முன் காதல் சுருக்கம்
17:33
உனக்கும் எனக்குமான
காதலைப் பிரிக்க
காதலால் கூட
முடியவில்லை!
எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது!
காதலைப் பிரிக்க
காதலால் கூட
முடியவில்லை!
எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது!
அண்ணே, ...!
கவிஞர் அண்ணே..!
நல்லாருக்குண்ணே..!
//நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது! //
அடாடா....கவிதை அழகு....ரசித்தேன்....
அடடா! அசத்தல்ஸ்!
//
நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது! //
அப்படி போடுங்க அருவாள..
கல்யாணம் ஆனா காதல் போயிடும் அப்படின்னு சொல்றீங்களா அண்ணே..
அண்ணே!
காதல் கடைசியில் எங்கே போய் முடியும் என்று சொல்கிறீர்கள்!
:-)
நீங்கள் பாடிய பாடலிலும் இந்த மாதிரி கருத்து உண்டு! ( என்ன ரெண்டு பேர் பாடினதா? சளி பிடித்த மாதிரி வாய்ஸ் யாரது? )
தலைப்பே வித்தியாசமா இருக்கே. உள்ள இருக்குறதும் புரிஞ்சும் புரியாம இருக்கு. இப்போ ட்ரெண்டு இதுவா?
அப்துல்லா கலக்கல். வேற பாயை தேடாம இருந்தா சரி தானே :)-
மாப்ஸ் காதலின் உண்மையா முகத்தை வெளிச்சம்போட்டு காட்டிட்டே......!
///நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...///
அய்யயோ அவ்ளோ தூரம் போயிடிச்சா? ))):
///நம் காதல்
சுருட்டப்பட்டது!///
நல்லவேல...
சூப்பரப்பு ...!!
கவிஞர் அப்துல்லா வாழ்க
ம்ஹூம்....நல்லா இருக்குண்ணே !!!! முடிவு செம ட்விஸ்ட்டு...
அப்ப காமத்துல காதல் முடிஞ்சி போயிருதா ?? அங்க இருந்து தான் ஆரம்பிக்குதுன்னு
கவிஞர்கள் சொல்றாங்களே !!! புரியலியே !!
அன்பின் அப்துல்லா
படித்த மாதிரி இருக்கே
மிள்பதிவா
நல்லாருக்கு
நல்வாழ்த்துகள்
உனக்கும் எனக்குமான
காதலைப் பிரிக்க
காதலால் கூட
முடியவில்லை!//
இந்த வரிகள் சூப்பர்,அப்துல்லா.
ஆனால் செக்ஸுக்கு எதிரான பாயைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அரிஸ்டாடில் அப்துல்லா காணாம போயி கவிஞர் திடீர்னு வந்தாச்சு
அண்ணே இன்றைய காதல் மாதிரி இருக்கு
வணக்கம் அப்துல்லா சாப். அருமை.
சரி, இப்ப என்னான்றீங்க....
கவிஞர் அப்துல்லா வாழ்க
//நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது!//
OMG!!!!! :O
கவிதை, ரசித்தேன் :)
நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்... கவிதைக்கு பொய் அழகு என்பது இதுதானோ ....., ஆஹா என்ன அருமையான சிந்தனை - கமர் கத்தாரிலிருந்து
இப்படிப்பட்ட காதலும் உண்டு...இவைக்கும் கவிதையும் உண்டா? நல்லா நச்சுன்னு இருக்கு இந்த நாலு வரிக் கவிதை..
தள்ளி இருக்கும்போது
நெருங்கியிருந்த காதல்
நெருங்கியிருந்தபோது
தள்ளிப்போனது.....
அருமை நண்பரே...
நல்ல ஜமுக்காளமா பார்த்து ஒன்னு வாங்கிகோங்க அண்ணே!
கவிதையின் முடிவு எனக்குப்பிடிக்கவில்லை. காமம் காதலை வளர்ப்பதாக அமையவேண்டும் என நினைப்பவன் நான்.!
உங்களுக்குள்ள இருக்கற கவிஞர் ரொம்ப தூங்கறாரு... அப்பப்ப எழுப்பி இப்பிடி ஒரு கவிதை போட சொல்லுங்க.. .அருமை !!
முன் காதல் நெருக்கங்களில் பின் காதலாவும் வளருமுன்னுதான் கேள்வி பட்டு இருக்கேன்
//நினைத்த பொழுது
பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்
சுருட்டப்பட்டது!//
kavithai kuuda nalla varuthey ABDULLA !!!!
@ சகோதரிகள்
அருணாக்கா
வினிதா - ரெண்டுபேர் இல்லை. நான் ஒரே ஆள்தான். டபுள் டிராக் முறையில் ரெக்கார்ட் செய்யப்பட்டதால் இரட்டைக் குரல் கேட்க்கும்.அடுத்தமுறை மூக்கை நல்லா சிந்திட்டு பாடிடுறேன் :)))
சின்ன அம்மணி - அக்கா அரிஸ்ட்டாட்டில் அப்பப்ப வருவாரு :)
ஸ்ரீமதி
பட்டாம்பூச்சி
தமிழரசி
தாரணி - கல்யாணத்துக்கு முன்னாடி மணிக்கனக்கா பேசிறவங்க அப்புறம் பேச்சைக் குறைக்கும் காரணத்தை யோசி :)
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ தோழியர்
விக்னேஷ்வரி
தேனம்மை - உங்களைவிடவா???
மிக்க நன்றி
@ அண்ணன்கள்
ராஜூ - என்னண்ணே இடையில் ஆளே காணோம்??
க.பாலாசி - தங்களின் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் :)
இராகவன்
மணிகண்டன்
அபுஅப்ஃஸர்
இளவட்டம் - முதல் வருகைக்கு மகிழ்கின்றேன்.
ஜீவன்
முரளி கண்ணன்
அ.மு.செய்யது
சீனா
ஷன்முகப்பிரியன்
நசரேயன்
வானம்பாடிகள் - பாமரன் சார் நீங்க வந்தது பெருமையா இருக்கு :)
தராசு - ஒன்னும் சொல்லலை சாமி :)
அது ஒரு கனாகாலம்
கமர்
துபாய்ராஜா
வால்பையன் - உங்க ஊருக்குப் பக்கத்துலதான பவானி இருக்கு :)
ஆ.மூ.கி. - இல்லண்ணே கொஞ்சம் யோசிங்க.
துக்ளக் மகேஷ் - அண்ணே எழுப்பிருவேன்...ஆனா மக்கள் பயந்துருவாங்களோன்னு பயமா இருக்கு :)
வருகைக்கு மகிழ்ச்சியும்,நன்றிகளும்.