அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கிற்குப் பின் இருந்த இரகசியம் மிகவும் எளிது.அவர் தொகுதிக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தொகுதி மக்களோடு இருந்தார்.அவர்களது நல்லது,கெட்டது அனைத்திலும் இருந்தார். அவரை நேரில் பார்த்தால் நமது சிரமம் அனைத்தும் நீங்கிவிடும் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்களிடம் அவரது நெருக்கம் இருந்தது. கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் மினியேச்சர் போலவே புதுகை மாவட்டத்தில் மாறிப்போனார் திருநாவுக்கரசர்.
அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் புதுக்கோட்டைக்கு அவர் வந்து காலையில் டீ குடித்த பின் மக்களைச் சந்திக்கத் துவங்கினால் காலை உணவு,மதிய உணவு உண்ண அவரால் முடியவே முடியாது.அவ்வளவு கூட்டம் நம்பிக்கையோடு அவரைச் சந்திக்க வரும். இரவு உணவு மட்டுமே அவரால் உண்ண முடியும். அவரும் சோர்வின்றி உணவு,உறக்கம் பற்றிய கவலையின்றித் தொடர்ந்து மக்களைச் சந்திப்பார்.
திருமண உதவி நாடி வருபவர்கள்,கல்விக் கட்டணம் கேட்டு வருபவர்கள்,மருத்துவ உதவிக்கு வருபவர்கள் என எவர் வந்தாலும் ஜாதி,கட்சி வித்யாசமின்றி அள்ளிக் குடுத்தார். கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் எளிய மக்களின் சிரமத்தை இயல்பாகவே அவர் உணர்ந்து இருந்தார்.நான் உணர்ந்தவரை இந்த உதவிகளை எல்லாம் அவர் விளம்பரத்திற்காகவோ,பெருமைக்காகவோ செய்ததாகத் தெரியவில்லை. காரணம் இதையெல்லாம் அவர் விளம்பரப்படுத்தி கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம்கூட யாருக்கு என்ன உதவி செய்தேன் என்பதைச் சொல்லாத பழக்கம் இன்றுவரை அவருக்கு இருக்கின்றது.
அவர் எம்.ஜி.ஆர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மூன்று சட்டசபை தேர்தல்களைச் சந்தித்தது. அந்தத் தேர்தல்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் எம்.ஜி.ஆர் கட்சி கூட்டணியே மொத்தமாக வழித்துத் துடைத்துக் கொண்டு செல்லும்.இந்த அபார வெற்றிகளுக்கு திருநாவுக்கரசரின் தனிப்பட்ட செல்வாக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை எந்த அரசியல் நோக்கர்களும் மறுப்பின்றி ஒத்துக்கொள்வர்.
எது அவரது வளர்ச்சிக்கும்,செல்வாக்கிற்கும் முதல் காரணமாக இருந்ததோ அதுவே அவரது வீழ்ச்சிக்கும் முதல் காரணமாக அமைந்து போனது விதி ஆடிய வித்தியாசமான விளையாட்டு. எப்படி?

என்ன ஆச்சு விண்மீனுக்கு?
இடுகைகளோட நீளம் சின்னதாகிக்கிட்டே போகுது
//இடுகைகளோட நீளம் சின்னதாகிக்கிட்டே போகுது//
அதான் தலைப்பிலே சொல்லிட்டாரே முரு :))
@ அண்ணன்கள்
அப்பாவிமுரு - அவசரப்படாதண்ணே.அடுத்த பாகம் மதியம் வருது. நேரம் இல்லாததால் சேர்ந்தார்போல் எழுத முடியல.
கார்க்கி - உன் டைம்மிங்கை மிகவும் இரசித்தேன்.
கார்க்கியின் கமெண்டு இந்த பதிவின் டாப்பு:-))
தொடர் பதிவு என்னய்யா ஆச்சு?
/என்ன ஆச்சு விண்மீனுக்கு?
இடுகைகளோட நீளம் சின்னதாகிக்கிட்டே போகுது//
அது அண்ணன் நீள உழுவதை விட நீட்டா உழலாம்னுதான்
நல்லா படிச்சி வெச்சிருக்கீங்க அவரை.
தொடருங்கள் நண்பா.
படத்தை கூட ஸ்டாம்ப் சைஸுக்கு போடும் உம்மை எல்லாம்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நட்சத்திரம்..நட்ச்..நட்..
எப்படி இருந்த நீங்க இப்படி நாலு பத்தி பதிவரா ஆயிட்டீங்க........
கார்க்கி & நர்சிம் க.ர!
நி.எ.
இடுகை நன்கு செல்கிறது - நீளம் குறைவு - படமும் சிறிது - இக்குறைக்ளைத் தவிர
நல்வாழ்த்துகள் அப்துல்லா
நட்சத்திர வாழ்த்துகள் அப்துல்லா அண்ணே!!
ஒரு வார காலமாக ஊரிற்குச் சென்றிருந்ததால் பதிவுலகத்திற்கு வர முடியவில்லை. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் :))