அப்பா என்றாலும் அன்பு

நானும் சங்கரனும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து மாப்ளை என்று பரஸ்பரம் அழைக்கத் துவங்கியபோது நாங்கள் ஆறாம் வகுப்பில் நுழைந்து இருந்தோம்..கழுத்தில் கட்டிக்க டை,காலில் போட்டுக்கொள்ள ஷூ இதையெல்லாம் விடுங்கள்...சீருடை கூட இல்லாத பஞ்சாயத்துப் பள்ளி எங்கள் பள்ளி. நாட்டுச் சீமை ஓடு வேயப்பட்ட நீளமான கட்டிடம்.உத்திரத்தில் இருந்து அவ்வப்போது விழுந்து பரபரப்பைக் கிளப்பும் மழைத் துளி, சில சமயங்களில் தேளும்கூட. நாங்கள் உட்கார பெஞ்செல்லாம் கிடையாது.ஒன்லி தரைதான். நடுவில் பாதைவிட்டு மாணவர்களும் மாணவியரும் இரு பகுதிகளில் ஐய்ந்தைந்து பேர் வருசையாக மொத்தம் ஆறு வரிசைகளில் பிரித்து அமர்ந்திருப்பர்.


ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு மாறும்போது நானும் சங்கரனும் ஆறாம் வரிசையில் சுவற்றின் ஓரமாக அமர வைக்கப்பட்டோம்.. வகுப்பு துவங்கியதில் இருந்து சங்கரன் ஒன்னுமே எழுதலை. ‘ஏன்டா எழுதாம இருக்க?’ என்று நான் கேட்டபோது பதில் சொல்லாத சங்கரன் ரங்கநாதன்சார் கேட்டப்ப போர்டு லேசா மங்கலா இருக்குது சார் அப்பிடின்னான். அவனை முன்னாடி வரச் சொன்ன சார் இங்கேந்து தெரியுதான்னு கேட்க, நல்லாத் தெரியுது சார்னு சொல்லி சடார் என அங்கேயே அதாவது முதல் வரிசையில் மாணவ,மாணவியரைப் பிரிக்கும் பாதையின் ஓரத்தில் அமர்ந்து விட்டான். என்னாச்சு அவனுக்கு என்ற குழப்பத்திலும்,பதட்டத்திலும் நான் இருக்க, லேசாக பின்னால் திரும்பி என்னை நக்கலாகப் பார்த்து ஒரு குறுஞ் சிரிப்பொன்று உதிர்த்தான்.

அடுத்த நாள் மாலை நான் அவனிடம் ’ஏன்டா கண்ணு சரியா தெரியலைன்னு சார்கிட்ட சொன்னியே! வீட்டுல சொல்லி கண் டாக்டரைப் பாத்தீங்களாடான்னு’ கேட்க, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது.ஆனா அங்க ஒக்காந்தாத்தான் சிவகாமசுந்தரி புள்ளகிட்ட பேசமுடியும்"அப்படின்னான். எனக்குத் தெரிந்து என் செட்டில் விஞ்ஞானப்பூர்வமாக சைட் அடித்த முதல் நபர் அவன்தான். வருடம் மாறமாற அவன் சைட் அடிக்கும் பெண்களும் மாறிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அவன் மட்டும் சைட் அடிப்பதில் இருந்து மாறவேயில்லை.

எட்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாறும் நாளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்..காரணம் அதுதான் பள்ளியில் எல்லோரும் டவுசரில் இருந்து ஃபேண்ட்டுக்கு மாறும் நாள். ஃபேண்டு போட்டதும் எல்லோரும் பெரிய மனுசங்களாக மகிழ்வாக உணர்ந்தோம்.அந்த ஆண்டிலேயே மற்ற அனைவரையும்விட சங்கரனுக்கு சீக்கிரமே ஒரு புரோமோஷன் கிடைத்தது.அது...மீசை.

எங்க எல்லாருக்கும் எட்டிக்கூடப் பார்க்காத அந்த நேரத்தில் சங்கரன் சனியனுக்கு மட்டும் மீசை நல்லாவே வரத் துவங்கியது. பத்தாம் வகுப்பில் நாங்கள் படித்தபோது அனைவரையும் அடிக்கும் சுப்ரமணியன் சார் அவனை மட்டும் அடிக்காமல் இருந்ததற்கு அவன் மீசைகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.எந்தப் பெண்ணையாவது பார்த்தால் தன் இடக்கையால் அதை ஸ்டைலாக நீவிவிட்டுக்கொள்வது அவனது அந்நாள் மேனரிசமானது.

