எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (பாகம் 5)


ஒரு மனிதன் அரசுப் பொறுப்பில் இருக்கும் காலத்தில் மக்களுக்கு எப்படியும் உதவலாம். தன் கையில் காசு இல்லாவிட்டலும்கூட. எப்படி? உதாரணமாக நீங்கள் அமைச்சராக இருக்கும்போது மருத்துவ உதவிக்கோ அல்லது கல்வி உதவிக்கோ யாரேனும் உங்களை அணுகுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல பல தொழில் நிறுவனங்கள் அவர்களது தொழிலுக்காக உங்களது உதவியை எதிர்நோக்கி இருப்பர் அல்லது உங்களால் பலன் அடைந்து கொண்டிருப்பர். நீங்கள் அந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிடம் இவர்களை கைகாட்டி விட்டால் போதுமானது.




திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மக்களுக்கு உதவிகள் செய்வது இந்த வகையில் ஒரு பிரச்சனையாகவே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் அமைச்சர் பதவி சென்ற பிறகு அதில் முதல் பிரச்சனை துவங்கியது. ஒரு ஸ்திரமான தொழிலைத் தனக்கென ஏற்படுத்திக் கொள்ளத் தவறியதால் பண வரவு மிகவும் குறைந்து போனது. தன்னிடம் இருந்த கையிருப்பும் ஆரம்ப நாட்களில் அ.தி.மு.க (ஜெ) அணியை நடத்தவும் பின்னர் தனிக்கட்சி நடத்தவும் செலவளித்து விட்டதால் பொருளாதாரத்தில் பிந்தங்கினார். அதே நேரத்தில் குடுத்துக் குடுத்து பழக்கப் பட்ட அவரது கையைக் கட்டுப்படுத்தவும் அவரால் முடியவில்லை. இதனால் புதுக்கோட்டை பக்கம் வந்தால் உதவிநாடி வருவார்களே என்று புதுகை பக்கம் வருவதையே வெகுவாகக் குறைக்கத் துவங்கினார். இந்த இடைவெளி அவரது அரசியல் எதிரிகளால் மிகச் சரியாக பயன்படுத்தப்பட்டது. இதுதான் அவரது முதல் சறுக்கல்.


இரண்டாவது, அவருக்கு எந்த சாதிசாயமோ,மதச் சாயமோ எந்த நிலையிலும் அவர்மேல் விழுந்ததுஇல்லை. அனைவருமே அவர் நம்மாளு என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். இந்நிலையில் அவர் பி.ஜே.பி யில் சேர எடுத்த முடிவு கிட்டத்தட்ட தற்கொலை முடிவு. அதே நேரத்தில் அன்றைக்கு அவர்மட்டும் பி.ஜே.பியில் சேராமல் இருந்து இருந்தால் பல விஷயங்களில் அவர் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும். சுருங்கச் சொல்வதானால் புலிவாலைப் பிடித்த நாயர் கதை போன்றது அவரது அன்றைய நிலை. அவர் பி.ஜே.யில் சேர்ந்து உடனே மத்திய அமைச்சரும் ஆனார். ஆனால் அறந்தாங்கித் தொகுதியில் இரண்டாம் மெஜாரிட்டி ஓட்டுகளான மைனாரிட்டிகளின் ஒட்டை முற்றிலுமாக இழந்துவிட்டார். தமிழகமும் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு திமுகவுக்கு வாக்களிக்கும் மைனாரிட்டிகள் அறந்தாங்கி தொகுதியில் மட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு தங்கள் வாக்குகளை மொத்தமாக வழங்கி வந்தனர். அவர்களை இழந்ததன் விளைவு கடந்த தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளருக்கு டெப்பாசிட்டே இல்லை.


