புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கூப்பிட்டால் கடல் அருகில் வரும் ஆவுடையார்கோயில் ஓன்றியத்தில் ஒரு மூலையில் உள்ள கிராமம்.பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் பொடுசுகளோடு பொடுசகளாக வகுப்பில் இருக்கும் மாணவர்களில் அவன் மட்டும் தனித்துத் தெரிகின்றான். கிராமத்து மாணவர்களுக்கே உரிய இலட்சணக் குறைவு அவனுக்கு மட்டும் மிஸ்சிங்.
சற்றே எடுப்பான நிறத்தினால் மட்டுமல்ல, சராசரிக்கும் அதிகமான அறிவினால் ஆசிரியர்களின் அன்புக்கும் பாத்திரமாகின்றான். மூனாம்ப்பில் இருந்து நாலாம்ப்பிற்கு பாஸாசன அவனது மகிழ்ச்சி சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.படிப்பின் மதிப்பும்,உயர்வும் புரியாத அவனது கிராமத்து வெள்ளந்தித் தந்தை “படிச்சது போதும்.இனிமே நீ ஒழுங்கா நம்ம ஆடு,மாட்டை மேக்கிற வழியப்பாரு” என்கின்றார். தினமும் அவன் மாடு மேய்க்கச் செல்லும்போது 10 பைசா காசும் குடுக்கின்றார்.
அவன்தான் சராசரிக்கும் சற்று அதிகமான அறிவுள்ள மாணவனாச்சே! ஒரு யோசனை வருகின்றது. தன்னோடு மாடு மேய்க்க வரும் சக தோழனிடம் ஒரு டீலுக்கு வருகின்றான். அதாவது தன்னுடைய மாடுகளையும் சேர்த்து அந்தத் தோழன் மேய்க்க வேண்டியது. அதற்குக் கூலியாக இவன் தினமும் அப்பா தரும் 10 பைசாவை அவனிடம் குடுத்துவிட வேண்டியது. தோழன் டீல் ஓ.கே என்று சொல்ல இவன் சந்தோசமாக மாடுகளை அவனிடம் விட்டுவிட்டு அப்பாவிற்குத் தெரியாமல் பள்ளிக்குச் செல்லத் துவங்கினான்.
நல்லவேளை...அன்றெல்லாம் கிராமங்களில் பணம் பறிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லாததால் அப்பாவுக்குத் தெரியாமல் பைசா செலவின்றி பத்தாம் வகுப்புவரை அந்த கிராமத்துப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களோடு தேறுகின்றான். அங்குதான் ஆரமிக்கின்றது அவனது வாழ்க்கையில் முதல் சோதனை.காரணம் மேலே பி.யூ.சி.படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள நகரமான புதுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். தாய்மாமனிடன் சரண்டர் ஆகின்றான் அந்த மாணவன். அவர் அவனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல அப்பாவும் மகிழ்வோடு அவன் மேலும் படிக்க அனுமதிக்கின்றார்.
புதுக்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் சட்டக் கல்லூரியில் பி.எல்., படிப்பில் சேர்ந்து அவன் வாழ்க்கை ஒரு கெளரவமான இடத்திற்கு வருகின்ற நேரம். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவைத் துவங்குகின்றார். சட்டக் கல்லூரி மாணவர் அ.தி.மு.க அமைப்பைத் துவங்கி அரசியலிலும் ஆர்வமாகின்றான் அந்த கிராமத்து மாணவன். விரைவில் வந்த தேர்தலில் அவன் கிராமம் இருக்கும் தொகுதிக்கு அவனை வேட்பாளராக அறிவிக்கின்றார் எம்.ஜி.ஆர்.
அந்த கிராமத்துச் சிறுவன் வேறு யாருமல்ல...எம்.ஜி.ஆர் அவர்களால் தனது ”இளைய நிலா” என்று அன்போடு அழைக்கப்பட்ட அன்றைய திருநாவுக்கரசு...இன்றைய திருநாவுக்கரசர்.
(மீதி வரும் திங்கள் மாலை...)
இது எனக்கு இது வரை தெரியாத விடயம் அப்துல்லா. அறியத்தந்தமைக்கு நன்றி.
நாந்தான் முதல்லயா ...
அப்துல்லா , என்ன ரொம்ப நாளைக்கு பதிவு போட்டிருக்கீங்க
நல்லா போகுது கதை
அட சே வானம்பாடிகள் முந்திட்டாரே ...
