தம்பியின் டைரிக் குறிப்புகள் (06/11/09)




அண்ணன் ஜீவன் அவர்கள் கள்ளுக்கடையின் அவசியம் பற்றி எழுதிய இந்த இடுகையை முதலில் படித்து விடுங்கள். இதில் டாஸ்மார்க் மதுவகைகளுக்கும், கள்ளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பீடு ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார். ஒருமனிதனாக டாஸ்மார்க் வகைகள் மற்றும் கள் என்ற எவற்றின் மீதும் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் ஒரு பொருளாதாரம் பயின்ற மாணவனாக என்னுடைய ஆதரவு கள்ளுக்கடைகளுக்கு உண்டு. காரணம் டாஸ்மார்க் வகைகளில் 90 சதவிகிதம் வெளிமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுபவை. நம்முடைய ”குடி” மக்களில் அத்தனை பணமும் இந்த விற்பனையின் வாயிலாக நம்முடைய மாநிலத்தை விட்டுவிட்டு வெளியில் சென்று விடுகின்றது. தங்கள் உழைப்பின் மூலம் அரும்பாடுபட்டு ஈட்டிய பணத்தில் வருடத்திற்கு சுமார் 5000கோடி ரூபாய் நம்மாநிலத்தை விட்டு வெளியில் சென்றால் தொடர்ச்சியான தொழில் முன்னேற்றம் என்பது வரும் காலங்களில் கானல்நீராகலாம். அதே நேரத்தில் கள் என்பது உள்ளூர் தயாரிப்பு. அந்தந்த ஊரில் உள்ள தென்னை மற்றும் பனைமரத்தோப்புகளில் தயாரிக்கப்பட்டு அதே ஊரிலேயே விற்றும் போய்விடும். தென்னந்தோப்பு முதலாளி என்ன செய்வார்?? உள்ளூர் தொழிலாளர்களை கள் இறக்குதல்,தோப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகளுக்கு உள்ளூர் நபரையே வேலையில் ஈடுபடுத்துவார். உள்ளூர் மக்களிடம் விற்பனை செய்து வரும் பணத்தில் ஒரு பகுதி உள்ளூர் மக்களிடமே இதுபோல் போய்ச்சேரும். கள்ளுக்கடைக்காரர் அவர் ஈட்டும் பணத்தை பெரும்பாலும் உள்ளூரில் அல்லது அந்த மாவட்டத்தில் பிறதொழிலிலோ,சொத்திலோ மறுமுதலீடு செய்வார். அதன் தொடர்ச்சியாக அமையும் வேலைவாய்ப்பும் உள்ளூர் மக்களைச் சென்றடையும்.பொதுவாக கள்ளுக்கடைகளை ஒட்டி சாக்னா கடைகள் அமைவதுண்டு. அங்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள் உள்ளூர்கடைகளில் வாங்கப்படும். மொத்தத்தில் பணப்புழக்கம் உள்ளூரில் அதிகரிக்கும்.



ஒரு இடத்தை நோக்கிக் குவியும் பொருளாதாரத்தைவிட பகிர்வுப் பொருளாதாரமே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. மொத்தத்தில் டாஸ்மார்க் என்பது வீக்கம்.கள்ளுக்கடை என்பது வளர்ச்சி. இன்னும் பல x and y எல்லாம் போட்டு விளக்கி உங்களைக் குழப்பமுடியும். முடிந்தவரை எளிமையாகவே சொல்லி இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி டாஸ்மார்க் மற்றும் கள்ளுக்கடை இரண்டுமே இருக்கக்கூடாது. அரசுக்கு முடியாத பட்சத்தில் கள்ளுக்கடையே என் சாய்ஸ்.