சுயேட்சையாக எம்.பியாகி பின்னர் அவர் பிஜேபியில் சேர்ந்ததும் தனிப்பட்ட காரணங்களால்தானே தவிர அந்தக் கொள்கைகளின் மேல் எந்தக்காலத்திலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. பிஜேபியில் அமைச்சராக இருந்த காலத்திலேயே அவர் அதை வெளிப்படையாக மேடைகளிலும்,பத்திரிக்கைகளிலும் கூறுவார். தான் அந்த இயக்கத்தில் இருந்தாலும் தன்னுடைய வாக்காளர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை ஆதாரிப்பார்கள் என மிகவும் எதிர்பார்த்தார். டெப்பாசிட்டும் போகிறது என்பதை உணர்ந்து இப்போது அதையே காரணம் காட்டி காங்கிரஸில் இணைந்துள்ளார்.


அவர் அடிக்கடி அணிமாறுவதாக தற்போது சிலர் விமர்சிக்கின்றனர். நான் ஒன்றும் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை...கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒன்று அவர் அதிமுகவில் இருந்து இருக்கின்றார். அல்லது தனிக் கட்சி நடத்தி இருக்கின்றார். அவர் அணி மாறியது என்பது பிஜேபி போனதுதான். என்னுடைய கருத்து என்னவென்றால் அவர் இறுதிவரை பிஜேபியிலேயே இருந்து இருக்கலாம். காரணம் என்ன கணக்கிற்காக அவர் காங்கிரஸ் சென்றிருக்கின்றாரோ அந்தக் கணக்கு நடக்காது என்பது என் கணிப்பு.



எப்படி???

24 Responses
  1. //என்ன கணக்கிற்காக அவர் காங்கிரஸ் சென்றிருக்கின்றாரோ அந்தக் கணக்கு நடக்காது என்பது என் கணிப்பு.//

    அதுவும் சரிதான் பிஜேபில இருந்தாவாது ராஜ்யசபா உறுப்பினராகி தொகுதி மேம்பாட்டு நிதியில் காலம் தள்ளியிருக்கலாம். காங்கிரஸில் இனைந்து அதுக்கும் ஆப்பு வச்சிக்கிட்டாரு. அங்கு இருக்கும் கோஷ்டி சண்டையில் அவருக்கு ஒரு கவுன்சிலர் பத்வி கிடைத்தாலே ஆச்சரியம்.

    Me the firsty?


  2. ஷாகுல் அண்ணே

    யூ ஆர் ரைட் :)


  3. அண்ணனுக்கு திருநாவுக்கரசர் பழக்கமா?

    வைகோவும் கிட்ட தட்ட இவர் மாதிரிதான்னு நினைக்கிறேன்.

    அப்புறம் நிறைய இடுகைகள் இடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். வேலைப்பளு அதிகமோ.


  4. அவர் எடுத்த தவறான முடிவுகளில் இது தலையானது என நினைக்கிறேன்.


  5. //வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.//

    அப்புறம் எதுக்கு கமெண்ட் மாடரேஷன்?


  6. அவர் காங்கிரஸில் சேர்ந்ததால் பதவி கிடைக்காமல் போகலாம். ஆனால் பி.ஜே.பி.யில் இருந்ததால் பொதுமக்களிடம் இழந்த நல்லெண்ணத்தையும், மதிப்பையுமாவது மீளப் பெறலாம் என்று நினைத்திருப்பார் போல.


  7. நாரோடு சேர்ந்த பூவும் நாறிப்போச்சு.


  8. யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.. புதுக்கோட்டைக்காரர்களுக்கு நிறையவே கொடுத்தார் என்பது உண்மைதான். ஆனால் "எங்கிருந்து வாங்கி கொடுத்தார்" என்பதுதான் கேள்வி..?

    அப்துல்லாஜி.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..!


  9. KVR Says:

    சுவாரசியமான தொடர். கையைச் சுட்டுக்கொண்டதற்கு ஜெ கட்சியின் வளர்ச்சிக்கும் தன் கட்சி வளர்ச்சிக்கும் செலவழித்தது மட்டும் காரணமா? அல்லது சொந்தமாக படம் எடுத்து ஊத்திக்கொண்டதும் காரணமா?


  10. இடுகை நல்ல முறையில் செல்கிறது - நல்வாழ்த்துகள் அப்துல்லா


  11. பி ஜே பி அல்லாத வேறு ஒரு கட்சியில் சேர்ந்திருந்தால் ஒரு வேளை அவர் பிழைத்திருக்கலாம்... இது மிகவும் லேட் முடிவு


  12. சுவையான தகவல்கள் அண்ணா !!


