unsung hero


1949 ஆம் வருடத்தின் எதோ ஒருநாள். சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நுழைகின்றான். நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஒய்வு அறையின் ஒரு மூலையில் உள்ள தண்ணீர் பானையில் தண்ணீரை எடுத்து குடிக்கத் துவங்குகின்றான்.



“டேய்!நிறுத்து”

“என்ன சார்?”

“அந்த தண்ணிய குடிக்கக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

”ஏன் சார்?”

“நீ புதுசா வந்துருக்குறியா?”

”ஆமாம் சார்”

“இது எங்கள மாதிரி உயர்சாதிக்காரர்கள் மட்டும் குடிப்பதற்காக உள்ள பானை. நீ புதுசுங்குறதால இந்தத் தடவை பரவாயில்லை.இனிமே இதுல தண்ணி எடுத்துக் குடிக்காதே..புரியுதா?”

கண்டிப்பான குரலில் சொல்ல்கின்றார் அந்த உயர்சாதி வக்கீல்.



அவரை உற்று நோக்கிய அந்த இளைஞன் சொல்கின்றான், ”இது பொது இடம்.உங்களுக்கெல்லாம் அப்படி அவசியம் எனில் நீங்கள் வீட்டில் இருந்து கூஜாவில் தண்ணீர் எடுத்து வாருங்கள்.இங்கு குடிக்காதே என்று சொல்ல உங்கள் யாருக்கும் உரிமை இல்லை ”



”என்னடா வாய் ரொம்ப நீளுது”

“தண்ணீர் குடிக்காதே என்று மட்டுமல்ல...என்னை “டா” போட்டு அழைக்கவும் உங்களுக்கு உரிமையில்லை”

“அப்படித்தாண்டா சொல்வேன்”



அவர் அப்படி சொன்ன அடுத்த வினாடி தண்ணீர் பானையை எடுத்து அவர் தலையில் போட்டு உடைத்து அந்த இளைஞன் சொன்னான் “ என்னை அந்த பானையின் தண்ணீர் எடுக்காதே என்று சொல்லும் எவனையும் இப்படித்தாண்டா செய்வேன்”



சக வக்கீலைத் தாக்கிய குற்றத்திற்காகவும், நீதி மன்றத்தின் உள்ளே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் 15 நாள் சிறை தண்டனையும், மூன்று மாதம் வழக்குகளில் வாதாடத்தடையும் விதிக்கப்படுகின்றது. அதுநாள்வரை இந்தப்பாகுபாட்டை ஏற்றுக்கொண்டிருந்த பிற வக்கீல்கள் உணர்வு பெற்றவர்களாய் பெரும் போராட்டத்தில் இறங்க அந்த இளம் வக்கீல் இரண்டே நாட்களில் விடுதலை ஆகின்றார்.





சிறையில் இருந்து விடுதலைபெற்ற பின்னர் கோர்ட் ஹாலின் உள்ளே செல்கின்றார். அன்றைய நாட்களில் நீதியரசரின் முன்னே இருபுறமும் இருக்கும் வக்கீல்கள் இருக்கையில் முதலில் உயர் வகுப்பினரும் பின்னர் வரிசைப்படி மற்ற சாதி வக்கீல்களும் அமர்ந்திருக்கும் முறை இருந்தது. இதுகண்ட அந்த இளம் வக்கீல் மறுநாள் வெகுசீக்கிரமாகவே வந்து முதல் இருக்கையில் அமர்ந்து விட்டார். உயர்சாதி வக்கீல்கள் அவர் அமர்ந்து இருப்பதைக் கண்டு பெரும் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். எதையும் கண்டு கொள்ளாது அந்த இருக்கையில் இருந்து எழ மறுத்து அசையாது அமர்ந்துவிட்டார் அவர்.



பிரச்சனை பெரிதாவதைக் கண்ட நீதிபதி அவரிடம் “தம்பி! நீ எங்கு அமர்ந்தால் என்ன? இருக்கையில் என்ன இருக்கின்றது? நீ பின்னால் போய் அமர்ந்தால்தான் என்ன?” என்று வினவுகின்றார்.



“மைலார்ட்! உங்கள் கருத்துப்படி இருக்கையில் ஒன்றுமில்லை...அப்படித்தானே?’

“ஆமாப்பா”

“அப்படியானால் நாளைமுதல் நான் உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றேன்..நீங்களே சொல்லிவிட்டீர்களே”



என்ன சொல்வது என்று புரியாத நீதியரசர் இனிமேல் முதலில் வருபவர்கள் இருக்கை காலியாக இருக்கும் முறைப்படி அமர்ந்து கொள்ளுங்கள் என்று தீர்பளிக்கின்றார்.





