வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

நெருக்கி அழுத்தும் வேலைகளுக்கு மத்தியில் ஒரு குளிர்தருவாய் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நிகழும். எங்கள் என்பது நானும்,கேபிள் சங்கரும் எங்களது திரைப்படத்துறை நண்பர்களும் என்பதை அறிக. சென்றமுறை எங்கள் ஜமாகூடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது பேச்சு பல்வேறு விஷயங்களுக்குச் சென்று இறுதியில் வேலைக்காவாத தொலைக்காட்சிகளில் வேலைக்காவாத விஷயமாய் தாம்பத்யத்தைப் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு டுபாக்கூர் டாக்டரின் பக்கம் சென்றது.தொலைக்காட்சியில் அந்தஆள் அள்ளிவிடும் டுபாக்கூரைப் பற்றி அனைவருமே கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஹைலைட் அண்ணன் கேபிள் அவரைப் போலவே டிட்டோவாக நடித்துக்காட்டியதுதான்.




அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.



அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.



நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.


சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.





டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???
73 Responses
  1. KaveriGanesh Says:

    ஒரு லாட்ஜ் ரூமில்,கதவு தட்டப்படுகிறது.

    டாக்டர், டாக்டர் இருக்கீங்களா,

    டாக்டர்: போய்யா, போய்யா, வலைதளத்தில் தளத்தில் நான் தூக்கு போட்டுகிரமாதிரி எழுதுராங்கபா.


  2. //டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???//

    :(

    அவர்தான் அநியாயத்துக்கு பேசுறார்ன்னா அவரை விட ஜாஸ்தியா நீங்க முடிச்சுருக்கீங்க.. அவர் தனியா சுத்தறாரு இல்ல குடும்பத்தோட சேர்ந்து சுத்தறாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

    கொடுமையான முடிவுரை!


  3. Cable Sankar Says:

    அண்ணே.. கடைசி பஞ்ச் சூப்பர்


  4. :) இந்த போலி மருத்துவர்கள், 'குறி' பார்த்து பிட்டைப் போடுறாங்க.


  5. //அவர்தான் அநியாயத்துக்கு பேசுறார்ன்னா அவரை விட ஜாஸ்தியா நீங்க முடிச்சுருக்கீங்க.. அவர் தனியா சுத்தறாரு இல்ல குடும்பத்தோட சேர்ந்து சுத்தறாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

    கொடுமையான முடிவுரை

    //

    சென்ஷி அண்ணே, ஐயாம் காமன்மேன். எனக்கு தோன்றியதை அப்படியே எழுதி இருக்கின்றேன். இதில் எனக்கு சிறிதும் வருத்தம் இல்லை.


    //கொடுமையான முடிவுரை!

    //

    உங்களின் இந்தக் கருத்தை நான் ஏற்பதாக இல்லை.ஆனால் அதே நேரத்தில் உங்களின் கருத்தை இங்கே சொல்லும் உங்கள் உரிமையை நான் மறுக்கப்போவதும் இல்லை.

    உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. உங்கள் கருத்தை மதிக்கின்றேன்.


  6. அமுக்கிராங்கிழங்கு லேகியம் வேணுமா?


  7. கடைசி பத்தி செம்ம அப்துல்லா பஞ்ச் !!!!

    அவரு செல்போன்ல பேசும் போது பாத்திருக்கீங்களா ??

    எதிர்முனையில பேசுறவன் காதுல ரத்தம் வர அளவுக்கு திட்டுவாரு.பொறவு
    "என்ன உங்க அப்பா மாதிரி,தாத்தா மாதிரி நினைச்சிக்கோப்பா"ன்னு ஒரு பிட்ட போடுவாரு பாரு..."ஏ" கிளாஸ் !!!


  8. //தண்டோரா ...... said...
    அமுக்கிராங்கிழங்கு லேகியம் வேணுமா?
    //

    சிட்டுக்குருவி லேகியத்த விடவா ??


  9. //அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான்.//

    ஆஹா பிட்டு எல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்களா? மோசம் போய்ட்டியேடா குசும்பா மோசம் போய்விட்டியே இது தெரியாம மிட் நைட் வரை ஒரு ஒரு சேனலா மாத்தி மாத்தி கட்டை விரல் வலிக்க உட்காந்து இருந்தியேடா குசும்பா!