********************************************************




இரண்டு ,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்குது. நான் வேலையில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அன்று இருந்த அட்மின் டைரக்டர் திரு.அருண் ஷெராப் அவர்கள் இதுபோன்ற ஒரு அடைமழை காலத்தில் என்போன்று டூவீலரில் வரும் கடைநிலை ஊழியர்களுக்காக நிர்வாகத்திடம்பேசி நிறுவன செலவில் மழைக்கோட்டு பெற்றுத் தந்தார். இது நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். கடந்த மூன்று வருடங்களாக நான் பதவி உயர்வில் காரில் செல்லும் ஊழியனாகிவிட்டேன். நேற்று மாலை நிர்வாகத்திடம் பேசி பைக்கில் வரும் ஊழியர்களுக்கு மழைக்கோட்டு பெற்றுத்தந்தேன். இதை நான் எனக்கு கார் வந்த ஆண்டே செய்து இருக்கலாம்.அல்லது சென்ற ஆண்டு மழைகாலத்தில் செய்து இருக்கலாம். இப்போதும் கூட மழை துவங்கி மூன்றுநாட்கள் கழித்துதான் இந்த யோசனை எனக்கு வந்திருக்கின்றது. கடந்து வந்த பாதையை மறக்காமல் எதார்த்தமாக இருக்க எவ்வளோ முயற்சி செய்கின்றேன்.இருப்பின் சில நேரங்களில் சராசரி மனிதனாகிவிடும் குற்ற உணர்ச்சி உறுத்துகின்றது.




********************************************************




இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் “கர்நாடகாவில் எடியூரப்பாவை எதிர்த்து பெண் மந்திரி போர்க்கொடி” என செய்தி வந்துள்ளது. ஏம்ப்பா மந்திரின்னா மந்திரிதானே?? அதில் ஆணென்ன,பெண்ணென்ன?? வேலையை வேலையாக மட்டுமே பார்க்கும் போக்கில்லாமல் பெண்பைலட்,பெண்போலிஸ் என குறிப்பிடுவது கிட்டத்தட்ட பெண்களை அவமதிப்பதுபோல்தான். இதே எடியூரப்பாவை எதிர்க்கும் மந்திரி ரெட்டியைப்பற்றிக் குறிப்பிடும் போது “ஆண் மந்திரி போர்க்கொடி” அப்படின்னா போடுறீங்க? ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :))




********************************************************



படித்ததில் பிடித்த கவிதை



கடந்துபோதல்



பிறகு

எல்லாவற்றையும்கடந்து

வேடர்கள் நுழைய முடியாத

வனங்களில் திரியும்

பறவையானது காதல்.

முன்பு

அதன் பெயரில்

பேசிய எழுதிய புணர்ந்த

மயிர்கள் உதிர்த்து.


- இளம்பிறை




********************************************************



அறிஞரின் இந்த வாரத் தத்துவம்




கண்ணா, தண்ணி இல்லாம 40 நாள் வாழலாம், காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.பட் நம்பிக்கை இல்லாம ஒரு நொடிகூட வாழ முடியாது. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம்.


69 Responses
  1. பாபு Says:

    நலம்,நலமறிய ஆவல்


  2. Cable Sankar Says:

    அறிஞர் தத்துவம் அருமை..

    அதென்ன ரெண்டு கடையும் இல்லாட்டி கவர்மெண்டு எப்படி நடக்கும்..?


  3. ///ஒரு இடத்தை நோக்கிக் குவியும் பொருளாதாரத்தைவிட பகிர்வுப் பொருளாதாரமே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. மொத்தத்தில் டாஸ்மார்க் என்பது வீக்கம்.கள்ளுக்கடை என்பது வளர்ச்சி.////


    சூப்பர் அப்பு ..! நீங்கதான் சரியா சொல்லி இருக்கீங்க...!


  4. //இருப்பின் சில நேரங்களில் சராசரி மனிதனாகிவிடும் குற்ற உணர்ச்சி உறுத்துகின்றது.//

    வேணும்னே மறந்தாதான் தப்பு. இதெல்லாம் கடவுள் கண்டுக்கமாட்டார்.


  5. தத்துவம் ஓகே தம்பீ..!