பத்தாம் வகுப்பில் ஒரு ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாள் சங்கரன் என்னிடம் "மாப்ளே! நாளைக்கு எனக்கு பூணுல் கல்யாணம்.கிளாஸ்ல யாருகிட்டயும் நான் சொல்லலை.நீ அவசியம் வந்துருடா".

"பூணூல் கல்யாணம்னா என்னடா?"

"அது வேற ஒண்ணுமில்லை.மொதமொதல்ல எங்களுக்கு பூணூல் மாட்டுறதை பூணுல் கல்யாணம்பாங்க".

"ஒனக்காவது பரவாயில்லைடா.மாட்டுற வேலை. எங்களுக்கு சுன்னத் கல்யாணம்னு ஒன்னு பண்ணுவாய்ங்க.அது எடுக்குற வேலை. உசுரு போகும்" என்ற என்னை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றான்.

காலை பத்துமணி நிகழ்ச்சிக்கு நான் எட்டு மணிக்கே சங்கரன் வீட்டிற்குச் சென்று விட்டேன்.அண்ணன் வெகு குஜாலாக இருந்ததைக் கண்டு ஃபங்ஷன்னால ஜாலியா இருக்கான்போல என நினைத்தேன். குஜாலுக்கு காரணம் அதுவல்ல..அவன் உறவினர் பெண் காயத்ரி என்று சிறிது நிமிடத்திலேயே புரிந்துவிட்டது. அவள் இருக்கும் பக்கமாகவே இவன் செல்வதும் இருவரும் லுக் விடுவதும் என்னை மட்டும் சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருந்தது. ஒரு தூண் மறைப்பில் இருந்து அவள் இவனை கைகாட்டி அழைக்க குஷியாக சென்றவன் சற்றே வாடிய முகத்தோடு உடனே திரும்பினான்.

"என்னடா மாப்ள? என்ன சொன்னா?"

"என் மீசை ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாடா"

"அதையேன் வருத்தமாச் சொல்லுற?"

"இல்லைடா பூணூல் போடுறதுக்கு முன்னாடி அதை வழிச்சு விட்டுருவாங்கடா" என்றவன் மேற்றொண்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான்.அப்பொழுதே அவன் கண்கள் கலங்கத் துவங்கியது நன்றாகவே தெரிந்தது. அவனுக்கு மீசை எடுக்கும் அந்த நேரமும் வந்தது.மீசையை எடுக்க வேண்டாம் என்று அவன் அப்பாவிடம் அவன் போராட அவரோ "உனக்காவது பரவாயில்லை மீசையை மட்டும்தான் எடுக்குறாங்க. எனக்கெல்லாம் பூணூல் போட்ட அந்தக் காலத்துல தலையிலே முன்பக்கம் பாதி முடியையும் சேர்த்தே எடுத்துருவாங்க.பேசாம உக்காருடா" என்றார்.

மீசைமேல் நாவிதர் கத்தியை வைத்த அந்த நேரத்தில் அழவே துவங்கிவிட்டான்.

"டேய்!என்டா அழற? ஒரு ஆம்பளைப் பையன் அவனோட தோப்பனார் செத்து கொள்ளி வைக்கிறச்ச மீசை எடுப்பால்ல...அப்போ மட்டுந்தான் அழணும்.இப்போ அழப்படாது" என்ற அவனது அப்பாவின் குரல்கேட்டு எங்கேதான் சென்றதோ அதுவரை இருந்த அவனது கண்ணீர்?

பின்னர் இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்காக நான் சென்னை வந்தபோது சங்கரனும் சென்னைக்கு வேலை கிடைத்து வந்து விட்டான். ஒருநாள் இருவரும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே அருகில் டூவீலரில் செல்லும்போது குறுக்கே பாய்ந்த நாயால் கீழே விழ, இருவருக்குமே சமமான அடி. வலியால் என் கண்களில் இருந்து நீர் கொட்ட, சங்கரனைப் பார்க்கிறேன்.அத்தனை வலியிலும் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. எனக்கு தெரிந்து அவன் பூணூல் கல்யாணத்தின் போது அழுததை தவிர வேறெப்போதும் அழுது பார்த்ததேயில்லை.