  10. அண்ணே இன்னும் காமெடியா இருக்கும், அவரு சொல்வாரு சுயஇன்பம் செய்ய செய்ய உறுப்பு சிறுத்து போய்விடுமாம்? அப்படி பார்த்தா ஊர்ல பல பயபுள்ளைங்க , ”எங்க இங்கதானே இருந்துச்சு எங்க போச்சு” என்று தேடிக்கிட்டு இருப்பானுங்க!


  11. டேய் நான் உங்க அப்பா மாதிரிடா, பொண்ணுங்க பாவத்தை சுமக்காதீங்கடா, என்று நிஜமாலுமே கண்ணீர் விட்டு அழுவார், செம குஜாலா இருக்கும்.


  12. //தண்டோரா ...... said...
    அமுக்கிராங்கிழங்கு லேகியம் வேணுமா?
    //

    இந்த லேகியம் சாப்பிட்டா அமுக்குமா? இல்ல ........


  13. எனக்கும் அதே டவுட்டு தான்!

    ஒருவேளை தபால் ஓட்டு மாதிரி, தபால்லயே எதாவது!?..........


  14. மிக அருமை அப்துல்லா.


  15. /நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???/

    :)).


  16. ஏ..இது நட்சத்திரமா சூரியனாப்பா..சுடுதே..

    கிர்மினல்..மிக ரசித்தேன்..ர் போட்டதை..


  17. Romeoboy Says:

    அண்ணே அந்த கொடுமைக்கு நடுவுல அவன் நடத்துற காலேஜ் பத்தி எல்லாம் விளம்பரம் வரும் பார்த்திங்களா. அங்க இருந்து எத்தனை டுபாக்கூர் வரபோறன்களோ


  18. //டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???//

    சபாஷ்ங்கண்ணா...
    சரியான நெத்தியடி


  19. மிக தேவையான பதிவு


  20. Anonymous Says:

    \\அப்படி பார்த்தா ஊர்ல பல பயபுள்ளைங்க , ”எங்க இங்கதானே இருந்துச்சு எங்க போச்சு” என்று தேடிக்கிட்டு இருப்பானுங்க!\\

    :) ;)


  21. அப்துல்லா , ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்சத்திரதுக்கும் வாழ்த்துக்கள் ; கலக்குங்க


  22. பாபு Says:

    உங்ககிட்ட நாங்க நிறைய எதிர்பார்க்குறோம்
    (நல்ல விஷயங்களை சொன்னேன்ப்பா , நீங்க வேற எதையோ நினைச்சுக்க போறீங்க)


  23. நல்லதொரு சமூக அக்கறையுள்ள பதிவு அப்துல்லா அண்ணே.... :))


  24. ///டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???///

    :):):):)


  25. gulf-tamilan Says:

    இந்த லேகியம் சாப்பிட்டா அமுக்குமா? இல்ல ........
    :)))


  26. ராஜராஜ சோழனுக்கு ஆண்மைக்குறைவை சரிசெய்து ராஜேந்திர சோழன் பிறக்க காரணமாய் இருந்த பரம்பரையில் வந்த எங்கள் இதய தெய்வம், ஆஸ்கார் நாயகன், தமிழ் இளைஞர்களின் தன்னிகரற்ற தாத்தாவை கிண்டல் செய்த அப்துல்லாவை வன்மையாக கண்டிக்கிறோம்.


  27. இது தொலில். மீன் விற்பவர் நாறுன மீனையும் நல்ல மீனுன்னுதான் சொல்வார் . புரோக்கர் சப்ப பிகரையும் சூப்பர் பிகரும்பார்

    (ஹலோ நான் சொன்னது கல்யாண புரோக்கர்)


  28. // நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர். அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.//
    அதானே, அப்பழக்கம் இருந்தால் உள்ளங்கையில் முடிமுளைக்கும் என ஒருவன் தன் நண்பர்கள் கூட்டத்தில் கேலிக்காக சொல்ல, பலர் தத்தம் உள்ளங்கைகளை பார்த்து கொண்டார்களாம். :))))

    அனுடன்,
    டோண்டு ராகவன்


  29. பெரிய விசயத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க!!