  6. டாஸ்மாக் சமாச்சாரம், கள் இவை இரண்டுமே மனித குலத்திற்கு விரோதமானவை.

    எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..

    இப்போது இருக்கின்ற டாஸ்மாக் கடைகளையே இழுத்து மூட வேண்டும் என்கிறோம்.. இதுல கள்ளை எதுக்கு இழுக்குறீங்க.. அது அப்படியே போய்த் தொலையட்டும்..!


  7. Cable Sankar Says:

    //எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..
    //

    அண்ணே.. நீங்க எதுக்கு இந்த மேட்டருக்கு வர்றீங்க்..


  8. //காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.//

    எட்டுநாள் இல்ல,
    எட்டு நிமிடம்!

    தண்ணி இல்லாம என்னால ஒருவாரம் கூட வாழ முடியாதே!?

    :)


  9. மதுவைப் புறக்கணித்த தனி மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்,ஆனால் மதுவைப் புறக்கணித்த சமூகங்கள் இருந்தது கிடையாது என்று ஜெயகாந்தன் எங்கோ எழுதியது எனக்கு நினைவுக்கு வந்தது,அப்துல்லா.

    அளவுக்கு மிஞ்சிய மது உடல் நலக்கேடு என்பதில் உடன்பாடு உண்டு.மன நலக் கேடு என்பதில் மதுவுடன்,அளவுக்கு மிஞ்சிய ஆசைகள் உட்படஇன்னும் ஆயிரம் விஷயங்களைச் சேர்த்த வேண்டும்.


  10. //வேணும்னே மறந்தாதான் தப்பு. இதெல்லாம் கடவுள் கண்டுக்கமாட்டார்.//

    வேற எதெல்லாம் கண்டுக்குவார்!?


  11. //இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் “கர்நாடகாவில் எடியூரப்பாவை எதிர்த்து பெண் மந்திரி போர்க்கொடி” என செய்தி வந்துள்ளது. ஏம்ப்பா மந்திரின்னா மந்திரிதானே?? அதில் ஆணென்ன,பெண்ணென்ன?? வேலையை வேலையாக மட்டுமே பார்க்கும் போக்கில்லாமல் பெண்பைலட்,பெண்போலிஸ் என குறிப்பிடுவது கிட்டத்தட்ட பெண்களை அவமதிப்பதுபோல்தான். இதே எடியூரப்பாவை எதிர்க்கும் மந்திரி ரெட்டியைப்பற்றிக் குறிப்பிடும் போது “ஆண் மந்திரி போர்க்கொடி” அப்படின்னா போடுறீங்க? ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :))
    //

    சார்..குட் மார்னிங்.


  12. //டாஸ்மாக் சமாச்சாரம், கள் இவை இரண்டுமே மனித குலத்திற்கு விரோதமானவை.//

    அப்பன் முருகன் மட்டும் சோமபானம் குடிக்கலாமாக்கும்!


  13. மழைக் கோர்ட் விசயத்தில் சாருக்கு நல்ல மனசு...

    அதே மாதிரி,

    கள்ளுக்கடை விசயத்தில் சைடிஷாக இட்லி வாங்கிகொடுத்தால் இன்னும் புண்ணியமாப் போகும்

    :)
    :(


  14. உண்மைத்தமிழன் அண்ணன் சொல்வதற்கு உடன்படுகிறேன்...

    வந்த பாதையை மறக்காமல் நீங்கள் செய்தது மனதை தொட்டது...

    பிரபாகர்.


  15. //எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..//

    மது எல்லா நாட்டிலும் தானே இருக்கு!
    எந்த நாடு சீரழிஞ்சு போச்சு!

    எனக்கு பிடிக்கலைனா நீங்க ப்ளாக் எழுதுறதை நிறுத்திருவிங்களா?
    அது பாட்டுக்கு இருக்கட்டும், இது பாட்டுக்கு இருக்கட்டும்!


  16. வணக்கம் பிரபல ஆண் பதிவர் அப்துல்லா அண்ணே....