அந்த இளம் வக்கீல் என்னுடைய மாமா புதுகை நகர மக்களால் அன்போடு பி.எஸ்.பி என்று அழைக்கப்படும் பி.எஸ்.பக்கீர் முகமது அவர்கள்.



குன்றக்குடி அடிகளார் அவர்களால் துவங்கப்பட்ட திருவருள் கழகம் அமைப்பின் தீவிர உறுப்பினர். தமிழகத்தில் எங்கெல்லாம் ஜாதி,மதக் கலவரங்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் திருவருள் கழகத்தின் சார்பாகச் சென்று அமைதியை நிலைநாட்டுவதை தன்னுடைய வாழ்நாள் பணியாகக் கொண்டவர். 5 வேளை தவறாமல் தொழுகும் இஸ்லாமியராய் அனைத்து மதத்தவரையும் பாகுபாடின்றி நேசிப்பவர். புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கத்தின் தலைவராய் கால் நூற்றாண்டுக்கும்மேல் பணிபுரிந்தவர்.



சமூகநீதியையும்,மத நல்லிணக்கத்தையும் தனது இருகண்களாய் கொண்டு வாழ்ந்த அந்த கிழட்டுச் சிங்கம் தன்னுடைய 83 ஆம் வயதில். நேற்று உலகை வாழ்வை விடுத்து மறுவாழ்வு சென்றடைந்து விட்டது. இறைவனின் அவையில் அவர் நற்கூலிபெற பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.



65 Responses
  1. TBCD Says:

    அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.

    அன்னாரின் குடும்பத்தினர்க்கும் உங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

    ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    பதிவிலேறாத இதுப் போன்ற சம்பவங்களை நீங்கள் ஆவணப்படுத்துதலே அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும். அதன் ஆரம்பமாக இந்த இடுகை இருக்கட்டும்


  2. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  3. Mahesh Says:

    அஞ்சலிகள் !!

    அவர் புகழ் ஓங்கட்டும்.


  4. //இறைவனின் அவையில் அவர் நற்கூலிபெற பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.//

    என்னுடைய பிரார்த்தனைகளும்


  5. அன்பின் அப்துல்லா

    இறைவனின் அவையில் அவர் நற்கூலி பெற பிரார்த்திக்கிறேன்

    அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    சீனா


  6. படித்து முடித்தபின் மனம் கனக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...

    பிரபாகர்.


  7. நம் மாமாவின் இழப்புக்கு, நம்க்கு நாமே ஆறுதல் சொல்லிகொள்ள வேண்டியது தான்.

    :(((


  8. அவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆறுதல்கள் அப்துல்லா.. அவரை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.


  9. My salutes to the old lion.

    My heartfelt condolences to you and your family.


  10. Very Very inspirational man.

    அண்ணே, அவர் மறைந்தாலும் அவரின் இந்த உரிமைக்கு போராடும் குணத்தால் என்றென்றும் வாழ்ந்திருப்பார்.

    நிச்சயம் நற்கூலி பெறுவார்.


  11. அண்ணா, கட்டாயம் என்னுடைய பிராத்தனைகளை அவருக்கு உரித்தாக்குகிறேன்.


  12. இந்த மாதிரி மாமனிதர்களைக் கதைகளில்தான் காணமுடியும் என்றிருந்தேன்.
    நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறியும் போது வாழ்க்கையின் மீதே புதிய மரியாதை வருகிறது,அப்துல்லா.

    உங்கள் மாமா மீண்டும் பிறக்க வேண்டும் என மனதார இறையருளை வேண்டுகிறேன்.


  13. Vinitha Says:

    Salute!

    அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  14. மிக நல்ல அஞ்சலிப்பதிவு அப்துல்லா.
    அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!


  15. என்னுடைய அஞ்சலிகளையும் பிரார்த்தனைகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன்


  16. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்

    அவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆறுதல்கள் இறைவன் கொடுப்பாராக.


  17. எனது அஞ்சலிகள் சார்


  18. ஆன்மாவில் என்றும் சாந்தி நிலவட்டும்


  19. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  20. அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி..


  21. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  22. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  23. Cable Sankar Says:

    அண்ணே நிஜமாகவே உங்கள் மாமா ஒரு unsung heroதான்.. அவ்ர் மறைவுக்கு என் அஞ்சலிகள்.


