தான் என்னவாக வேண்டும்.அதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் என்பது அவரது இயல்பிலேயே இருக்கின்றது.அதற்கு உதாரணமாகத்தான் சென்ற தொடரில் அவரது சிறு வயது சம்பவங்களைக் குறிப்பிட்டேன். மற்றபடி அவரது வாழ்க்கை வரலாறு எழுதுவதோ அல்லது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதோ நோக்கம் அல்ல. அப்படிப்பட்ட திருநாவுக்கரசர் எங்கே சறுக்கினார் என்பதை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம்.எனவே இனி அவரது அரசியலை மட்டும் பார்ப்போம்.
1977 ல் நடைபெற்றத் தேர்தலில் அறந்தாங்கித் தொகுதியில் வேட்பாளராகி முதன்முறையாக சட்டசபைக்கு உறுப்பினராக வெற்றிவாகை சூடும்போது அடுத்த கால் நூற்றாண்டுக்கு அவர் அறந்தாங்கித் தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினராக இருப்பார் என்று யாருமே கனவில்கூட நினைக்கவில்லை.இவ்வளவு ஏன் அவரேகூட அதை நினைத்திருப்பாரா என்பது சந்தேகமே! பின்னர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக மட்டும் அல்ல...கிட்டத்தட்ட புதுக்கோட்டை மாவட்டத்துக்கே மன்னராகவும் ஆகிப்போனார்.
அந்தத் தேர்தலில் மாற்றம் வேண்டிய தமிழக மக்கள் எம்.ஜி.ஆர் கட்சிக்கு பெருவாரியான இடங்களை அளித்ததே திருநாவுக்கரசரின் வெற்றிக்கும் காரணமானது.அந்த ஒரு தேர்தலில் மட்டுமே அறந்தாந்தாங்கி மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்து வாக்களித்தனர்.பின்னர் வந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆரோடு திருநாவுக்கரசரையும் பார்த்து வாக்களித்தனர் என்பதே உண்மை. அமைச்சரவை அமைத்த எம்.ஜி.ஆர் 27 வயதேயான திருநாவுக்கரசரை சட்டசபை துணை சபாநாயகர் ஆக்கினார். ஓரிரு மாதங்கள் அந்தப் பதவியில் இருந்தபின் அவரை எம்.ஜி.ஆர். அமைச்சராகவும் ஆக்கினார்.
பெரும்பாலான தமிழக மக்கள் அவர் தொகுதியை சொர்க்கம்போல் வைத்து இருந்து இருக்கின்றார்.அதனால்தான் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கின்றார் என நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஒரு கூட்டுறவு நூற்பாலை கொண்டு வந்தது (அதுவும் சில வருடங்களில் மூடப்பட்டு விட்டது), ஒரு பாலிடெக்னிக் கொண்டு வந்தது, இதுதவிர அவர் அரசுரீதியாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இதற்கு அவரையும் குறை சொல்ல முடியாது. காரணம் சில தொகுதிகளின் புவியியல் அமைப்பின்படி பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. உதாரணமாக திருச்சி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரங்கராசன் குமாரமங்கலம் திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குள் மூன்று மேம்பாலங்களைக் கொண்டுவந்து திருச்சி மக்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றார். அதே புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரால் புதுக்கோட்டை நகரில் உள்ள இரண்டு லெவல் கிராசிங்குகளுக்கு மேம்பாலம் கொண்டுவரமுடியாது.காரணம் அந்த அளவிற்கு டிராபிக் நெருக்கடியோ,காலதாமதமோ இல்லை. எனவே அரசின் சட்ட,திட்டம் அதற்கு அனுமதிக்காது. டி.ஆர்.பாலு தென் சென்னையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசிடம் ஐ.டி காரிடாருக்கான சலுகைகளைப் பெற்றார். அதே இராமநாதபுரத்து பாராளுமன்ற உறுப்பினர் அங்கு ஐ.டி காரிடார் அமைக்க இராமநாதபுரத்தின் புவியியல் அமைப்பு அனுமதிக்காது. அப்படி இருந்தும் எப்படி வந்து இந்த மக்கள் செல்வாக்கு??