  17. \\வால்பையன் said...
    //எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..//
    மது எல்லா நாட்டிலும் தானே இருக்கு!
    எந்த நாடு சீரழிஞ்சு போச்சு!

    எனக்கு பிடிக்கலைனா நீங்க ப்ளாக் எழுதுறதை நிறுத்திருவிங்களா?
    அது பாட்டுக்கு இருக்கட்டும், இது பாட்டுக்கு இருக்கட்டும்!\\


    வாலண்ணே, அவரு ச்மூகத்தைச் சொன்னாரு.. நீங்க நாடுன்னு சொல்றீங்க..!அப்போ, ச்மூகமும் நாடும் ஒன்னுன்னு வச்சுக்கலாமா..?


  18. //அவரு ச்மூகத்தைச் சொன்னாரு.. நீங்க நாடுன்னு சொல்றீங்க..!அப்போ, ச்மூகமும் நாடும் ஒன்னுன்னு வச்சுக்கலாமா..? //

    சமூகம் என்ன அந்தரத்துலயா தொங்குது!?
    அதுவும் ஒரு நாட்ல தானே இருக்கு!


  19. வாலண்ணே, சமூகம்ன்னா என்ன..?
    கொஞ்சம் சபீனா போடுங்க.


  20. //வாலண்ணே, சமூகம்ன்னா என்ன..?
    கொஞ்சம் சபீனா போடுங்க. //

    அது ஒரு மாயை!
    இல்லாத ஒன்றிற்கு இருக்கும் பெயர், கிட்டதட்ட கடவுள் போல, இதை பத்தீநீட்ஷே என்ன சொல்றாருன்னா, கடவுள் என்பது பேயடா, ரோட்டு மேல காரடா என்கிறார், இதையே பாம்பாட்டி சித்தர், சமூகம் என்பது சாரயகடைக்கு அருகில் இருக்கும் மூத்திர சந்து என்கிறார், நம் பார்வையில் தான் சமூகம் இருக்கிறது, களைந்த மேகம் உங்களுக்கு முயலாக தெரியலாம், எனக்கு மானாக தெரியலாம், ஒருத்தருக்கு சமூகம் என்பது ஒருத்தருக்கு நாடு, ஒருத்தருக்கு வீடு, இப்போதைக்கு ஓடு!

    (முதல்ல சமூகம்னு சொன்னவரை கேக்க வேண்டியது தானே இந்த கேள்வி)


  21. \\சமூகம் என்பது சாரயகடைக்கு அருகில் இருக்கும் மூத்திர சந்து\\
    ஓ..அதுனாலதான் அந்த குறிப்பிட்ட சந்துக்குள்ளயே "இருக்கீ(கா)ங்களா.."
    :-)


  22. அண்ணே நல்லா இருக்கியளா??


  23. [[[Cable Sankar said...

    //எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..//

    அண்ணே.. நீங்க எதுக்கு இந்த மேட்டருக்கு வர்றீங்க்..]]]

    பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் இதனைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு..!


  24. [[[வால்பையன் said...

    //டாஸ்மாக் சமாச்சாரம், கள் இவை இரண்டுமே மனித குலத்திற்கு விரோதமானவை.//

    அப்பன் முருகன் மட்டும் சோமபானம் குடிக்கலாமாக்கும்!]]]

    அது முருகன்..! நீரு..? கேள்விகள் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியது.. கடவுளர்களைப் பற்றியதல்ல..!


  25. [[[வால்பையன் said...

    //எந்த ரூபத்திலும் இருந்தாலும் சமூகத்தை சீரழிப்பதில் இன்றையக் காலக்கட்டத்தில் மதுதான் முதலிடத்தில் உள்ளது..//

    மது எல்லா நாட்டிலும்தானே இருக்கு!
    எந்த நாடு சீரழிஞ்சு போச்சு!]]]