வாங்க அண்ணன் வானம்பாடி
வருகைக்கு நன்றி.
வாங்க ஸ்டார்ஜன் அண்ணே
//நல்லா போகுது கதை //
இது கதையல்ல...நிஜம் :)
//அட சே வானம்பாடிகள் முந்திட்டாரே //
எதையும் செய்யுறதுக்கு முன்னாடி ப்பிளான் பண்ணனும்..ஒ.கே :)))
புது விஷயமாயிருக்கு. இன்னும் சொல்லுங்க.
ஆனாலும் திருநாவுக்கரசர் மேலே முன்ன இருந்த மதிப்பெல்லாம் இப்ப இல்ல.
ஆரம்பமே ரொம்ப நல்லா இருக்கு...
அடுத்த இடுகையை எதிர்ப்பார்க்கின்றேன்...
நம்ம ஊரு பக்க நியூஸ்-யு...கெளப்பு மாமே!!
இது எனக்கு இது வரை தெரியாத புது விஷயமாயிருக்கு........
காத்திருக்கிறேன்.. திங்கள் மாலைக்காக. :)
மாடுகள் மேய்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருந்தத்தால் எளிதில் அதிமுகவில் பெரிய ஆளாக முடிந்திருக்கிறது
இந்த ‘இப்படி’ பாராட்டுக்குரியது. தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நல்ல பதிவு.
நல்ல பதிவு.
ம்ஹூம்ம்.
எப்பிடி இருந்த மனுசன்!!
இன்னைக்கி அப்துல்லாவெல்லாம் அவரைப் பத்தி எழுதுற அளவுக்கு ஆயிட்டாரே :))))))))
புதுகை.குணா.
திருநாவுக்கரசர் கதை வேறமாதிரி கேட்டுருக்கேனே...
அவர் பதிகம் பாடி ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் போயி.. அவர இல்லையா இது ? :))
ஆகா ஆகா அருமையான அறிமுக இடுகை - திருநாவுக்கரசரப் பற்றிய இடுகை.
நடை நல்ல நடை - சிறுவன் யாரென்று தெரியாமலேயே ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் நடை
நன்று நன்று நல்வாழ்த்துகள்
மெய்யாலுமே உன்னை பற்றியதோன்னு படிச்சேன்ப்பா ...
//சற்றே எடுப்பான நிறத்தினால் மட்டுமல்ல//
நிஜமாலுமா....
சரி, சரி, தொடர் எழுத ஆரம்பிச்சுட்டீங்க, தொடர வேண்டுகிறேன்.
உண்மைக் கதையை விறுவிறுப்புடன் எழுதத் தனித் திறமை வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது.
பாராட்டுக்கள்,அப்துல்லா.
அன்று உங்களது பாட்டைக் கேட்டு விட்டுப் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து ஜி டாக்கில் பாராட்டினேன்.அதற்குள் நீங்கள் மின் வெளியில் தொலைதூரம் போய் விட்டீர்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களை வாழ்த்திப் பாராட்டுகிறேன்,அப்துலா.
கூடியவிரைவில் சூப்பர் ஹிட் பாடலைப் பாடும் வாய்ப்பை இறைவன் உங்களுக்கு அருள்வானாகுக.
அப்படியா? அவரு பி ஜே பியில இருந்தாலும் அவர் மேல பெருசா ஒண்ணும் மரியாதை குறைஞ்சிடல.. I don't think he is involved in hate politics. ரொம்ப சுவாரசியமா இருக்கு, அடுத்த பகுதிக்காக வைட்டிங்
திருநாவுக்கரசரோட ஸ்டார்ட்டிங் எல்லாம் ரொம்ப நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப தான் ரொம்ப மோசமா போயிருச்சு.
பாஜகவுல சேர்ந்தது அவர் செஞ்ச மிகப் பெரிய தவறு.
அருமையான கதையாகத் தொடர்கிறதே என நினைத்தேன்.
நிஜம் எனக் கூறிவிட்டீர்கள் தொடரட்டும்.
இந்த மாதிரி கைவசம் நிறைய வெச்சிருக்கீங்க போல இருக்கே !!! புதுசா இருக்கு..
இந்த டிரெண்டை தொடரவும் !!
