நெஞ்சில் கோடி நன்றிகள்!

வலைப்பக்கம் துவங்கிய புதிதில் எதாவது எழுத வேண்டுமே என்று எழுதத் துவங்கியதுதான் கவிதைகள். எப்பொழுதும் படிப்பவனாக மட்டுமே இருக்க விரும்பிய எனக்கு கொஞ்சம் எழுதவும் கற்றுத்தந்தது வலையுலகம்தான் என்பதை சற்று கர்வத்துடன்கூட சொல்வேன். வலையுலகம் வந்த புதிதில் நண்பர்களோடு பின்னூட்டக் கும்மி அடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருந்தது. அந்த நேரத்தில் ”யோவ்!நல்லாத்தான்யா எழுதுற.ஒழுங்கா தொடர்ந்து எழுதுயா” என்று சீரியசாக அண்ணன் தாமிரா(ஆதி) அட்வைஸ் செய்து என்னை தொடர்ந்து எரிச்சல் படுத்திக்கொண்டு இருந்ததை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கின்றேன். எப்பொழுதுதெல்லாம் ஒரு நல்ல இடுகை இடுகின்றேனோ அப்போழுதெல்லாம் பின்னூட்டம் இடுவதற்கு முன்பாக என்னை போனில் அழைத்து வஞ்சனையின்றிப் பாராட்டும் அண்ணன் நர்சிம், தொடர்ந்து என்னை நேரிலும்,தொலைபேசியிலும் ஊக்கப்படுத்தும் அக்கா புதுகைதென்றல், அண்ணன்கள் பரிசல்,முரளிகண்ணன்,கார்க்கி,கிரி,துக்ளக் மகேஷ்,வடகரையார்,கடையம் ஆனந்த்,கேபிளார்,செய்யது இன்னும் எண்ணற்ற சகோதர,சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடன்கள்.



”ஆமா எப்ப எதுக்கு இதெல்லாம்?” அப்படிங்குறீங்களா??


வேறென்ன....சும்மா கிடந்தவனை நீங்கள்லாம் கிளப்பிவுட்டதுல்ல இன்னைக்கு என்னோட கவிதை ஆனந்தவிகடன் பக்கம்.20ல் வந்துருக்கு.
67 Responses
  1. fundoo Says:

    என்ன சார், அத ஒரு ஸ்கேன் பண்ணிப் போட்டா உதவியா இருக்கும்ல!! வாழ்த்துக்கள்.


  2. வாழ்த்துகள் அப்துல்லா :)

    காலையில் பார்த்ததுமே தொலைபேசியில் அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நான் எப்போது அழைத்தாலும் அப்படித்தான் வருகிறது. அல்லது நீங்கள் தொலைபேசியை அணைத்திருக்கும் நேரமாக பார்த்து நான் உங்களை அழைக்கிறேன் போல :)

    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்


  3. ஊடகங்களில் பெயர் பெரும் அன்பு தம்பிக்கு வாழ்த்துகள்


  4. நல்ல எழுத்தாளர்களை அச்சு ஊடகம் என்றும் கண்டுக்காமல் இருந்ததில்லை.

    நல்ல எழுத்தாளர் பிரபல எழுத்தாளர் ஆயிட்டீங்க. இனி நட்சத்திர எழுத்தாளர் ஆகவேண்டியது தான் பாக்கி..:)


  5. Rishi Says:

    வாழ்த்துக்கள் அப்துல்லா ஜி


  6. வெறும் கவிஞர் மட்டுமில்லண்ணே.. இலக்கியப்பிரிவுல வந்ததுனால இன்றுமுதல் இலக்கியவாதியாகவும் நீங்கள் ஆகிறீர்கள்.. ஹிஹி.!

    (உண்மையில் இன்றைய இதழில் வந்த கவிதைகள் அனைத்துமே அருமை. அதிலும் உங்களது மிகச்சிறப்பான ஒன்று. விகடனுக்கு நன்றிகள். உங்களுக்கு வாழ்த்துகள்.!)


  7. வாழ்த்துக்கள் அப்துல்லா!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்


  8. இலக்கியவியாதி ஆனதுக்கு வாழ்த்துக்கள் :)


  9. வாழ்த்துகள் அண்ணா... :)) கவிதையை இங்கு பிரசுரிக்கவும். (ஒரு பத்து கமெண்டுக்குள்ள வந்தாலாவது ரிப்ளே பண்றீங்களான்னு பார்க்கிறேன்:))))


  10. வாழ்த்துக்கள் அப்துல்லா!!