    எல்லா நாட்டிலும் மதுவால் விளையும் கொடுமைகளை அனுபவித்த குடும்பங்களும் உண்டு. அப்பாவி மனைவிகளும், அப்பாவி கணவர்களும், அப்பாவி பிள்ளைகளும் உண்டு..

    உலகம் முழுவதும் மதுவருந்திய நிலையில் குற்றம் புரிந்தவர்களின் எண்ணிக்கைதான் குற்றவாளிகளின் பிரிவில் அதிகமாக இருக்கும்..

    [[[எனக்கு பிடிக்கலைனா நீங்க ப்ளாக் எழுதுறதை நிறுத்திருவிங்களா? அது பாட்டுக்கு இருக்கட்டும், இது பாட்டுக்கு இருக்கட்டும்!]]]

    நீங்க சரோஜாதேவி புத்தகத்தை அப்படியே காப்பியடிச்சு எழுதுனீங்கன்னா எழுதாதீங்கன்னு கண்டிப்பா சொல்வேன்.. அதே மாதிரிதான் இதுவும்..!


  26. [[[வால்பையன் said...
    //அவரு ச்மூகத்தைச் சொன்னாரு.. நீங்க நாடுன்னு சொல்றீங்க..!அப்போ, ச்மூகமும் நாடும் ஒன்னுன்னு வச்சுக்கலாமா..?//

    சமூகம் என்ன அந்தரத்துலயா தொங்குது!? அதுவும் ஒரு நாட்லதானே இருக்கு!]]]

    எல்லா மனித ஜீவராசிகளும் வாழும் உலகத்திலும் நான் சொன்ன கருத்து செல்லுபடியாகும்..!

    பல சமூகங்கள் சேர்ந்ததுதானே நாடு..!


  27. [[[வால்பையன் said...

    //வாலண்ணே, சமூகம்ன்னா என்ன..? கொஞ்சம் சபீனா போடுங்க.//

    அது ஒரு மாயை! இல்லாத ஒன்றிற்கு இருக்கும் பெயர், கிட்டதட்ட கடவுள் போல, இதை பத்தீ நீட்ஷே என்ன சொல்றாருன்னா, கடவுள் என்பது பேயடா, ரோட்டு மேல காரடா என்கிறார், இதையே பாம்பாட்டி சித்தர், சமூகம் என்பது சாரயகடைக்கு அருகில் இருக்கும் மூத்திர சந்து என்கிறார், நம் பார்வையில்தான் சமூகம் இருக்கிறது, களைந்த மேகம் உங்களுக்கு முயலாக தெரியலாம், எனக்கு மானாக தெரியலாம், ஒருத்தருக்கு சமூகம் என்பது ஒருத்தருக்கு நாடு, ஒருத்தருக்கு வீடு, இப்போதைக்கு ஓடு!

    முதல்ல சமூகம்னு சொன்னவரை கேக்க வேண்டியது தானே இந்த கேள்வி)]]]

    பதில் சொல்லியாச்சு..! ரொம்ப டென்ஷனாக வேண்டாம்..! சந்தடிச் சாக்குல திட்ட வேண்டியவங்களை திட்டியாச்சா..!


  28. Romeoboy Says:

    \\ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம். //


    தல இது தான் டாப் ..


  29. அண்ணன் வந்துட்டாருப்பா, இனி பழைய ஃபார்முக்கு சீக்கிரம் வாங்கண்ணே.

    கள்ளுக் கடையிலிருந்து கார்ப்பொரேட் மேட்டர் வரைக்கும் எழுதிய எங்கள் அண்ணன் வாழ்க.


  30. கலக்கல் தத்துவம் அறிஞர் அப்துல்லா அண்ணா வாழ்க‌


  31. KaveriGanesh Says:

    அண்ணே,
    பதிவர் சந்திப்புக்கு அவசியம் வரவும்.


  32. //அது முருகன்..! நீரு..? //

    முருகனோட தாத்தா!


  33. ///வால்பையன் said...

    //அது முருகன்..! நீரு..? //

    முருகனோட தாத்தா!///

    யாரு மலையத்துவஜ மன்னனா..?


