எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (பாகம் 4)




ஒரு தேர்தலில் வெற்றிபெற மக்களுக்குச் சேவை செய்திருந்தால் மட்டும் போதும் என்ற நிலை 1970 களின் மத்திவரை இருந்தது. அன்றெல்லாம் மக்கள் தங்கள் பிரதிநிதிகள் ஊருக்கு ரோடோ,லைட்டோ போட்டால் போதும் என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. அவர்கள் தங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வர வேண்டும்,மொய் வைக்க வேண்டும், அதுபோல நாம் தலையைச் சொறிந்துகொண்டு அவரிடம் போய் நின்றால் அவர் நமக்கு அஞ்சு,பத்து குடுத்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அன்றைய நாட்களில் மக்கள் யாருக்குமே இருக்கவில்லை. ஆனால் இந்த மனநிலையில் சிறிய மாற்றம் வரத் துவங்கியது 70 வதுகளின் இறுதியில்தான்.





1977 ல் வெற்றிகண்ட எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசை பெரிதான குறிப்பாக பண ரீதியிலான குற்றச்சாட்டு எதுவும் எழாதவாறுதான் ஆட்சி புரிந்தார். ஆட்சி அமைத்த ஒரு வருடத்திலேயே அவரது அரசை இந்திராகாந்தி கலைத்துவிட்டார். அடுத்த வந்த தேர்தல்தான் தேர்தல் அரசியலுக்கு பணமும் ஒரு சக்தி என்பதை உணர்த்தத் துவங்கியது. அந்தத் தேர்தலில்தான் மக்கள் வாக்குகோரி வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் பணம் தருவதை எதிர்நோக்கத் துவங்கி இருந்தனர். பிரச்சாரத்திற்குச் சென்ற எம்.ஜி.ஆர். இந்த ஆரத்தித் தட்டு பிரச்சனையால் பல இடங்களுக்குச் செல்லவே யோசித்தார். காரணம் அவரிடம் அப்போது அந்த அளவி்ற்குப் பணம் இல்லை. பெரும் வணிகர்களும் அவர் வெற்றிபெற மாட்டார் என உறுதியாக நம்பியதால் தேர்தல் நிதியும் அளிக்கவில்லை. இருப்பினும் எம்.ஜி.ஆர். வென்றார்.



வெற்றி பெற்றபின் இனி பணம் இன்றி அரசியல் இல்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். தன்னுடைய பணத் தேவைகளுக்கான சுரங்கமாய் சாராய லாபியை உருவாக்கினார். எம்.ஜி.ஆர் மட்டுமல்ல அவரது அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும்கூட வருங்கால அரசியல் பணம் சார்ந்தது என்பதை உணர்ந்து தங்களுக்கென்று தொழில் அமைப்புகளை உருவாக்கத் துவங்கினர். பஸ் நிறுவனம் துவங்கிய முத்துசாமி, ஜின்னிங் பேக்டரி துவங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர், கல்வி நிறுவனங்கள் துவங்கிய ஜேப்பியார்,ஜெகத்ரட்சகன்,ஏ.சி.சண்முகம், வேலூர்.விஸ்வனாதன்,தம்பிதுரை, திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்ட ஆர்.எம்.வி என அன்றைய அதிமுக பெரும் தலைகள் அனைத்துமே அரசியலோடு பணம் பண்ணும் வழியையும் சேர்த்தே பார்க்கத் துவங்கினர். அதிமுகவில் அனைவரும் உணர்ந்த இதை ஒரே ஒருவர் மட்டும் உணராமல் போனார். அவர்?...வேறு யார் நமது திருநாவுக்கரசர்தான்.
38 Responses
  1. fundoo Says:

    தொடருங்கள் அப்துல்லா! இந்த இழை நன்கு பயணிக்கிறது


  2. வெறும் இரண்டு மூன்று பத்திகள் மட்டுமே எழுதி, படிக்க ஆரம்பிக்கும் முன்பாகவே முடித்துவிடும் அப்துல்லா அண்ணனின் போக்கை கண்டிக்கிறோம்.