இன்று காலையில் சங்கரன் போன் செய்திருந்தான். குரல் கொஞ்சம் கம்மியிருக்க," என்னடா சங்கரா..?" என்றேன் "அப்பா போயிட்டாரு வந்திருன்னுட்டு" போனை வச்சிட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டுச்சு. நேத்து கூட போனில பேசினேன். என்ன ஆயிற்று? என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான். வீட்டிற்கு போன போது அமைதியாய் இருந்தான். நான் அவனிடம் சென்று என்ன ஆச்சு என்பதை போல அவனை அணைத்து கொண்டேன். இறுக்கமாய் இருந்தான். வீட்டில் அவனின் அம்மா மற்றும் உறவுகள் எல்லாம் கதறி அழுது கொண்டிருக்க, இவன் மட்டும் அழவேயில்லை. அவனை பார்க்க எனக்குள் கொஞ்சம் பதட்டமாய் இருந்தது. அதற்குள் சடங்குகள் செய்ய ஆரம்பிக்க, அவனின் முகம் இன்னும் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது.

எனக்கு தெரிந்து இவ்வளவு இறுக்கமாய் அவன் இருந்ததேயில்லை. இடுகாட்டில் மேலும் சடங்குகள் அவனை ஆக்கிரமிக்க, வாய்கரிசி போடும்போது கூட அவன் அழவில்லை, எனக்குபொறுக்கவில்லை. "டேய்.. வீட்டில நீ அழாம இருக்கிறது சரி. ஆனா இங்கயாவது நீ அழுதுடு. இல்லாட்டி ரிலீப்பாக மாட்டே" என்று காதோரம் கிசுகிசுக்க, அவன் என்னை நேராய் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் மின் எரியூட்டியில் வைக்கப்பட்ட அவனது அப்பாவை தீக்குள் அனுப்பிவிட்டு, திரும்பி பார்க்காமல் நடந்துவந்தான்.வெளியே வந்ததும் அவனின் உறவினர்களிடம் சாஸ்திரிகள் அழைத்து எதோ சொல்ல அவனை ஒரு இடத்தில் தரையில் உட்காரவைக்க எதிரே ஒரு நாவிதர் மெல்ல தன் கையிலிருந்த கத்தியை எடுத்து அவனின் மீசைமீது வைத்து மழிக்க ஆரம்பித்த நொடி "ஓ"வென அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சங்கரன். அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது.
58 Responses
  1. Anonymous Says:

    அருமை


  2. இத்தனை கல்யாணத்தையும் எங்கண்ணே வைச்சுருந்தீங்க ?


  3. நட்சத்திர பதிவராக அவதரித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.


  4. //நானும் சங்கரனும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து மாப்ளை என்று பரஸ்பரம் அழைக்கத் துவங்கியபோது நாங்கள் ஆறாம் வகுப்பில் நுழைந்து இருந்தோம்...//

    ரைட்டு . அப்பவே ஆரம்பிச்சாச்சா?

    //"கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது.ஆனா அங்க ஒக்காந்தாத்தான் சிவகாமசுந்தரி புள்ளகிட்ட பேசமுடியும்"அப்படின்னான். எனக்குத் தெரிந்து என் செட்டில் விஞ்ஞானப்பூர்வமாக சைட் அடித்த முதல் நபர் அவன்தான்...//

    பயபுள்ளைக என்னா விவரம்.....!

    அப்துல்லா,

    இறுதி வரிகளில்.....இதயம் நனைந்தது.


  5. ஒன்னும் சொல்லத் தோணலை எனக்கு. இதயம் வலிக்கும் வரிகள்.



  6. Romeoboy Says:

    தம்பி சின்ன வயசுல இருந்த குரும்பை சூப்பர் சொல்லி. கடைசியில் கலங்க வச்சிடிங்க ..


    " என்னை அண்ணன் என்று கூப்பிட்டால் நான் உங்களை தம்பி என்றே கூப்பிடுவேன் "


  7. அசத்தல்!பூங்கொத்து!


  8. sriram Says:

    அப்துல்லா
    அருமையான நடை, இது உண்மை நிகழ்வா இல்ல புனைவா?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்


  9. சலாம் அலைக்கும் .


  10. அற்புதம்...

    கடைசி பத்திகளில் பெருங்குரலெடுத்து அழவேண்டும் போல் இருந்தது. இப்படி ஒரு அற்புதமான படைப்பாளியை நண்பனாகக் கொடுத்த எல்லாம் வல்லவனுக்கு நன்றி என்று !