  34. //யாரு மலையத்துவஜ மன்னனா..? //

    அது எங்கிட்டயிருந்து தத்து வாங்கிட்டு போன ஆளு!


  35. தத்துவம் நல்லாயிருக்குபா...


  36. /
    Cable Sankar said...

    அதென்ன ரெண்டு கடையும் இல்லாட்டி கவர்மெண்டு எப்படி நடக்கும்..?
    /

    அப்ப நம்மல்லாம் கவர்மென்ட்க்கு வேஸ்ட்டா??


  37. நாங்க எல்லாம் பதிவு போட்டா 2 கமெண்ட் கூட வரமாட்டங்கிது. இங்க என்னடானா... அறிஞர் மாதிரி தத்துவம் போடனுமோ :)


  38. /கடந்து வந்த பாதையை மறக்காமல் எதார்த்தமாக இருக்க எவ்வளோ முயற்சி செய்கின்றேன்/
    அதுவே ஆரம்பம்!

    /இருப்பின் சில நேரங்களில் சராசரி மனிதனாகிவிடும் குற்ற உணர்ச்சி உறுத்துகின்றது./

    சராசரி மனிதனாக இருப்பதில் குற்ற உணர்ச்சி தேவையில்லைப்பா....மனிதனாகவே இல்லாத போதுதான் குற்ற உணர்ச்சி தேவை!


  39. //டாஸ்மார்க் மதுவகைகளுக்கும், கள்ளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பீடு //

    என்ன செய்ய, கெட்டதிலயும் கொஞ்சமா கெட்டது எதுன்னு பாக்கற அளவுக்கு ஆயிட்டோம்!!

    //அதில் ஆணென்ன,பெண்ணென்ன??//

    எந்தத் தொழிலில் ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனரோ, அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கலாம்.

    “ஹவுஸ்வைஃப்” பழக்கமான சொல். “ஹவுஸ்ஹஸ்பெண்ட்” என்று செய்தி பார்த்தால் ஆர்வம் வரும்தானே?

    அதிலும் அரசியல் போன்ற துறைகளில் பெண்கள் பொதுவாகவே டம்மியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள் என்றால் அதிசயம்தானே??

    //காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.//

    8 நிமிடம்??

    //இப்போதும் கூட மழை துவங்கி மூன்றுநாட்கள் கழித்துதான் இந்த யோசனை எனக்கு வந்திருக்கின்றது.//

    Better late than never!!



  40. //ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம்.//

    குறிச்சி வச்சி கிட்டேன், இனிமேல நான் துண்டு போடலை


  41. @ உ.த & வால்

    ரொம்ப பேசினீங்கன்னா ‘நோ’வை இங்க திருப்பி விட்டுடுவேன்.. ஆமா..


    @ அப்துல்லா

    ரெய்ண்ட்கோட் - ஐடியாவுக்கு நன்றி தல. ஆனா 2000 பேருக்குன்னா போடாம்பாங்களே.. பார்க்கலாம். ஏ.செ.பாஸ்!


  42. ரெய்ண்ட்கோட் = ரெய்ன்கோட். ஸாரி.


  43. முதலில் மொபைலை ஆன் செய்யுங்க அப்புறம் உங்களுக்கு பின்னூட்டம் போடுறேன்:)



  44. அப்துல்லாஹ் காக்கா,

    இந்த இறைவசனத்தை அறிவீர்கள் என நம்புகிறேன்:
    (2:219) "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்"


    மதுவின் மூலம் பொருளாதர சிந்தனைகளை தெரியப்படுதியுள்ளீர்கள்: அரசுக்கு வருவாய் என்றாலும் இது போன்ற இடங்களில் பணத்தை விரையம் செய்வது அடிமட்ட மக்கள்: அவர்களின் பணம் ஒரு பாட்டில் சரயதொடு முடிவதில்லை..remember the social cost of this drinking! குடியால் ஈரல் வேந்தவர்களுக்கு அரசு அந்த பணத்தை செலவளிக்குமா? ஒட்டுமொத்தமாக மது ஒழிப்பே ஒரு சமூகம் நல்ல முறையில் இருக்க உதவி செய்யும்.. இதில் no options!


