கீழே...

விண்மீன்களின் கூட்டம் என்மேலே


ஒ.கேவா. அப்படியே இப்ப நான் பாடுற இந்தப் பாட்டையும் சேர்ந்து பாடுங்க.

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்..ஆ..ஆ..ஆ..

இப்படித்தான் நாங்க ஊரை ஏமாத்துவோம் :)))



********************************************************

பதிவர் அண்ணன் ஜீவ்ஸ் அவர்கள் மெயிலில் சில ஜோக்குகளை அனுப்பி இருந்தார்.அதில் என்னை மிகவும் கவர்ந்த ஜோக்ஸ் :)))

அ‌ப்பா‌வி நோயா‌ளி

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா நீங்க ‌மீ‌ன்,

கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?

********************************************************

படித்ததில் பிடித்தது

போக்கு

வந்து விழுகிற

எல்லாக் கற்களும்

விழுந்த இடத்தில்

மூழ்கிக் கிடக்க

தன் போக்கில்

போய்க்கொண்டிருக்கின்றது நதி.

&&&&&&&&&

முரண்


நிஜமாயிருக்கிறேன்

முரணானவள் என்று

முகம் சுழிக்கின்றார்கள்.


- கவிஞர்.இளம்பிறை
********************************************************

அறிஞரின் தத்துவம்

கண்ணா! என்னதான் நம்ப மிட்நைட் மசாலா பார்த்து மகிழ்ச்சியா இருந்தாலும் எடுக்குற டைரக்டருக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
41 Responses
  1. ROMEO Says:

    என்ன அண்ணே கார்க்கிக்கு கூட தெரிஞ்சிபோச்சா??


  2. ROMEO Says:

    Me the First !!!!!



  3. நல்லா இருக்கு


  4. :)). நல்லாத்தான் குறிக்கிறீங்க போங்க:))))


  5. ஆக மொத்தம் கார்க்கி மற்றும் அப்து லூசுங்க

    சச்சினின் மகுடத்தில் மற்றுமொரு வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது

    ஹேட்ஸ் ஆஃப் டி ஜேசி ஆஃப் போலிஸ் சென்னை

    ஜோக்கு எல்லாம் சரி

    நதியில் கல் - முரண் தத்துவம் அனைத்தும் அருமை அப்துல்லா


  6. வாழ்த்துகள் சச்சின்.

    சக்திவேல் ஐ.பி.எஸ் :)
    மாப்ள அடுத்த வேட்டைக்காரனா நீ

    போக்கு - அருமை.


  7. போக்கு (பேக்கு இல்லை) அருமை.,


  8. //நட்புடன் ஜமால் said...

    சக்திவேல் ஐ.பி.எஸ் :)
    மாப்ள அடுத்த வேட்டைக்காரனா நீ//

    ப்ப்பூர்ர்ர்ர்ர்...

    வேட்டைக்காரன் படத்தின் அறிமுக காட்சியில் குதிரை மேல வரும் விஜயாக உங்களைக் கற்பனை பண்ணிப்பார்த்தேன்.,

    ப்ப்பூர்ர்ர்ர்ர்...ப்ப்பூர்ர்ர்ர்ர்...


  9. சக்திவேல வாழ்க,
    சச்சின் வாழ்க,
    உண்மையை சொன்ன கார்க்கி வாழ்க,

    அப்புறம் தத்துவம், வெத்து வம்




  10. ஹலோ நீங்கதான் அந்த தம்ஸ்-அப் பார்ட்டியா..?


  11. தத்துவம்தாண்ணா டாப்பு...ஹிஹிஹி


  12. //தனக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் உதவிகோரி வந்தால் ஒருவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி இருந்தது அவருடைய நடவடிக்கை.கனிவும்,கடுமையும் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக இருந்தார்//

    இந்த காலத்தில் இப்படியா நம்பமுடியவில்லை..இவரை பார்த்து மற்ற அதிகாரிகளும் திருந்தினால் நல்லாத்தான் இருக்கும்....

    போக்கு ...பொருள் பொதிந்தது
    தத்துவம்...ஹஹ்ஹஹா சேவை நாட்டுக்கு தேவை..



  13. தம்பி,

    //நான் போகிறேன் மேலே..மேலே

    பூலோகமே காலின் கீழே.//

    நீ பாடிய புதுப் பாட்டுன்னு நினைச்சேன்


  14. அடுத்தடுத்து ரெண்டு பதிவுகளா? கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கு.

    காதல் பைத்தியமா இருக்கறதைவிட பொதுவான பைத்தியமா (நீங்க) இருக்கிறதுதான் நல்லது.

    :-)))


  15. தத்துவம் நம்பர்1000011 சூப்பர்
    :)
    கேபிள் சங்கர்


  16. //ஹேட்ஸ் ஆஃப் சார்.//

    நானும் சொல்லிக்கிறேன் ஹேட்ஸ் ஆஃப் சார்.