  11. KaveriGanesh Says:

    வாழ்த்துக்கள்.

    நான் சொன்னது சொன்னது தான்.

    ஓரு நாள் ஆ.வியில் ஓரு வாரம் முழுவதும் பதிவர்கள் படைப்புகள் மட்டும் தாங்கிய இதழ்களாய் வரும்.


  12. வாழ்த்துகள் அப்துல்லா. போன வாரம் நர்சிம். இந்த வாரம் நீங்களா. கவிதை நல்லாயிருக்கு.


  13. Mahesh Says:

    //இலக்கியவியாதி ஆனதுக்கு வாழ்த்துக்கள் :) ///

    repeetttu...


  14. குடுகுடுப்பை Says:

    வாழ்த்துகள்


  15. அப்துல்லா வாழ்த்துக்கள் !!!


  16. வாழ்த்துக்கள் அப்பு ...!


  17. Rajeswari Says:

    வாவ்..வாழ்த்துக்கள் அப்துல்லா சார்...சீக்கிரமே ஒரு பாடகர எதிர்பார்க்கிறோம்


  18. ஹா ஹா வாழ்த்துக்கள் சார்.
    கவிதையை போஸ்ட் பண்ணுங்க.


  19. saravana Says:

    //சும்மா கிடந்தவனை நீங்கள்லாம் கிளப்பிவுட்டதுல்ல இன்னைக்கு என்னோட கவிதை ஆனந்தவிகடன் பக்கம்.20ல் வந்துருக்கு.
    //

    அண்ணே வாழ்த்துக்கள்!

    (இது மாதிரி நேரத்துல உரையாடல் வேற கவிதை போட்டி வெச்சு இருக்கு, அப்துல்லா கவிதையோட கிளம்பிட்டார் எத்தனை தலை உருளபோவுதோ!!!)


  20. saravana Says:

    //காலையில் பார்த்ததுமே தொலைபேசியில் அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நான் எப்போது அழைத்தாலும் அப்படித்தான் வருகிறது. அல்லது நீங்கள் தொலைபேசியை அணைத்திருக்கும் நேரமாக பார்த்து நான் உங்களை அழைக்கிறேன் போல :)//

    அண்ணே பிரபலங்களை நாம் நினைச்சால் தொடர்பு கொண்டுவிடமுடியாது, அவர்கள் நினைத்தால் நம்மை தொடர்புகொள்வார்கள்! அப்பொழுதுதான் மொபைலை ஆன் செய்வார்கள்.

    இப்படி
    போன் செய்து செய்து கட்டை விரல் தேய்ந்து போனோர் சங்கம்


  21. எதிர்கவுஜ போட்றலாமா!?


  22. காலையில் விகடனில் படித்தேன்.. வாழ்த்துக்கள் தம்பி


  23. நல்வாழ்த்துக்கள் அப்துல்லா:)! இன்னும் கவிதையைப் படிக்கவில்லை. படித்து விட்டு மறுபடி வருகிறேன்.


  24. வெற்றிப்படிக்கட்டுகளை
    தாவித் தாவி செல்லுறீங்க
    மேலும் தாவ வாழ்த்துக்கள்


  25. பாடகரும், கவிஞருமான புதுகை அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள் :)


  26. வாழ்த்துகள். காலையில் படித்தேன். நல்ல கவிதை.


  27. என்ன சார், அத ஒரு ஸ்கேன் பண்ணிப் போட்டா உதவியா இருக்கும்ல!! வாழ்த்துக்கள்.


  28. அண்ணே வாழ்த்துகள். மேன் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    // பைத்தியக்காரன் said...
    வாழ்த்துகள் அப்துல்லா :)

    காலையில் பார்த்ததுமே தொலைபேசியில் அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நான் எப்போது அழைத்தாலும் அப்படித்தான் வருகிறது. அல்லது நீங்கள் தொலைபேசியை அணைத்திருக்கும் நேரமாக பார்த்து நான் உங்களை அழைக்கிறேன் போல :)

    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்//
    அய்யா உங்களுக்கு மட்டுமல்ல, கிட்ட தட்ட 1 மாசமா எனக்கு இந்த கதிதான்.

    என்றென்றும் அன்புடன்

    உங்கள் நண்பன் அரவிந்த் அப்பா (எ) இராகவன் நைஜிரியா


  29. Cable Sankar Says:

    வாழ்த்துக்கள் அண்ணே..