  30. நம் ஊரில் எஸ்.பி. யுடன் போலி மருத்துவர்களை சோதனைக்குப் போகவுள்ளோம். ஆனால் அவரெ சொல்கிறார் கோர்ட்டில் இவர்களை விட்டுவிடுவார்கள் என்று!! இதுதான் நம்ம ஊர் சட்டம்!


  31. குரு Says:

    Last line is simply superb...


  32. மாப்ஸ் ஒரு புடி (அட நா அவரைபற்றி விமர்சித்தனை சொன்னேன்பா) புடிச்சிட்டே... இதே பொழப்பா அழையுறானுஙக, இதனால் மீடியாக்கள்தான் அதிகம் குளிர்காயுறானுங்க‌

    என் நண்பன் ஒருத்தான் இதே மாதிரி டுபாக்கூர் சொன்னதை கேட்டு "சோத்துக்கத்தாலை" சாப்பிட்டுவிட்டு வயிறு வலியோடு ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆன சம்பவம் தான் ஞாபகம் வருது


  33. தேவன்மாயம் Says:

    போலி வைத்தியர்களைப் பற்றி விழிப்புணர்வா எழுதியிருக்கீங்க!!!


  34. mmmm அன்பின் அப்துல்லா

    இடுகையின் நோக்கம் தரமானது - தவிர்க்கப்பட வேண்டிய மருத்துவர்கள் என்பது உண்மை தான். இருப்பினும் இடுகை சற்றே சற்றே நோக்கத்தின் தரத்தினை தாழ்த்துகிறது. கருத்துக்ளை மென்மையாகச் சொல்லி இருக்கலாமோ .......

    சிந்திக்கலாமே - அதுவும் தமிழ மண நட்சத்திரமாக ஒளிரும்போது ...

    நல்வாழ்த்துகள் அப்துல்லா


  35. தேவன்மாயம் Says:

    மக்களிடம் சென்றடையவேண்டிய செய்தி!!


  36. அண்ணே நட்சத்திர வாழ்த்துகள்.

    இடுகை ரொம்ப சூடா இருக்கு.

    தலையில முடி முளைக்கிறதுக்கு தைலம் விக்கிறவங்களை, முகத்தை சிவப்பா மாத்த கிரீம் விக்கிறவங்களை ஒழிச்சா இவனுங்களை ஈசியா ஒழிச்சிரலாம் முடியுமா.


  37. அண்ணே நட்சத்திர வாழ்த்துக்கள்


  38. அண்ணே நட்சத்திர வாழ்த்துக்கள்


  39. மாம்ஸ். இந்த பெரிசு வடிவேலுக்கே சிரிப்பு மூட்ற ஆளு.. :) இவர் பேசறதை கேட்டா எந்த உம்மணாமூஞ்சியும் வெடி சிரிப்பு சிரிப்பான்.

    இந்த பதிவு படிச்சா , நீங்க அவருக்கு செம போட்டியா வர மாதிரி தெரியுது மாமா.. எதுனா சேனல்ல துண்டு போடலாமா? :))))))


  40. அண்ணே.,
    நானும் எனது நண்பர் ராஜகாந்தனும்(கரூர்) இந்த ப்ரோக்ராம் வந்தாலே ஒருவருக்கொருவர் தகவல் சொல்லிப்போம்.அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.

    காமெடி என்று வருகின்ற டி.வி. நிகழ்சிகளைவிடவும் உண்மையான காமெடி இந்தாளு விடும் கரடிதான்.

    கொஞ்சம்போல மெரட்டிட்டேதான் இருப்பாரு....பாம்பு கீரி சண்டை வித்தைக்காரர்கள் போல..

    இதையெல்லாம் நம்பி கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் மாட்டினாங்களோ பாவம்.

    நம்ம அரசும் இவனுங்களை விட்டு வச்சிருக்காங்க என்பது அதவிடவும் கொடுமை.

    டிஸ்கி...செம பன்ச்.


  41. அப்புறம் ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள்..