  3. நல்லா






    இருக்கு




    உங்களோட




    இந்த




    பதிவு!







    (நாங்களும் பதிவு மாதிரியே பெருசா பின்னூட்டம் போடுவோமுல்ல)


  4. தம்பீ..

    எம்ஜிஆரின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது 1980-ல்..!

    மற்றபடி அவரது அடிப்பொடிகள் காசு பார்க்கத் துவங்கியது அவரது அடுத்தக் கட்ட ஆட்சியின்போதுதான்..!


  5. This comment has been removed by the author.

  6. திருநாவுக்கரசர் நல்லவர் தான். ஆனா அவருக்கு சரியான வழிகாட்டி இன்று வரை இல்லை. இனியாவது ஒன்றே கட்சி ஒருவனே தலைவன் அப்டின்னு இருந்தார்னா மறுபடியும் கோட்டைக்குப் போக வாய்ப்பு இருக்குண்ணே! உங்களோட இந்த அற‌த்தின் பார்வையில் அரசியல் அலசல் மிக அருமை.


  7. @ அண்ணன்கள்

    ஃபண்டூ - நன்றிண்ணா

    ********


    தராசு - வேணும்னு சின்னதா எழுதலை.நேரப் பிரச்சனைண்ணா.

    **************

    குசும்பன் - :))))

    ****************

    உண்மைத்தமிழன் - ஆமாண்ணே. ஒரிரு வருடங்களில்னு எழுதுறதுக்குப் பதிலா ஒரு வருடம்னு கவனக்குறைவில் பிழையாக்கிட்டேன்.

    1980 பிப்ரவரி மாசம் 5 தேதி எம்.ஜி.ஆர் டில்லிக்கு இந்திராவைச் சந்திக்கப் போனார்.அப்படியும் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது

    //மற்றபடி அவரது அடிப்பொடிகள் காசு பார்க்கத் துவங்கியது அவரது அடுத்தக் கட்ட ஆட்சியின்போதுதான்..! //

    அதையேதான நானும் சொல்லிருக்கேன்!!!

    ********************

    இப்படிக்கு நிஜாம்

    அண்ணே இனிமேல் அவர் தேர்தலில் வென்று கோட்டையில் நுழைய வாய்ப்பில்லை. ராஜ்யசபா எம்.பி போல ஏதேனும் நியமனப் பதவிகளில் ஒட்டிக்கொண்டால்தான்.


  8. / தராசு said...

    வெறும் இரண்டு மூன்று பத்திகள் மட்டுமே எழுதி, படிக்க ஆரம்பிக்கும் முன்பாகவே முடித்துவிடும் அப்துல்லா அண்ணனின் போக்கை கண்டிக்கிறோம்./

    வழி மொழிகிறோம்.


  9. KaveriGanesh Says:

    அதிமுகவில் அனைவரும் உணர்ந்த இதை ஒரே ஒருவர் மட்டும் உணராமல் போனார். அவர்?...வேறு யார் நமது திருநாவுக்கரசர்தான்.


    பணம் சம்பாதிக்க போகாமல் வேறு எங்கோ போனார்ன்னு கேள்விப்பட்டிருக்கிர்றேன், உண்மையா?


  10. டும்டும்டும்டும்

    இந்த தமிழ் மணம் பகுதியில் புதுகை அப்துல்லா எனும் விண்மீன் இந்த வாரம் முழுக்க காணப்படும்.


    மிகுந்த பளபளப்பான இந்த விண்மீன் வழக்கமான விண்மீன்களைப் போலில்லாமல் மிகக் குறைந்த அளவிலேயே காட்சியளிக்கும்.


