நட்சத்திர நன்றி
10:10
கடந்த ஒருவாரமாக என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றி. நர்சிம்,குசும்பன்,தாமிரா போன்ற நண்பர்கள் கிண்டலாகச் சொன்னார்கள் “ஒன்னைய ஒருவாரம் தொடர்ந்து எழுத வைக்கணும்னுதான் நட்சத்திரமாக்கிட்டாங்கபோல” .
உண்மைதான் நான் தொடர்ந்து எழுதுபவன் அல்ல.அதேபோல குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதும் ஆசிப்மீரானோ,செல்வேந்திரனோ அல்ல.என்ன எழுதலாம் என்று யோசிக்கும் சமயத்தில் அலுவலக கிரெடிட்டும்,டெபிட்டும் கண்முன்னே வந்து டான்ஸ் ஆடும். அப்படியே புத்தி அங்கேயே போய்விடும். அதுபற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை. காரணம் அதுதான் என் வாழ்க்கை.இது அல்ல. கண்டிப்பாக நான் எழுத்தை என் தொழிலாகக் கொள்ளவுமில்லை. அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை. இதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் பெரும்பாலும் அலுவலுக்கு ஒதுக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்குவதில்லை.
எழுதுவதுதான் இல்லையே தவிர பெரும்பாலும் அனைத்து வலைப்பூக்களையும் படித்து விடுகின்றேன். சில நண்பர்கள் நீங்கள் என்னுடைய வலைப்பூவிற்கு வருவதில்லையே எனக் கேட்பார்கள்.அப்போது அவர்கள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதை வரிசையாக கூறும்போது, அப்புறம் ஏன் பின்னூட்டமிடவில்லை?என்பார்கள். யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :))
அப்புறம் எனக்கு அண்ணன்கள் நர்சிம்,கேபிள் சங்கர் போல வாசகர்கள் எல்லாம் இல்லை.(மொகரைப்பாரு...நீ கிழிக்கிற கிழிக்கு இந்த ஆசைவேற)என்னைப் படிப்பவர்கள் என் நண்பர்கள் மட்டுமே. என்னை வாசிக்கும் என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் மற்றும் என்னை முதன்முதலில் வலையில் எழுதுத ஊக்குவித்த அக்கா புதுகைதென்றலுக்கும் இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
தம்பியின் டைரிக்குறிப்பு இல்லாம நட்சத்திர வாரம் காரம் கம்மியாதான் இருக்கு :)
இந்த வாரத்தின் அதிக வரிகளை கொண்ட போஸ்ட் என்ற பெருமையை இந்த இடுகை பெருகின்றது!
//உண்மைதான் நான் தொடர்ந்து எழுதுபவன் அல்ல.அதேபோல குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதும் ஆசிப்மீரானோ,செல்வேந்திரனோ அல்ல//
அண்ணாச்சிக்கு இந்த மேட்டர் தெரியுமா?:))))
மேலே சொன்ன அனானி கமெண்டை வழிமொழிகிறேன்.
யாரு சொன்னது உங்களுக்கு வாசகர்கள் இல்லைன்னு..
தல. உங்க ரேஞ்சு உங்களுக்கே தெரியல.. வெளிய இம்மாம்பேர் இருக்கோம் பாத்து சொல்லு.. அக்காங்..
அப்துல்லா வாசகர் பேரவை..
அண்ணே, என்ன அண்ணே...?!?
ஒரே ஃபீலிங்ஸா இருக்கு.
நான் இருக்கேன் அண்ணே உங்களுக்கு வாசகன்.
(ஸ்மைலி போடலையாக்கும்.)
நட்சத்திர வாரம் கலக்கல் !
பாராட்டுகள்
//என்னைப் படிப்பவர்கள் என் நண்பர்கள் மட்டுமே.//
engalayum serthuthaane?
//Your comment has been saved and will be visible after blog owner approval. //
ரைட்ட்டு
நான் அண்ணனா நண்பனா?
நல்லாவே இருந்தது நட்சத்திர வாரம். உன் ஸ்டைலில் நானும் உன் எல்லா இடுகைகளும் படிச்சேன். கம்மெண்டு போடல. இது எப்பூடி?
Jokes apart, good show Abdul. அலுவலகம் முக்கியம். பிறகுதான் எழுத்து, இலக்கியம் எல்லாம். ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதவும். இது வேண்டுகோள் இல்லை. உத்தரவு :)
அனுஜன்யா
/(மொகரைப்பாரு...நீ கிழிக்கிற கிழிக்கு இந்த ஆசைவேற)/
ஓஓஓ. திஸ் ஈஸ் கால்டு அவையடக்கம்?=))
/அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை. //
ஆல் ரீடர்ஸ் டோட்டல் டேமேஜ். என்ன எழுதினாலும் சரக்கு நாங்க வடிச்சிக்குவம்ல=))
வாழ்த்துகள் அப்துல்ல.
அருமையான வாரம் பின்னூட்டம் தான் போட இயலவில்லை...இருந்தாலும் பிள்ளையார் உலகைச் சுற்றி வந்த மாதிரி ஆரம்பத்தில் ஒரு பின்னூட்டம் முடிவில் ஒரு பின்னூட்டமிட்டு முழுமை அடைந்ததாய் உணர்கிறேன்...