  11. @ அண்ணன்கள்

    அனானி

    சாமி - சீப்புக்குள்ள ஒளிச்சு வச்சிருந்தேன் :)

    கடையம் ஆனந்த

    சத்ரியன் - முதல் வருகைன்னு நினைக்கிறேன்.நன்றிண்ணா.

    வானம்பாடிகள்
    இராமலெஷ்மியக்கா

    ரோமியோபாய் - ஏன்ணே..தம்பியை தம்பின்னு கூப்பிடாம வேற எப்படிக் கூப்புடுவீங்க :)))

    அருணாக்கா

    ஸ்ரீராம் அண்ணா - புனைவுதான் :)

    ஜெசி ஈசானந்தா - வ அலைக்கும் சலாம் :)

    சுரேகா - அண்ணே நீங்க தொடர்ந்து எழுதாததால எங்க பொழப்பு இங்க ஓடுது :)

    ***********

    அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்கின்றேன்.


  12. கேபிள் நினைவுக்கு வருகிறார்..(கொஞ்சமா)


  13. மீசை பெருசா இருந்தா மனசு சுத்தமா இருக்கும்னு,
    ”அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன்”
    எங்கிட்ட சொல்லியிருக்கார்!


  14. தண்டோரா அண்ணே,

    கதை நாயகன் பேரு சங்கரன்னவுடன் கேபிள் ஞாபகம் வந்துட்டாரா??


  15. அருமையா இருக்குண்ணே :). இதே போல அடிக்கடி எழுதுங்க.


  16. கலக்கல் சிறுகதை, படிக்கும் பொழுது உண்மை நிகழ்வு என்றே நினைத்துப் படித்தேன் குறிச் சொல்லை பார்க்கும் வரை.

    எப்பிடி தம்பி ! கலக்குறே கலக்குறே கட்டம் கட்டி கலக்குறே !


  17. //எங்க எல்லாருக்கும் எட்டிக்கூடப் பார்க்காத அந்த நேரத்தில் சங்கரன் சனியனுக்கு மட்டும் மீசை நல்லாவே வரத் துவங்கியது.//

    இப்போ கூட உங்களுக்கு மீசை வரலியே

    கதை நல்லா இருக்குங்க.


  18. அன்பின் அப்துல்லா

    கதை எழுதும் திறமை பளிச்சிடுகிறது.

    கோர்வையாக நிகழ்வுகள் - இயல்பான சொல்லாடல்கள் - சிறு வயதில் ஆரம்பித்து வாலிப வயது வரை கொண்டு சென்றது பாராட்டுக்குரியது.

    அழக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையை வேத வாக்காகக் கொண்டு கடைசி வரை காப்பாற்றிய சங்கரன் வாழ்க

    நல்வாழ்த்துகள் அப்துல்லா


  19. நட்சத்திர வாரமா? ம்.. கலக்குங்க

    கேபிள் சங்கர்


  20. அப்பா என்ற சொல்லே அலாதி தான்.

    உங்கள் நகைச்சுவையோடு நெகிழ்ச்சியான பதிவு.

    இன்று காலை ”அப்பா” என்ற சந்திராவின் கவிதையை உயிர் எழுத்து இதழில் படித்து சிலாகித்தேன்.

    இரவு உங்கள் பதிவில் மகிழ்ந்தேன்.. நெகிழ்ந்தேன்..

    சாதாரண ஸ்டார் இல்ல.. சூப்பர் ஸ்டார்..



  21. Nataraj Says:

    செண்டிமெண்ட் ஒகெண்ணே...இருந்தாலும் கதை ரொம்ப guessable -ஆ இருந்துது பாதியில் இருந்து.

    "ஏன்டா..கொள்ளியா போடற...இப்படி அழற" என்று அந்த பூணல் பார்ட்ல அப்பா கேரக்டர் சிம்பிளா டச் பண்ணிருந்தா போதும்...அங்க கொஞ்சம் நாடகதன்மையா அப்பா இழுத்து explain பண்ணப்போவே இப்படி தான் கதை போகபோகுதுன்னு தெரிஞ்சுடுச்சு. ஏதோ அடியேனுக்கு தோன்றியது. தப்பா இருந்த மன்னிச்சுக்கங்க..

    ப்ரகதம்பா ஹை ஸ்கூல்ல 10th ல தானே பேன்ட்..தொடைல (மற்றும் இதர ஏரியாக்களில் ) கிங்காங் அளவுக்கு முடி முளைச்ச பசங்க ஸ்கூல், கிரௌண்ட் வரைக்கும் பேண்ட்ல சுத்திட்டு, கிளாஸ்க்கு மட்டும் டவுசர்ல போறது ஞாபகத்துக்கு வந்துச்சு..