  42. //உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா?//
    ஒத்த வரின்னாலும் செம வரி.. (முதல் வார்த்தையை மிகச் சரியாக படிக்கவும்)


  43. //ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.//



    டுபாக்கூர் பற்றியெல்லாம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கீங்க அப்துல்லா


  44. சின்னப்புள்ளையா இருக்கப்ப எங்க பள்ளிக்கூடத்துல யாராச்சும் தப்பு செஞ்சா எங்க டீச்சர் அந்த பசங்க தலையில கொட்ட சொல்லுவாங்க, அப்போ கைய நல்லா மடக்கி, விரல்ல லைட்ட எச்சி வைச்சு, நல்லா ரெண்டு சுத்து வேகமா சுத்திட்டு நங்ங்ங்குன்னு நடுமண்டையில ஒரு கொட்டு வைப்போம்.

    கடைசி வரியப் படிச்சதும் அதான் நினைப்பு வந்துச்சு.


  45. I will appreciate if you write that doctor's name too.


  46. வாழ்த்துக்கள்!

    (இந்த பதிவு இன்னமும் படிக்கலை அண்ணே போன பதிவு படிச்சிருக்கேன்,அந்தப்பதிவுக்கு இங்க பின்னூட்டம் போட்டா தப்பா..)

    :)



  47. உங்கள் கட்டுரையை ஆர்வமுடன் படித்தேன். நீங்கள் சொல்லும் டாக்டர் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் ஆண்மைக் குறைபாட்டிற்கு சுய இன்பம் ஒரு காரணம் அல்ல என்பதை நிச்சயம் சொல்லலாம்.
    இது பற்றி நான் எழுதிய பதிவுகளான

    http://hainallama.blogspot.com/2008/12/blog-post.html
    மற்றும்

    http://hainallama.blogspot.com/2008/06/blog-post_27.htmlநான்

    பார்க்கலாம்.


  48. காவேரி கனேஷ் சார்

    சூப்பர்

    --

    சென்ஷி சார்

    உங்கள் கருத்துடன் நாங்கள் உடன்படவில்லை :)


  49. //ஆஹா பிட்டு எல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்களா? மோசம் போய்ட்டியேடா குசும்பா மோசம் போய்விட்டியே இது தெரியாம மிட் நைட் வரை ஒரு ஒரு சேனலா மாத்தி மாத்தி கட்டை விரல் வலிக்க உட்காந்து இருந்தியேடா குசும்பா!
    //

    சூப்பர் :) :)



  50. நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???

    சிறப்பு. ஆனாலும் ஐயா சீனா சொல்வதையும் கவனத்தில் வைத்து கொல்(ள்)ளுங்கள்.


  51. @ அண்ணன்கள்

    காவேரிகணேஷ்
    கேபிள்சங்கர்
    கோவி.கண்ணன்

    தண்டோரா - அண்ணே நான் வாலிபன்.வாலிப வயோதியன் இல்லை :)

    அ.மு.செய்யது

    குசும்பன் :)))))

    வால்பையன்
    சரவணக்குமார்
    வானம்பாடிகள்

    நர்சிம் - சரியாக கவனித்த உங்கள் ரசனையை இரசித்தேன் :)))

    ரோமியோபாய்
    அருள்மொழியன்
    மதி.இந்தியா
    அனானி

    ஸ்டார்ஜன் - உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பாபு - அண்ணா ஏன்ணா இப்பல்லாம் நீங்க அறவே எழுதுறதில்லை???

    துபாய்ராஜா
    நவாஸ்

    ******

    அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.


  52. @ அண்ணன்கள்

    கல்ஃப் தமிழன்

    சங்கர் - உங்க ராஜராஜசோழன் கமெண்டைப் படித்து அலுவலகம் என்பதையும் மறந்து சிரித்துவிட்டேன் :))

    இராஜவம்சம்

    டோண்டுசார் -

    //அனுடன்,
    டோண்டு ராகவன்//

    என்னாது அனுவோட இருக்கீங்களா?? யார் சார் அது?? நீங்க வயோதிகரில்லை...வாலிபர்னு ஃபுரூப் பண்ணுறீங்க :)))

    டாக்டர்.தேவாண்ணன் - எஸ்.பி என்ன சொன்னாலும் சரி, அதுக்காக பின்வாங்கிடாதீங்கண்ணே.

    குரு - அண்ணே தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.


    அபுஅஃப்ஸ்ர் - மாப்ளை யார்டா அது?? கென்ஸ்சா?? :)))

    **********

    அனைவரின் கருத்திற்கும்,வருகைக்கும் நன்றி.