    அதனால் அப்துல்லா விண்மீனின் வாலை முழுதாய் பார்க்கலாம் என்ற ஆவலில் வந்து காணாமல் ஏமாற வேண்டாம் என வலையுல மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

    டும்டும்டும்டும்


  11. இபடியாக ஒரு ஒரு பாராவாக போட்டு நட்சத்திர வாரத்தில் 100 இடுகை இட்ட மஹான்னு பெயர் வாங்க திட்டமா அப்து சாரே!!!


  12. நடத்து...மாப்ஸ்

    ஒரு நாளைக்கு ரெண்டு இடுக்கையா?

    ஒரு நாளைக்கு இந்த இடுக்கையும் பயன்படும்!!!!


  13. Karthik Says:

    //fundoo said...
    தொடருங்கள் அப்துல்லா! இந்த இழை நன்கு பயணிக்கிறது

    ரிப்பீட்டே!!


  14. Anonymous Says:

    / பஸ் நிறுவனம் துவங்கிய முத்துசாமி /
    இது அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்ததால் வந்த உங்களின் அனுமானம் என்றே நினைக்கிறேன். மற்றபடி அவரது சகோதரர் மற்றும் பங்காளிகள் எனது பழக்கமானவர்கள் என்பதால் எனக்கு தெரிந்தவரை, கோவை பகுதிகளில் துணி மில்கள், நூற்பாலைகள், கல்யாண மண்டபங்கள், மருத்துவமனைகள் இப்படித்தான் அவர் முதலீடு செய்திருக்கிறார். நிறைய தனியார் பஸ் முதலாளிகளுக்கு ரூட் வேண்டுமானால் வாங்கிக் கொடுத்திருக்கிறாரே தவிர அவரே பஸ் கம்பெனி ஆரம்பிக்கவில்லை. அவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது ஈரோட்டில் ஆரமிபிக்கப்பட்ட பெரிய மருத்துவமனைகளில் அவர் பினாமிகள் பார்ட்னர்கள் அவ்வளவே.


  15. அவங்க தற்போதைய சொத்து விபரம் கிடைச்சா அதையும் போடுங்கண்ணே..??


  16. ம்ம்ம் திருநாவுக்கரசரைப் பற்றிய இடுகை ந்னகு நடைபோடுகிறது.

    நல்வாழ்த்துகள் அப்துல்லா


  17. தொடர் அருமையா போயிட்டிருக்குண்ணே...

    நட்சத்திர வாழ்த்துகள்...


  18. // ஜின்னிங் பேக்டரி துவங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர் //

    ஏற்கனவே பஞ்சு வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், அதன் துணைத் தொழிலான ஜின்னிங் பேக்டரி.

    அதற்கு முன் மற்ற சொத்துக்களில் பிரமாதமான முதலீடு.

    இப்ப ஆளுங்கட்சி மந்திரியா வேற இருக்காரு, பாத்துண்ணே :)


  19. @ அண்ணன்கள்

    வானம்பாடி

    காவேரிகணேஷ் - அண்ணே, அவர் பர்சனலைத் தொடுவதில்லை என்ற முடிவில் உறுதியா இருக்கேன் :))


    அப்பாவிமுரு - இருடி சிங்கைக்கு வந்துக்கிட்டே இருக்கேன் :)

    அபுஅஃப்ஸர்

    அபி அப்பா - ஹி..ஹி..ஹி..


    கார்த்திக்

    அனானி - அன்ணே எனக்குத் தெரிந்த பஸ் ஓனர் ஒருவர் அவர் வைத்திருக்கும் ஒரு பஸ்சை அமைச்சரின் நிறுவனத்தில் இருந்து வாங்கியதாகச் சொன்னார். அதை வைத்து எழுதினேன்.