தலைப்பை பார்த்துவிட்டு நீங்க “அதை” பற்றி எழுதி இருக்கீங்க, அப்படியே கொஞ்சம் ”வந்த” புண்ணில் வேலை பாய்ச்சலாம் என்று ஆசையோடு ஓடி வந்தேன்:))))
//அன்று உங்களது பாட்டைக் கேட்டு விட்டுப் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து //
அவரு பழக்கதோசத்தில் எல்லோரும் பாட்டை கேட்டுவிட்டு அடிக்க துரத்துகிறார்கள் என்ற பயத்திலேயே, நீங்களும் அதுக்குதான் துரத்துக்கிறீர்கள் என்று ஓடி போய் இருப்பார்!
திருநாவுக்கரசரைப் பற்றி தெரியாத விஷயம்தான் இது. இப்படியெல்லாம் இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு. தலைப்பு செம கச்சிதம் மாப்ள.
திருநாவுக்கரசர் பின்னாடி இவ்வளவு உண்மையிருக்கா, மிகவும் ஆச்சிரியப்படக்கூடிய தகவல்கள்
:)
ஷண்முகப்ரியன்
21 November 2009 10:03
உண்மைக் கதையை விறுவிறுப்புடன் எழுதத் தனித் திறமை வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது.
பாராட்டுக்கள்,அப்துல்லா.//
வழிமொழிகிறேன்.
கதை நாயகன் மீது அவ்வளவு ஆர்வம் இல்லையெனினும் உங்கள் எழுத்தால் ஆர்வம் மிகச்செய்கிறீர்கள்.! எதிர்பார்க்கிறோம்.
எங்கள் ஊரிலும் பயின்றார் என்ற ஒரே காரணதிற்காக மாங்கனிக்கு வரிந்து கட்டிக்கொண்டு அவரை ஜெயிக்க வைத்தோம், தொகுதிக்காக நிறைய செய்தார். தன் கவுரவத்தை அடமானம் வைத்து பெரிய கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கா உழைத்ததை நினைத்து வருந்தியவனில் நானும் ஒருவன்....
சொன்ன விதம் அருமை அப்பு ...!
//திருநாவுக்கரசர் கதை வேறமாதிரி கேட்டுருக்கேனே...
அவர் பதிகம் பாடி ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் போயி.. அவர இல்லையா இது ? :))//
அவர் அப்பர்... இவர் கொஞ்சம் லோயர் !!
ஆனாலும் திருநாவுக்கரசர் மேலே முன்ன இருந்த மதிப்பெல்லாம் இப்ப இல்ல.//
எனக்கு எப்பவுமே இருந்ததில்லை. :((
அண்ணே அப்படியே உங்க கதை மற்றும் கீரை தமிழ் செல்வன் கதை, சென்னைல நீங்க ஒன்னா மன்னா இருந்த கதையையும் போடுங்க.....
அட,இது நியூஸ்பா எனக்கு!
ஓ.
(புதியவகை பின்னூட்ட முயற்சி)
ஓ ஓ
குறிப்பு: சிவா, இது அடுத்த வகை பின்னூட்ட முயற்சி.
ஆகவே நம்ம ரெண்டு பேருக்குமே காப்புரிமை தரலாம்:-))
திருநாவுக்கரசரைப் பற்றிய தகவல்கள் அருமை அப்துல்லா
நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு
உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே
பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
எனக்கு புதுசா இருக்கு மேட்டர் எல்லாம் . நடத்துங்க நடத்துங்க ... ஆட்டோ எல்லாம் வராது :)
Ippothu intha aadu engal mandhayil irukirathu. Ethenum kurai solli vilai kuraikum muyarchiyil eedupattal vilaivugal vibareethamaga irukum. Ushar mamu.
கார்க்கி said...
//மாடுகள் மேய்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருந்தத்தால் எளிதில் அதிமுகவில் பெரிய ஆளாக முடிந்திருக்கிறது//
கார்க்கி பதிவை விட கமெண்ட் ரொம்ப ரசிக்க வைத்தது
அண்ணா நீங்க இயக்குனர் நிதி நிர்வாகம்மா அப்படின்னா கை கொடுங்க. நீங்களும் நானும் ஒரே சாதி. (கணக்கு பண்ணுவதில்).
அப்படியே கொஞ்சம் சொல்லியும் கொடுங்கள், நிதி நிர்வாகத்தை. நன்றி.