(நாளை பார்ப்போம்)
டிஸ்கி : நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))
டிஸ்கி : நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))
//அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))//
அந்த பயம் இருந்தாச் சரி! இஃகிஃகி!!
......ச்சும்மாங்கண்ணே...
75க்கு வாழ்த்துகளும்!
அரசியல் அலசலெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க, ஏதாவது ப்ளான் இருக்கா? ;-)
இருக்குதுன்னா, எனக்கும் ஒரு சீட் ப்ளீஸ்!! ;-)))))
வாழ்த்துக்கள்.. அண்ணே..
கலக்குங்க.. எதுக்கோ தயார் ஆகுற மாதிரி தெரியுது..:)
அன்பின் அப்துல்லா
75க்கு நல்வாழ்த்துகள்
இடுகை ஏதோ நோக்கத்துடன் இடப்படுவதால் தொடர்க
கலக்குறிங்க தல . இந்த தடவை 100 ராவது பதிவுல ஹக் பண்ணாலும் பண்ணிடுவாங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
தல
எனக்கு பிடிச்ச அரசியல் வாதிகளில் இவரும் ஒருவர். அரசியல் காரணங்கள் எதுவும் இல்ல, ஏன் பிடிச்சுதுன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.. தொடர்ந்து எழுதுங்க..
எனக்கு பிடித்த மற்றவர்கள், வை கோ மற்றும் சாத்தூரார், முடிந்தால் அவர்களைப் பற்றியும் எழுதுங்கள்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
75க்கு வாழ்த்துகள்.
75க்கு வாழ்த்துகள்!!!
அண்ணே 75க்கு வாழ்த்துகள்..
ஒரு தடவை 75 - ல் ஹாக் ஆச்சுன்னா மறுபடியும் அப்படித்தான் ஆகும் அப்படின்னு நினைக்கிறீங்க..
அண்ணே நீங்களுமா?
//.. இராகவன் நைஜிரியா said...
ஒரு தடவை 75 - ல் ஹாக் ஆச்சுன்னா மறுபடியும் அப்படித்தான் ஆகும் அப்படின்னு நினைக்கிறீங்க..
அண்ணே நீங்களுமா? ..//
நானும் இதைத்தான் நினச்சேன்.. :-(
அண்ணே 75க்கு வாழ்த்துகள்!
/ஹுஸைனம்மா said...
அரசியல் அலசலெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க, ஏதாவது ப்ளான் இருக்கா? ;-)
இருக்குதுன்னா, எனக்கும் ஒரு சீட் ப்ளீஸ்!! ;-)))))/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
நூறாவது பதிவு போடும்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட வாழ்த்துக்கள். :)
//சின்ன அம்மிணி Says: 24 November 2009 04:00
நூறாவது பதிவு போடும்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட வாழ்த்துக்கள். :)//
இந்த உள்குத்து பின்னுட்டத்துக்கு கண்ணா பின்னா ரிப்பீட்டீய்ய்ய்ய்யி
திருஷ்டிக்கு மாட்டிருக்க போட்டோ ஜூப்பரு.
பதிவு படிச்சிட்டேன்.
அரிசி விலை அதிகமாயிடுச்சு..
நேத்து என் நண்பர் வருவதாக சொல்லி இருக்கிறார்...
என்ன புரியலையா :) ?
நீங்க மட்டும் எனக்கு சம்பந்தம் இல்லாத அரசியல் பற்றி கட்டுரை எழுதலாம்.. நாங்கமட்டும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் போடக்கூடாதா :)
//அப்படிப்பட்ட திருநாவுக்கரசர் எங்கே சறுக்கினார் என்பதை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம்.//
பாத்ரூம்லயா, இல்ல எம்.எல்.ஏ ஹாஸ்டல் வராந்தாவுலயா, இல்ல சட்டமன்ற படிக்கட்டுலயா, அறந்தாங்கிலயா, புதுக்கோட்டையிலயா???