  45. ரெய்ன்கோட் மேட்டர் - தாமதமானாலும் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. சூப்பர் மாப்ள

    கள்ளூக்கடை மேட்டர் - இப்ப உள்ள அரசியல்வாதி மாதிரிதான், யாரைத்தேர்ந்தெடுப்பது - கெட்டவரா இல்ல ரொம்ப கெட்டவரா

    எல்லாத்தையும் விட சூப்பர் தத்துவம்தான் மாப்ள


  46. நாஸியா சொன்னதை வழிமொழிகிறேன்.

    ஆனாலும் கடைசில ரஜினி ஸ்டைல்லா அசால்ட் பண்ணிட்டீங்க..!




  47. 51:) இரண்டாம் குறிப்பு செம் செம சூப்பர், தொடருட்டும்...!!


  48. நல்லாருக்கு, நல்லாருகிங்களா?


  49. மழை கோட்டு, மந்திரி மேட்டரு, தத்துவம் சூப்பர் அண்ணேன்....

    வாழ்வின் சமூகம் குறித்த விளக்கமும் கலக்கல்.


  50. எல்லாமும் இருக்கு.. அதில் சம உரிமை நல்லாவும் இருக்கு.

    பரிசல்காரன் :
    ரொம்ப பேசினீங்கன்னா ‘நோ’வை இங்க திருப்பி விட்டுடுவேன்.. ஆமா..//

    குத்தகை போட்டு உங்க கடையில்தான் இருக்காங்க போல.. ஹிஹி.!


  51. //இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் “கர்நாடகாவில் எடியூரப்பாவை எதிர்த்து பெண் மந்திரி போர்க்கொடி” என செய்தி வந்துள்ளது. ஏம்ப்பா மந்திரின்னா மந்திரிதானே??//

    உம்ம அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளாவே இல்லையா? கர்நாடகாவுல இருந்த ஒரே பெண் மந்திரி ஷோபா ஆண்டி தான். இவங்களும் எடியூரப்பாவின் ஆதரவாளர்.. அவர் எல்லை மீறியதால் தான் ரெட்டி பிரதர்ஸ் பிரச்சனைப் பண்ணாங்க. இப்போ அவங்களும் ராஜினாமா பண்ணிட்டாங்க. தேர் இஸ் நோ மோர் பெண் மந்திரி சாமியோவ். :) உங்க செய்தி தப்பூஊஊஊஊஊ.. :)


  52. mittu Says:

    "கடந்து வந்த பாதையை மறக்காமல் எதார்த்தமாக இருக்க எவ்வளோ முயற்சி
    செய்கின்றேன்".

    Thats a very nice gesture.


  53. அப்துல்லா எம்.பி.ஏ. ன்னு ஒத்துக்குறேன்.

    சரி, ஒரு வழியா நல்லது செஞ்சுட்டீங்கள்ல. சந்தோஷம்

    ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :)) //
    ஹாஹாஹா... உங்க வருத்தம் எனக்குத் தெரியுது. :)

    தத்துவமெல்லாம் சரி தான்.


  54. @ அண்ணன்கள்

    பாபு

    கேபிள் சங்கர் - மனமிருந்தால் மார்க்கபந்து :)

    ஜீவன்

    சின்ன அம்மிணி அக்கா

    உண்மைதமிழன்
    வால்பையன்
    ஷண்முகப்பிரியன் சார்
    நர்சிம் - :)
    அப்பாவி முரு
    பிரபாகர்
    ராஜூ - :)
    அத்திரி - நலமே,நல்லாரிக்கியளா?
    ரோமியோபாய்
    தராசு
    தாரணிபிரியா

    காவிரிகணேஷ் - அவசியம் வற்றேன்னா

    அமுதா கிருஷ்ணா
    மங்களூர் சிவா
    ஸ்வாமிஓம்கார்
    அருணாக்கா
    ஹூசைன்னம்மா
    ஞானப்பித்தன்

    நசரேயன் - என்ன தளபதி திடீர்னு வர்றீக, திடீர்னு காணாப்போறீக :)

    வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்வுடன் நன்றி.


