அனுஜன்யா
18:11
எதார்த்த உரசலில்
எழுந்தது மற்றொன்று.
புதியன கண்டறிந்ததாய்
பூரித்தான் மனிதன்.
காலத்தின் கணக்குகளில்
மற்றுமொரு விடை.
சக்கர மேகங்கள்
சடுதியில் கூடின.
நீண்ட பயணங்கள்
நீளமின்றிச் சுழன்றது.
காலத்தின் கணக்குகளில்
தற்போது.....
ஆயிரம் ஆயிரம் விடைகள்.
கண்ணீரின் கணக்குகளுக்கோ
காலம் கடந்தும்
விடைகள் இல்லை!
டிஸ்கி : எளிதில் புரியாத கவிதைகளுக்கு இதைவிடச் சிறந்த தலைப்பு எவன்னாலயும் வைக்க முடியாது :) அண்ணன் அனுஜன்யா வாழ்க!
எழுந்தது மற்றொன்று.
புதியன கண்டறிந்ததாய்
பூரித்தான் மனிதன்.
காலத்தின் கணக்குகளில்
மற்றுமொரு விடை.
சக்கர மேகங்கள்
சடுதியில் கூடின.
நீண்ட பயணங்கள்
நீளமின்றிச் சுழன்றது.
காலத்தின் கணக்குகளில்
தற்போது.....
ஆயிரம் ஆயிரம் விடைகள்.
கண்ணீரின் கணக்குகளுக்கோ
காலம் கடந்தும்
விடைகள் இல்லை!
டிஸ்கி : எளிதில் புரியாத கவிதைகளுக்கு இதைவிடச் சிறந்த தலைப்பு எவன்னாலயும் வைக்க முடியாது :) அண்ணன் அனுஜன்யா வாழ்க!
அன்பின் அப்துல்லா
எளிதில் புரிய வில்லை - உண்மை - ஆனால் சற்றே சிந்தித்தால் புரிவது போல் இருக்கிறது.
காலத்தின் கணக்குகளினால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு - மகிழ்வோ துயரமோ - விடைகள் இல்லை
நல்வாழ்த்துகள் அப்துல்லா
வாங்க சீனா அய்யா
//காலத்தின் கணக்குகளினால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு - மகிழ்வோ துயரமோ - விடைகள் இல்லை //
அய்யா இதுதான் நானும் சொல்ல வந்த உட்பொருள்.
//அய்யா இதுதான் நானும் சொல்ல வந்த உட்பொருள்//
அப்படியா?
அப்துல்லா!!
அருமை...
என்னது இது? :)
அண்ணே இதை அப்டியே வலையுலக வாழ்க்கையாவும் வச்சுக்கிடலாம் போல..
கலக்குங்க...
ஹாஹா..........ரசித்தேன் டிஸ்கியை
அண்ணே!! தலைப்புக்கு பதிலாக லேபிளை “அனுஜன்யாகள்”ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்..
Super!
நிஜமாவே புரியவில்லை!!! :)))
ஐ. எனக்கும் புரிஞ்சது. :)
புரியும்ம்ம்ம்ம்! ஆனா புரியாது!
அப்பனே அப்துல்லா..!
கவிதை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை சொல்லவும் ஒருத்தரை தயார் செய்ய வேண்டும் போலிருக்கிறதே..!
எப்படிப்பா..?
கவிதையும், சீனா சாரின் விளக்கமும் அருமை!
// டிஸ்கி : எளிதில் புரியாத கவிதைகளுக்கு இதைவிடச் சிறந்த தலைப்பு எவன்னாலயும் வைக்க முடியாது :) அண்ணன் அனுஜன்யா வாழ்க! //
இல்லீங்க நேசமித்ரன் அப்படின்னு கூட பேர் வைக்கலாங்க.
நீண்ட பயணங்கள்
காலத்தின் கணக்குகளில்
ஆயிரம் ஆயிரம் விடைகள்.
காலம் கடந்தும்
விடைகள் "கிடைக்கும்"
கலக்குங்க
டிஸ்கி சூப்பர் அப்துல்லாண்ணே..
@ அண்ணன்கள்
தண்டோரா
ஷாகுல் - :)
பிரியமுடன் வசந்த்
அத்திரி
கார்க்கி
ராஜூ
கல்ஃப் தமிழன் - நெஜமாவே புரியலையா?? ஹையா!நான் ஜெயிச்சுட்டேன்! :))
வானம்பாடிகள்
அருணாக்கா
உண்மைத்தமிழன்
இராமலெஷ்மியக்கா
ராகவன் அண்ணா - அடுத்து அதுதான் :)
ஜோதிஜி
டி.வி.ஆர்
சரவணக்குமார்
****
உங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்கின்றேன்.
ரொம்ப நல்லா இருக்கு கவிதையும் தலைப்பும்!
நட்சத்திர வாழ்த்துக்கள் மக்கா!
என்னக் கொடுமை அண்ணா இது?
எனக்கு புரிஞ்சுடுச்சே.. அப்ப நா யாரு.?
டிஸ்கி சூப்பர்....
எங்கயோ போயிட்டீங்க தல.!
புரிய வில்லை