தங்களின் "பரண்" கவிதை ஆனந்த விகடனில் பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள் அண்ணா...
நன்றி வணக்கம், அடுத்து இசைத்தட்டு முழக்கம்.!
நீ நட்சத்திரமா மின்னும்போதுதான் இந்தியா டெஸ்ட் ரேன்க்கில் நம்பர் 1 ஆகிருக்கு மாப்ள.
ஒண்டே மேட்ச் முடியுற வரைக்கும் இரேன் மாப்ள
உண்மையாய் எழுதியிருக்கிறீர்கள். வேலை Vs Blog பற்றி நீங்கள் எழுதியது மிக சரி
நட்சத்திர வாரம் நன்றாகச் சென்றது. நல்வாழ்த்துக்கள்!
//எழுதுவதுதான் இல்லையே தவிர பெரும்பாலும் அனைத்து வலைப்பூக்களையும் படித்து விடுகின்றேன். //
நல்ல விஷயம்.
//யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :))//
ஓகே, ரைட்:))!
நம்பவே முடியலையே அண்ணே அதுக்குள்ள ஒரு வாரம் ஆச்ச ???
சிங்கையில் வத்து கும்ம ரசிகர் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு டிசம்பர் 24ம் தேதி ஓக்கேவா?
பாராட்டுக்கள் அப்துல்லா:)
//Jokes apart, good show Abdul. //
அண்ணே, நீங்க சீன் போடறீங்கன்னு சொல்றாரு.
ஒருவழியா அப்துல்லாவை எழுத வைத்துட்டாங்க ;-)
இந்த வாரம் மட்டுமில்லை எப்போதும் நீ நட்சத்திரம்தான் மாப்ஸ் (ரொம்பா ஒவராதான் போரேனோ ஆவ்வ்வ்வ்)
//காரணம் அதுதான் என் வாழ்க்கை//
Well Said
//என்னைப் படிப்பவர்கள் என் நண்பர்கள் மட்டுமே//
- அண்ணா நானும் இருக்கேன், மறந்துடாதீங்க.. என்ன, நானும் எப்பவுமே கமெண்ட் எழுதுறதில்ல..
Arun Karthik
உங்களுக்கு ஒரு பெரிய வாசகர் பட்டாளமே பின்னாடி இருக்கு..டக்குனு திரும்பி பாருங்க..!!
உங்க தன்னடக்கம் பிடிச்சிருக்கு...
நீங்க சாதாரண ஆளா ???
..பாய் கவிதை எழுதிய பாய்
சிங்கையை பற்றி எழுதிய சிங்கம்..
உண்மையை சொன்னால் நீங்கள் கொஞ்சம் நல்லா முயற்சி செஞ்சு நட்சத்திர வாரத்தை சிறப்பாக்கி இருக்கலாம்.
இங்ஙனம்
போக்கிரிசாமி
அகில உலக அப்துல்லா பேரவை
:))))))
அட..நீங்கவேற....மின்னி பின்னீட்டீங்க!பூங்கொத்து!
அன்பின் அப்துல்லா
ஒரு வாரம் போனதே தெரியவில்லை
அருமை அருமை அத்தனையும் அருமை
நல்வாழ்த்துகள்
ரொம்ப கலக்கலா இருந்தது, இந்த வாரம் முழுக்க உங்க பதிவுகளெல்லாம்.. :) திருனாவுக்கரசர் மேட்டர் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு
வெல்கம். :)
(நன்றி சொன்னீங்களே?)
யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? ??
//எழுதுவதுதான் இல்லையே தவிர பெரும்பாலும் அனைத்து வலைப்பூக்களையும் படித்து விடுகின்றேன். சில நண்பர்கள் நீங்கள் என்னுடைய வலைப்பூவிற்கு வருவதில்லையே எனக் கேட்பார்கள்.அப்போது அவர்கள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதை வரிசையாக கூறும்போது, அப்புறம் ஏன் பின்னூட்டமிடவில்லை?என்பார்கள். யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :)) //
வாழ்த்துக்கள் அண்ணா நான் நிறைய தடவைகள் உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன் ஆனால் இது என் முதல் பின்னூட்டம்........
சின்ன அம்மிணி said...
தம்பியின் டைரிக்குறிப்பு இல்லாம நட்சத்திர வாரம் காரம் கம்மியாதான் இருக்கு :)
Repeat..........
வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
:)//// அந்த பால் வடியும் முகத்தை எப்படி திட்டறது..??
அருமையாக இருந்தது நட்சத்திர வாரம்.
நன்றியும் வாழ்த்தும்.
நட்சத்திர தம்பிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் :)
தங்களது தன்னடக்கமும் உற்சாகப் படுத்தும் குணமும், நகைச்சுவை உணர்வும்.......... புதிய பதிவராகிய நான் கற்று கொள்ள வேண்டியது. என் முதல் வணக்கங்கள்.
//வானம்பாடிகள் said...