  17. கிட்டத்தட்ட ஒன்று என்றாலும் இது வேற ட்யூன் தானே? நோட்ஸ்,பிட்ச் கூட மாறுகிறது... இருந்தாலும் இவ்ளோ உன்னிப்பா கவனிச்ச உஙக்ள பாராட்டலாம் ..:))

    இன்றைய தோழி அப்டேட்

    இன்று தோழியுடன் பைக்கில் வந்தேன்.வழியில் இரண்டு நாயக்ள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. நானும் ப்ளீஸ் என்றேன்.”பார்த்து. நாய் கடிச்சிட போது” என்கிறாள்


  18. //கிரிக்கெட்டர் சச்சினைவிட இந்தியன் சச்சின் எனக்கு ரொம்பவே கிரேட்.//

    எஸ் பாஸ்!


  19. //இன்றைக்கு டுவிட்டரில்//

    அல்லோ என்னமோ டுவிட்டரில் தினம் தினம் மொக்கை போடுவது போல என்னா ஒரு பில்டப்பு!


  20. // பலரும் அவருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்//

    அவருக்கிட்டு சிவாஜி ஸ்டைலில் முன்னபின்ன பழக்கம் இல்லையே என்று சொல்லி நீங்க முன்ன பின்னன்னு காட்டியிருந்தா அதன் பிறகு எப்படியிருக்கும் என்று நினைச்சேன் சிரிப்பு சிரிப்பா வருது:)))


  21. ம், சச்சின் இஸ் கிரேட்.

    பைத்தியம் முத்திப் போய் சட்டையைக் கிழிச்சிட்டு அலையாம இருந்தா சரின்னு சகாகிட்ட சொல்லுங்க.

    காவல் துறைன்னாலே முகம் சுளிக்கும் நமக்கு இது போன்றவர்களால் மரியாதை வரும்.

    நான் போகிறேன் மேலே..மேலே

    பூலோகமே காலின் கீழே. //

    என்ன படம் இது?

    இரண்டு கவிதைகளுமே நல்லாருக்கு.




  22. நல்லாயிருக்கு மாப்ளே, நல்லாருடே


  23. SUFFIX Says:

    நல்ல தொகுப்பு!!


  24. அனைத்துப்பகுதிகளும் அழகு.


  25. சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நடந்த விஷயம்

    --

    தொலைக்காட்சியில் “லால்பர்க் காவல் நிலையம் மீட்கப்பட்டது” என்ற அர்த்தத்தில் செய்தி ஓடியது

    எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார் “மீட்டதை நியூஸ் போடுறீங்க சரி, அவன் எப்ப புடிச்சான். அத போட்டீங்களா”

    மிகவும் அப்பாவிதனமாக தோன்றும் இந்த கேள்விக்குள் ஆழமான அர்த்தங்கள் உள்ளன

    புரிந்தால் கவலைப்படவும்
    புரியவில்லை என்றால் சிரித்துக்கொள்ளலாம்


  26. சுவாரஸ்யமான குறிப்புக்கள்!



  27. எல்லாத்திலயும் சூப்பர்.. கவிதையும் கார்க்கியும் காதலும்தான்

    நல்லா கலந்து கட்டி சுவையா இருக்கு அப்துல் எல்லாம்


  28. டைரிக்குறிப்பில் மனம் அள்ளுறீங்களே! :)

    லாங்ல தெரிஞ்ச ஒளி ரொம்ப கிட்டக்க வந்திருச்சுன்னு நினைக்கிறேன்.!


  29. படிச்சிட்டேன்னே...

    நன்றி.

    டைரி ரொம்ப லைட் வெய்ட்டா இருக்கு.


  30. ஸ்ரீ Says:

    முதல் கவிதை அருமை.எழுதியவரைக் குறிப்பிடவில்லையே?


  31. @ சகோதர,சகோதரிகள்

    ரோமியோபாய்
    கல்ஃப் தமிழன்
    சின்ன அம்மணி
    வானம்பாடிகள்
    சீனா
    நட்புடன் ஜமால்
    அப்பாவிமுரு
    தராசு
    எறும்பு
    ராஜூ
    கார்க்கி
    தமிழரசி
    புதுகைத்தென்றல்
    கோவியார்
    ஹூசைனம்மா
    கேபிள் சங்கர்
    ஈரோடு கதிர்
    சிங்கைநாதன்

    சிட்டுக்குருவி (எதுக்கு sad ஸ்மைலி? புரியலையே?)

    குசும்பன்
    விக்னேஷ்வரி
    திருஞானசம்பத்
    ராகவண்ணா
    அபுஅப்ஃஸர்
    சபிக்ஸ்
    ஆ.மூ.கி
    புருனோ
    அருணாக்கா
    இயற்கை
    தேனம்மை
    சுரேக்கா
    கும்கி
    ஸ்ரீ (முதல் கவிதையும் அவர் எழுதியதுதான் )


    உங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.


  32. கடைசி தத்துவத்துல கொன்னுட்டீங்க போங்க. இது சுயமாக சிந்தித்ததா...சொல்லுங்க யாரையாவது பிடிச்சு இப்பவே Award தந்துரலாம். ஹி ஹி ஹி


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']