  30. வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே!


  31. அன்பின் அப்துல்லா

    கவிதை விகடனில் வெளி வந்ததற்கு பாராட்டுகளுடன் கூடிஅய் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா


  32. வாழ்த்துக்கள் அப்துண்ணே!!!!!!


  33. பாபு Says:

    பாடகரும், கவிஞருமான புதுகை அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    repeattu


  34. அட, கலக்குறீங்க, காக்கா!! வாழ்த்துக்கள்.. :)

    கொஞ்சம் அந்த பக்கத்த இமேஜா போடுங்களேன்.. இங்க விகடன் கிடைக்க மாட்ருக்கு


  35. @ அண்ணன்கள்

    ஃபண்டூ - என்னிடம் ஸ்கேனர் இல்லைங்க :(


    பைத்தியக்காரன் - அண்ணா நான் உங்க ஆபீஸுக்கு இன்று நேர்ல வர்றேன்.

    கோவி.கண்ணன்

    சாமி - :)

    ரிஷி

    அதிமூலதாமிரா -இலக்கியவாதிஆஆஆ

    இரவிச்சந்திரன் - முதல் வருகைக்கு நன்றிண்ணா

    சின்ன அம்மணி அக்கா - நீங்களும்தான் :))


    ஸ்ரீமதி - போன இடுகை போட்டதுக்கு அப்புறம் தொடர்வேலை. அந்த ஒரு இடுகையில் பதில் போடலங்குறதுக்காக ஒவ்வோரு தடவையும் பதில் சொல்லாதமாதிரி பிட்டப் போடுறீயே??!!????



    செந்தில்நாதன்

    காவேரிகணேஷ் - நிச்சயம் நடக்கமுண்ணே


  36. வாழ்த்துக்கள்.கவிதை அட்டகாசம்.


  37. ஆமா, நல்லாயிருககு பாஸு. வாழ்த்துக்கள்


  38. எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே !!!

    பாடகர்,எழுத்தாளர்,கவிஞர் அப்துல்லா வாழ்க வாழ்க !!!!!!

    ஜ‌ன‌வ‌ரில‌ சென்னை வ‌ர்றேன்னே..ட்ரீட்டுக்கு ரெடியா இருங்க‌.!!


  39. வாழ்த்துக்கள் அண்ணே !
    இன்னும் இந்த வார விகடன் கிடைக்கல , வந்ததும் படிக்கிறேன் .

    நன்றி


  40. unga kavithaiyai padithen... valtha call panninen switch off nnu vanthathu....

    nalla irunthuchu... antha final touch arumai


  41. வாவ்!

    வாழ்த்துகள் அண்ணே!


    இனி,

    பாடகர்,
    கவிஞர்(பாடலாசிரியர்),
    சிறுகதை நன்னாத்தான் எழுதுறேள்! தொடருங்கள்!
    அப்படியே வசனம்
    இயக்கம்!
    எப்ப அண்ணே படம் எடுக்கப் போறியள்!


  42. வாழ்த்துக்கள் அண்ணா.


  43. //பைத்தியக்காரன் - அண்ணா நான் உங்க ஆபீஸுக்கு இன்று நேர்ல வர்றேன்.
    //

    போன் செஞ்சா ஏன்யா எடுக்கலன்னு கேட்டா ஆபிஸுக்கு நேரா வருகிறேன்,கொள்ளைபக்கமா வருகிறேன் இது எல்லாம் ஒரு பதிலாய்யா!??? அதுவும் அந்த பச்சை மண்ண மிரட்டுவது போல் பேசினா என்னா ஆவும் அந்த பச்சமண்ணு?:)))

    அந்த சரவணன் என்ற பெயரில் இருக்கும் ரெண்டு கமெண்டும் என்னோடதுதான்.ஒழுங்கா பதில் சொல்லவில்லை அப்புறம் நடக்கிறதே வேற... ஆமா சொல்லிப்புட்டேன்.


  44. @ அண்ணன்கள்

    வானம்பாடி - சீக்கிரமே நீங்களும் வர பிராப்த்திரஸ்து :)


    மகேஷ்
    குடுகுடுப்பை
    தேவன்மாயம்
    ஜீவன்

    சகோதரி ராஜேஸ்வரி - அதுதான் முன்னாடியே ஆயாச்சே!!!!