/(மொகரைப்பாரு...நீ கிழிக்கிற கிழிக்கு இந்த ஆசைவேற)/
ஓஓஓ. திஸ் ஈஸ் கால்டு அவையடக்கம்?=))
/அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை. //
ஆல் ரீடர்ஸ் டோட்டல் டேமேஜ். என்ன எழுதினாலும் சரக்கு நாங்க வடிச்சிக்குவம்ல=))
வாழ்த்துகள் அப்துல்ல.//
hahaha
very nice comments vaanam badi
:-))))
நிஜமாவே பின்னூட்டம் போடலன்னா படிக்கலயோன்னுதான் நான் கவலைப் படுவேன் அப்துல்லா
இதை இங்க தெளிவுபடுத்துனதுக்கு நன்றி
அதென்ன அனுஜன்யான்னு ஒரு கவிதை ஏதாவது கவுஜயோ
அப்புறம் எனக்கு நிஜமாவே அரசியல் ஈடுபாடோ அல்லது அது பற்றிய பெரிய ஆர்வமோ கிடையாது
திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் ஏன் வெற்றி பெறவில்லைனு நினைப்பேன்
உங்க இடுகை படிச்சதும் புரிஞ்சுடுச்சு
வாழ்த்துக்கள். நட்சத்திர இடுகைகளை இப்போதான் படிச்சேன்.
//என்னைப் படிப்பவர்கள் என் நண்பர்கள் மட்டுமே.//
என்ன அர்த்தம்னா படிப்பவர்கள் அனைவருமே என் நண்பர்கள் என்கிறார்.
//என் தொழிலாகக் கொள்ளவுமில்லை. அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை//
அப்படின்னா எங்களை எல்லாம் எழுதக்கூடாதுன்னு சொல்லுறீங்க.
//யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :))//
நாங்கதான்
(அண்ணே சும்மா தமாசுக்கு.)
(வாரம் ஒன்னாவது எழுதுங்க)
உண்மைதான் நான் தொடர்ந்து எழுதுபவன் அல்ல.அதேபோல குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதும் ஆசிப்மீரானோ,செல்வேந்திரனோ அல்ல.என்ன எழுதலாம் என்று யோசிக்கும் சமயத்தில் அலுவலக கிரெடிட்டும்,டெபிட்டும் கண்முன்னே வந்து டான்ஸ் ஆடும். அப்படியே புத்தி அங்கேயே போய்விடும். அதுபற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை. காரணம் அதுதான் என் வாழ்க்கை.இது அல்ல. கண்டிப்பாக நான் எழுத்தை என் தொழிலாகக் கொள்ளவுமில்லை. அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை. இதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் பெரும்பாலும் அலுவலுக்கு ஒதுக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்குவதில்லை. //
எல்லாம் இல்லைன்னு தெரிஞ்சும் நீங்க எழுதுறதை விடாதது தான் வருத்தமாயிருக்கு.
உங்களுடன் நாங்களும் கை கோர்த்து வருகிறேhம் அண்ணே.
ஈரோடு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக நண்பர் பழமை வலைப் பதிவில் தெரிவித்திருந்தார்.....வாருங்கள் சந்திப்போம்.....ஆவலுடன் இருக்கிறேன்
அன்புடன்.
ஆரூரன்
அப்துல்லா நண்பர்களே அவரை பற்றி கலாய்த்ததை பார்க்க நம்ம blog-க்கு ஒரு முறை வாங்க
உங்க கிட்ட பிடிச்சதே இந்த அடக்கம் தான்ணே....
மிகவும் நிறைவாகவும்...அழகாகவும் இருந்தது..!
(லேட்டா வந்து பின்னூட்டம் போட்டுட்டு டயலாக் வேறன்னு திட்டப்புடாது...உண்மை நேரமானாலும் உண்மைதான்)
மாப்ள சீக்கிரம் வந்து சேரு
நட்சத்திரமானதற்கு பார்ட்டி தாறியாம்ள நான் உன் பேர் போட்டு பதிவு எழுதுறேன் வா ...
நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......
மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....//
நான் கிளம்புவரை காத்திருந்து இத்தனையும் செய்ததை , நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.
நச்சத்திர வார கலக்கல்தான்.. வாழ்த்துக்கள்.
http://niroodai.blogspot.com
எல்லாமே நல்லா இருக்கு.. வாழ்த்துகள்..!
நட்ச்சத்திர வாரம் நல்லபடியாக முடித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்!
ஆனால் இந்த இடுகையை படிக்கும்போது மனது கொஞ்சமா கனத்துப் போச்சு அது ஏனோ தெரியலை :(
//எழுதுவதுதான் இல்லையே தவிர பெரும்பாலும் அனைத்து வலைப்பூக்களையும் படித்து விடுகின்றேன்.
//
சரி சரி சொன்னா ஒத்துக்கணும்:)
//
யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :))
//
அதானே! ஆனா நான் சொல்லவே இல்லைப்பா:))
இன்ஷா அல்லாஹ், நாங்களும் வந்துட்டோம்ல..
புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்துல்லா நலமே பொலிக
வாழ்த்துக்கள் அப்து அண்ணே...