  24. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்!

    அவரைப் பற்றி நீங்கள் சொன்ன விஷயங்கள் சிலிர்க்க வைத்தன.


  25. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.

    அன்னாரின் குடும்பத்தினர்க்கும் உங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


  26. மாமாவின் மஃபிரத்துக்காக தூஆச் செய்கிறோம்.

    இருக்கும் போதே அவர்களைப் பற்றி நீங்கள் நிறைய எழுதியிருக்கலாம்.அவர்
    சாமானியர் அல்லவே !!!


  27. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    நல்ல நினைவுகூரல் மாப்ள. மாமா மறுவுலக வாழ்விலும் வெற்றி பெற வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.


  28. இன்னா லில்லாஹி...

    அவரது சேவைகளைப் பதிவுகளில் பதியுங்கள். இந்நாள் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கட்டும்.


  29. மிக நல்ல விஷயத்தை தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்..!

    உங்களுடைய மாமாவின் வீரம் செறிந்த தியாக போராட்ட வாழ்வு போற்றத்தக்கது..

    அவரது மறைவுக்கு எனது அஞ்சலிகள்..!


  30. KaveriGanesh Says:

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்


  31. இறைவனது நாட்டம். இவ்வுலகில் சாதித்து மறைந்து விட்டார்கள். அவர்கள் மறு உலக வாழ்விலும் வெற்றி பெற பிராத்தணைகள்.


  32. அன்னாரின் மறைவுக்கு என் அஞ்சல்கள்.

    ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்தனை


  33. வருத்தங்கள்.


  34. எனது மனமார்ந்த அஞ்சலி.

    அவர் வாழ்வு இத்தனை பேர் படிக்கும் பாடமாய் அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும்.


  35. நல்ல அஞ்சலிப் பதிவு அப்துல்லா.

    அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  36. Monks Says:

    அதிர வைத்தீர்களே ! அப்துல்லா ?
    அவர்களின் சேவைகள் பற்றி இன்னும்
    தாங்கள் எழுத வேண்டும்


  37. Unsung hero -

    குடும்பத்தினர்க்கும் உங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்


  38. அண்ணே அப்படியே அவரோட போடோவையும் போற்றுகலாம்ல


  39. A Royal Salute to Him!!!

    அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  40. thiru Says:

    arumaiyaana anjali pathivu!! thiru


  41. மாப்ளே பெருமையா இருக்கு, இன்னும் நிறைய‌ எழுது இனியுள்ள‌வ‌ங்க‌ளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக‌ அமைய‌ட்டும்

    அவரது மறுவுலக வாழ்வு சிறப்பாக அமைய இரு கரம் ஏந்துகிறேன்


  42. பாபு Says:

    என்னுடைய பிரார்த்தனைகளும்


  43. உங்களுடைய மாமாவின் வீரம் செறிந்த தியாக போராட்ட வாழ்வு போற்றத்தக்கது..
    //

    அவரது சேவைகளைப் பதிவுகளில் பதியுங்கள். இந்நாள் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கட்டும்.
    //

    அவரைப் பற்றி நீங்கள் சொன்ன விஷயங்கள் சிலிர்க்க வைத்தன.
    //

    இந்த மாதிரி மாமனிதர்களைக் கதைகளில்தான் காணமுடியும் என்றிருந்தேன்.
    நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறியும் போது வாழ்க்கையின் மீதே புதிய மரியாதை வருகிறது.
    //

    ..........

    என் மனதிலிருப்பதும் இவ்வாறான உணர்ச்சிகளே.. சிறப்பானதொரு வாழ்வை வாழ்ந்து சென்றிருக்கும் பெரியவரை நினைத்து பெருமைகொள்வோம். நிஜமாகவே மனம் நெகிழ்கிறது.

    இது போல இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது என் கோபத்தை எந்தச்சூழலிலாவது சமூகக்கோபத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றேனா என எண்ண வைத்து வெட்கவைக்கும் பதிவு.

    திரு.பி.எஸ்.பக்கீர் முகமதுவின் புகழ் போற்றுதும்.!

    அவர் நினைவுகளை நீங்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது அப்துல். தொடர்ந்து எழுதுங்கள்.. புத்தகமாக்கும் வாய்ப்பைச் சோதியுங்கள். நிஜம் கற்பனைகளை விடவும் வீரியமானது. மிக விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.!