  13. //Your comment has been saved and will be visible after blog owner approval.//

    இது என்ன கொடுமை கூத்தா இருக்கு?


  14. அப்துல்லா மனசாட்சி:
    ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ஒருவாரம் தொடர்ந்து எழுதுவது ரொம்ப கஷ்டம் போல, முடிஞ்சுதுடா சாமி இன்னையோட!


  15. நல்லதொரு இடுகை.தொடருங்கள்..


  16. SUFFIX Says:

    தங்கள் கணிப்பு சரியே, அங்கேயே ஆயிரத்தெட்டு குழுச்சண்டை, அந்தக் கூட்டத்தில் இவரை கண்டு பிடிப்பது சிரமமே, ஹ்ம் பார்ப்போம்!!


  17. அவர் பிஜேபியில சேர்ந்த சமயத்துலயே திமுகல இணைஞ்சுருந்தாருன்னா, கட்டாயம் ரகுபதியவிட நல்லா வளர்ந்துருப்பாரு என்பது என் கணிப்பு.

    குடுத்து குடுத்து பழகிய கை, குடுக்க வழியில்லாமத்தான் புதுகை பக்கம் ரொம்ப நாள் வராம இருந்தாருன்னு சொன்னத படிச்சதும் மனசு கஷ்டமாயிருச்சுன்னே.

    கொடுக்கிறதுல இப்ப திருநாவுக்கரசர் இடத்த பிடிச்சுருக்கது நம்ம அகிலாண்ட நாயகன் தான்.


  18. தொடர்முழுதும் படித்துவிட்டேன். நன்றாக செல்கிறது. இருப்பினும் 5க்குள் முடித்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். அத்ற்குள் ஒரு வாரமும் முடியப்போகிறதா?

    ஒரு அப்பா கதை
    ஒரு கவிதை
    இந்தத்தொடர் (மொத்தத்துல ஒரு இடுகைக்கான அளவை பிய்த்து பிய்த்து..)

    அவ்வளவுதானா? கொறச்சல்தான், இருந்தாலும் மூச்சு வாங்குதா? ஹிஹி ரெஸ்ட் எடுத்துக்குங்க ரெண்டு நாளு.. வாழ்த்துகள் அண்ணே..


  19. மனதுக்கு நெருக்கமான தொடர். அவருக்குக் காலம் வெல்லவில்லை.

    ஒரு முறை சந்தித்தவரை, அடுத்த முறை பார்க்கும் போது எவ்வளவு கூட்டத்திலும் உரிமையாக பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிக்கும் வழக்கம் உண்டு திருநாவுக்கரசருக்கு.


  20. //யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.. புதுக்கோட்டைக்காரர்களுக்கு நிறையவே கொடுத்தார் என்பது உண்மைதான். ஆனால் "எங்கிருந்து வாங்கி கொடுத்தார்" என்பதுதான் கேள்வி..?

    அப்துல்லாஜி.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..!
    //

    வாங்கியதெல்லாம் சுருட்டும் மட்டைகள் மத்தியில் தொகுதிக்கு வழங்கும் இவர் உள்ள மட்டையில் நல்ல மட்டை :D


  21. correct Abdulla...

    I accept your view :)


  22. அரசரைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருகிறேன். எம். ஜி. ஆரால் கவரப்பட்டு அவரால் முன்னுக்கு கொண்டு வரப்பட்டவர். எம். ஜி. ஆரைப் போலவே உதவும் மனப்பான்மை இருப்பதில் வியப்பேதும் இல்லை.

    என்னைப் பொறுத்தவரையில் அவர் தி. மு. காவில் சேர்ந்திருக்கலாம். ஓரளவு மரியாதையும் கிடைத்திருக்கும்.


  23. durai Says:

    you are 100% correct


  24. அவரை பற்றி நிறைய விஷயங்கள் அறியத்தந்தற்கு நன்றி, ஆனா இதோட முடிஞ்சுருச்சா :((


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']