  22. நெகிழ்வான பதிவுங்க அப்துல்ல.

    //உறவினர் பெண் காயத்ரி//

    காயத்ரி ன்னு பேர் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகானவர்கள்னு ஒருத்தர் சொன்னார். :)


  23. அருமையான நடை ஒன்றிப் படிக்க வைத்தது.


  24. அப்துல்லா அண்ணே, அருமை... இப்படி எழுத எங்களுக்கும் கொஞ்சம் கத்து குடுங்க...



  25. இந்த சரக்கை எல்லாம் ஒளிச்சு வச்சிட்டு நட்சத்திர பதிவரானதும் எடுத்து விடறீங்க....


  26. //சாமி - சீப்புக்குள்ள ஒளிச்சு வச்சிருந்தேன் :)//

    அதனாலத்தான் எனக்கு தெரியலை போல :)


  27. காமெடியாக ஆரம்பித்து டிராஜடியாக முடித்து விட்டீர்கள் அப்துல்லா.படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.


  28. தந்தையை இழந்தவனின் உணர்வை எத்தனை அருமையாக பதிந்துள்ளீர்.

    அனுபவித்தவர் மட்டுமே முழுமையாய் உணர முடியும்.

    கண்ணீருடன் நன்றி.


  29. இது நட்சத்திரப் பதிவு.



  30. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு மாப்ள


  31. KaveriGanesh Says:

    "டேய்!என்டா அழற? ஒரு ஆம்பளைப் பையன் அவனோட தோப்பனார் செத்து கொள்ளி வைக்கிறச்ச மீசை எடுப்பால்ல...அப்போ மட்டுந்தான் அழணும்.இப்போ அழப்படாது"



    இப்படி ஓரு நியதி இருக்கா?

    நடை நல்ல நடை,எதிற்பார்க்கிறேன், நிறைய.


  32. raghupathi Says:

    abdullah.well ungalai phone il pidikka 1 weekaka try panren mudiyala yesterday i read all your inputs .from jan- to dec .simply superp .ungalathu intha parimaanam, dimension naan ithuvarai ariyaathathu. intha siru kathai vegu arumai.vazthukkal. che.(vanakkam ,vana illai)


  33. நல்லாயிருக்கு.
    கதை உண்மைக்கதையோ?


  34. அற்புதம் அப்துல்லா

    இப்படி ஒரு அருமையான படைப்பை நான் எதிர்பார்க்கவில்லை

    காமெடியில் கலக்கிய நீங்கள் உணர்வு பூர்வமாகவும் கலங்க வைத்து விட்டீர்கள்


  35. நட்சத்திரமாக தமிழ்மணத்தில் நீங்கள் ஜொலிக்கும் இவ்வேளையில் பதிவுகளும் ஜொலி ஜொலிக்கின்றன.

    நெகிழ்ந்தேன்.


  36. அண்ணே அருமை


  37. கிரி Says:

    //எட்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாறும் நாளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்..காரணம் அதுதான் பள்ளியில் எல்லோரும் டவுசரில் இருந்து ஃபேண்ட்டுக்கு மாறும் நாள். ஃபேண்டு போட்டதும் எல்லோரும் பெரிய மனுசங்களாக மகிழ்வாக உணர்ந்தோம்.//

    உண்மை தான்..நானும் இதைப்போலவே உணர்ந்தேன்..ரொம்ப சந்தோசமாகவும்.

    காமெடியாக ஆரம்பித்து இறுதியில் உருக்கமாக முடித்து விட்டீர்கள்..

    நல்லா எழுதி இருக்கீங்க அப்துல்லா


  38. @ அண்ணன்கள்

    வால்பையன்
    தாரணி
    கோவி.கண்ணன்

    ஷாகுல் - சீக்கிரம் முளைக்கணும்னு சிரைக்க ஆரமிச்சு அப்படியே பழக்கமாயிருச்சு :)


    சீனா அய்யா
    கேபிள் ஷங்கர்
    பட்டர்பிளை சூர்யா
    ராகவண்ணா

    நட்ராஜ் -

    //தப்பா இருந்த மன்னிச்சுக்கங்க..