எங்கதான் சறுக்குனாரு, இப்படி சஸ்பென்ஸ் வெச்சு எழுத்றீங்களேண்ணே..
75 +| 75 = 150kku en valthukkal
வாழ்த்துக்கள் சார்
//நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))//
ஹேஹேஹே!
முன் ஜாக்கிரதை முத்தண்ணா!
அரசியலைப் பற்றி நீங்கள் மட்டும் விரல் நுனியில் வைத்திருக்கும்
ரகசியம் என்னாங்கண்ணே !!!
intresting !!!
//ஹுஸைனம்மா said...
அரசியல் அலசலெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க, ஏதாவது ப்ளான் இருக்கா? ;-)
இருக்குதுன்னா, எனக்கும் ஒரு சீட் ப்ளீஸ்!! ;-)))))//
apdiyae enakkonnu !!!
//சில தொகுதிகளின் புவியியல் அமைப்பின்படி பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.//
இது உண்மைதான். ஒரு தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்வதைவிட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தாலே அது பெரிய சாதனைதான். இதுதான் மக்களிடம் சினேகத்தை, செல்வாக்கைக் கூட்டும்.
75-க்கு வாழ்த்துக்கள் மாப்ள
அண்ணே திரு எங்க சறுக்கினார்? அடிகிடி பட்டுச்சா என்று தெரிஞ்சுக்க ஆவல்:))
//நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))//
ஹம்ம்ம்ம் குருட்டு அதிஷ்டம் எங்களுக்கு ஒரு முறைதான் அடிக்கனும் என்று தலைவிதியோ என்னவோ!!!
அண்ணே இந்த முறையும் ஹேக் செஞ்சுடுவாங்களோன்னு பயத்தில் தானே என்போட்டோவை முதல் பக்கத்தில் போட்டு வெச்சு இருக்கீங்க!:)) பயபுள்ளைங்க சாவட்டும் என்று!
//நூறாவது பதிவு போடும்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட வாழ்த்துக்கள்//
இல்லை இல்லை பிரதமராகிவிட வாழ்த்துக்கள்
75க்கு வாழ்த்து! :-)
மாமா.. இன்னொரு 75ஆஆஆஆஆஆ? ;))
வாழ்த்துகள்.. சின்ன சின்ன பதிவா எழுதும் உம்ம சீரியல் புத்தியை கண்டிக்கிறேன்.. :)
75. வாழ்த்துக்கள்..
/ எனக்கும் ஒரு சீட் ப்ளீஸ்!! ;-)))))/
ஹுசைன்னம்மாவுக்கு கொடுக்கும்போது பக்கத்திலேயே எனக்கும் ஒரு சீட்..
//எதுக்கோ தயார் ஆகுற மாதிரி தெரியுது..:)//
Adhe doubtdhaan enakkum :)
மீண்டும் 75க்கு வாழ்த்துக்கள்!
////நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))//
//
ஏண்ணே... அவுகளே மறந்தாக் கூட நீங்க எடுத்துக் குடுப்பீங்க போல...
150க்கு வாழ்த்துகள் அண்ணே!!
வாழ்த்துக்கள்.
நாவுகரசின் நவரச வாழ்க்கை கதையும் வருமா?
அப்துல்லா வாழ்த்துக்கள்
இது ஒரு செக்ஸ் கதையின் தலைப்பு ஆச்சே.. அதயும் நீங்க தான் எழுதினீங்களா...இக்கி..இக்கி.இக்கி..
75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது.//
150க்கு வாழ்த்துகள் அண்ணே..
பழமைபேசி said...
//அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))//
அந்த பயம் இருந்தாச் சரி! இஃகிஃகி!!
Mahesh said...
ஏண்ணே... அவுகளே மறந்தாக் கூட நீங்க எடுத்துக் குடுப்பீங்க போல...//
ரிப்பீட்டு.!