    பட்டர்பிளை சூர்யா - ஏன்ணே இந்தக் கொலவெறி எம்மேல?? ரெண்டு பொட்டப்புள்ளைக வேற எனக்கு இருக்குண்ணே. ஆட்டோ சமாளிக்கிற அளவுக்கு நான் ஒர்த் இல்லை. :))


    சீனா அய்யா
    சின்னப்பையன்

    வெயிலான் - நீங்க அவர் ஊர்காரர். நீங்க சொன்னா சரியா இருக்கும். அப்புறம் பட்டர்பிளைசூர்யாவுக்குச் சொன்ன பதிலையும் படிச்சிடுங்க :)

    அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.


  20. நல்லாருக்கு தொடர். கொஞ்சம் அதிகமாத்தான் எழுதுறது, பொசுக்குன்னு அரசாங்கம் கட்டிக்குடுக்குற தொகுப்பு வீடு மாதிரி இம்புட்டு சின்னதாவ எழுதுவீங்க?


  21. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நீங்க அலசி காயப்போட்டுட்டே இருங்க..!!!

    //ஜேப்பியார்,ஜெகத்ரட்சகன்,ஏ.சி.சண்முகம், வேலூர்.விஸ்வனாதன்,தம்பிதுரை,//

    ஆல்மோஸ்ட் இதுல எல்லா தலைங்களுக்கும் இப்ப என்ஜினிரியங் காலேஜ் இருக்கு போல.


  22. Romeoboy Says:

    அண்ணே அடுத்து வேறயா யாராவது இருக்காங்களா உங்கள் லிஸ்ட்ல


  23. Nataraj Says:

    புதுக்கோட்டையை சொந்த ஊராக (அதுவும் ஆவுடையார் கோயில் தான் ஒரிஜினல் சொந்த ஊர்) கொண்ட நான் இந்த தொடரை மிகவும் நெருக்கமாக உணருகிறேன். சிறு வயதில் திருநாவுக்கரசரின் செல்வாக்கை கண்ணார கண்டவன் நான்.
    என் பெரியப்பா அப்போது சாதாரண அரசு அலுவலர் (BDO ) . அப்போதே, ஒரு அமைச்சரான திருநாவுக்கரசர் என் பெரியப்பாவோடு நட்பாக இருந்தார் ஜஸ்ட் ஒரு அரசு மீட்டிங்கில் பார்த்ததில் இருந்து (இன்றளவும் அந்த நட்பு தொடர்கிறது).
    பிற்காலத்தில் (ஜெயலலிதா ஆட்சியில்) அவர் இடத்தை (அதாவது நல்லது கேட்டதுக்கு மக்கள் நம்பி செல்வதற்கு) ரகுபதி கிட்டத்தட்ட எடுத்துக்கொண்டார். ரகுபதியின் கீழ ரெண்டாம் வீதி வீட்டிற்கு நாலு வீடு தள்ளி என் தாத்தா வீடு இருந்தது. தொன்னூறுகளில் டே பை டே ரகுபதி வளர்ந்து கொண்டே போனது கண்கூடாக நினைவுக்கு தெரிகிறது.
    (ஆமா, ரகுபதி வீட்டுக்கு பக்கத்துக்கு வக்கீல் வீட்டு வாசலில் ஒரு அய்யிரு செம்மையாக வடையும், வெங்காய பக்கோடாவும் போடுவார். அத டெய்லி திங்க போறச்சே ரகுபதி வீட்ட நோட்டம் விட்டுகிட்டே இருப்போம். எப்போவும் நல்ல கும்பல் இருக்கும்)


  24. @ அண்ணன்கள்

    ஜோசப்பால்ராஜ்
    அ.மு.செய்யது
    ரோமியோபாய்

    நன்றி அண்ணன்களே.

    :)


  25. @ அண்ணன் நடராஜ்

    அடடே!நம்மூர்காரரா நீங்க!உங்கள் வருகையை மிகவும் மகிழ்ச்சியாக
    உணர்கின்றேன்.