    //

    மன்னிக்கிறதா?? அடப்பாவமே!எனக்குத் தேவை இதுபோன்ற வெளிப்படையான விமர்சனம்தான்.காரணம் நான் இன்னும் போக வேண்டிய தூரங்கள் மிகமிக அதிகம்.அதற்கு விமர்சனம்தான் உதவும்.அண்ணா இது என் இரண்டாவது சிறுகதை. எப்படியாவது சீக்கிரம் எழுதுதக் கத்துக்குறேன் :)

    **********

    அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


  39. @

    சின்ன அம்மணி அக்கா
    //காயத்ரி ன்னு பேர் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகானவர்கள்னு ஒருத்தர் சொன்னார். :)

    //

    யக்கா..உங்க ஞாபக சக்தியைக் கொஞ்சம் கடன் குடுங்களேன் :))

    அந்தப் பெண் அழகாக இருந்தாள்னு எழுதுனாலே அவள் பெயர் காயத்ரின்னு தன்னால வந்துருது :))



  40. Raju Says:

    வசதியானவர்கள் வீட்டு குழந்தைகளும் அந்த பள்ளியிலா படித்தார்கள் அண்ணா?


  41. அண்பு நண்பரே -

    உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
    நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
    அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

    என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/


  42. @ அண்ணன்கள்

    மாதேவி
    எறும்பு
    டி.வி.ராதாகிருஷ்ணன்
    சாமி- :0)
    ஸாதிகா
    அருள்மொழியன்

    ஜோசப்பால்ராஜ்
    நர்சிம்
    நவாஸ்
    காவேரிகணேஷ்
    இரகுபதி

    அதிபிரதாபன் - இல்லைண்ணா,புனைவுதான்

    தேனம்மைலெஷ்மணன்
    புதுகைத் தென்றல்
    அத்திரி
    கிரி
    டாக்டர் அன்ணன்

    ராஜூ - அண்ணா இது கற்பனைக் கதைண்ணா. அப்புறம் நம்ப இப்பதாண்ணா வசதி :))


  43. Mohan Kumar Says:

    நட்சத்திரம் ஆன பிறகு வெளியிடனம்னு இதெல்லாம் stock வச்சிருந்தீங்களோ?

    ஷாகுல் said:

    //இப்போ கூட உங்களுக்கு மீசை வரலியே//
    ஹா ஹா.


  44. @ அண்ணன்கள்

    இமயவரம்பன் - நன்றிண்ணா. அவசியம் வருகின்றேன்.

    மோகன்குமார் - ஸ்டாக்கெல்லாம் இல்லீங்க. நேரமின்மையாலும்,சோம்பேறித்தனத்தாலும் தொடர்ந்து எழுதுவதில்லை. நட்சத்திர வாரக் கட்டாயத்தில் இப்போ எழுதுறேன் :)


  45. ரெம்ப நல்லா இருக்கு..

    // அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது. //

    படிக்கிற அத்தன பேருக்கும் புரிந்தது. அது தான் உங்க எழுத்தின் வெற்றி-னு நான் நினைகிறேன்.

    இது மாதிரி நிறைய எழுதுங்களேன்!!


  46. இவ்வளவு அருமையான நடைக்குச்சொந்தக்காரர் தொடர்ந்து எழுதாமலிருப்பதுதான் தவறு. இது நன்றாகயிருந்தது.

    ஆனால் ஏனோ கதையில் அழுத்தம் இல்லை.


  47. நெகிழ்ச்சியான கதை(தானே?)

    அப்பா அட்வைஸ் பண்ணும்போதே முடிவு இப்படித்தான் இருக்கும்னு யூகிக்க முடியுது. நண்பர் அதன்பிறகு அழவில்லை என்பதை இன்னும் அழுத்தமான நிகழ்வுகளைக் கொண்டு சொல்லியிருக்கலாம்.

    (இதுக்குத்தான் நான் கருத்து சொல்லமாட்டேன்னு சொன்னேன். கேட்டிருக்கலாம்ல்?)


  48. கதையா? நிசமா?
    நெகிழ்ச்சியான கதை, எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது...........
    நல்லா இருக்கு


  49. MANO Says:

    கதை அருமை....


  50. vanila Says:

    arumai abdullah ji.


  51. KVR Says:

    கேபிளின் கதையைப் படிச்சிட்டு இங்கே வந்தேன். இதுவும் அருமை.


  52. //அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது. //

    எங்களுக்கும்... இரண்டும் அருமை..


  53. //.. கேபிளின் கதையைப் படிச்சிட்டு இங்கே வந்தேன் ..//

    இரண்டும் அருமை..


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']