  44. Karthik Says:

    இன்ஸ்பயரிங்கா இருக்கு அவரோட வாழ்க்கை.. அஞ்சலிகள்.. RIP.
    :(


  45. உண்மையான ஒரு தைரியம் மிக்க மனிதரின் வரலாறு... அவரை வணங்குகிறேன்!!!


  46. Anonymous Says:

    May his soul rest in peace.


  47. எம் .எம். அப்துல்லா

    பி எஸ் பி அவர்கள் பற்றி அறிந்தேன்

    ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்


  48. இப்படி மண்ணுக்குள் புதைந்த வைரங்கள் ஆயிரம்....வருத்தங்கள்.


  49. ஜோ/Joe Says:

    இதய அஞ்சலி!


  50. அவரின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.


  51. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் அறியும் போது வாழ்க்கையின் மீதே புதிய மரியாதை வருகிறது

    இந்தியா எனது தாய்நாடு
    இஸ்லாம் எனது வழிபாடு!
    நபியே எந்தன் வழி
    நற்றமிழே எந்தன் மொழி!

    உங்களைப் போன்றவர்களால் இந்த நாடு இன்னமும் மனிதம் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டுருக்கிறது. உங்கள் வருகையை பெருமையாக கருதக் காரணம் காரைக்குடி சொந்த ஊர் ஒன்று. மற்றொன்று புதுக்கோட்டையில் என் தங்கை கணவர் சங்கர் வக்கிலாக அறந்தாங்கியில் இருந்து பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.

    வாழ்த்துக்கள் அப்துல்லா. உங்கள் மார்க்கம் சொல்லும் உண்மையான மனிதனை வார்த்தைகளின் மூலம் உணர்த்தியதற்கு.

    texlords@gmail.com


  52. அண்ணாரின் மறைவுக்கு எனது இரங்கல்கள்!


    உயர்சாதி திமிருள்ளவர்களை காயடிக்க வேண்டும் என்பதே என் அவா!


  53. ஹாஜி.பி.எஸ்.பக்கீர் முகமதிற்காக பிராத்தித்த அத்தனை பேருக்கும் என் நன்றி.


  54. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உயர்ந்த மனிதராய் வாழ்ந்த அவர் நற்கூலி பெற பிரார்த்திக்கிறேன்


  55. kamar Says:

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், psp அவர்களை வக்கீலாக மட்டுமே தெரிந்த எனக்கு அவரை பற்றி விசயங்களை படித்தபோது நான் உணர்ச்சி வயப்பட்டேன், எனக்கு பெருமையாக இருக்கின்றது , மறைந்த என் தந்தை ஹாஜி M.அப்துல் வகாப் (நிறுவனர்;M.A.WAHAB&CO, PUDUKKOTTAI) அவர் களுக்கும் , ஹாஜி PSP அவர்களும் ஒரு கொள்கை ரீதியான நட்ப்பு உண்டு , நான் அவர்களை அவருடைய இல்லத்தில் என் தந்தையுடன் பல முறை சந்தித்து இருகின்றேன் , ஹாஜி PSP அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் , அவர்களின் உரிமைக்கு போராடும் அந்த பதிவுகளும் , சமுதாய தொண்டும் என்றும் மறையாது . அவரை நினைவு கூர்ந்த தங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன், எல்லாம் வல்ல இறைவன் PSP அவர்களை நல்லவர்களின் கூட்டத்தில் எழுப்ப பிரார்த்தனை செய்கின்றேன்.-எம்.ஏ.கமருதீன் - (கத்தாரிலிருந்து )


  56. எனது அஞ்சலியும் பிர்ரர்தனைகளும்.


  57. Thanks for letting us know a Great Man.

    May his soul rest in peace.

    Heartfelt condolences to you and your Uncle's famiy.


  58. உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.


  59. தங்களின் மாமா போன்றவர்களை நிச்சயம் பலமுறை நினைவு கூற வேண்டும்..

    அவருக்கு எனது பிரார்த்தனைகள்..


  60. அவருக்கு என் மரியாதை.


  61. அன்னார் அவர்களுக்கு இறைவன் நற்கூலிவழங்கட்டும்.

    அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


  62. anthony Says:

    பெரியவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்


  63. தனியன் Says:

    நல்ல சிந்தனைகளுக்கும் நல்ல செயல்களுக்கும் என்றும் அழிவில்லை.
    அவர் தம் நல் உள்ளம் எல்லோருக்கும் வழிகாட்டட்டும்.

    உணர்வுடன்,
    தனியன்.


  64. Bhuvanesh Says:

    ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...!!


  65. ஆழ்ந்த இரங்கல்கள் :(


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']