    அண்ணே எவருக்கும் அவரைப் பிடிக்கும். நான் அவருக்கு நேர் எதிரான மாற்று முகாம்காரன். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும்.இந்த தொடர் முடிந்தவுடன் ஒருநாள் அவரிடம் சென்று இந்தத் தொடரையும் இதில் உள்ள பின்னூட்டங்களையும் காட்டுவதாக இருக்கின்றேன்.

    அப்புறம் அந்த அய்யர் வக்கீல் கோபாலகிருஷ்ணன் வீட்டு வாசலில் இன்றும் மாலை பஜ்ஜி போட்டு விற்றுக்கொண்டுதான் இருக்கின்றார். நம்முடைய பிரபல பதிவர் புதுகைதென்றல் அந்த பலகாரங்களுக்கு வாழ்நாள் அடிமை. அதைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்பார் :))


  26. Nataraj Says:

    என்ன அண்ணன்டீங்க? நான் உங்கள விட வயசு கம்மின்னு நெனைக்கறேன். புதுகை தென்றல் பதிவு பேரு சொல்லுங்களேன்.
    இந்த தடவை இந்தியா வரச்ச புதுக்கோட்டை வழியா ஆவுடையார் கோயிலுக்கு போனோம். காலைல எனக்கு புடிச்ச ராதா cafela ரவா தோசை, மகாராஜ் பேக்கரி ஹனி கேக் (பிருந்தாவனம் பிரான்ச் முன்னெல்லாம் பெருசா இருக்கும்) எல்லாம் சாப்பிட்டு தான் போனேன். மாலைல வராததுனால அய்யர் பலகாரம் சாப்பிடல. அப்போ நம்ம ப்ரகதாம்பா ஸ்கூல் பசங்க ஏதோ ஊர்வலமா (as usual படிக்காம) போனதா பார்த்தேன். ஒரே மலரும் நினைவுகள் தான் போங்க..


  27. Mohan Kumar Says:

    இந்த வாரம் ஆனந்த விகடனில் நரசிம் கவிதை.

    என்னப்பா twins கவிதைகள் மாறி மாறி வந்துட்டு இருக்கு. வெயிட்டான சூட் கேஸ் சேர்ந்து குடுதிருக்கீன்களா:)))

    அடுத்த வாரம் புதுகையாருடைய கவிதை விகடனில் எதிர்பார்க்கலாமா?


  28. //என்ன அண்ணன்டீங்க? நான் உங்கள விட வயசு கம்மின்னு நெனைக்கறேன் //


    எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு அண்ணந்தான் :)))



    //புதுகை தென்றல் பதிவு பேரு சொல்லுங்களேன் //

    http://pudugaithendral.blogspot.com
    இதுதான் அவங்க வலைப்பூ முகவரி. நம்ம கீழ நாலில் சுப்புராமய்யர் ஸ்கூல் இருக்குல்ல... அது இவங்க குடும்பத்தைச் சேர்ந்தது.


    //காலைல எனக்கு புடிச்ச ராதா cafela ரவா தோசை //

    ராதா கஃபே இன்னும் அதே ருசியில் இருக்கு. கிருஷ்ணபவன் முன்னமாதிரி இல்லை.


    //அப்போ நம்ம ப்ரகதாம்பா ஸ்கூல் பசங்க ஏதோ ஊர்வலமா (as usual படிக்காம) போனதா பார்த்தேன். //

    ச்சேச்சே...அந்த ஸ்கூல் பசங்களை அப்பிடியெல்லாம் திட்டக்கூடாது. பாவம்.

    நானும் அங்கதான் படிச்சேன் ஹி..ஹி..ஹி..


  29. //என்னப்பா twins கவிதைகள் மாறி மாறி வந்துட்டு இருக்கு. வெயிட்டான சூட் கேஸ் சேர்ந்து குடுதிருக்கீன்களா:))) //

    இந்தக் கமெண்டைப் படிச்சு அலுவலகம் என்பதையும் மறந்து சத்தம்போட்டு சிரித்துவிட்டேன். ஊரையே நக்கல் பண்ணுற என்னையே வாரிட்டீங்களேண்ணா :)))


  30. @ நடராஜ் அண்ணன்

    உங்க மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா??