  53. வாங்க சீனா அய்யா,

    அதாவது தார்மீகக் கோபம்கொள். தாறுமாறா கோபம் கொள்ளாதேன்னு சொல்லுறீங்க :)

    என் தந்தை போன்ற உங்கள் அறிவுரைய நிச்சயம் வரும் காலங்களில் மனதில் வைக்கிறேன்


  54. @ அண்ணன்கள்

    அக்பர் - நம்மளா போகாம இருந்து அவனுங்க வேற வழியில்லாமப் போகாம இருந்தாத்தான் இது ஒழியும்.

    அத்திரி
    சஞ்செய்
    கும்கி - :)
    இளா
    தேனம்மைலெஷ்மணன்
    ஜோசப்பால்ராஜ்

    குப்பன் யாகூ - அண்ணா மெயிலில் சொல்லுறேன்.

    தமிழன் கறுப்பி

    டாக்டர்.எம்.கே.முருகானந்தன் - சார் நான் உங்கள் தொடர் வாசகன். அதை நான் முன்பே படித்துவிட்டேன்.

    டாக்டர்.புருனோ

    பட்டர்பிளை சூர்யா

    ஜோதிஜி - நிச்சயமாய் அண்ணா.

    ******

    உங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.


  55. கடைசி பாரா - கலக்கல் அண்ணே.

    (நட்சத்திரமானாதான் பின்னுவீங்க போலயே..)


  56. @ குசும்பன்

    ஏய்.. அப்பனாகியும் திருந்தலியா நீயி? உன்னை.....


  57. நாகு Says:

    Last paragraph super


  58. அன்பின் அப்துல்லா

    இடுகையைப் படித்த பலரும் தவறெனக் கூறாத போது - நான் மட்டும் கூற வேண்டுமா எனப் பலமுறை சிந்தித்தேன். ஊரோடு ஒத்து வாழலாமா என நினைத்தேன். இருப்பினும் அப்துல்லாவிற்குப் புரியும் என எழுதினேன்.

    புரிதலுணர்வினிற்கு நன்றி அப்துல்லா

    நல்வாழ்த்துகள்


  59. //அபுஅஃப்ஸர் said...

    என் நண்பன் ஒருத்தான் இதே மாதிரி டுபாக்கூர் சொன்னதை கேட்டு "சோத்துக்கத்தாலை" சாப்பிட்டுவிட்டு வயிறு வலியோடு ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆன சம்பவம் தான் ஞாபகம் வருது//

    அபுஅஃப்ஸ்ர் - மாப்ளை யார்டா அது?? கென்ஸ்சா?? :)))//

    ஹா ஹா ஹா. ங்கொய்யால இது எப்ப மாப்ள நடந்துச்சு. (அவன் கல்யாணத்துல பைத் ஓதிட்டு வந்த ஆட்களையே திட்டுனவன் நம்மாளு. அவங்க எதாவது செய்வினை வச்சிருக்க போறாய்ங்க மாப்ள)


  60. //அபுஅஃப்ஸர் said...

    என் நண்பன் ஒருத்தான் இதே மாதிரி டுபாக்கூர் சொன்னதை கேட்டு "சோத்துக்கத்தாலை" சாப்பிட்டுவிட்டு வயிறு வலியோடு ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆன சம்பவம் தான் ஞாபகம் வருது//

    அபுஅஃப்ஸ்ர் - மாப்ளை யார்டா அது?? கென்ஸ்சா?? :)))//

    ஹா ஹா ஹா. ங்கொய்யால இது எப்ப மாப்ள நடந்துச்சு. (அவன் கல்யாணத்துல பைத் ஓதிட்டு வந்த ஆட்களையே திட்டுனவன் நம்மாளு. அவங்க எதாவது செய்வினை வச்சிருக்க போறாய்ங்க மாப்ள)


  61. Jawahar Says:

    ரசனையான ஆர்டிகிள். தெருவில் மருந்து விற்கிறவர்களின் மலிவான டெக்னிக் இது. மைதுனம் செய்யாத ஆட்களே இருக்க முடியாது. அவர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணி இவர்களுடைய டுபாக்கூர் மருந்தை விற்பார்கள். அதைச் சாப்பிட்ட பிறகு தமுக்கடித்தால் கூட.... வேணாம் சென்ஷி திட்டுவார். நண்பர் கோவி.கண்ணனின் காமென்ட்டும் அருமை!!

    ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

    http://kgjawarlal.wordpress.com


  62. கடைசி வரி கலக்கல்... இதுவரைக்கும் பாத்ததில்லை, இனிமே இந்த ப்ரோக்ராம் பாக்கணும், எத்தனை நாளைக்குத்தான் ஆதித்யா, சிரிப்பொலி மட்டுமே பாத்துகிட்டு இருக்குறது? :)))


  63. அந்த ஆள் திட்டுவதை பார்த்தா எரிச்சல் எரிச்சலா ஆரம்பத்திலே வந்தாலும் பின்னே நல்ல காமடியா ஆ கிடுச்சு.

    எத்தனை கஷ்டம் வந்தாலும் அவரோட நிகழ்சி பார்த்தா எல்லாம் மறந்து போய் சிரிப்பு வருமே அந்த நல்ல மனுஷனை போட்டு அப்து இப்படி கொத்து பரோட்டா போட்டிருக்க கூடாது:-))

    இந்தியன் மெடிகல் கவுன்சில் தூங்குவதை தான் காட்டுது இந்த பதிவு.

    இந்த ஆளை பிடிச்சு காயடிச்சு அதே மருந்தை கொடுக்கனும்!


  64. Jawahar Says:

    //இந்த ஆளை பிடிச்சு காயடிச்சு அதே மருந்தை கொடுக்கனும்!//

    ரெண்டுல ஒண்ணு பண்ணாப் போதும்.

    http://kgjawarlal.wordpress.com


  65. அண்ணே! இது தான் நம்ம பக்கம் ....

    http://thisaikaati.blogspot.com/2009/10/ulkuththu-kavithaigal-2.html

    லேகியம் விற்பன்னர்

    வாலிப, வயோதிக அன்பர்களே!
    உங்களுக்கு ஆண்மை குறைவா?
    ஆம்பிளையா என்ற சந்தேகமா? - நான்
    லேகியம் விற்கிறேன்...
    என் மனைவி - எனை
    நாலு காசு சம்பாதிக்க
    துப்பில்லாத - நீயெல்லாம்
    ஆம்பிளையா எனக் கேட்டதால்....


  66. Vincent Vega Says:

    //நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???

    நெத்தியடி!!
    இந்த போலி டாக்டர்களின் மேல் கேஸ் போட வேண்டும்.
    இதை ஒளிபரப்பும் சேனலை TRAI தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
    இதுவும் மக்களை ஏமாற்றுவது தான்.


  67. Anonymous Says:

    இது தப்புதான். அப்படியானால் முகத்தை சிகப்பாக்கும் பேஸ்ட் மட்டும் என்ன வாழுதாம்? Fair and Lovely கிரீம் விற்கும் கம்பனிகளை யாருமே கேட்பார் இல்லையா? எல்லா சானல்களையும் இந்த கிரீம் விளம்பரங்கள் இல்லை என்றால் இழுத்து மூட வேண்டியதுதான்.


  68. நல்ல பதிவு....கை கொடுங்க....(கையை நல்லா கழுவிட்டீங்க தானே?)

    எல்லாம் சரி, இருந்தாலும் ஒருமையில விமரிசிச்சு இருக்க வேண்டாமோ?


  69. //டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???//

    சான்ஸே இல்லை!
    இதான்..நம்ப ஊரு புள்ளங்கிறது!

    தூள்...இதே ஆள் இன்னொன்னு சொல்லுவார் அதை விட்டுட்டீங்க!
    இந்த வைத்தியத்தை யார்க்கிட்ட வேண்டுமானாலும் பாத்துக்கலாம். ஆனா என்னை விட்டா ஆள் இல்லை! ன்னு! ஒரு பெரிய டகால்ட்டியே நடக்கும்.. ! :))


  70. chezhian Says:

    boss nannumoru murai intha proooogramuuu parthu iruken



    doctorrrrrrrrrrr




    super pesu varu


  71. //டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா//

    இது ..இது ..செம பன்ச் அண்ணே ..ஹ ஹா


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']