    இளவட்டம் - ஸ்கேனர் லேதுண்ணே
    :(


    சரவணா - அண்ணே யாருண்ணே நீங்க?? ஒரே கன்பிய்யூசாகீது??!!??

    வால்பையன் - :)

    தண்டோரா
    இராமலெஷ்மியக்கா

    கார்த்திக் விஸ்வனாதன் - நன்றி கார்த்திக்.முதல் வருகைக்கும் :)

    அமித்து அம்மா
    அமுதா

    ஆயில்யன்

    ராகவன் நைஜீரியா - அண்ணா அந்த நம்பர் மாத்திட்டேன்.இன்றுமாலை உங்களை அழைக்கின்றேன்.

    கேபிள் சங்கர்
    பீர்
    சீனாஅய்யா
    வெயிலான்
    பாபு

    சகோதரி நாஸியா

    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


  45. (க)விதைக்கு வாழ்த்துக்கள் அப்துல்லா.


  46. //இரவிச்சந்திரன் - முதல் வருகைக்கு நன்றிண்ணா//

    தம்பி,

    நான் தங்களுடைய வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்


  47. gulf-tamilan Says:

    வாழ்த்துக்கள்!


  48. அண்ணே எலக்கியவாதி ஆகிட்டிங்கலாமே..!!

    வாழ்த்துகள்..


  49. அப்படியா, சந்தோஷம்!!


  50. வாழ்த்துகள் நண்பரே...


  51. http://www.thandora.in/2009/11/blog-post_26.html

    தம்பி உங்களுக்கு ஒரு அழைப்பு..


  52. கிரி Says:

    //ஆமா எப்ப எதுக்கு இதெல்லாம்?” அப்படிங்குறீங்களா??//

    ஆமாம்!

    //சும்மா கிடந்தவனை நீங்கள்லாம் கிளப்பிவுட்டதுல்ல இன்னைக்கு என்னோட கவிதை ஆனந்தவிகடன் பக்கம்.20ல் வந்துருக்கு//

    அப்படியா! அப்துல்லா நீங்க தன்னடக்கமாக கூறினாலும் அனைத்து கவிதைகளும் சூப்பர் என்று கூற முடியவில்லை என்றாலும் பல நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    பாடகர் உடன் பாடல்களும் இனி எழுதலாமோ! ;-)


  53. வாழ்த்துக்கள் அண்ணே.




  54. அப்படிப்போடு. வாழ்த்துக்கள்.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.


  55. வாழ்த்துக்கள்.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    வாழ்வில் பல வெற்றிகளை நீங்கள் பெறுவதற்கு ஒரு சகோதரனாய் என் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.


  56. வாழ்த்துக்கள்


  57. //அந்த நம்பர் மாத்திட்டேன்.//
    (ஏ)மாற்றிய எண்ணைத் தெரிவிக்கவும்.


  58. //வாழ்த்துகள் அப்துல்லா :)

    காலையில் பார்த்ததுமே தொலைபேசியில் அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. நான் எப்போது அழைத்தாலும் அப்படித்தான் வருகிறது. அல்லது நீங்கள் தொலைபேசியை அணைத்திருக்கும் நேரமாக பார்த்து நான் உங்களை அழைக்கிறேன் போல :)

    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.//

    பாதி டைப் பண்ணினதுக்கப்புறம் பின்னூட்டத்தப்பாத்தேன். அடி பிசகாம அண்ணன் பைத்தியக்காரன் எழுதியிருந்தார். அதையே போட்டுட்டேன்..ஹி.ஹி..

    எப்பவும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் உயரங்களைத் தொடப்போகும் என் அன்பு அப்துல்லா !


  59. SUFFIX Says:

    மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், கீப் ஆன் கலக்கிங்ஸ் MMA:):)


  60. வாழ்த்துக்கள்...


  61. வாழ்த்துகள்..


  62. //அந்த நம்பர் மாத்திட்டேன்.//
    (ஏ)மாற்றிய எண்ணைத் தெரிவிக்கவும். //

    நான் ரிப்பீட்டு போட்டுகிறேன்!

    எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க தல

    9994500540


  63. நல்வாழ்த்துக்கள் அப்துல்லா.மேலும் வெற்றிகள் தொடரட்டும்.


  64. வாழ்த்துக்கள் அப்துல்லா


    கை கொடுங்க அப்துல்லா

    //வீடே பரணாக //

    மிக அற்புதமாக எழுதி இருக்கீங்க


  65. வருகை தந்து வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி.நன்றி.


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']