  31. Nataraj Says:

    தாராளமா.. nattan@gmail.com
    நான் 10th ப்ரகதாம்பா. 11 / 12th மாடல்...93 - 95 செட்.
    சின்ன வயசுல child jesus லயும் படிச்சேன்..


  32. பிரபல பதிவர் புதுகைதென்றல் அந்த பலகாரங்களுக்கு வாழ்நாள் அடிமை. அதைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்பார் :))//

    ஏன் இந்த மர்டர் வெறி தம்பி.

    நான் மட்டுமில்ல அயித்தான் பிள்ளைங்க எல்லோரும் தான். இந்த மாசம் அங்க போறோம். எஞ்சாய் பண்ணறோம்னு ஆஷிஷ் முடிவு எடுத்தாச்சு. :)))


  33. Mohan Kumar Says:

    //ஊரையே நக்கல் பண்ணுற என்னையே வாரிட்டீங்களேண்ணா :)))//

    அப்துல்லா : கமேண்டுக்குன்னு ஒரு போட்டி வச்சா கண்டிப்பா முதல் மூணு prize-ம் நீங்க தான் வாங்குவீங்க.

    தமிழ் மணத்தில உங்க influence-ஐ use பண்ணி "பின்னூட்டம்" இடுபர்வகளில் சிறந்தவர்கள்ன்னு ஒரு போட்டி வைக்க சொல்லுங்க.

    ஆமாம்.. நம்ம blog பக்கமெல்லாம் வரவே மாட்டேங்குறீங்க; இந்த வாரம் விக்னேஸ்வரி பத்தி எழுதியிருக்கேன். வந்து கலக்கலா ஒரு comment போடுங்க.


  34. //ஆமாம்.. நம்ம blog பக்கமெல்லாம் வரவே மாட்டேங்குறீங்க; இந்த வாரம் விக்னேஸ்வரி பத்தி எழுதியிருக்கேன். வந்து கலக்கலா ஒரு comment போடுங்க //

    ஹல்லோ...நாங்க வந்துக்கிட்டுதான் இருக்க்கோம். பின்னூட்டம்தான் போடுறதில்லை.இனி அந்தக் குறையும் இருக்காது. ஒ.கே! :)


  35. //அப்துல்லா : கமேண்டுக்குன்னு ஒரு போட்டி வச்சா கண்டிப்பா முதல் மூணு prize-ம் நீங்க தான் வாங்குவீங்க //

    இல்லண்ணா. அதுக்கு என் நண்பன் குசும்பனுக்குத்தான் முதல் இடம் :)

    என் பிளாக்கோட முகப்புல கோட்டுசூட்டு போட்டு மூக்கும்,முழியுமா இருக்காரு பாருங்க ஒரு ஃபோட்டாவுல...அவர்தான் அது :)


  36. அப்துல்லா அண்ணே...

    வண்டி ரொம்ப மெதுவா போய்க்கிட்டு இருக்கு கொஞ்சம் வேகத்த கூட்டுங்க.


  37. சுவாரசியமா போயிட்டுருக்கு. இங்க வந்தாதான் மாப்ள எல்லா கமெண்ட்ஸும் படிக்கிறதுக்கு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு.


  38. KaveriGanesh Says:

    தம்பி,

    நிச்சயம் திருனாவுக்கரசர் மிக உயர்வான நிலைக்கு வந்திருக்க வேண்டியவர்.பழகுவதற்கு எளிமையானவர்.
    எனக்கு இன்றென்றும் வருத்தம் உண்டு, மிக பெரிய பதவி வகிக்க வேண்டியவர்,மாற்று முகாமுக்கு போகவேண்டிய சூழ் நிலை.

    காலம் சில நல்ல மனிதர்களை அலைக்கழிக்கச்செய்கிறது.


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']