  55. //ரெய்ண்ட்கோட் - ஐடியாவுக்கு நன்றி தல. ஆனா 2000 பேருக்குன்னா போடாம்பாங்களே.. பார்க்கலாம். ஏ.செ.பாஸ்!

    //


    பரிசல் அண்ணா முதலில் இரண்டு,மூன்று வருடங்கலுக்கு மேல் பணியில் இருப்பவர்களைக் கண்க்கில் எடுங்கள். பின்பு அதில் டூவீலரில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். மற்றவர்களுக்கு வரும் வருடங்களில் தொடருங்கள். நான் சொன்னேன்னு உங்க எம்.டி.மேடம்கிட்ட சொல்லுங்க :)


  56. @அண்ணன்கள்

    குசும்பன் - ஆன்லதான்யா இருக்கு.
    கார்க்கி

    நாஸியா - உங்க பதிவில் பதில் போட்டேன்.

    நவாஸ்தீன்
    அ.மு.செய்யது
    ஷஃபிக்ஸ்

    பட்டிக்காட்டான் - அண்ணா நீங்க எப்ப எழுதப்போறீங்க??


    ஆதிமூலகிருஷ்ணன்
    சஞ்சய்


    மிட்டு - முதல் வருகைக்கு மகிழ்வுடன் நன்றி மிட்டு :)

    விக்கி - அதெல்லாம் முன்னாடி அரசாங்கமே ஒத்துக்கிட்டு டிகிரி குடுத்துருச்சு :))


    வருகைக்கும்,கருத்திற்கும், ஆதரவிற்கும்,எதிர்ப்பிற்கும் நன்றி :)


  57. //இதே எடியூரப்பாவை எதிர்க்கும் மந்திரி ரெட்டியைப்பற்றிக் குறிப்பிடும் போது “ஆண் மந்திரி போர்க்கொடி” அப்படின்னா போடுறீங்க? ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :))//

    hahaha
    superb abdulla


  58. //கண்ணா, தண்ணி இல்லாம 40 நாள் வாழலாம், காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.பட் நம்பிக்கை இல்லாம ஒரு நொடிகூட வாழ முடியாது. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம்.//

    humour = abdulla

    :-))))))


  59. Karthik Says:

    //ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :))

    LOL. :))

    ஒரு விஷயத்துல மட்டும் இருக்குங்ணா. கேர்ள் ஃப்ரண்ட்னு சொல்றா மாதிரியே பாய் ஃப்ரண்டுனும் சொல்றாங்க. :)


  60. //.. பட்டிக்காட்டான் - அண்ணா நீங்க எப்ப எழுதப்போறீங்க??..//

    க்ஹூம்.. அதுக்குதான் நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்..


  61. நல்லது செஞ்சதுதான் மேட்டர்! அது நேரமானது பத்தி கவலையில்லை!

    தத்துவம்....ரொம்ப நம்பிக்கையா இருக்கு! :)

    நீங்க நல்லா இருப்பீங்கப்பா!


  62. tamilan Says:

    பதிவு நல்லா இருக்கு..
    உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.


  63. நல்லா இருக்கு :)


  64. /கண்ணா, தண்ணி இல்லாம 40 நாள் வாழலாம், காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.பட் நம்பிக்கை இல்லாம ஒரு நொடிகூட வாழ முடியாது. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம்../

    மிகவும் அருமை....

    நேரம்கிடைக்கும்போது இங்கு வந்துபாருங்க

    http://niroodai.blogspot.com
    http://kalasairal.blogspot.com



TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']