@ ஹூசைனம்மா
உங்களுக்கு மட்டுமல்லக்கா, இப்பல்லாம் நிறைய பேருக்கு இல்லை.
@ அண்ணன்கள்
ராகவன் நைஜீரியா
செந்தில்நாதன்
சங்கவி
பீர்
கார்க்கி - உன் மறுமொழி படித்து வெடித்துச் சிரித்தேன்.
//என் பிளாக் திருஷ்ட்டி படக்கூடாதுன்னு இந்த ஃபோட்டோ//
அடிங்க! ஒரு பயபுள்ள பளீச் என்று இருந்தா பொருக்காதே! பொறாமை உலகமடா!
ரொம்ப நல்லா தான் ஆரம்பிச்சிருக்காரு!
@ ராமலெஷ்மி - அக்கா தப்புக் கணக்கு போடுறீங்க.வெயிட் பண்ணுங்க :)
@ அண்ணன்கள்
இராதாகிருஷ்ணன்
புதுகை.குணா - டேய்!மாப்ள :))
ஸ்வாமி ஓம்கார் - யாராவது இந்த சாமியை புடுச்சு கட்டிப்போடுங்கப்பா :)
சீனா அய்யா
நட்புடன் ஜமால்
தராசு
ஷண்முகப்பிரியன் - நீங்கள் இருக்கும் துறையில் நானும் இருப்பது எனக்கு பெரிய கவுரவம் சார். மிக்க நன்றி.
நாஸியா - yes.he had not involved in a hate politics. but he did a miscalculation.
ஜோசப் பால்ராஜ் - அதுவும் ஒரு பெரிய காரணம் அண்ணே.
மாதேவி
அ.மு.செய்யது
குசும்பன் - அண்ணே உன்னைய என்னோட முதல் பக்கத்துல கெளரவப்படுத்தி இருக்கேன்.பார்த்தீங்களா?? :)))
மாப்பிள்ளை நவாஸ்
காவேரிகணேஷ்
நிஜமா நல்லவன்
தாமிரா - :)
அபுஅஃப்ஸர்
ஜீவன்
மகேஷ் - அசத்தல் பதில் :))))
புதுகை தென்றல் - அக்கா, உங்களுக்கு அவரைப் பிடிக்காத காரணம் அவர் இரண்டு திருமணம் செய்தது.அதுதானே?? பெரும்பாலானவர்கள் அன் அஃபிஷியலாக செய்வதை அவர் அஃபீஷியலாகச் செய்தார் :)
அனானி - என் வாழ்க்கையைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை. என் ஆசான் கீரை.ஆ.தமிழ்செல்வன் பற்றி உரிய நேரம் வரும்போது எழுதுகின்றேன். சென்னையில் ஒன்னாமன்னா இருந்தது,இருப்பது அவரோடு அல்ல.அவரது மகன் எனது பல்யத் தோழன் ராஜாவோடு. அப்புறம் சிங்கப்பூரில் பொழுது போகாத நேரத்தில் நீங்களேகூட அதை எழுதலாம் :))
அருணாக்கா
மங்களுர் சிவா - ஓ.ஓ (புதியவகை மறுமொழி முயற்சி)
அபிஅப்பா
தோழியர் தேனம்மை - விரைவில் எழுதுகின்றேன்.
ரோமியோபாய்
மாப்பிள்ளை சஞ்சய்
நா.ரமேஷ்குமார்
பித்தனின்வாக்கு - அண்ணே ரெண்டுபேரும் ஒரு சாதி சங்கம் ஆரமிப்போமா??
வால்பையன்
அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி :)
//நல்லவேளை...அன்றெல்லாம் கிராமங்களில் பணம் பறிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லாததால் அப்பாவுக்குத் தெரியாமல் பைசா செலவின்றி பத்தாம் வகுப்புவரை அந்த கிராமத்துப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களோடு தேறுகின்றான்.//
இப்படி பணமில்லாமலேயே படிக்க முடியும் என்ற நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திய தலைவர்கள் அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு முறை மரியாதையுடன் மனதுக்குள் நினைத்து பார்ப்போம் :)
ஸ்வாமி கமெண்ட் சூப்பர்.. மகேஷ் கமெண்ட் சூப்பரோ சூப்பர் :))
எப்டிதான் யோசிப்பாங்களோ? :)